Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள் - 30


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள் - 30
Permalink   
 


கல்பனாவின் வேண்டுகோளைக் கேட்டதும் ஒருகணம் அதிர்ந்து போனான் திவாகர்.

கதிரவனை வேலையை விட்டு விலக்கவேண்டுமா?
 
அந்த அளவுக்கு போவதற்கு அவன் செய்த குற்றம் தான் என்ன?
 
உள்ளத் தூய்மையுடன் என்னை நேசிப்பதாலா?
 
நடந்தது தவறென்றால் அந்தத் தவறுக்கு நானும் தானே பொறுப்பாளி.
 
அப்படி இருக்க அவனை மட்டும் தண்டிப்பதா?
 
என்ன சொல்வதென்று புரியாமல் மெளனமாக நின்றான் திவாகர்.
 
"என்ன திவா?  ஷாக் ஆயிட்டீங்களா? அவனை வேலைய விட்டு எடுத்துட்டீங்கன்னா மறுபடி இப்படி ஒரு சம்பவம் நடக்கவே நடக்காது. உங்க பேரும் கெட்டுப்போக சான்ஸே இருக்காது." - என்றாள் கல்பனா. 
 
அவளையே ஒருமுறை அழுத்தமாகப் பார்த்த திவாகர், "ஸாரி கல்பனா. அது மட்டும் என்னாலே முடியாது." என்றான் நிதானமாக.
 
"திவா!" - என்று அதிர்ந்து போனாள்  கல்பனா.
 
“ஆமாம் கல்பனா.  அவன் வளரவேண்டிய பையன்.  வாழ்க்கையிலே யாருமே கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையிலே இருந்துகிட்டு எவ்வளவு ஏளனங்களையும், அவமானங்களையும் சுமந்துகிட்டு முன்னுக்கு வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோட வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன். அவன் முன்னேற நம்மால ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாவிட்டாலும் அவனுக்கு இருக்கிற வழியை அடைக்காம இருக்கணும். என்னவோ தெரியலே அவனைப் பார்க்கிறபோதெல்லாம் எனக்கு இவன் மட்டும் நல்லபடியா முன்னுக்கு வர நம்மால ஆனதை செய்யணும் என்கிற எண்ணம்தான் மேலோங்கி இருக்கு. அதுவும் தவிர அவன் முதலாளியோட நேரடி அப்பாயிண்ட்மெண்ட். அவனை நான் விலக்கனும் என்று நினைத்தாலும் அது என்னாலே முடியாது.”–என்றான் திவாகர் அழுத்தந்திருத்தமாக.
 
எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தாள்  கல்பனா.
 
"கல்பனா..எல்லா மனிதர்கிட்டேயும் ஏதாவது ஒரு வீக்னெஸ் இருக்கத்தான் செய்யும்.  அதுக்காக அவங்க திறமையைக் குறைத்து மதிப்பிடமுடியுமா?  விரலில் கட்டி வந்திடுச்சு என்பதற்காக விரலையே வெட்டி எறிந்துவிட முடியுமா என்ன?  கதிரவன் கிட்டே இருக்கிற பலவீனத்தை நாம முடிஞ்சா சரிபண்ணப் பார்க்கணுமே தவிர அதுக்காக அவன் வாழ்க்கையையே பாழடிக்கக் கூடாது.  நாம எல்லாரும் படிச்சவங்க.  வெல் பிஹேவியர்ட்.  நம்ம கிட்டே உயர்ந்த எண்ணங்கள் தான் இருக்கணுமே தவிர இப்படி ஒருத்தரோட வாழ்க்கையை கெடுக்குற எண்ணம் நமக்கு வரவே கூடாது டியர்.  அதனாலே கதிரவனோட பொழைப்புக்கு வேட்டு வைக்கணும் என்கிற எண்ணத்தை மட்டும் விட்டுடு கல்பனா." - என்றான் திவாகர் தெளிவாக.
 
அவனையே ஒரு கணம் ஆழமாகப் பார்த்த கல்பனா மறுகணம் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டவளாக, "ஒகே திவா.  நீங்க சொல்லுறதும் சரிதான். எதுக்கும் அவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்குங்க.  டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுங்க.  உங்களுக்கு நான் சொல்லணும் என்பது இல்லை. பட் அதுதான் உங்களுக்கு நல்லது" - என்றாள் . 
 
அப்பாடா என்றிருந்தது திவாகருக்கு.
 
 “நீ சொல்லுவதும் சரிதான் கல்பனா.  நீ சொல்லற மாதிரியே நான் நடந்துக்கறேன். ஓகே. இப்போ நீ ரெஸ்ட் எடுத்துக்க. மனசுக்குள்ளே எதையும் கற்பனை பண்ணிக்கிட்டு அவஸ்தைபடாதே. ரிலாக்ஸ்டா இரு.டேக் கேர் மை டியர்.”என்றவனாக அவளது நெற்றி வகிட்டில் முத்தமிட்டான் திவாகர்.
 
"சரிங்க பாஸ்" என்றாள் கல்பனா. 
 
"கல்பனா! ஒரு சின்ன ரிக்வஸ்ட்"- என்றான் திவாகர் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு. 
 
"என்ன?" - என்பதுபோல கணவனைப் பார்த்தாள் கல்பனா.
 
"வந்ததுதான் வந்துட்டேன்.  ஆபீசுக்கு போறதுக்கு முன்னாலே ஒரு கெட்ட ஆட்டம் போட்டுடலாமா?" - கண்ணைச் சிமிட்டியபடி குரலில் குறும்பு கொப்பளிக்கக் கேட்டான் திவாகர்.
 
கல்பனாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
 
"க்கும்..ஆசையைப் பாரு ஆசையை. அதெல்லாம் ஒண்ணும்  வேணாம். அத்தை கீழே தான் இருக்காங்க." - என்றாள்  கல்பனா முகம் சிவக்க.
 
"கீழே தானே இருக்காங்க?  அதெல்லாம் இங்கே ஒண்ணும்  வரமாட்டாங்க." - என்றான் திவாகர் விடாமல்.
 
"மூச்.. இப்போசமத்தா வேலைக்குப் போயிட்டு ஒழுங்கா வேலைய கவனிச்சிட்டு சாயங்காலமா வருவீங்களாம்." - என்று அவன் முதுகில் கையை வைத்து நெட்டித்தள்ளி வெளியே அனுப்பிவிட்டு கதவை சார்த்திக்கொண்டு அதன் மீதே சாய்ந்து நின்ற கல்பனாவின் மனம் மிகவும் லேசாகி இருந்தது.
 
நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தபடி கீழே இறங்கிய திவாகர், "அம்மா.  சாப்பாடு எடுத்து வையுங்க. நான் சாப்பிட்டுவிட்டு கிளம்பணும் "என்று குரல் கொடுத்தவனாக டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.
 
 
**********************************************
 
தனது அறையில் அமர்ந்தபடி கஸ்டமர் கேர் டிப்பார்ட்மெண்ட்டுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்வது தொடர்பாக ஸ்டேட்மென்ட்டை கணினியில் பார்வையிட்டுக்கொண்டிருந்தான் கதிரவன். 
 
பார்வைதான் கணினியில் இருந்ததே தவிர அவன் மனம் அன்று நடந்த சம்பவத்தை அசை போட்டுக்கொண்டிருந்தது.
 
திவாகர் தன் காதலை வெளிப்படுத்தியதென்னமோ சந்தோஷமான ஒன்றுதான்.  ஆனால் அந்தச் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தொடர்ந்து நடந்த சம்பவம் அவனைக் கட்டிப்போட்டுவிட்டது.
 
"ஐ லவ் யு கதிரவன்" என்ற திவாகரின் வார்த்தைகளும் அவன் தன்னைக் கட்டி அனைத்து முத்தமிட்டதும் மனசுக்கு ரொம்ப சந்தோஷத்தையும் பரவசத்தையும் கொடுத்ததென்னவோ நிஜம் தான்.
 
ஆனால் அது எந்தவிதத்திலும் திவாகரின் குடும்ப வாழ்க்கையைப் பாதித்துவிடக்கூடாது என்பதிலும் அதற்கு தான் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் அவன் உறுதியாக இருந்தான்.
 
ஏனென்றால் கணவனின் அன்பை இழந்து புறக்கணிக்கப்பட்டால் ஒரு பெண் எப்படி எல்லாம் துடித்துப்போவாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
 
அவன் தாயே இருக்கிறாளே கண்முன்னே ஒரு நடமாடு உதாரணமாக.
 
என்னதான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தாலும் சமயங்களில் சில மிருகத்தனமான மனிதர்களின் வக்கிரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமலும் அவர்களை ஒதுக்க முடியாமலும் திணறிப்போன தருணங்களில் அவள் உடைந்துபோனதையும் அவன் பார்த்துத்தானே இருக்கிறான் !
 
“உங்க அப்பா மட்டும் அன்னிக்கு சொல்லாம கொள்ளாம என்னை விட்டுட்டு போகாம இருந்திருந்தா நானும் நீயும் இப்படி எல்லாம் கெட்டுச் சீரழிய வேண்டியதே இருந்திருக்காதே.”– என்று சமயங்களில் அவள் கலங்கியதையும் பார்த்தவன்தானே அவன்?
 
அப்போதெல்லாம்,  “இப்பக் கூட ஒண்ணும் கேட்டுப் போகலே அம்மா.  நான் மூட்டை தூக்கியாச்சும் உன்னைக் காப்பத்தறேன்.  இந்த அசிங்கமெல்லாம் உனக்கு வேண்டாம்மா"என்று கூட அவன் சொல்லி இருக்கிறான்.
 
உடனே அவள் முகம் மாறிவிடும்.  ஒருவித வைராக்கியமும் தீவிரமும் அவளிடம் குடிகொண்டுவிடும்.
 
“அதெல்லாம் வேண்டாம்ப்பா.  நீ படிச்சு ஒசந்த நிலைமைக்கு வந்து காட்டணும். நான் மனசுக்குள்ளே வச்சுகிட்டு இருக்குற வைராக்கியத்துலே நீ ஜெயிச்சுக் காட்டணும் .” –என்று அழுத்தமாகக் கூறி தன் மனதை சகஜ நிலைக்கு மீட்டுக்கொண்டுவிடுவாள் ஜமுனா. அவள் உண்மையிலேயே மீட்டுக்கொண்டாளா அல்லது அவனுக்காக மீட்டுக்கொண்டது போல நடித்தாளா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம் .
 
அதனால் எந்த ஒரு பெண்ணும் தன்னால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக 
இருந்தான் .
 
“எனக்கு இதுவே போதும். இன்று திவாகர் கொடுத்தஅணைப்பும் முத்தமுமே இந்தப் பிறவி முழுமைக்கும் போதும். எப்படியோ அவர் என்னைக் காதலிக்கிறார் என்ற ஒன்றே போதும். இதற்கு மேல் 
அவரிடம் எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.”என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் அவன்.
 
அநத முடிவுக்கு வந்த பிறகு அவன் மனமும் தெளிவடைந்தது.
 
ஆனால் திவாகர் வீட்டுக்குப் போயிருக்கிறாரே. அவரது மனைவி எப்படி எடுத்துக்கொண்டிருக்கிறார்களோ? அவரது வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அது  பிளவு வரை கொண்டுபோய் விட்டுவிடுமோ என்று அஞ்சினான் கதிரவன்.
 
அப்படி ஒருநிலை ஏற்பட்டுவிட்டால் அதன் பிறகு நாம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இங்கு வேலையில் இருக்கக்கூடாது என்ற முடிவுக்கே  வந்துவிட்டான் அவன் .
 
அப்போது இண்டர்காம் ஒலித்தது .
 
எடுத்தான்.
 
மறுமுனையில் ஸ்ரீதர்தான் பேசினான். 
 
அவன் சொன்னதைக் கேட்டதும் பரபரப்படைந்தான் 
கதிரவன் .
 
“அப்படியா? வரச்சொல்லுங்க ஸ்ரீதர். அவங்க வந்து  என்னைப் பார்க்க வருவதேர்கேல்லாம் அனுமதி கேட்கணுமா?  நான் என்ன அவ்வளவு பெரிய மனுஷனா? வாட் இஸ் திஸ் ஸ்ரீதர்?" - என்ற கதிரவனின் குரலில் உண்மையிலேயே வியப்பும் ஆதங்கமும் தொனித்தது.
 
 
“நான்கூட சொன்னேன் கதிரவன். பட் அவங்கதான் ஆபீஸ் எத்திக்ஸை மீறக்கூடாதுன்னு …”  -என்றான் 
ஸ்ரீதர் .
 
“சரி சரி வரச்சொல்லுங்க.” – என்று ஒலிவாங்கியை வைத்த கதிரவன் இருக்கையிலிருந்து எழுது வருபவரை வரவேற்க கதவருகே சென்றான்.
 
கதவைத் தள்ளிக்கொண்டு, "என்னப்பா கதிரவா?  உள்ளே வரலாமா?"என்று கேட்டபடியே நுழைத்தார் சோமசேகர்.
 
அவருடன் கூடவே வந்த புதிய நபரை ஏறிட்டுப் பார்த்தான் கதிரவன்.
 
"என்ன சார் இது.  இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டு?  வாங்க சார்." - என்று மனமெல்லாம் சந்தோஷத்துடன் அவரை வரவேற்றான் கதிரவன்.
 
"நல்லா இருக்கியா கதிரவா?" என்று கேட்டபடி இருக்கையில் அமர்ந்தவர் தன்னுடன் வந்தவரைப் பார்த்து, "ஏண்டா தயங்கறே.  வா. வந்து உட்கார்." என்றார் சோமசேகர்.
 
"இவர் யார்? புதிதாக இருக்கிறாரே?" என்பது போல அவரைப் பார்த்தான் கதிரவன்.
 
அவனது பார்வையைப் புரிந்துகொண்டவராக, "ஓ. அயாம் ஸாரி. இவரை யாருன்னு உனக்கு சொல்லவே இல்லையே. இவர் தான் சந்திரசேகர். திவாகரோட மாமனார்." - என்றார் சோமசேகர் நிதானமாக.
 
(தொடர்ந்து மலரும்)

 

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதையை நீங்கள் கொண்டு போகும் விதம் நல்லாருக்கு ....திவாகரின் காதல் பரிதாப்பட்டு வந்ததாக இருந்தால்...பாவம் கதிர் இது போன்ற காதலில் அன்பு சீக்கிரம் குறைந்து விடும்....பார்க்கலாம் என்ன சொல்றீங்க என்று....but pls give a good decision to kathir....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Ayyoo pavavam Fridger!!!???

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

இப்போ தான் ஒரு சிக்கல் முடிஞ்சிது, அதுக்குள்ள இன்னொண்ணா?

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 71
Date:
Permalink   
 

Ithula yar nalavankanu puriyala.thiva nalavara iruntha than manaivita ,ena problam vanthalum parava ilenu ,na kathira love pantrenum solirukalame,ore nimisathil kathalum varum,ore nimisathila manaivikaka kathira vitu vilakurenu solran

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Fridger,

the story is going on nice way but i feel its time for Kathiravan to move from that job or seek for a better job and leave That place.
if Thiva's Father or Kalpna's Father gets to know about thivager's new affair that poor boy (Kathir) has to suffer. well i wish he should seek
a better job now.

regards

Thiva



-- Edited by thiva on Wednesday 9th of October 2013 04:05:58 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Very nice move but its seems to be very predictable.
Waiting to hear more....eagerly

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

கதையில் தான் எத்தனை முடிச்சுக்கள்....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

nice

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard