Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் கதை - 6


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் கதை - 6
Permalink   
 


 
 
அது ஒரு முன்மாலைப் பொழுது ...
 
ஆதவன் தன்  கதிர்க்கரங்களினால் வானில் ஆயிரமாயிரம் 
 
வர்ண ஓவியங்களை வரைந்துக் கொண்டிருந்தான்....
 
ஒரு கையில் தேநீர்க் கோப்பை ...
 
மறுகையில் அலைபேசி ..
 
நெஞ்சம் முழுவதும் தயா ....
 
வாய் நிறைந்த சிரிப்பாக நின்றிந்தான் சக்தி .....
 
அலைபேசியின் மறுமுனையில் தயா ....
 
இன்றைய நூற்றாண்டின் இணையற்ற வரமும் சாபமும் ஆன ..
 
அலைபேசியில் அளவலாவிக் கொண்டிருந்தனர்....
 
"தயா, கடவுளைவிட  உலகின் உன்னத கலைஞன் யாரென்று சொல் "
 
" இயற்கை தான் சக்தி "
 
"இயற்கையும் கடவுளும் வேறுவேறா தயா?"
 
"இயற்கை எல்லோருக்குமானது , 
 
 கடவுள் அவரவர்களுக்கானது சக்தி "
 
" நான் கடவுள் வேறு இயற்கை வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை "
 
"உன்னைப் போல் எல்லோரும் நினைத்துவிட்டால் யாருக்கும் துன்பமில்லை "
 
"சக்தி".........
 
கம்பீரமான  குரல் ஒன்று தன் பெயர் சொல்லி அழைக்க ....
 
" தயா , அப்பா அழைக்கிறார் ... பிறகு உன்னிடம் பேசுகிறேன் "..
 
அருட்செல்வம் ...
 
சராசரி அரசியல்வாதியின் சகல லட்சணங்களுடன் இருந்தார்....
 
என்றும் இல்லாமல் அப்பா தன் அறைக்குள் வருவதைப் பார்த்த சக்திக்கு ஆச்சர்யம் ...
 
தன் மகனை உற்றுப் பார்த்த அருட்செல்வம்...முகத்தில் சிறுமுறுவல் பூத்தார்.....
 
" என்ன அப்பா என்னைப் புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறீர்கள் "...
 
"சக்தி நீ நாளை எல்லார் முன்னிலையில்  மாணவரணித் தலைவனாய் மாலைச்சூடி நிற்கும் காட்சியை மனதில் ஓட்டிப் பார்த்தேன் "
 
"அப்பா நான் எப்போது உங்களிடம் அவ்வாறு ஆவதாய் சொன்னேன்"
 
அருட்செல்வம், "பழம் தின்னாத குரங்கு ..
 
 எலும்பு கடிக்காத நாய் ..
 
 பால் குடிக்காத பூனை 
 
 பதவி விரும்பாத மனிதன் உண்டா உலகில்?"
 
"அப்பா , விதிவிலக்கு இல்லாத விஷயம் இல்லை உலகில் ...
 
அதிகாரம் துறந்து அடர்வனம் புகுந்த ராமன் இல்லையா?
 
பதவி மறுத்து துறவி ஆன இளங்கோ இல்லையா?...
 
உங்கள் மூத்த தாரத்து மகன்கள் இருக்க ...
 
எனக்கு ஏன் இந்த வேஷம் உங்கள் நாடகத்தில் ?"
 
" உனக்கு வாய்த்த அறிவும் தமிழும் அவர்களுக்கு வைக்கவில்லையே,என் மகனாய் இருந்தும் உனக்கு ஏன் ஆசை வரவில்லை பணம் மீதும் பதவியின் மீதும் "...
 
"கங்கையே கொல்லைபுறத்தில் ஓடினாலும் கை நிறையதான் அள்ளிக் குடிக்க முடியும் .... நான் என்றாவது ஒரு நாள் உங்கள் பணத்தின் நிழலில் ஓய்வெடுத்து இருப்பேனா?"
 
"இது வரை இல்லை என்றால் , இனிமேல் வளர்த்துக்கொள் ஆசைகளை...பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று  
நீ படித்த தமிழில் இல்லையா?"
 
"நீங்கள்தான் சொல்லிக் கொடுத்தீர்கள் தமிழை ...உங்களுக்கு தெரியாதா? காதற்ற ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே என்று "..
 
" ஆசானாய் மாறி அறிவுரை சொல்லாதே ....
 
 பொதுமறைத் தந்த வள்ளுவனே பொருட்பாலில்தான் அதிக குறள்கள் 
எழுதிள்ளான் ....அவனுக்குத் தெரிந்து இருக்கிறது பொருள் எவ்வளவு முக்கியம் என்று ......"
 
"தப்பாய் பொருள் கொள்ள வேண்டாம் தந்தையே ,
 
அறம் வழி நிற்பவர்கள் பற்றி அதிகம் கவலைக் கொள்ளத் தேவை இல்லை......
 
இன்பத்துப்பாலில் இருவரைத் தவிர வேறு எவருக்கும் துன்பம் இல்லை .....
 
ஆனால் பொருள் கொண்டவனால்தான் துன்பங்கள் நிறைய மற்றவருக்கு ...அவனுக்குத்தான் தேவை அதிக குறள்கள் ..."
 
" விளக்கம் தேவை இல்லை தயாராய் இரு நாளை...இல்லையென்றால்  ராட்சசனாய் மாறிவிடுவேன் "...
 
அறைக்கதவை அறைந்துச் சாத்தி வெளியே சென்றார் அருட்செல்வம்...
 
அப்பன் அரக்கனாக இருந்தாலும் 
 
பிள்ளை ஞானியாகத்தான் இருந்தான் பிரகலாதன் கதையில்...
 
இன்றோ அது நிஜத்தில் ...
 
பூமியில் ஒரு பகுதியில் இருள் என்றால் மறுபகுதியில் வெளிச்சம்...
 
துன்பஇருளில் சக்தி நிற்க ....
 
மகிழ்ச்சி வெளிச்சத்தில் தயா.....
 
தன் காதலை சொல்ல தயாராகிக் கொண்டிருந்தான் ....
 
அருட்செல்வம் சொன்ன அதே நாளில் ...


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! So interesting mama..! Keenly waiting for the next episode..! The way you're handling tamil is simply awesome..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அதென்னவோ உண்மை தான்... இளைய தாரத்து பிள்ளைகள் தான்... தமிழிலும்... பின் ஊழலிலும் ஊறித் திளைக்கிறார்கள்...

பொருட்பால் குறித்த விளக்கம் அருமை...:)

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

MR. Srinivasan

excellent pa. very nice going, more over the Kural you have put very nice. i have admired this episode word by word. here is the touching lines for me:-

- கங்கையே கொல்லைபுறத்தில் ஓடினாலும் கை நிறையதான் அள்ளிக் குடிக்க முடியும் .... நான் என்றாவது ஒரு நாள் உங்கள் பணத்தின் நிழலில் ஓய்வெடுத்து இருப்பேனா?"

- பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று நீ படித்த தமிழில் இல்லையா?"

"நீங்கள்தான் சொல்லிக் கொடுத்தீர்கள் தமிழை ...உங்களுக்கு தெரியாதா? காதற்ற ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே என்று "..

-இன்பத்துப்பாலில் இருவரைத் தவிர வேறு எவருக்கும் துன்பம் இல்லை .....

ஆனால் பொருள் கொண்டவனால்தான் துன்பங்கள் நிறைய மற்றவருக்கு ...அவனுக்குத்தான் தேவை அதிக குறள்கள் ..."

-அப்பன் அரக்கனாக இருந்தாலும்

பிள்ளை ஞானியாகத்தான் இருந்தான் பிரகலாதன் கதையில்...

இன்றோ அது நிஜத்தில்

Very nice.

Regards

Thiva

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

My hearty thanks to everyone who have given their valuable feedback....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சூப்பர் ....நம் புராண கதைகளை சரியான இடத்தில் சொல்வதன்மூலம் சக்தியின் தமிழறிவை சொன்னது வித்தியாசமாக இருக்கு...துன்பஇருளில் சக்தி நிற்க ....

மகிழ்ச்சி வெளிச்சத்தில் தயா.....nice...இரண்டையும் உணர வைக்கின்றன.... பொருள் கொண்டவனால்தான் துன்பங்கள் நிறைய மற்றவருக்கு ...அவனுக்குத்தான் தேவை அதிக குறள்கள் ..."
என்று பொருட்பால் பற்றிய விளக்கம் நல்லாருக்கு ....keep it up ....waiting for the next....

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

மற்ற பகுதிகளைவிட, இந்த பகுதி என்னை அதிகமாவே கவர்ந்திருக்கு....

குறிப்பாக, ///"அப்பா , விதிவிலக்கு இல்லாத விஷயம் இல்லை உலகில்//// வரிகள் ரொம்ப அழகா இருக்கு....
காதலை காட்டிலும் அரசியல் பற்றி ரொம்ப அழகா சொல்றீங்க.... விரைவில் அரசியலுக்கான அடிக்கோடு இதுவா? என்று தெரியவில்லை.....
தொடருங்கள்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Nice,keep rocking

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

very nice story waiting read mo9re....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
Permalink   
 

Srinivasan annanuku UVAMAI KAVIGNAR nu pattam koduthurulam.
eppadi pa ipdi yosikiringa.. poramaiya iruku..


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

so nice writing.... appreciating your skill...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard