சட்டையின்பட்டன்களை விலக்கி சட்டையை கழட்டியபடியே திவாகர் தன்னை நெருங்கியபோது கதிரவனின் மனம் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.
தன் அன்புக்கும் காதலுக்கும் உரியவனின் கட்டுடலை முழுவதுமாகப் பார்க்கப் போகிறோம். அவனது அகன்று விரிந்த மார்புக்குள் இன்னும் சற்று நேரத்தில் முழுவதுமாக சிறைப்படப்போகிறோம் என்ற எண்ணம் தந்த ஆனந்த பரவசம் அவனை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒரு கணம். ஒரே ஒரு கணம் தான்.
திவாகர் அவனை நெருங்கி அவன் தோளைத் தொட்டு தன்புறம் இழுக்கும் வரைக்கும் அந்த ஆனந்த பரவசம் அவன் மனதில் நீடித்தது.
சட்டையை கழற்றி வீசிய திவாகர் அவனை இழுத்து இறுக்கமாக அணைத்தபோதுகூட அந்த பரவசம் அவன் மனதை நிறைத்திருந்தது.
ஆனால்.. அடுத்த நிமிடம்....
வலுக்கட்டாயமாக திமிறித் தன்னை அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகினான் கதிரவன்.
"நோ திவா. வேண்டாம். எனக்காக உங்க மனசாட்சிக்கு விரோதமான செயலை நீங்க செய்யவேண்டாம். மனப்பூர்வமா என்னை நீங்க காதலிச்சு அதுக்கப்புறம் இரண்டு பேரும் கலந்தால் அது நியாயம். இப்படி ஒரு அனுதாபத்தின் பெயரில் எனக்கு நீங்க சுகம் கொடுத்தால் அது பிச்சை போடுற மாதிரிதான் இருக்கும். ஐ டோன்ட் வாண்ட் டு பீ எ பெக்கர். என் மனசுலே இருக்குறத உங்க கிட்டே வெளிப்படையா பகிர்ந்துக்க ஒரு வாய்ப்பு கொடுத்தீங்க. அதுவரைக்கும் நன்றி. இப்போ என் மனசுலே இருக்குற பாரம் நீங்கிடுச்சு. இனிமேல் நீங்களாவே 'கதிர் ஐ லவ் யூ' என்று முழுமனசோட வாங்க. அதுவரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன். என் காதல் உண்மையானது. அது அப்படி முழுமனசோட உங்களை என்கிட்டே வரவழைக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு திவாகர். நீங்க வருவீங்க. நிச்சயமா வருவீங்க. ஸோ இப்போ எதுவும் வேண்டாம்." - அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் பேசினான் கதிரவன்.
அவன் முகத்தில் தென்பட்ட தீவிரம், வார்த்தைகளில் தொனித்த உறுதி திவாகரை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.
"கதிரவன். அப்படி எல்லாம் ஒண்ணும் ..." - என்று ஏதோ பேசவந்த திவாகரை மேலே பேசவிடாமல் இடைமறித்தான் கதிரவன்.
"நான் இப்போ தெளிவா இருக்கேன் திவாகர். இனிமேல் நான் பழைய மாதிரி இருப்பேன். வேலை தலைக்கு மேல இருக்கு. உங்க கிட்டே இனியும் பேசிகிட்டு இருக்க எனக்கு நேரமில்லை. நான் வரேன்." - என்று சொல்லிவிட்டு திவாகரின் பதிலுக்குக் கூட காத்திராமல் விருட்டென்று கதவைத் திறந்துகொண்டு அறையைவிட்டே வெளியேறினான் கதிரவன்.
கற்சிலையாகச் சமைந்துபோனான் திவாகர்.
அவனுக்குள் லேசான சீற்றம் எழ ஆரம்பித்தது.
"என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்? என்னை முட்டாளாக்கப் பார்க்கிறானா? போனால் போகிறதென்று எனக்கு பிடிக்காவிட்டாலும் கூட இவன் ஆசையைத் தீர்த்துவைத்து பழையபடி மாற்றிச் செயல்பட வைத்துவிடலாம் என்று நினைத்து வந்தால் இப்படி உதறித் தள்ளிவிட்டுப் போகிறானே"- என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.
"எப்படி எப்படி? இவனுடைய காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வந்தால் மட்டும் தான் இவனுடன் கலக்க வேண்டுமா? அதற்கு வேறு ஆளைப் பார்க்கட்டும். என்னைப் பொருத்தவரையில் என் மனம் முழுக்க என் கல்பனா மட்டும் தான். அவள் ஒருத்திக்கு மட்டும் தான் என் மனம் சொந்தம். வேறு யாருக்கும் அதில் இடம் கிடையாது. அப்படி இருக்க இவன் காதலை எப்படி மனப்பூர்வமாக நான் ஏற்றுக்கொள்ள முடியும். என்னால் முடியாது. முடியவே முடியாது. " - என்று அழுத்தமாகச் சொல்லிக்கொண்டான் அவன்.
"எது எப்படியோ? எனக்கு வேண்டியதெல்லாம் கதிரவன் பழையபடி வேளையில் கவனம் செலுத்தவேண்டும். அவன் உயர்ந்த நிலைமைக்கு வரவேண்டும். அதுதானே எனக்கு வேண்டும்? அவன்தான் இப்போது தெளிவாகி நார்மலாகி விட்டானே. நான் நினைத்தது நடந்துவிட்டது. அதுவே போதும்." - என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் அவன்.
கூடவே," இனிமேல் இவனிடம் பேசும்போது வார்த்தைகளை ஜாக்கிரதையாக வெளிவிட வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே பேசவேண்டும். ஹீ ஈஸ் வெரி சென்சிட்டிவ். ஆகவே நாம் தான் கேர்புல்லாக இருக்கவேண்டும்." - என்ற எச்சரிக்கை உணர்வும் அவனுக்குள் எழுந்தது.
இந்த முடிவுக்கு வந்ததும் கழற்றிப்போட்ட சட்டையை எடுத்து அணிந்துகொண்டு தன்னை ஒருமுறை சீராக்கிக்கொண்டு தனது அலுவலக அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் திவாகர்.
*********************************
இரவு நேரம். மின்மினிகளாக நட்சத்திரக்கூட்டங்கள் வானில் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.
மொட்டை மாடியில் நின்றுகொண்டு கண்சிமிட்டிக்கொண்டிருந்த விண்மீன்களையும், பிரகாசித்துக்கொண்டிருந்த பிறைநிலவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் திவாகர்.
எங்கிருந்தோ வந்த சிறு மேகக்கூட்டம் ஒன்று பிறை நிலவின் மீது படர்ந்து பரவி அதனை முழுவதுமாக மூடி அனுபவித்துவிட்டு பிறகு விலகிச் சென்றது.
மறைத்த மேகம் விலகியதும் வெளிப்பட்ட பிறை நிலவின் பிரகாசம் முன்பிருந்ததை விட சற்று அதிகமாக இருப்பதுபோலத் தோன்றியது அவனுக்கு.
வாழ்க்கையும் இந்த நிலவைப் போலத்தானோ? பிரச்சினை மேகங்கள் மூடி விலகியபிறகு வரும் சந்தோஷமும், நிம்மதியும் வாழ்க்கையை முன்னை விட அழகாக ஒளிரவைக்கிறதோ?
"என்ன பண்ணிட்டிருக்கீங்க திவா? ரொம்ப டீப்பா வானத்தையே பார்த்து யோசிச்சிட்டு இருக்கீங்க? எந்த கோட்டையை பிடிக்கப் போறீங்க?" - அருகில் கேட்ட குரலால் சிந்தனை ஓட்டம் தடைப்பட திரும்பிப்பார்த்தான் திவாகர்.
அவன் அருகே தன் வசீகரமான புன்னகை ஒளிவீச வந்து நின்றால் கல்பனா.
"நிலாவை ரசிக்க மட்டும் வயசு வரம்பு கிடையாது கல்பனா. டூ யூ நோ ஒன்திங்? இந்த உலகத்துலே பார்க்க பார்க்க அலுக்கவே அலுக்காத விஷயங்கள் நாலு இருக்கு தெரியுமா?" - என்றான் திவாகர்.
"ஈஸ் இட்? அப்படியா..?" என்று கண்கள் அகலக் கேட்டாள் கல்பனா.
"எஸ். சமுத்திரம், யானை, நிலவு - இதெல்லாம் பார்க்க பார்க்க அலுக்கவே அலுக்காத விஷயங்கள் தெரியுமா?" என்றான் திவாகர்.
"ஹேய். நாலு விஷயங்கள் என்று சொல்லிட்டு மூணே மூணுதான் சொல்லி இருக்கீங்க. நாலாவது என்ன? " - என்று கேட்டால் கல்பனா.
"நாலாவதா? நாலாவது ..நாலாவது.. என்னோட கல்பனா" - என்றபடியே கை நீட்டி அவள் இடுப்பை பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான் திவாகர்.
"ஐயோ.. என்ன இது திவா? ப்ளீஸ். விடுங்களேன். யாராவது வந்துடப்போறாங்க."என்று அவன் பிடிக்குள் நெளிந்தபடியே சிணுங்கினாள் கல்பனா.
"யாரும் வரமாட்டாங்க. எங்க வீட்டுலே இருக்கறவங்க இங்கிதம் தெரிஞ்சவங்க." - என்று தன்பிடியை மேலும் இறுக்கினான் திவாகர்.
"யாரும் பார்க்கலேன்னு நினைக்காதீங்க. நம்மையே ஒருத்தர் பார்த்து சிரிக்கறாரு." என்றாள் கல்பனா.
"இங்கே இல்லே. மேலே பாருங்க. ஆகாயத்துலே நிலா நம்மை பார்த்து சிரிச்சுகிட்டு இருக்கு.
என்னடா இந்த மனுஷனுக்கு இடம் பொருள் ஏவல் எதுவுமே தெரியலையேன்னு உங்களைப் பார்த்து கேலியா சிரிச்சுட்டு இருக்கு." என்றாள் கல்பனா.
"ஓஹோ. அப்படியா சமாச்சாரம்?"- என்ற திவாகர் தலையை தூக்கி ஆகாயத்தில் மிளிர்ந்த நிலவை ஒருமுறை பார்த்தான். பிறகு கல்பனாவின் பக்கம் திரும்பியவன்," நீ சொன்ன மாதிரி நிலவு சிரிக்கத்தான் செய்யுது கல்பனா. ஆனால் அது கேலிச்சிரிப்பு இல்லை. இந்த ஜோடி எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க என்று நம்மைப் பார்த்து மனம் நிறைந்து சிரிக்கிற ஆனந்தச் சிரிப்பு அது."- என்றான் திவாகர்.
"உங்ககிட்டே வாயைக் கொடுக்க நம்மாலே முடியாது சாமி." - என்றால் கல்பனா பெருமை கலந்த பூரிப்புடன்.
"முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் கல்பனா? நான் விட்டுடுவேனா?"- என்றபடி அவள் முகத்தை தன பக்கம் திருப்பி அவளது செவ்விதழ்களில் தன் உதடுகளைப் பதித்து அழுத்தி முத்தமிட்டான் திவாகர்.
"கல்பா டியர். ஐ லவ் யூ ஸோ மச் டார்லிங்." - கிறக்கத்துடன் அவள் காதுமடலில் கிசுகிசுத்தான் திவாகர்.
"சரிதான்.. கல்யாணம் ஆனதுலே இருந்து தினமும் இப்படி எத்தனை தடவை சொல்லுவீங்களாம்?" - பெருமை கலந்த நாணத்துடன் கேட்டாள் கல்பனா.
"அதெல்லாம் நான் கணக்கு வச்சுக்கலை. ஆனா நான் பேரன் பேத்தி எடுக்கற வயசு ஆனா அப்போ கூட தினமும் ஐ லவ் யூ சொல்லிகிட்டே இருப்பேன்."- என்றான் திவாகர்.
"நேரமாகுது. கீழே வாங்க. படுத்து தூங்கவேண்டாமா? நாளைக்கு வேலைக்கு போகவேண்டுமே?" - என்றபடி அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் கல்பனா.
இருவரும் கீழே இறங்கி படுக்கை அறையை அடைந்தனர்.
அறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்துகொண்டாள் கல்பனா. அவளை ஆசையுடன் நெருங்கிய திவாகர் அவள் மடிமீது தலைவைத்து படுத்துக்கொண்டான்.
"நான் ரொம்பக் கொடுத்து வச்சவ திவா"- என்றாள் கல்பனா நெகிழ்ச்சியுடன்.
"ஈஸ் இட்?" - என்றபடியே அவள் முகத்தை காதல் கனிய நோக்கினான் திவாகர்.
தன் மடிமீது ஒரு சிறுகுழந்தையைப்போல படுத்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தை நோக்கி குனிந்தபடி அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி பேச ஆரம்பித்தாள் கல்பனா.
"இப்படி மனசு நெறைஞ்ச காதலோட ரெண்டுபேர் ஒண்ணா கலக்கறது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்? எனக்கு கிடைச்சு இருக்கே. ஐ பீல் ஸோ லக்கி திவா." - என்றால் கல்பனா. சந்தோஷத்தில் அவள் கண்கள் லேசாக கலங்கின.
சட்டென்று திவாகரின் காதுகளுக்குள், “மனப்பூர்வமா என்னை நீங்க காதலிச்சு அதுக்கப்புறம் இரண்டு பேரும் கலந்தால் அதுதான் நியாயம். நீங்களாகவே 'கதிர் ஐ லவ் யூ' என்று முழுமனசோட வாங்க. நீங்க வருவீங்க. நிச்சயம் வருவீங்க திவாகர். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.” – என்று காலையில் கதிரவன் சொன்ன வார்த்தைகள் ரீங்காரமிட்டன.
"நீங்க வருவீங்க. நிச்சயமா வருவீங்க."
"நீங்க வருவீங்க. நிச்சயமா வருவீங்க."
மீண்டும் மீண்டும் இந்த வார்த்தைகள் அவன் செவிப்பறையில் வந்து மோத ஆரம்பித்தன.
"ந்நோ." - என்று கத்தியபடியே கல்பனாவின் முகத்தை விலக்கிவிட்டு அவள் மடியிலிருந்து திமிறி எழுந்தான் திவாகர்.
அந்த ஏ.ஸி. அறையிலும் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது திவாகருக்கு. பதட்டத்தால் அவன் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது.
excellent i am happy for Kathir nothing happens. At the same time i feel very sad for Thivager a nice family man his mentally upset now. Story goes in
nice way please let a new arival to change kathirs mind and free Thivager. well keep rocking BRO.
"நீங்க வருவீங்க. நிச்சயமா வருவீங்க." எப்டியோ கதிர் வெற்றி பெற்று விட்டான் என்று சந்தோஷ பட முடியாது ஆனால் அவனின் காதலின் ஆழம் புரிகிறது....எப்பொழுதும் முதல் காதல் மறக்க முடியாது....இருவரின் உணர்வுகளையும் நன்றாக எழுதுறீங்க...வாழ்த்துக்கள்....