Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 8


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 8
Permalink   
 


 

பூமி சில பௌர்ணமிகளைக் கண்டு முடித்திருந்தது ....

அது ஒரு முன்மாலைப்பொழுது .....
வீட்டில் அருட்செல்வம் இருந்தார் ...

வீட்டிற்குள் வந்த சக்தி , தந்தையைப் பார்த்தவுடன் ...

ஐயோ இன்று நாடகத்தின் எந்த பகுதியை அரங்கேற்ற வந்துள்ளாரோ ?

"சக்தி உன்னுடன்பேச வேண்டும் "
நினைத்தபடியே நடப்பதை எண்ணி மனதில் சிரித்துக்கொண்டான் ...

" சொல்லுங்கள் அப்பா"

" உனக்கு மணம் பேசி முடித்து உள்ளேன், அதைப்பற்றிதான்  "

" அதுதான் முடித்துவிட்டீர்களே ... பிறகு எதைப் பேச போகிறீர்கள் ..
உங்களைப் பொறுத்தவரை நான் மகனல்ல... உங்கள் கைப்பாவை ..

அதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியாது "

" உன் நலனில் எனக்கு அக்கறை இல்லையா சக்தி"

" அக்கறை என்ற சொல்லுக்கு அகராதியில் வேறு அர்த்தம் உள்ளது...
தயவு செய்து என் வாழ்க்கையை  வைத்து பகடை ஆடாதீர்கள் "

" அரசியலில் இருப்பவனுக்கு தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது ..."

" அது உத்தமர்களின் வாழ்க்கை ...

வெறும் தமிழ் ஆசிரியனாய் ஆரம்பித்த உங்கள் வாழ்க்கை ...
நாட்டின் தலையாய பணக்காரனாய் மாறிய கதையை வாரப்பத்திரிக்கையில் எழுத தயாரா தந்தையே "

" யார் செய்யவில்லை ஊழலை , தேன் எடுப்பவன் சிறிது புறங்கையை நக்க மாட்டானா?

" தந்தையே ! நீங்கள் செய்யும் நீசச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்காதீர்கள் ....

கடலில் தவறி விழுந்தவன் , சிறிது கடல் நீரை அருந்திவிட்டால் ...
தொடர்ந்து அதைப் பருகமாட்டான்..."

" வீண் தர்க்கம் வேண்டாம் ...சக்தி "

" அப்பா , என் வாழ்க்கை என் உரிமை .... நான் காதலிக்கிறேன் "

" சக்தி மிக்க சந்தோசம் ......யார் அது?.....

ஏழை வீட்டுப் பெண்ணா ?.... அருட்செல்வம்  ஏழை வீட்டுப் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொண்டார் ..என்று விளம்பரம் செய்யலாம் ....

வேற்று சாதிப் பெண்ணா ... கவலை இல்லை ... சாதிக்களுக்கு எதிராக அருட்செல்வம் புரட்சி ....என்று விளம்பரம் செய்யலாம் ....

தொழிலதிபரின் மகளா ?... கட்சி வளர்க்க நிதி ....."

" அப்பா .... போதும் ....மகனின்  வாழ்க்கையை வியாபாரம் ஆக்கும்

உங்கள் வணிக சிந்தனையை உங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள்...."

" சக்தி, உன் அறிவும் அழகும் என் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் ...

எனக்கு உதவாத எதுவும் எனக்கு தேவை இல்லை ...."

" கடவுளே , உனக்கு நன்றி ... நான் நீங்கள் நினைப்பது போல் ஒரு பெண்ணைக் காதலிக்கவில்லை .... நான் காதலிப்பது ஒரு ஆண் மகனை ...."

"சக்தி......"

ஊழிப் பெருவெள்ளம் ...ஒரு சிறு படகை உடைக்க முழு வேகத்துடன் பாய்ந்து வந்தது .....
 

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 71
Date:
Permalink   
 

Ethirpu ilatha kathal iruntha athu than athisayam.antha athisayam natantha swaarasyam ilama poitum.nala kathai.continue frd

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Please. Check the meaning. Of Kaipavai,

Interesting ,keep writing

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

You Are Rocking Man. Well very nice episode, Arulselvathuku oru Serupadi.

Regards

Thiva

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அரசியல்வாதியின் மனதை படம் பிடித்து காட்டிய விதம் அருமை....
ஒரே ஒரு உறுத்தல், தமிழ் படித்தவனைத்தான் வில்லனா காட்டணுமா?....
உங்கள் எழுத்து, உங்கள் உரிமை... மேற்கொண்டு கதையுங்கள்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

@sema interstinga irruku.....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அற்புதமான தமிழ் வளம் உங்களிடம் கொட்டிக்கிடக்கிறது....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard