நீங்கள் கையெழுத்துப் போடும் விதத்தை வைத்து உங்கள் குணத்தை கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?
1)கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் விவேகானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே. . 2)கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி . உடை மாற்றுவதுபோலக் காதலன் / காதலியை மாற்றுவீர்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. .
3)கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் . பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய். .
4)உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக் ஒபாமா இருப்பார் .
. 5)பெயருக்கு சம்பந்த்மே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்க ூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ்.
. 6)பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் . ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் . .
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் . .
8)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா . .
9)கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக் கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி. வி.ராமன் .