Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 9


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 9
Permalink   
 


 

பேய்மழை அடித்து ஒய்ந்திருந்தது ...
 
கடைவாயில் இரத்தம் ஒழுக நின்றிருந்தான் சக்தி ...
 
" சீ மனித இனத்தில் முளைத்த களையே ...
 
இவ்வளவு நேரம் எனக்கு அறிவுரைக் கூறினாயே ...
 
உனக்கு எங்கு சென்றது அறிவு ...
 
ஆணும் ஆணும் காதலிப்பது உலக விதிகளுக்கு புறம்பானது ..."
 
" அப்பா அன்பு செய்ய எந்த விதியும் தேவை இல்லை ...
 
 அறிவியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது காதல் ...
 
 விதிகளும், சூத்திரங்களும் தேவைப்படும் ஆராய்சிக் கூடமல்ல மனது .."
 
" வார்த்தை சாகசத்தால் என்னை ஏமாற்ற நினைக்காதே சக்தி .."
 
" சத்தியமாய் இல்லை அப்பா ... ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கிறாள் .... ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணிருக்கிறான் ....
 
இது அறிவியல் உண்மை ..."
 
" நிறுத்து உன் பிரசங்கத்தை ...."
 
" உண்மையை யாரும் மாற்ற முடியாது .....
 
நீங்கள் 100 சதவிகிதம் ஆண் என்றால் ... 
 
உங்களுக்கு எதற்கு மலட்டு மார்க்காம்புகள் .."
 
" இது மேற்கு கலாச்சார நோய் .... கடைசியில் இங்கும் அது பரவிவிட்டது ..."
 
" இது நோய் அல்ல ....
 
நேற்று சாப்பிட்டதை மறப்பவனுக்கு ...
 
1330 குறளையும் மனப்பாடமாக ஒப்பிப்பவன் நோயாளியாகத்தான் தெரிவான் .......
 
10 எண்களை கூட்ட கணிப்பான் உதவி நாடுபவனுக்கு .....
 
கணித மேதை நோயாளியாகத்தான் தெரிவான் ......."
 
" போதும் அறிவியல் ...
 
எனக்குத்  தேவை அரசியல் ...
 
நீ யாரை வேண்டுமானாலும் காதலித்துக்கொள் ...
 
ஆனால் உனக்கும் ****** கட்சி தலைவரின் மகளுக்கும் வரும் சித்திரையில் திருமணம்..."
 
 பாலைவனத்தில் பாதை தொலைத்த அகதியாய் நின்றிந்தான் சக்தி ...
 
இமைகளின் பிரிவு காட்சி ....
 
உதடுகளின் பிரிவு வார்த்தை ...
 
கால்களின் பிரிவு பயணம் ....
 
தயா நம்முடைய பிரிவு ?????
 
கோடையில் வற்றிய குளமாய் .....
 
அவன் கண்களும் அழுதழுது அவன் கண்களும் வற்றிவிட்டது ......
 
 
 


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

arputham.

regards

Thiva

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

பாலீர்ப்பு பற்றிய வித்தியாசமான சில விளக்கங்கள்..... அரசியல் வியாபாரிக்கு, மகனின் காதல் பற்றி அறியவல்லாம் தோன்றாது... அதனை அழகாக, ////நீ யாரை வேண்டுமானாலும் காதலித்துக்கொள் ...

ஆனால் உனக்கும் ****** கட்சி தலைவரின் மகளுக்கும் வரும் சித்திரையில் திருமணம்..."///// என்று சொல்லிருப்பது அழகு....


__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

###அறிவியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது காதல் ...###

இந்த ஒரு வரியே ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டது

"கிளாஸ்".......



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 71
Date:
Permalink   
 

Ne eluthura tamila patikumpothu ,aptiye intha kathai kanuku munadi cinema mathiri otuthu.super srini.

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Super!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

விதிகளும், சூத்திரங்களும் தேவைப்படும் ஆராய்சிக் கூடமல்ல மனது .."....எவ்வளவு வலிமையான வார்த்தைகள் ....சூப்பர் ....ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கிறாள் .... ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணிருக்கிறான் ....உண்மையில் எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.....வாழ்த்துக்கள் நண்பா

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

கருத்துக்கள் பதிவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி ...

தங்களின் விமர்சனங்களும் , பாராட்டுகளும் என்னை

மேலும் எழுதத் தூண்டுகிறது ....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink   
 

அழகான வார்தை ஜாலம்....



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கிறாள் .... ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணிருக்கிறான்.... பிறகு ஏன் இதை ஒதுக்குகிறார்கள்?

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்




அறிவியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது காதல் ...


ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கிறாள் .... ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணிருக்கிறான்.... பிறகு ஏன் இதை ஒதுக்குகிறார்கள்?






__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard