கையில் மடக்கி வைத்திருந்த குடை விரியும் போது கூடவே மனசுக்குள் ஒரு பரவசம் விரியுமே, அது போல் இத்தனை நாள் காத்திருந்த வலி மறைந்து என்னை மீண்டும் கண்டடைந்ததில் அவன் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. அவனுக்கு மறைக்க தெரியவில்லை. அது வழிந்து அவன் உடல் முழுதும் அதிர்ந்து கொண்டிருந்ததை துள்ளி கொண்டிருந்த உடல் மொழியில் அறிய முடிந்தது. பத்து நிமிட நடையில் ரயில் நிலையம். அதற்குள் ஆயிரம் கேள்விகள். நான் முதுகில்சுமந்து கொண்டிருந்த தோள் பையை பிடுங்கி கொண்டான்.
"இவ்வளவு வெயிட்டா இருக்கே?"
"எப்பவும் எத்தனை மணிக்கு வேலை முடியம்?"
என்னுடைய பதில்கள் மணிரத்னம் வசனத்தை விட குறைவாக ஒரு வார்த்தையில் முடிந்தது. எனக்குள்ளும் அவனை போலவே உற்சாகம் ஊறி கொண்டிருந்தது. குளத்திற்குள் என்ன இருக்கிறது என்பதை அதன் மேல் நீர்பரப்பு காட்டி விடுமா என்ன? ஆத்தா செத்தாலும் ஆட்டுக்குட்டி செத்தாலும் ஒரே ரியாக்சன் தரும் நடிகன் போல என்னை சிரமப்பட்டு மறைத்து கொண்டிருந்தேன்.
"தப்பா? உன் அனுமதி இல்லாமல் உன்னோட ஆபீஸ்க்கு போன் செய்தது? முடியல டா. எட்டு நாளா நான் பட்ட அவஸ்தை எனக்கு தாண்டா தெரியும். முதல் ரெண்டு நாளும் உன் கிட்ட இருந்து போன் வரும்னு தைரியமா காத்திருந்தேன். ஆனால், நாளாக நாளாக வேதனை கூடி கொண்டே போச்சு. உனக்கு விருப்பம் இல்லையா, உனக்கு என்னை பிடிக்கலையா, இல்லை நீ என்னை வெறுக்கிறியா, எதுவுமே தெரியாமல் எப்படி என் மீதி ஆயுளையும் கழிப்பேன். எனக்கு உன்னை பிடிக்கலை என்று ஒரு வார்த்தை சொன்னால் என் தவிப்புக்கு ஒரு விடை தெரியும். ஒரு முயற்சி எடுத்து பார்ப்போம்னு தான் அன்னைக்கு உன் ஆபீஸ்க்கு போன் செய்தேன். ரெண்டு நாளா போன் செய்யலாமா வேண்டாம்னு ஒரே போராட்டம். அதையும் தாண்டி நீ என்னை அவமதித்தாலும் பரவாயில்லை என்று தைரியமா வந்தேன். நல்ல வேளை, நேரா வந்து என்னை திட்டி விட்டு இனிமேல் இங்கே வராதேனு சொல்லிட்டு போக போறன்னு தான் முதலில் நினைத்தேன், தேங்க்ஸ் டா."
ரயில் நிலையம் வரும் வழியில் டீ குடித்து தம் அடித்து விட்டு வந்தோம். கூட்டத்தோடு கூட்டமாக என்னுடைய ஸ்டேஷனில் வந்து இறங்கினோம். எங்களை உதிர்த்து விட்டு ரயில் சென்றது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே இருட்டில் மரத்தின் கீழே அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அவன் அன்றையதினத்தை விட நிறைய பேசி கொண்டே இருந்தான். அந்தி மாலை நேரம், அருகாமையில் அவன். சுற்றிக்கொண்டு இருக்கும் அவன் வாசனை. அவனுடைய கண்களில் வழிகிற அதீத பரவசம். அடிக்கடி என் செவிக்குள் நுழையும் நிசப்தம். சுற்றிலும் நகரும் மனிதர்கள். சிறிது அளவேனும் இரைச்சல் இல்லை. அங்கேயே தான் இருந்தோம், ஆனால் எங்கேயோ சென்று கொண்டிருந்தோம். மஞ்சள் வானம் நெருங்க நெருங்க வழி நீண்டு கொண்டே போனது. முடிவே இல்லாமல் பயணம் தொடர்ந்தது.
ஹோட்டலில் சாப்பிட அழைத்தேன். பில் கட்ட அவன் போராடினான். வெளியே வந்து இருவரும் ஆட்டோவில் என் வீட்டுக்கு வந்தோம். அவன் அதிர்ச்சியில் அமைதியாக வந்தான். நான் மட்டும் தனியாக வசிப்பதை அவன் யூகித்து இருப்பான். வீட்டுக்குள் வந்ததும் அங்கிருந்த புகைப்படங்களை பார்த்தான். அவனுக்கு நான் யார் என்பது சொல்லாமலே புரிந்து இருக்கும். மாலையிட்ட புகைப்படத்தை பார்த்து என் பெற்றோர்களா என்று கேட்டான். டிவி மேல் இருந்த இன்னொரு புகைப்படம் அவனுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும். அது என் திருமண புகைப்படம். அதை வெளிகாட்டாமல் சூப்பர் ஜோடி என்றான்.
"எப்போ கல்யாணம் ஆச்சு?"
"ஏழு மாசம் முன்னாடி"
முழுக்கதையும் அவனிடம் சொன்னேன். என்னை வளர்த்த மாமன் மகளை தான் மனம் முடித்தேன். பல வருட காதல் அது. வேலைக்கு வந்து செட்டில் ஆன பிறகு தான் அத்தையின் சம்மதம் கிடைத்து திருமணம் முடிந்த கதையை சொன்னேன். வியந்தான்.
"இப்போ நீ மட்டும் தனியா ஏன் இருக்கே?"
பாதி கல்லூரி படிக்கும் போதே திருமணம் ஆனது. இன்னும் படித்து கொண்டிருப்பதால் நான் மட்டும் சென்னையில் இருப்பதை சொன்னேன்.இந்த ஒரு காரணம் தான் அவனை எட்டு நாட்களுக்கு விலக்கி வைத்தது. என் வாழ்வை இன்னொருவனுடன் பங்கு போட விரும்பாததே என்னுடைய தயக்க வளையம். அதற்குள் அவன் நீக்கமற நுழைந்து விட்டான் என்பதை அவன் அறிந்திருக்க வில்லை.
தொலைவில் சிறு வட்டமாக தோன்றும் ரயிலின் முன் வெளிச்சம், மெல்ல ஊர்ந்து நெருங்கி அருகில் வந்ததும் முழு நீள உடலையும் கண் முன் நிறுத்தி பிரமாண்டமாக ரயில் வியாபித்து இருக்கும். அது வந்து நின்றதும் தரையில் இருந்து மெல்லிய அதிர்வு தட தடவென்று உடல் முழுதும் பரவி இருக்கும். ஒவ்வொரு முறை ரயில் கடந்து போகும் போது ஓர் இனிய எச்சரிக்கையும் ஒரு மெல்லிய தெம்பும் பிரிந்து செல்லும். அவன் ஒரு ரயிலை போல் மிக மெதுவாக அருகில் வந்து நெஞ்சம் முழுக்க நிறைந்து இருந்தான். அவன் பேசி கொண்டே போனான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த திட்டமும் இல்லாமல் அவன் பேச்சு வளர்ந்து கொண்டே போனது.
அவன் குளித்து விட்டு வந்தான், தரையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டே தம் அடித்தேன். அவன் திரும்பி வந்தபோது அவனை கண்டு நான் அதிர்ந்து போனேன்.
அவனுடைய கைகள் இரண்டும் தண்டவாளங்களை போல் நீண்டு உறுதியாக இருந்தது. தோளில் இருந்து இறங்கிய அவன் கைகள் இரும்பை போல் முறுக்கி கொண்டு இருந்தது அந்த வளைவில் வெயில் பட்டு மின்னும் தண்டவாளத்தின் ஓரம் போல் இருந்தது. ஆளில்லாத காலியான ரயில் பெட்டி போல் அவன் முதுகு விசாலமாக இருந்தது. அவன் முன் புற மார்போ ரயில் மேற் கூரை போல விடைத்து கொண்டு இருந்தது. அதில் பரவி இருந்த முடிகள் உச்ச காலை நேரத்தில் பயணிகளை அடைத்து கொண்டு இருக்கும் ரயில் பெட்டி போல நெருக்கமாக இருந்தது. சற்றே கீழே இறங்கி ஒரு நேர் கோட்டில் தொப்புள் வரை நீண்டு இருந்த மூடிகள் கவுன்ட்டரில் காத்திருக்கும் பயணிகள் க்யூ போல் இருந்தது. அதற்கும் கீழே அவன் இடுப்பை சுற்றி மடித்து கட்டி இருந்த வெள்ளை வேஷ்டி முதல் வகுப்பு பெட்டியின் கருப்பு கண்ணாடி திரை போல் இருந்தது. நீண்டு பருத்து இருந்த தொடைகளும் அதை தாங்கி இருந்த அவன் உறுதியான பின்சதை நிறைந்த நீண்ட கால்களும் கைகாட்டி சிக்னல் போஸ்ட் போல் உயர்ந்து இருந்தது. சொல்ல மறந்து விட்டேன், அவன் மீசை நிலக்கரி எக்ஸ்பிரஸ் ரயில் உமிழும் புகை போல் கருமையாக நீண்டு வளைந்து இருந்தது.
ஒரு முறை களவு செய்த பிறகு மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் களவு செய்ய தூண்டுவது வாசனையும் ருசியும் தான். முதல் முறை தூண்டப்படுவது ஆர்வமும் மோகமும் தான். அது தான் வாசனையாக கவர்ந்து இழுக்கிறது. ஒரு முறை வாசனையை உணர்ந்த பின் மறுபடியும் நுகர முற்ப்பட்டால் அது அந்த களவு தந்த ருசி. சிலருக்கு அந்த ருசி பிடித்து விட்டால் அதற்கு அடிமை தான். தப்பிக்க வழியே இல்லை. வெகு சிலர் மட்டுமே ருசிக்கு தப்பி விடுகிறார்கள். அவர்களுக்கு தான் களவும் கற்று மற என்பது பொருந்தும். மற்றவர்கள் ருசிக்கு அடிமை தான். வேறு வழி இல்லை. காலமெல்லாம் அந்த வாசனையை முதல் முதல் புகுத்தியவனைத்தான் மீள வழி தெரியாமல் போதையிலே பழித்து கொண்டே இருக்கிறோம்.
காணக்காண சலிக்காத விஷயங்கள் மூன்று. அசைந்து வரும் யானை, அலை குறையாத கடல், கடந்து செல்லும் ரயில். நான்காவது என்னுடைய பாரி. எத்தனை முறை என்று கணக்கில்லை. ஒவ்வொரு முறையும் புதிது போல் உணர்கிறோம். இவனை விட உயர்ந்தவன் வேறு யாரும் இல்லை என்பதை உணர்கிறோம், இவனை விட சிறந்த இணை வேறு யாரும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறோம். அது தான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் உறவை உயிரோடு வைத்து இருக்கிறது.
"கல் நெஞ்ச காரன் டா நீ, இத்தனை நாளாய் உன் மனசைஎங்கே மறைச்சு வெச்சு இருந்தாய்? உன்னால இப்படியெல்லாம் பேச தெரியுமா? எத்தனை நாள் நீ பிரியமா பேசுவியானு ஏங்கி இருக்கேன் தெரியுமா?”
"நீ ஒரு வார்த்தை சொல்லு!. உனக்காகவே இந்த ஜென்மத்தை முடித்து கொள்கிறேன். கடைசி வரை இப்படியே உன்னோடு இருந்து விடுகிறேன். உனக்கு பிறகு தான் எனக்கு எல்லாமே!. அது ஏன் உனக்கு புரியாதா? இந்த உயிர் இந்த உடல் எல்லாமே உனக்காகத்தான் டா" அவனுக்கு மணமுடிக்க பார்த்த பெண்ணை முடிவு செய்யும் வரை என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தான்.
-- Edited by Night on Friday 27th of September 2013 07:14:38 AM
dumbstruck..... such a fabulous writing... simply i fall in ur narration and description....... want to tell u more... surely i will write a detailed feedback after end of ur story.......
//முதல் ரெண்டு நாளும் உன் கிட்ட இருந்து போன் வரும்னு தைரியமா காத்திருந்தேன். ஆனால்,நாளாக நாளாக வேதனை கூடி கொண்டே போச்சு.// really we're expecting a lit'l bit time for us from our loved ones..!
//உனக்கு பிறகு தான் எனக்கு எல்லாமே!. அது ஏன் உனக்கு புரியாதா?இந்த உயிர் இந்த உடல் எல்லாமே உனக்காகத்தான் டா"// it shows his love towards him..! Eagerly waiting for the next one..! But loving a married one is right..?
//ஒரு முறை களவு செய்த பிறகு மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் களவு செய்ய தூண்டுவது வாசனையும் ருசியும் தான். முதல் முறை தூண்டப்படுவது ஆர்வமும் மோகமும் தான். அது தான் வாசனையாக கவர்ந்து இழுக்கிறது. ஒரு முறை வாசனையை உணர்ந்த பின் மறுபடியும் நுகர முற்ப்பட்டால் அது அந்த களவு தந்த ருசி. சிலருக்கு அந்த ருசி பிடித்து விட்டால் அதற்கு அடிமை தான். தப்பிக்க வழியே இல்லை. வெகு சிலர் மட்டுமே ருசிக்கு தப்பி விடுகிறார்கள். அவர்களுக்கு தான் களவும் கற்று மற என்பது பொருந்தும். மற்றவர்கள் ருசிக்கு அடிமை தான். வேறு வழி இல்லை. காலமெல்லாம் அந்த வாசனையை முதல் முதல் புகுத்தியவனைத்தான் மீள வழி தெரியாமல் போதையிலே பழித்து கொண்டே இருக்கிறோம்.//
உண்மை.. நூறு சதவிகிதம் அக்மார்க் உண்மை. அருமையான வரிகள்.
ஒரு இணைப்பு பெட்டித் தொழிற்சாலையில் கூட இந்த அளவுக்கு வர்ணிச்சிருப்பாங்களான்னு தெரியல... இரயில் நிலையத்துல அரும்பிய காதல்ன்றதால... வர்ணனைலயுமா..?? பாத்துங்க.. Indian Railways உங்க மேல பிராது கொடுத்துரப் போறாங்க.. :D
கதை மாந்தர்களின் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கறீங்க.. :)