Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும்..! மீண்டும்..! வா..!


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
மீண்டும்..! மீண்டும்..! வா..!
Permalink   
 


அந்த வீடு முழுவதும் ஏதோ புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது.! அந்த அமைதியை கலைக்கும் விதமாக, "O.K.! Ram.! lets break it over here..!" என்ற சுந்தரை அரையத் துடிக்கும் ஆத்திரத்தோடும், பிரிய முடியாமல் தவிக்கும் தவிப்போடும், கண்கள் கலங்க பார்த்தான் ராம்..! ஒரு பெரு மூச்சுடன், "இனியும் நாம சேந்து வாழ முடியும்னு எனக்கு தோணல..! practicalஅ நமக்குள்ள இனி செட் ஆகாது..! so, நாம பிரிஞ்சு போகறது தான் நல்லது..!" ஒருவித வெருப்பு, சலிப்பு கலந்த கலவையாக வார்த்தைகளை உதிர்த்தான் சுந்தர்..! ராம் எவ்வித பதிலும் சொல்லாமல், தனது அறையை அடைந்து, கதவை தாழிட்டுக் கொண்டான்..! சுந்தரின் அதீத அன்பே, இவர்களின் இந்த முடிவிற்கு காரணம்..! 'அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பர், அதற்கு அன்பு மட்டும் என்ன விதி விலக்கா..? சிறு வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்த ராமிற்கு, கடந்த 3 ஆண்டுகளாக எல்லாமுமாய் இருந்தவன் சுந்தர் தான்..! இன்று அவனது அதீத அன்பு, பொறாமை வேடம் பூண்டு, ராமை விட்டு விலக காரணமாகியது..! இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊடல் களைப்பின் போது, சுந்தர் தான் ஆரம்பித்தான்..! "ராம்.! நான் ஒன்னு சொல்லுவேன், கோவிச்சுக்க கூடாது..!"
"என்னடா விஷயம்..? சொல்லு..!"
"கண்டிப்பா சொல்றேன்..! ஆனா, முதல்ல நீ கோவிக்க மாட்டேன்னு சொல்லு..!"
"சரிடா..! கோவப்படல..! நீ என்ன விஷயம்னு சொல்லு..!" சுந்தரின் பீடிகையினால், ராமின் ஆர்வம் மிகுந்தது அவன் தொனியில் தெரிந்தது..!
"அது.. அது.. அது.. வந்து..!" தடுமாறிய படியே, அந்த விஷயத்தை கூற தொடங்கினான் சுந்தர்..!


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஆரம்பம்...வலிகளோடு....வார்த்தை தெளிவு & சொல்ற விதம் நல்லாருக்கு ...வாழ்த்துக்கள் தொடருங்கள்....

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நல்ல தொடக்கம் நண்பரே,வாழ்த்துக்கள்......

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

??
start somthing & give break

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

என்ன அந்த விஷயம்?

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

"உனக்கு குழந்தைங்க-னா பிடிக்குமா..?" என்ற சுந்தரிடம், "இது என்னடா கேள்வி..? குழந்தைகள பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா..?" என்றான் ராம்..!

சிறிது தயக்கத்தோடு, "நேத்து நீ சின்ன வயசுல எழுதின லெட்டர படிச்சேன்..!"

"என்ன லெட்டர் டா..? என்ன படிச்ச..?" அதிக அலட்டலில்லாமல் கேட்டான்..!

"நீ 11th படிக்கும் போது, உன் ஆசை எல்லாம் அந்த letter-ல எழுதியிருந்த..! அதுல, அடிக்கடி நீ எழுதின விஷயம், உன்னோட குழந்தைய பத்தி தான்..! அதுனால, நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்..!" சொல்லும் போதே அவன் முகம் வெளிரி, வியர்த்திருந்தது..!

'என்ன..?' என்பது போல் புருவங்கள் நெரிய கூர்மையாக சுந்தரைப் பார்த்தான் ராம்..! தனது மன வலிமையைத் திரட்டிக் கொண்டு, அந்த விஷயத்தை சொன்னான்..! "நீ ஏன் வாடகை தாய் மூலமா ஒரு குழந்தைப் பெத்துக்கக் கூடாது..?" அதுவரை அமைதியாய் இருந்த ராம், பொறுமை இழந்தவனாய், "நீ என்ன பேசறனு தெருஞ்சு தான் பேசறியா..? உன்னால எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது..? என்னோட மனச பத்தி ஒரு நிமிஷமாவது யோசிச்சு பாத்தியா..?" என படபடவென பொறிந்து தள்ளினான்..!
சுந்தரின் உதடுகள் ஊமையாகி, கண்ணீர் பெருகத் துவங்கியது..! சிறிது தன்னை அமைதிபடுத்திக் கொண்ட ராம், சுந்தரின் புஜங்களைப் பற்றி, தன் அருகில் இழுத்து, அவன் கண்களைத் துடைத்த படி, "இங்க பாரு சுந்தர்.! எனக்கு குழந்தைங்கனா பிடிக்கும்..! ரொம்ப பிடிக்கும்..! ஆனா, அது என்னோட சொந்த குழந்தைனு மட்டும் இல்ல.! எந்த குழந்தையா இருந்தாலும் எனக்கு பிடிக்கும்..! அதுக்கு வாடகைத் தாய் வழியாதான் குழந்த பெத்துக்கணும்னு என்ன அவசியம்..? We can adapt an orphan child..!"

-- Edited by Fee_DeS_OndeS on Wednesday 6th of November 2013 03:57:35 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

Samram, anbaithedi, cutenellaimdu @Thank you folks..!

Tripur@ surely 'll say..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எதுக்கு கோப படுறார் ன்னு புரியலையே

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ்...சூப்பர்...அதிக அன்பினால் வரும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு...குட் ...முடிந்தால் கொஞ்சம் அதிகம் எழுதுங்கள் ...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

well started try to write more....best wishes

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Fee_DeS_OndeS

the story starts very nice. if every one thinks as what ram thinks there would be no orphan in this world.

Keep rocking Man.

regards

Thiva

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

thenn

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Anbaithedi@ read it again..!

Samram@ thank you sam..! I'm just trying my level best with my handset..!

Kathir@ thank you kathir..!

Thiva@ thanks alot thiva..! Your reply made me to feel happy..!

Cutenellaimdu@ here it 's..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"ராம்.! நீ எழுதுன லெட்டர் முழுக்க உனக்குனு பொறக்கப் போற குழந்தைய பத்தி தான் எழுதியிருந்த..! நாம ஒரு குழந்தைய தத்தெடுத்து வளர்க்கலாம், ஆனா, உனக்கு பிறக்கற உன் குழந்தைய பத்தின கனவு கலையறதுக்கு நான் காரணமா இருக்கேன்கற குற்ற உணர்ச்சி எனக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும்..! அதுக்குப்பிறகு நாம தத்தெடுக்கற குழந்தைகிட்ட நான் எப்படி இயல்பான அன்போட இருக்க முடியும்..? கொஞ்சம் என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு..!"
"நம்ம ஒவ்வொரு வயசுலையும் ஒவ்வொரு விஷயம் முக்கியமா தெரியும்..! என் life-ல நீ வராதபோது, எல்லாருக்கும் இருக்கற சாதாரண ஆசைகள் எனக்கும் இருந்துச்சு..! ஆனா, இப்போ என் life-ஏ நீ தான்டா..! உன்ன விட எனக்கு வேற எதுவும் முக்கியமில்ல..! இனி இதப்பத்தி பேசாத pls..!" என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினான் ராம்..!
ஆனால், சுந்தர் காந்தியடிகளின் அஹிம்ஸைப் போராட்டத்தை அன்றிலிருந்தே துவங்கிவிட்டான்..!
நான்கு நாட்களுக்கு மேல் சுந்தரால் உண்ணாவிரதத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மூர்சையுற்றான்..! ஒரு வழியாக அரைகுறை மனதுடன் வாடகைத் தாயின் வழியாக குழந்தை பெற ராம் சம்மதித்தான்..!
உடனடியாக, இன்றைய இணைய சந்தையின் பெரும் புண்ணியத்தால், ஒரு வாடகைத் தாயும் கிடைத்துவிட்டாள்..!
lisa richard parker..! இந்தியா வாழ் அமெரிக்க பெண்மணி..! நீல நிறக் கண்கள், ஆறடிக்கும் சற்றுக் குறைவான உயரம், கட்டான உடல் வாகு, கருநிறக் கூந்தல் என காண்போர் வியக்கும் அழகு..! Lisa-வினைக் கண்டதும், சுந்தரின் மனதிற்குள் அளப்பரிய மகிழ்ச்சி..! "அய்ய்யோ..! என்ன colour-அ இருக்காங்க பாரு ராம்..! அவங்க கண்ண பாரேன்..!" என துவங்கி கேசாதிபாத வருணனைப் புரிந்தான்..! இருநூறு ஆண்டுகால அடிமையின் தாக்கம் அவன் மனதிலும் தென்பட்டது..! அதனால் தான், 'செந்நிற மேனியே அழகின் அடிப்படை' என்ற கூற்றை அவன் கண்களும் ஆமோதித்தன..! வேண்டா வெருப்பாக அவளைக் கண்டாலும், அவளது அழகினை ராமும் ஒப்புக்கொண்டான்..!
ஆனால், சுந்தரைவிட அதிக வசீகரம் அவளிடம் அவன் காணவில்லை..!
அவளது கைப்பேசி எண்ணை அரை நொடிக்குள், விசைப்பலகையில் செலுத்தி, விழித்திரையில் (vision display) சரிபார்த்து, விளிக்கும் (call) விசையை அழுத்திய சுந்தர், எதிர்முனையில் ஓர் ஆடவனின் குரலைக் கேட்டதும் சற்று தயங்கியவாறே தொடர்ந்தான்..!


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Butterfly,

very nice episode keep going.

regards

Thiva

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

seems to be different,keep writing, all the best

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இருநூறு ஆண்டுகால அடிமையின் தாக்கம்...வித்தியாசமான யோசனை...but more than 90% like the white complexn,...விழித்திரையில் (vision display)...why this kolla veri,,,உங்கள் பாணியிலே தொடருங்கள்...அது தான் நல்லாருக்கு....but very happy to read ur(in the real name) story after a long time....rocking...continue

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

மாறுபட்ட கதைக்களம்.... தம்பியின் புத்துணர்வு கதையில் வெளிப்பட்டிருக்கிறது... மொழிவளம் சிறப்பு....
அழகாக எழுதும் தம்பியின் அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Hey Butterfly very happy to a story like this.....waiting to read more eagerly....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

பட்டாம் பூச்சியை பார்ப்பது எவ்வளவு இன்பத்தை தருமோ, அதே இன்பம் இக்கதையை படிக்கும் போதும் எழுகிறது. நல்ல ஆரம்பம், சிறக்கட்டும்.

கதை நடப்பது எந்த நாட்டில்?

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"Hello.! Who's this..?" "Hello.! Sir, i'm Sundar..! May i contact miss.Lisa..?" (இனி வரும் உரையாடல்களை ஆங்கிலம் அதிகம் கலவாமல் இருக்க, தமிழில் தொடர்கிறேன்..!)

சிறிது நொடிகளில் Lisa அழைப்பில் வந்தாள்..! "ஹாய்.! மிஸ்ட்டர்.சுந்தர்..! சொல்லுங்க, நான் Lisa பேசறேன்..!" என்றாள்..! பிறகு, சுந்தர் தான் இணையத்தில் அவளைப்பற்றிய விவரங்களை அறிந்ததாகவும், ராமுடனான தனது வாழ்கையைக் குறித்தும், ராமுடைய குழந்தைக்கு வாடகைத் தாயாகும் படியும், அனைத்தையும் முழுவீச்சில் கூறி முடித்தான்..!

அனைத்திற்கும் அதிகம் பேசாமல், "உம்ம்..!" "ஊஹூம்" மட்டும் கூறியவள், "ஓகே.! மிஸ்ட்டர் சுந்தர்..! மத்த விஷயங்கள நாம நேர்ல பேசிக்கலாம்..! எங்க.? எப்போ.? மீட் பண்ணலாம்னு டைம் fix பண்ணி சொல்லுங்க..!" என்றாள்..!
சற்றும் தாமதியாமல், "நாளைக்கு ஈவினிங் 5.30க்கு வர முடியுமா..?" எனக்கூறி தனது வீட்டின் முகவரியையும் தந்தான்..!
இருவரும் நன்றி கூறி அழைப்பைத் துண்டித்தனர்..!
சுந்தரின் மனதில் ஏதோ இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி.! அன்று வேலைக்கு விடுப்புக் கூறிவிட்டு, வீட்டை அலங்கரிப்பது முதல் மேலை நாட்டு மாலை சிற்றுண்டி வரை அனைத்தையும் தானே செய்தான்..! பணியிலிருந்து திரும்பிய ராமிற்கே, அடையாளம் தெரியாத வகையில் இருந்தது வீடு..! இதையெல்லாம் தன் ஆசைக்காக செய்கிறான் என ராம் சந்தோஷமடைந்தாலும், மறுபுறம் வருந்தினான்..!
மாலை சரியாக 5.26 மணிக்கெல்லாம் Lisa சுந்தரின் வீட்டிற்கு வந்துவிட்டாள்..! அவளோடு அலைபேசியில் கேட்ட ஆண் குரலிற்கு உரியவரான Richard Parkerம் வந்திருந்தார்..! வந்தவர்களை கனிவாக உபசரித்தனர் இருவரும்..!
முதலில் சுந்தர் தான் பேச்சைத் துவங்கினான், "Miss.Lisa இவர் யாருனு நீங்க இன்னும் சொல்லலையே..?" என்றான்..!
"இவர் Mr.Richard Parker..! எனது கணவர்..!" என்றாள் lisa..!


-- Edited by Butterfly on Wednesday 27th of November 2013 11:48:55 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks thiva and nishanth..! Thanks for your kindly support..!

KARUPPU THAAN ENAKKU PUDUCHA COLOURU..! thanks sam..! Surely i'll try my level best..!

MIKKA NANDRI ANNA..! Ungal kanivaana karuthu enakku ookkamalikkiradhu..!

Thank you just for fun..! And i'm so sorry 'cause i'm missing a lot of parts in your story..! I'm sorry for that..!

Chathero@ ungal karuthum enakku adhey inbathai tharugiradhu thozha..! Ungal kelvikkaana bathil indha pagudhiyil thodarum..! Nandri..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"கணவரா..?" என ஆச்சரியம் விலகாமல் கேட்டானர் இருவரும்..!
மெலிதான புன்னகையுடன், "ஆம்..!" என்றனர் இருவரும்..! "நானும் இரு கே தம்பதிகளின் மகள் தான்..! அவர்கள் என்னை வளர்க்க மிகவும் கஷ்ட்டபட்டாங்க..! ஆனா, அவங்க ரெண்டு பேரும் என் கல்யாணத்த பார்க்கறதுக்கு முன்னாடியே, ஒரு car crash-ல இறந்துட்டாங்க..! அதனால தான் அவங்கள மாதிரியே இருக்கற கே தம்பதிகளுக்கு, வாடகைத் தாயாக ஒரு குழந்தை பெற்றதுக்கு பிறகு தான், நான் எனக்குனு ஒரு குழந்தை பெத்துக்கணும்னு முடிவு பண்ணினேன்..! அப்போ தான் என்னோட அப்பா பொறந்த நாடான இந்தியாவுல இத செய்ய முடிவு பண்ணி என் கணவரோட இங்க வந்தேன்..!
"ஆனாலும் இத நீங்க எப்படி ஏத்துக்கிட்டிங்க..?" என்பதைப்போல ராமும், சுந்தரும் Richard Parker ஐப் பார்த்தனர்..!
பார்வையின் கேள்வியைப் புரிந்து கொண்டு Lisa மேலும் தொடர்ந்தாள்..! "இவர் எனது காதல் கணவர்..! அதோட, என் fathers ரெண்டு பேருக்கும் நல்ல தெரிஞ்சவர்..! அதனால தான் என்னோட இந்த முடிவ இவரும் மதிக்கராரு..!" என்று அவள் கூறும் போது இருவருக்கும் அவர்கள் மீது மரியாதை தோன்றியது..!
சில மாதங்களுக்கு பிறகு..!
Lisa கருவுற்ற செய்தியைக் கேட்டதும் ராம் மகிழ்ச்சியில் துள்ளினான்..! ஒரு ஆண், தான் தந்தையாகப் போகும் தருணத்தில் பூமியே தலைகீழாக தெரியும் போலும்..! "சுந்தர் நாம அப்பாவாக போறோம்..!" என்று அவனை வாரியணைத்து, ஆனந்தக் கூத்தாடினான்..!
இதைக் கேட்டதும் சுந்தருக்கும் நிலை கொள்ளவில்லை..! ஆம்.! 'குழந்தை' என்ற ஒரு விஷயம் தான் மீண்டும் அனைவரையும் குழந்தைகளாகவே மாற்றும்..! அதற்கு இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா..? சில நாட்கள் வரை அனைத்தும் சரியாக செல்வது போலவே தோன்றியது..! ஆனால், அந்த வார இறுதி அவர்கள் இன்பத்திற்கு முற்றுப்புள்ளியிட போவதை இருவரும் உணரவில்லை..!


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Butterfly,

Nice episode da. Cant wait for the next one pls post it soon. very sad if Relationship of Ram and Sunthar Breakup.

Keep Rocking Bro.

Regards

Thiva

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

மகிழ்ச்சியான செய்தியை பார்த்து புன்முறுவும் நேரத்தில் திடீர்னு ஏதோ அதிர்ச்சி சொல்ல போறீங்க!..... ஆர்வமாக இருக்கிறோம், சொல்லுங்க தம்பி....
சிறப்பான கதை போக்கு....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதை வேகமாக போகும் விதம் படிப்பவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது...வித்தியாசமான யோசனை...lisa உயர்வாக தெரிகிறார்...வாழ்த்துக்கள்...waiting for the next...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Quite interesting and eager to know wats going to happen next.....waiting to hear more

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

dude next ??

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

nice story. . .


__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அடுத்த நாள் முதல், ராம் வீட்டிற்கு சற்று தாமதமாக வரத்தொடங்கினான்..! காரணம், Lisa-வின் வயிற்றில் பிறக்கவிருக்கும் அவன் குழந்தை தான்...!
அன்றாடம் காலை முதல், மாலை வரை கர்பமான பெண்களுக்கான அறிவுரைகளையும், கடை கடையாக ஏறி, இறங்கி கருவுற்ற தாய்மார்களின் பிரத்யேக பதிப்புகளையும் வாங்கிக் கொண்டு, Lisa-விடம் கொடுத்துவிட்டு வருவான்..!
Lisa-வும், richard-ம் ராமிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை..! ஆனாலும், அவன் செய்வதை 'வேண்டாம்' என தடுக்கவும் மனமில்லாமல்..!
வீட்டில் அவன் வரவிற்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் சுந்தருக்கு ஒரு யுகமாக கழிந்தது..! அலைப்பேசியிலும், அலங்கார கடிகாரத்திலும் நேரத்தை மாறி மாறி சரிபார்த்தான்..! தினம் தினம் இப்படியே நாட்கள் செல்ல, சுந்தர் பொறுமை இழந்தான்..!
"ராம்.! நீ எதுக்காக daily Lisa வீட்டுக்குப் போற..? வாரத்துல ஒரு நாள் போனா பத்தாதா..?" சற்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டான் சுந்தர்..!
அவன் பேச்சை வைத்தே, ஏதோ தவறு நிகழப் போவதாய் உணர்ந்த ராம்,
"சுந்தர் நான் Lisa-வோட வீட்டுக்கு விருந்து சாப்பிட போகலடா..! அவங்க நம்ம வாழ்கைய அடுத்த step-க்கு கொண்டு போற ஒரு விஷயத்த சுமக்கறாங்க..! அதோட ஒரு மனுஷனோட 90%மூளை வளர்ச்சி கருவுல தான் உருவாகும்..! அவங்கள இந்த மாதிரி நேரத்துல என்ன 'செய்யனும்.?' 'கூடாது.!'-னு சொல்றதுக்கு பெரியவங்க யாருமே இல்ல..! நம்ம வாழ்கையவே மாத்தப்போற அவங்க தியாகத்துக்கு, இந்த அளவு கூட அக்கர எடுத்துக்க கூடாதா..?"என ராம் அமைதியாக சொன்னபடியே, சுந்தரின் அருகில் சென்று, "நீயே.! என்ன புரிஞ்சுக்களனா எப்படிடா..? எனக்கு இந்த உலகமே சொந்தமா இருந்தாலும், நீ இல்லனா நான் தனி மரம் தான்..!" என்றான்..!
சுந்தர் தற்காலிகமாக தனது கோபத்திற்கு விடுப்பளித்து ராமை தழுவிக் கொண்டான்..! ஆனால், அதன் பிறகு, Lisa-வின் சாதாரண செயலையும், ராம் மிகைப்படுத்திப் பேசுவதைப்போல் தெரிந்தது..! 'காமலை கண்ணனுக்கு, காண்பதெல்லாம் மஞ்சல் ' என்பதைப்போல, அவர்களின் சாதாரண சிரிப்பொலி கூட, சுந்தருக்கு ஏனோ அரசியல் பேச்சை digital dolphy சத்தத்தால் head phones வழியாக கேட்பதைப் போல் எரிச்சலூட்டியது..!
தனிமையை அதிகம் நேசித்தான்..! அதில் அழுவதை ஆறுதலாக உணர்ந்தான்..! தன்னுடைய சோகமும், கோபமும் ராமின் சந்தோஷத்தை குழைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்..! ஆனாலும், அவன் சந்தேகம் அன்பை மிஞ்சி விட்டது..!

-- Edited by Butterfly on Thursday 9th of January 2014 04:57:45 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thiva @ sorry thiva, i'd committed in someother works and issues for a while..! Thats why can't update the story soon..! And thanks alot for your cardial support expecting it for the rest too..!

Vijay @Thanks bro..! "ELLAAM THANGALIDAM KUDITHA YAANAI PAAL SORRY SORRY GNANA PAAL (M)ANNA..!"

Samram @ thanks sam..! Sun tv serial madhiri 1000 episode varaikkum izhutha, enake thookkam vandhudum..! Appo padikkara ungaluku..???confuse

Cutenellaimdu, prabhujp, Just For Fun @Thanks guys..!

-- Edited by Butterfly on Thursday 9th of January 2014 05:16:04 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

பொதுவாக சில ஆண்களுக்கு பிரசவ காலத்தில் வரும் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் மாதிரி gay couple க்கும் இருக்கும்னு சொல்றது வித்தியாசமா இருக்கு...அவன் சந்தேகம் அன்பை மிஞ்சி விட்டது..!...இதை படித்ததும் கொஞ்சம் கலக்கமாக இருக்கு...உங்கள் எழுத்தில் எனக்கு பிடித்தது எதார்த்த நடை...வாழ்த்துக்கள்...கலக்குறீங்க butterfly

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Ended with good twist. Making t readers to eagerly looking for next episode.
write more if possible. Waiting to hear more....

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

A very big 'THANKS' to both of you..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

doubt is the very danger thing to kill all relationships in this world

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

எந்த காதலுக்காக தனது பெற்றோர், உற்றார், உறவினர் என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்தானோ, இன்று, அதே காதலை துறந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்..! அவன் காதலுக்காக தூக்கி எறிந்த எல்லா உறவுகளும் இன்று அவனை தனிமையில் ஏளனம் செய்தது..! ராமிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் தீயாய் எழும்போதெல்லாம், சுந்தரின் ego பெரு வெள்ளமாக அணைத்துவிடும்..! ராம் எவ்வளவோ முறை முயன்றும், சுந்தரிடம் பேச முடியவில்லை..! இதற்கிடையில், சுந்தரின் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Cutenellaimdu@Yeah..! Thats true..! And thanks for your comment yar..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சுந்தரின் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது..! என்ன twist வைக்க போறீங்க...அவன் காதலுக்காக தூக்கி எறிந்த எல்லா உறவுகளும் இன்று அவனை தனிமையில் ஏளனம் செய்தது..!ஒரே வரியில் இருவரின் உணர்வை சொல்ற மாதிரி இருக்கு...waiting for the next...


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"சார், post..!" என்றவாறு, தனது கையில் உள்ள தாளினை நீட்டி, ஒப்பம் பெற்று சென்றார், தபால்காரர்..!
கடிதத்தை பிரித்துப்படித்ததும் முகத்தில் வெறுமை படர்ந்தது.! காரணம், அதில் என்றோ அவன் விண்ணப்பித்திருந்த வெளிநாட்டு உத்தியோகம் இன்று அவனை வரவேற்றது தான்..!
சிந்தித்தான், நேரங்கள் கடிவாளமற்று ஓடிற்று..! உண்ணவும் இல்லை, ஓய்வும் இல்லை, ஆழ்ந்த மனப்போராட்டத்தின் விளைவால், உறங்கிப்போனான்..!
மாலையும், காலையோ.? எனத்தோன்றும் சந்தியாவேளையில், அவன் உறக்கத்தை கெடுத்தது, அலைபேசி..!
திரையில் ஏதோ ஒரு புதிய எண், பச்சைக்கொடி காட்டி பதிலளித்தான்..! "hello..!"


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks alot sam..! Your comments 're my story's food..! Without it my story 'll get stop..! Thank you so much..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

sure I will comment ur story butterfly...பாவம் சுந்தர்...waiting for the next...


__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வித்தியாசமான கதைக்களம் வண்ணத்துப்பூச்சி... சாதாரணமா ஓரின கதைகள்ல.. குழந்தைய தத்து எடுக்கறதோ அல்லது வாடகைத் தாய் மூலம பெத்துக்கறதோ.. ஒரு ஸ்வீட் எண்டிங்கா இருக்கும்.. இங்க அது தான் பிரச்சனைக்கு மூலாதாரமே... !!

தொடர்ந்து கதைங்க...!!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Happy to see you after a long gap, in my story..! Keep coming bro..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink   
 

super

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"ஹாய்.! சுந்தர்..! என்னை ஞாபகம் இருக்கா..? நான் தான், ரமேஷ்.! 'ராக்கெட்' ரமேஷ்..!"
(இங்கு ரமேஷைப் பற்றிய சிறிய அறிமுகம், பெயர் : ரமேஷ்; express ரயிலை விட வேகமாக பேசுவதால், 'rocket' ரமேஷ்; கட்டான உடல்வாகு, ஆறடி உயரம் என்றெல்லாம் இல்லாமல் நடிகர் சித்தார்த் போன்ற முக & உடலமைப்பு அனைவரிடமும் எளிதில் பழகி விடுவான்..! துடுக்குத்தனம் நிறைந்த, திறமையான வாலிபன்..!
ரமேஷிற்கு, அமெரிக்காவின் மீதிருந்த தீராத மோகத்தால், பணிமாற்றுப் பெற்று சென்றுவிட்டான்..!)
"சொல்லுடா rocket..! எப்படிடா இருக்க.? உன்னோட புது ஊர் எல்லாம் எப்படி இருக்கு.?" என சாதாரணமாக விசாரித்தான்..!
"san francisco is amazing டா.! நீயும் இங்கேயே வரப் போறதா எனக்கு news வந்துச்சு..! அதனால தான் உன்ன contact பண்ணினேன்..!" என்றான்..!
எவ்வித உணர்வுமின்றி, "ஹ்ம்ம்ம்..!" என்றான்..!
"என்னடா? இங்க யாரையுமே தெரியாதுனு கவலைபடறியா..? don't worry da machan, 'i'm here for you..!" என்று அவன் சொன்ன போது, ராமோடு வாழ்ந்த நாட்கள் அவன் விழிகளை ஈரமாக்கியது..!
பின் தன்னை சகஜ படுத்திக் கொண்டு, "ok டா.! எனக்கு கொஞ்சம் work pending இருக்கு, அப்பறம் பேசட்டுமா..?" என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்..!
ஒருமுறை ராமை காண அவன் மனம் ஏங்கியது.! விடியும் வரை அவன் நினைவோடு உறவாடியபடி உறங்கிப்போனான்..!

-- Edited by Butterfly on Tuesday 29th of April 2014 11:53:14 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks heart..! Pls keep visiting..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

என்ன இது ஒரு புது entry...சுந்தர் ராமை விட்டு போறானா...?...ரமேஷின் don't worry da machan, 'i'm here for you..!"கொஞ்சம் கலவரப்படுத்துதே...சீக்கிரம் அடுத்து பதிங்க...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Butterfly,

Very Nice episode pa and i hope Sunder accept the offer and go. very intresting keep rocking man.


Regards

Thiva

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

என்ன தான் சுந்தரின் மனம் ராமைக் காணத் துடித்தாலும், ஒரு போதும் அந்த உணர்வை வெளிக்காட்டி, தன்னைத் தானே 'கோழையாக சித்தரித்து விடக்கூாது' என்பதில் மிக உறுதியாய் இருந்தான்..!
ஆனால், ராம் ஒவ்வொரு நொடியும் சுந்தரைப் பற்றிய நினைவிலேயே கடத்தினான்..! "நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்..? சும்மா இருந்த என் மனசுல குழந்தையை பத்தின ஆசைய ஏற்படுத்திட்டு, இப்போ அதே காரணத்துக்காக என்னையும் விட்டுட்டு போயிட்டானே..! எங்க பிரச்சனையை பத்தி Lisa-கிட்ட சொல்லலாமா..?? வேண்டாம்..! நமக்கு உதவி செய்யற அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்..!" இதுபோன்ற பல எண்ண அலைகள் அவன் மனதில் பொங்கிக்கொண்டேயிருந்தது..!
இதற்கிடையில் சுந்தர் தனது மனப்போராட்டங்களுக்கு இந்த பணி இடமாற்றம் ஒன்று மட்டுமே ஆறுதல் தரும் என்ற எண்ணத்தோடு வெளிநாட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான்..!
இன்னும் 2 மணி நேரம் தான் அவன் இந்தியாவில் செலவிடப்போகிறான்..! அயல் நாட்டிலிருந்து திரும்ப இந்தியாவிற்கு வரும் எண்ணம் அவனுக்கு துளியும் இல்லை..! அம்பத்தூருக்கு அருகிலிருந்த அவனுடைய mansion-ல் இருந்து, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு செல்லவேண்டிய taxi 
சோழிங்கநல்லூரில் கம்பீரமாய் நின்ற ஒரு கட்டிடத்தின் முன் நின்றது..! "கொஞ்சம் wait பண்ணுங்க..!" என்று கூறிவிட்டு, சுந்தர் அந்த கட்டிடத்துக்குள் சென்றான்..!

வரவேற்பறையை அணுகி, "Mr.ராம்-ஐ பார்க்கணும்..!" என்று சொன்னான்..! உடனே, அந்த நவநாகரீக வரவேற்பாளினி தொலைப்பேசியை காதில் வைத்தவாறு, சில எண்களைத்தட்டி விவரத்தை கூறனாள்..! பின்னர், சுந்தரை நோக்கி, "could you please stay in the waiting hall sir..?" என்றாள் அவள் கனிவான குரலில்..! சுந்தர் சற்று தயங்கியவாறு, "if you don't mind, can you pass this to ram now..?" என்று கூறி, சிறு காகிதத்தில் ஏதோ ஒரு குறிப்பை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினான்..!



-- Edited by Butterfly on Saturday 1st of November 2014 10:18:39 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

thank you Sam and thiva..!! really feeling very happy about your comments..!! :) :D
ஒரு சில காரணங்களால் இந்த கதை தடை பட்டுவிட்டது அதற்கு மன்னிப்பினை வேண்டுகிறேன்..!!

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard