Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புலி வம்சம்(சோழர்கள் குறித்த வரலாற்றுத் தொடர்)


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
புலி வம்சம்(சோழர்கள் குறித்த வரலாற்றுத் தொடர்)
Permalink   
 


இது ஓரின ஈர்ப்புக் கதை அல்ல,எழுத்தாளரின் முறையான அனுமதி பெற்ற பிறகே பதியப்படுகிறது

____________________________________________________________

'புலிவம்சம்' அத்தியாயம் ஒன்று

____________________________________________________________

'பிடிபட்டான் கொலைகாரன்'

 

அரக்கப்பறக்க ஓடிவந்தான் அவன்.

 

“நில், என்ன சேதி? ஏனிப்படிப் பறந்துகொண்டு வருகிறாய்? சாளுக்கியர் படையெடுத்து வந்துவிட்டனரோ?”

 

வினவினான் அவனை நிறுத்தினவன். கேட்டவன் கண்களில் பயம் கலந்த ஆர்வம். வந்தவன் சட்டென நின்றான். மூச்சிறைக்க ஓடிவந்து சட்டென நின்றதால் அவன் கால்களுக்குக் கீழ் புழுதி பறந்தது. மூச்சு வாங்கிய வேகத்தில் அவனால்  உடனடியாகப் பேசமுடியவில்லை. நெஞ்சு விம்மி விம்மி அடங்கியது.

 

“ஆசுவாசப்படுத்திக்கொள், இந்தா, சற்று மோர் அருந்து”

“வேஹ்ண்டாஹ்ம், ஹும்ம், ஹும்ம்”

 

வந்து நின்றவன் வெற்றுடம்பிலே வியர்வை வழிந்து, அவன் இடுப்புத் துண்டை நனைத்துக் கொண்டிருந்தது. தொடை, கால்களில் வழிந்த வியர்வையோ கீழிறங்கிப் பாதத்தில் சற்று நிதானித்து, பின் மேலும் வழிந்து பூமியை நனைத்தது.

 

“என்ன சேதி?”

 

கேட்டவனுக்கு இப்பொழுது மேலும் பயம் கூடியது.

 

“தெஹ்ரியுமாஹ்! வஹ்ந்தியத் தேஹ்வரைச் சிஹ்ற... யிலிஹ்ட்டு.... விட்டாஹ்ர்ஹளாம்”

“என்ன சொல்கிறாய்? புரியவில்லை”

 

கால்களைச் சுற்றி எழும்பிய புழுதி அப்படியே அவன் கால்களின் மீது படிந்து அடங்கியது. ஆசுவாசப்படுதிக் கொண்டவன் மீண்டும் கூறினான்.

 

“வந்தியத்தேவரைச் சிறயிலிட்டு விட்டர்களாம்”

 

சிறிதாய்க் கூட்டம் கூடியது. துண்டை அவிழ்த்து முறுக்கிப் பிழிந்தான் வந்தவன். கரும்பை முறுக்கியது போல் வியர்வை பொங்கி வழிந்தது. உள்ளே கட்டியிருந்த கோவணமும் ஈரத்துடன் உடலோடு ஒட்டியிருந்தது. பின் தன் உடலை அத்துண்டால் வேகமாய்த் துடைத்துவிட்டு மீண்டும் இடுப்பிலே கட்டிக்கொண்டான்.

 

”என்ன? மீண்டுமா?”

 

கேட்டவன் பதறினான். கூட்டத்தில் பல்வேறு விதமான ஒலிகள் எழுந்தன.

 

“அப்படியென்ன குற்றமிழைத்தார் வல்லவரையர்?”

 

“அருன்மொழியாரின் அண்ணன் ஆதித்த கரிகாலரைக் கொன்றது அவர்தானாம்!”

 

கேட்டவன் கண்கள் வியப்பால் விரிந்தன.

 

“இல்லை இல்லை, இருக்காது, வல்லவரையர் அப்படியெல்லாம் செய்யக் கூடியவரல்லர். ஏற்கனவே இதுவிஷயமாய்ச் சிறைபிடித்துப் பின் குற்றமற்றவரெனக் கூறி விடுவித்துவிட்டனரே.”

 

“விசாரிக்காமல் சிறை வைப்பார்களோ?”

 

குரல் கேட்டுச் சட்டெனத் திரும்பினர் இருவரும். ஒரு கையில் கோல் ஊன்றி  விந்தி விந்தி வந்து கொண்டிருந்த அந்த மெல்லிய தேகமுடையவன் கூறினான். இடுப்பிலே வேட்டி கட்டி அதன் அடிப்பாகத்தை அப்படியே இழுத்துப் பின்னால் சொருகியிருந்தான். சீறினான் ஓடிவந்தவன்.

 

“உளறாதே, நீ பார்த்தாயா?”

 

“பறையக்கேட்டேன்”

 

“யார்?”

 

“வேறு யார், அரச உத்தியோகத்தார்தான். விரைவில் சிரச்சேதம்தான்”

 

கொக்கரித்தான் கோலூன்றி வந்தவன். ஓவென இரைந்தது கூட்டம்.

 

“இல்லை இல்லை, அருன்மொழியார் அப்படி விடமாட்டார்”

 

“பின்னே கொலைகாரனுக்கு அறுசுவை விருந்தளிப்பாரோ? செய்தாலும் செய்வார்.”

 

கூட்டம் இப்பொழுது மேலும் பெருகியது.

 

“அவதூறு கூறாதே, நாவழுகிவிடும், விசுவாசமற்றவனே”

 

“போங்களடா நீங்களும் உங்கள் விசுவாசமும், கையில் வாளுடன் நிகழ்விடத்தில் பிடிபட்டபோதே கழுவேற்றியிருக்கவேண்டும் அவனை. முன்னர் அருன்மொழியாரின் தலையீடு காரணம் விடுவிக்கப்பட்டார். ஆனால் சந்தேக வட்டத்துக்குள்தான் வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அருன்மொழியாரின் தந்தையார் சுந்தர சோழரின் ஆட்சி இருந்தது. அவரால் நடமாட இயலாமல் இருந்தார். இப்போதுதான் சிவநேசச்செல்வர், மதுராந்தகத்தாரின் ஆட்சி நடைபெறுகிறதல்லவே? உத்தமச் சோழரான அவரால் தீர விசாரிக்கப்பட்டே சிறை வைக்கப்பட்டிருக்கிறார். கொலைகாரன், ஆயினும் அவன் வெறும் அம்புதானே, எய்தவனும் விரைவில் பிடிபடுவான். அதுவரையில் நம் கண்முன்னேயே சுற்றிக்கொண்டுதான் இருப்பான்”

 

“யாரைச் சொல்கிறாய்?”

 

“அவர் அன்பு நண்பர், அருண்மொழி வர்மன். ஆதித்தனைக் கொன்றுவிட்டால் அடுத்த பட்டத்து இளவரசர் இவராகவல்லோ இருந்தார், அப்பொழுது.”

 

முதல் இருவரும் பதறினர். கூட்டத்தில் ஓங்காரமும் வியப்பொலிகளும் எழுந்தன. ஓடிவந்தவன் சட்டெனக் கால் உயர்த்திக் கோல் ஊன்றி வந்தவன் மார்பில் எட்டி உதைத்தான். உதைபட்டவன் அப்படியே காற்றில் எழும்பி சற்றுப் பின்னால் பறந்து சென்று விழுந்தான். விழுந்த வேகத்தில் குடுமி அவிழ்ந்து தலைமுடி வீசுவலையைப் போல் விரித்துக்கொண்டு மண்ணில் பரவியது. கூட்டம் ‘ஆ, ஓ’ என்றது. புரண்டு மீண்டும் கோலூன்றி எழும்பினான். அவன் குடுமி முகத்திலும் தோளிலும் அறைந்து கொண்டு ஆடியது. சீரும் மூச்சுக்கற்றுக்கேர்ப்ப நர்த்தனம் ஆடியது. முதலாமவன் காலில் வியர்வையினால் ஒட்டிக்கொண்டிருந்த மண் அப்படியே அவன் மார்பில் ஏறியிருந்தது. வானம்பார்த்து விழுந்ததில் முதுகு முழுக்கப் புழுதி மண்.

 

“அவனை விடு, நாம் விரைந்து சென்று உரியவரிடம் இதுபற்றி விசாரிப்போம், வா போகலாம்.”

“நாயே, அருன்மொழியாரைப் பற்றியா அவதூறு பேசுகிறாய்? உன்னை இங்கேயே மிதித்துக் கொன்று விடுவேன்.”

 

இழுத்துக்கொண்டு சென்றான் இரண்டாமவன். கூட்டத்தின் ஒரு பகுதியினர் அவர்கள் பின்னாலே விரைந்தனர். எஞ்சி நின்றவர்கள் கேட்டார்கள்.

 

“நெசமாவா?”

 

“சத்தியம், விரைவில் அனைவரும் தெரிந்துகொள்வீர்கள்”

 

அவர்கள் மேலிருந்த பார்வையை விலக்காமல், தலையைமட்டும் ஒரு புறமாய்த் திருப்பிக்கொண்டு, ஒரு கையால் அவிழ்ந்த குடுமியைப் பிடித்து மற்றொரு கையால் அதனைச் சுழற்றிக் கொண்டே பதிலிறுத்தான், முடிந்து பின்னால் தொங்கவிட்டான்.

 

“இருக்கும் இருக்கும்”

 

“இல்லை இல்லை”

 

“உண்மை, ராசாக்கமார் இப்படியெல்லாம் செய்ராங்களிள்ளே”

 

“இருக்கும் இருக்கும்”           

 

“சரி வாங்கோ நாம போய்ப் பாப்பமே”

 

சலசலப்புடன் கூட்டம் கலையத்தொடங்கியது.

 

நின்றவன் பார்த்தான், பார்த்துக்கொண்டிருந்தான், கூட்டம் கலையும் வரை. பின் மீண்டும் தன் குடுமியை அவிழ்த்து முன்குடுமியிட்டான். கண்களின் ஒரு அதீத மகிழ்ச்சி மின்ன, தன கோலைச் சட்டென உயர்த்தினான். ஒரு சுழற்று சுழற்றி தன் தோளில் வைத்து இரு கைகளையும் அதன் மீது தூளியிட்டுக் கொண்டான். பிறகு அப்படியே நடக்கலானான், நிமிர்ந்து, மிடுக்காய்....

 



__________________



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
RE: புலி வம்சம்(சோழர்கள் குறித்த வரலாற்றுத் தொடர்)
Permalink   
 


பொன்னியின் செல்வனை மீண்டும் வேறு விதத்தில் சந்திக்க போகிறோமா..

எந்தவித வர்ணனையும் இல்லை என்றாலும் நேரடியாக பழங்கால "தஞ்சாவூருக்கு" 

போயாகிவிட்டது.. அருமை!! தொடரட்டும் 



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நேர்த்தியான நடை... பொன்னியின் செல்வன் கதையின் முடிவை தொடர்ந்து வரும் சூழல்... மதுராந்தகன் ஆட்சி கட்டிலில் அமர்ந்த தருணம், இப்படியும் நடந்திருக்கலாம்'னு யோசிக்க வைக்குது... ஏன் எழுதியவர் பெயரை போடவில்லை?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எழுதியவர் பெயர் போட வேண்டாம் ன்னு சொல்லிட்டார் நண்பா

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அருமையான துவக்கம்... அடுத்தடுத்த பாகங்களை விரைவில் எதிர்பார்க்கிறோம்..

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard