Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 11


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 11
Permalink   
 


பட்டியில் அடைப்பட்ட ஒத்தை வெள்ளாடாய் 
 
அறையைச் சுற்றிசுற்றி வந்துக்கொண்டிருந்தான் ... சக்தி ..
 
துணியின் நுனியில் பற்றிய தீயை....
 
அப்போதே அணைக்காமல் ....
 
அதை வளரவிட்டு அணைப்பது கடினம்....
 
ஏதாவது செய்யலாம் என்று யோசித்தே நாட்கள் நகர்ந்துவிட்டன....
 
இப்போது அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது....
 
அவரசமாய் செய்தி சொன்னான் தயாவுக்கு....
 
" பயப்படாதே சக்தி...எப்படியாவது ன் கூட்டிலிருந்து வந்துவிடு....
 
நமக்கான வானம் வெளியே தயாராய் இருக்கிறது...."
 
அந்த இரவில் பறவை கூடு நீங்கியது....
 
சக்தி நினைத்தான் ...
 
"அப்பாடா... யாரும் அறியாமல் வந்துவிட்டோம் ...."
 
ஆனால் எமனுக்கு தெரியாமல் உயிர் பிரியுமா?
 
சக்தி சென்றது அருட்செல்வம் தெரிந்துகொண்டார்......
 
சக்தியும், தயாவும் இப்போது இருசக்கர வண்டியில் ........
 
அவர்கள் முதன்முதலாக சந்தித்த காட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.......
 
" சக்தி, களைப்பாக இருக்கிறதா?..."
 
"இல்லை தயா ! மைவண்ணன் கரம்பற்றி நடந்த மைதிலிப் போல் நானும் களைப்பை உணரவே இல்லை.....
 
நீயும் நானும் வாழப்போகும் வாழ்க்கையை நினைக்கும்போது ...உற்சாகம்தான் வருகிறது......
 
இனிமேலாவது மரம் போல் வாழவேண்டும்.... அடுத்தவருக்கு உபயோகமாய்......"
 
காடும் வந்தது ...
 
யாருக்காகவும் காத்திருக்காமல் கடந்து செல்லும் காலம்போல்.....
 
அங்கே சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது நீரோடை.....
 
சக்தி தாகம் தீர நீர் பருகி .... முகம் கழுவிக்கொண்டான் ....
 
அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் தயா ....
 
" என்ன தயா புதிதாய் பார்ப்பதுபோல் பார்க்கிறாய்....."
 
" கதிரவன் கடல்படுக்கை விட்டு காட்சியைப் பார்த்திருக்கிறாயா....சக்தி...?
 
அது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ...அந்த நேரத்தில் ....
 
வானத்தில் தன் கதிர்கரங்களால் அவன் வரையும் வண்ண ஓவியங்கள் ஒவ்வொரு நாளும் புதியது.....
 
இன்று வானத்திரை போதாது என்று .....
 
உன் கன்னத்தில் அவன் செஞ்சாந்து பூசி விளையாடிக் கொண்டிருக்கிறான் ......"
 
" போதும் வர்ணனை......உனக்கு கம்பனை அறிமுகப்பகப்படுத்தியது தவறாகிவிட்டது .....தயா ..
 
நீ மட்டும் என்ன ...குறைவா?
 
சோழனின் கருங்கல் சிலையாய் கம்பீரமாய் இருக்கிறாய்....."
 
"சக்தி இங்கே வா ..உன்னை இறுக்கிக் கட்டிகொள்கிறேன் ....
 
நான் உன்னை கட்டினால்தான் ....
 
காமன் அவன் கட்டிலிருந்து என்னை விடுவிப்பான்....."
 
பொய்யாய் தயாவிடமிருந்து விலகுவதாய் நடித்தாலும் ...
 
மனம் அவன் பிடியில் இருக்கவே விரும்பியது....
 
அந்த இன்பராகத்தின் ஆரோகணத்தின் போது ....
 
 அபஸ்வரமாய் கேட்டது அந்த மனிதர்களின் காலடி ஓசை........

(அடுத்த பகுதியுடன் இந்த  கதை நிறைவடைகிறது.....)



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

very nice part made me to view the story in real picture, the following is my fav. lines:-

- அப்பாடா... யாரும் அறியாமல் வந்துவிட்டோம் ...."

ஆனால் எமனுக்கு தெரியாமல் உயிர் பிரியுமா?


- மைவண்ணன் கரம்பற்றி நடந்த மைதிலிப் போல் நானும் களைப்பை உணரவே இல்லை

- மரம் போல் வாழவேண்டும்.... அடுத்தவருக்கு உபயோகமாய்

-இன்று வானத்திரை போதாது என்று .....

உன் கன்னத்தில் அவன் செஞ்சாந்து பூசி விளையாடிக் கொண்டிருக்கிறான் ......"


-நான் உன்னை கட்டினால்தான் ....

காமன் அவன் கட்டிலிருந்து என்னை விடுவிப்பான்....."


waiting for the final episode with small request, pls dont kill the lovers.

thanks

regards

Thiva

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Hope will have nice end.

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

"எமனுக்கு தெரியாமல் உயிர் போகுமா

மைவண்ணன் , மைதிலி லாம் நல்லாருக்கு."

நல்ல முடிவா குடுங்க



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அதற்குள் முடிவா?....
மற்ற பகுதிகளை போலவே முடிவும் சிறப்பாக அமையும்னு நம்புறேன்....
வர்ணனைகள் இந்த பகுதியில் அருமை.... தொடருங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ்...வர்ணனை அதுவும் சரியான இடங்களில்....இந்த பதிவை மூன்று முறை படித்துவிட்டேன்....பிடித்த வரிகள்
கதிரவன் கடல்படுக்கை விட்டு காட்சியைப் பார்த்திருக்கிறாயா....சக்தி...?

அது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ...அந்த நேரத்தில் ....

வானத்தில் தன் கதிர்கரங்களால் அவன் வரையும் வண்ண ஓவியங்கள் ஒவ்வொரு நாளும் புதியது.....

இன்று வானத்திரை போதாது என்று .....

உன் கன்னத்தில் அவன் செஞ்சாந்து பூசி விளையாடிக் கொண்டிருக்கிறான் ......"சூப்பர் ....


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

//நான் உன்னை கட்டினால்தான் ....

காமன் அவன் கட்டிலிருந்து என்னை விடுவிப்பான்//

என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவது? யாராவது வார்த்தைகள் தானம் கொடுங்களய்யா....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

ovoru vathaigalaiyum vali therigirathu

ege pudikure ipadi varthaigalai

kathai superb unoda eluthu nadai nalla irruku maplai

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard