Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நானும் பாரியும்….! - 4


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
நானும் பாரியும்….! - 4
Permalink   
 


ஒரு முறை. ஒரே முறை மட்டும் தவறு செய்து விடலாம் என்று தோன்றும். முதல் முறை தவறு செய்வது மட்டுமே தூண்டுதல். பிறகு அதையே மீண்டும் மீண்டும் செய்தால்  அது தூண்டுதல் இல்லை.  அது போதை. எல்லோருக்கும்  களவு செய்ய மட்டுமே தோன்றுகிறது. அதை மறக்கத்தான் தெரியவில்லை. ஒரு முறை போதும், அதற்கு பிறகு அவனை வெட்டி விடலாம். திரும்பி பார்க்க தேவை இல்லை. அது அந்த நேரத்து முடிவு. ஆனால், அவன் எல்லாவற்றையும் மாற்றி அமைத்தான்.

ஒரு மேய்ப்பனின் பின் செல்லும் ஆட்டுக்குட்டி போல் அவனை இருட்டில் தொடர்ந்து கொண்டிருந்தேன்ஆனால் அவனுக்கு தெரியாது, இனி என்னைத்தான் அவன் காலம் எல்லாம் தொடர்ந்து வர போகிறான் என்பது.

"எங்கே போறோம்?"

"அதோ அந்த பில்டிங் தான். அது என்னோட கன்ஸ்ட்ரக்ஷன் சைட். இன்னும் வேலை முடியலை. அங்கே வாட்ச் மேன் மட்டும் தான்."

"தொந்தரவு இல்லையே?"

"ஒன்னும் இல்லை"

அங்கே நெருங்கியதும், அவன் வாட்ச்மேனிடம் சில நிமிடம் பேசிவிட்டு, எனக்கு வீட்டை சுற்றி காட்டுவது போல் அழைத்து சென்றான். அது அபார்ட்மெண்ட்ஸ் போன்ற கட்டிடம். இன்னும் காற்றில் ஈர சிமெண்டின் வாசனை. அவனுக்கு அது பழகிய இடம். இருட்டில் என்னை கை பிடித்து அழைத்து சென்றான். கட்டி முடிக்காத அடுக்கு மாடி வீடுகள்.   ஒவ்வொரு படியாக ஏறி மூன்றாவது மாடிக்கு வந்தோம். தூரத்தில் பால் நிலவு கசிந்து திறந்திருந்த சட்டங்கள் வழியாக அந்த அறைக்குள் நுழைந்து கருமையான வெளிச்சத்தை பூசி கொண்டிருந்தது. சுற்றிலும் கருப்பு மரங்கள் தலை அசைத்து தென்றலை அங்கே தவழ விட்டது.

அவனை இழுத்தேன். அதற்கு மேல் பொறுமையை இழந்தேன். ஈர சுவரில் அவன் சரிந்து நின்றான். இருவரும் நெருக்கமாக அணைத்து இருந்தோம். மோதி கொள்ளும் மூச்சு காற்றில் வெப்பம் குறைந்து இருந்தது. மூச்சும் மூச்சும் உரசி கொண்டது. நல்லதோர் ஆரம்பம் உதட்டில் துவங்கியது. அவனுடைய இதழில் தேடலை தொடர்ந்தேன். அவனை வளைத்தத்தில் முகம் குறுக்காக சாய்ந்து அதுவரை இடித்து கொண்டிருந்த மூக்குகள் விலகி இன்னும் வாகாக எனக்கு அமைந்ததுஒரு இனிய நறுமணம் அவனை சுற்றி கொண்டே இருந்தது. மொத்தமாக பருகி விட மனசு துடித்தது. முள்ளை முள்ளால் எடுப்பது போல் அவனும் தேடலை இதழ்களில் தொடங்கினான்.

என் இடுப்பில் கை வைத்து ஒவ்வொன்றாக அவிழ்த்தான். அவன் சரிந்து கீழே இறங்கினான். கடைசி திரையையும் பறித்தான். அதுவரை உள்ளே பதுங்கி இருந்த புலி அவன் மேல் பாய்ந்தது, குருடன் தடவிய யானை போல் அவனுக்கு இருளில் அந்த புலி ஒவ்வொரு வடிவமாக உருவெடுத்தது. விடைத்த காளானா அல்லது சிவந்த குடையா? அது என்ன வளையாத இரும்பா இல்லை எலும்பில்லாத  மாமிசமா? அவனுக்கு அதிர்ச்சியில் நாக்கு ஒட்டிக்கொண்டது. திறந்த வாயை மூட முடியவில்லை. அவன் அஞ்சியதை  வெளிக்காட்டாமல் தேர்ந்த வீரன் போல் தொடர்ந்து முன்னேறி கொண்டு வந்தான். அவன் முழுதுமாக சிறை பிடித்த எக்களிப்பில் என்னை இன்னும் இறுக்கமாக அணைக்கவும் அவன் பின்னந்தலை எகிறியது. அவனுக்கும் என்னுடைய வீரனுக்கும் போர் ஒரே நிலையில் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் முழுவதுமாக பற்றுவதும் பிறகு நழுவுவதுமாக போர் சுவாரஸ்யமாக நிகழ்ந்து கொண்டு இருந்தது.

இனி நாளை என்பதே இல்லை. இன்று மட்டும் தான், இந்த நிமிடம் மட்டும் தான் சாஸ்வதம் என்பது போல் அவன் இயங்கி கொண்டிருந்தான். ஒரு கலைஞனிடம் இது தான் உன் கடைசி மேடை, இனி உனக்கு இது வாய்க்க போவதில்லை என்று சவால் விட்டால் அவனிடம் ஒரு ஆவேசம் பிறக்கும் அல்லவா? அது போல் இருந்தான் அவன்.

நகரத்தில் எல்லா சாலைகளும் ரோமிற்கு செல்வது போல், உடலில் எல்லா நரம்புகளிளும் பாயும் ரத்தம் ஒரே இடத்திற்கு பெருகி குவிந்தது. அணையில் நீர் மட்டம் கட கடவென்று உயர்ந்து கொண்டே போனது. நண்பன் வீட்டு நாய்க்குட்டியை தட்டி பழக்கப்படுத்தி வைத்தால் அடுத்த முறை செல்லும் போது வாலாட்டும். அவனும் அதைத்தான் செய்து கொண்டு இருந்தான். அவன் தன் அடையாள அறிவிப்பை உடலின் ஒவ்வொரு நரம்பு வழியாக அனுப்பி எல்லா செல்லுக்குள்ளும் பதிந்து கொண்டிருந்தான். வெள்ளை வீரர்கள் கொட்டடியில் இருந்து புறப்பட்டு விட்டனர். அவை அவனை விரட்டி கொண்டே முன்னேறி வரவும் அவன் பின்னோக்கி நகர்ந்தான். இறுதி எல்லை வரை வந்து விட்டு அவன் போக்கு காட்டி விட்டு மீண்டும் அவர்களை துரத்தினான். கபடி சூடு பிடித்தது. நேரம் ஓடி கொண்டே இருக்க நிறைய வீரர்கள் பெருகி எல்லை வரை அடைத்து கொண்டு இருந்தனர். அவனால் இனியும் பின்னோக்கி அவர்களை துரத்த இயலவில்லை. நெஞ்சை நிமிர்த்தி கொண்டு எல்லைக்கோட்டிற்கு வந்து பாய தயாராக இருந்தனர்.

நான் என்னை மறந்தேன். திறந்திருந்த கண்களில் எதுவும் தெரியவில்லை. நான் என் வசம் இல்லை. இது போல் ஓர் தருணம் எனக்கு வாய்த்ததில்லை. முழு மனசும் ஆராதிக்கிற ஓர்  இன்பம் இது போல் ஏற்பட்டதில்லை. மெல்ல அவனிடம் சரணடைந்து கொண்டிருந்தேன். என் உடல் இனி என் கட்டுப்பாட்டில் இருக்க போவதில்லை. எந்த நொடியில் நிகழ்ந்தது என  கணிக்க முடியுமா, என்ன? என் மனமே, இனி நீயாவது எனக்கு பணிவாயா? கடவுளே,  நான் தேடும் ஒருவனை நீ அனுப்பி விட்டாயா? இவன் துணையோடு தான் இனி என் இரவுகளை கடப்பேனா? இது தான் பரமமா? இது தான் பேரின்பமா? இது தான் உன்னதமா?

கொட்டடியில் மீதி இருந்த வீரர்கள் போர் முடிந்த பிறகும் சலம்பி கொண்டிருந்தனர். இன்னமும் துடிப்புடன் அடங்காமல் உடனே இன்னொரு போரை துவங்க ஆயத்தமானார்கள். அவர்கள் அறிந்திருக்கவில்லை, அன்றைய தினம் போர் நிறுத்த முழக்கம் தெரிவிக்கப்பட்டதை!.

நான் மயக்கத்தில் இருந்து தெளிவு பெற்று கண்களை திறந்த போது, அவன் தரையில் இல்லை. இருட்டில் கண்களை பழக்கி சொற்ப வெளிச்சத்தில் அவனை தேடியபோது சிறிது அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அசைவுகள் இருளிலும் எனக்கு புரிந்தது. அவன் ஒற்றை வீரனாய் போர்க்களத்தில் வாள் வீசிக்கொண்டிருந்தான். என்னை அவன் துணைக்கு அழைக்காததில் என் விருப்பதிற்கு மட்டும் அவன் தலை சாய்த்தது புரிந்தது

இருவரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறி நடந்தோம். பசி வயிற்றை கிள்ளியது. இரவு உணவு சாப்பிட அழைத்தான். மறுத்து விட்டு ரயில் நிலையம். அருகே வந்து டீ குடித்து விட்டு தம் அடித்தோம். அவன் அறியாமல் அவனை பார்த்தேன். மிக மெதுவாக என் மனதிற்குள் நுழைந்து கொண்டிருந்தான். அவனுடைய ஆளுமை என்னை அசரடித்தது. அவனை சந்தித்து உரையாடியதில் இருந்து, எனக்கு பணிந்ததில் இருந்து அவன் ஆளுமை அவன் அணுகுமுறை இரண்டையுமே  முற்றிலும் புதிதாய்  உணர்ந்தேன். ஆளுமை என்பது அதிகாரத்தில் இல்லை. ஆளுமை என்பது தோற்றத்தில் இல்லை. அது உடல் மொழியிலும்  இல்லை. பிறரை மதித்தலில் தான் உள்ளது. பிறர் யாராக இருந்தாலும் எவ்வாறாக இருந்தாலும் ஏற்றுகொள்வதில் தான் உள்ளது. எந்த முகமனும் இன்றி, போலிகளை மறைக்காமல், பொய் திரையும் அணிந்து கொள்ளாமல்,  உள்ளது உள்ளவாறே வெளிப்படுத்த ஒரு ஆண்மை வேண்டும். நான் இது தான், நான் இவ்வாறு தான், என்னிடம் பொய் இல்லை என்பதாக இருந்தது அவனது  குரல். அது தான் அவன் ஆளுமை. உள்ளே ஒரு குரலும் வெளியே வேறு குரலிலும் அவன் பேசவில்லை. கட்டிடத்திற்குள் செல்வதற்கு முன்னும் சென்ற வந்த பிறகும் அவனிடத்தில் மாற்றம் இல்லை. நான் அவனை ரசிக்கிறேன் என்பதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.

அதே பகுதியில் தான் அவன் வசிக்கிறான். அங்கேயே என்னை விட்டு செல்லாமல் மீண்டும் ரயிலில் என்னோடு வந்தான்இப்போது ரயிலில் அவ்வளவாக கூட்டம் இல்லை. சிலர் மட்டுமே. எங்களுக்கு ஜன்னல் அருகே அமர்வதற்கு இடம் கிடைத்ததுசில்லென்று காற்று என் மனம் முழுதும் நிறைந்திருந்தது. இருவரும் எதிரெதிரில் மெளனத்தில் இருந்தோம் . நான் இறங்கும் இடம் நெருங்கியது. என் கையை எடுத்து அவன் உள்ளங்கையில் சேர்த்து கொண்டான். அவனுடைய இரண்டு உள்ளங்கைகளும் என் கையை மூடி கொண்டதுஇருவருக்கும் இடையில் கைகளை உயர்த்தி ஏதோ வேண்டுவது போல் நிறுத்தினான். அவன் முகத்தை கைகளை நோக்கி நகர்த்தவும் ரயில் நின்றது. நான் கைகளை மட்டும் உதறி எழுந்தேன். அவனும் என்னோடு இறங்கினான்.

"ரொம்ப லேட் ஆகிவிட்டதே, நான் வேண்டுமானால் உன் வீடு வரை வரவா?" என்றான்.

"இல்லை, நான் இங்கிருந்து ஆட்டோவில் போகிறேன்" என்றேன்நான் தனியாக வசிப்பது அவனுக்கு தெரியாது.

இருவரும் நடந்து வெளியே வந்தோம்.

"என்னோட போன் நம்பர் வேண்டாமா?." என்று கேட்டான், அதில் மீண்டும் சந்திப்பது குறித்து எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்வி இருந்தது. இது நட்போ இல்லை இது எதுவோ? எதுவாக இருந்தாலும் இனி தொடராதா? என்று அவன் கண்கள் கேட்டது.

இன்னும் சிறிது நேரம் அவனோடு இருந்தால் என்னை வசீகரித்து என் மனம் முழுதும் ஆக்ரமித்து விடுவான்.

"நான் உன்னுடைய மொபைல் நம்பர் கேட்கவில்லை. உனக்கு தோன்றினால், என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றினால் என் நம்பர் தேவைப்படும் இல்லையா? இதற்காக மட்டும் இல்லை, என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை கூப்பிடு !" என்றான்.

அவன் மொபைல் போன் எண்ணை என் மொபைலில் பதிந்து கொண்டேன். மாறாக நான் மிஸ்டு கால் கொடுத்து என் எண்ணை அவனுக்கு தெரியப்படுத்தவில்லை.

அவனை எப்பொழுதும் நான் அழைக்க போவதில்லை. இதற்காக மட்டும் என்றில்லை, எதற்காகவும் இனி அவன் தேவையை நான் வேண்டப்போவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. அவன் எதற்கும் அஞ்சுவது போல் தெரியவில்லை. நான் எவ்வளவு மறுத்தாலும் வேலியை தாண்டி வருபவன் போலவே தோன்றியது.

அவனை பிரிந்து ஆட்டோவில் ஏறினேன். எந்த புதிய உறவையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மனம் முன் வரவில்லை.

மீண்டும் அவனை சந்திக்கும் வாய்ப்பு விதிக்கப்பட்டிருந்தால் பார்க்கலாம். அதுவரை அவன் நினைவுகளில் இருந்து நானும், என்னிடமிருந்து அவனும் அகலாமல் இருந்தால் பார்க்கலாம். அது என்றைக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். நாளையே சந்திக்கும் வாய்ப்பு அமையக்கூடும் , அல்லது நிகழாமலே போகலாம். அப்படி அமைந்தால் அன்றைய தினம் அவரவர் மனநிலை பொருத்து மீண்டும் தொடரலாம், அல்லது விலகலாம்.

இரவு மணி பத்தரை.

 

சிறிது தொலைவு சென்று நான் திரும்பி பார்த்த போது அவன் அங்கேயே நின்றிருந்தான்  நான் செல்லும் திசையிலே அவன் விழிகள் இருந்தது. என் மனசு சொன்னதா இல்லை, என்  அறிவு சொன்னதா என்று தெரியவில்லை. அவசர அவசரமாக என் நோக்கியா காண்டாக்ட்ஸில்  இருந்த பாரியை அழித்தேன்.



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

different feel , thanks dude

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Night,

Arumeiyana Story pa athilum yinthe Vari yennai migavum kavarnthathu-எனக்கு பணிந்ததில் இருந்து அவன் ஆளுமை அவன் அணுகுமுறை இரண்டையுமே முற்றிலும் புதிதாய் உணர்ந்தேன். ஆளுமை என்பது அதிகாரத்தில் இல்லை. ஆளுமை என்பது தோற்றத்தில் இல்லை. அது உடல் மொழியிலும் இல்லை. பிறரை மதித்தலில் தான் உள்ளது. பிறர் யாராக இருந்தாலும் எவ்வாறாக இருந்தாலும் ஏற்றுகொள்வதில் தான் உள்ளது. எந்த முகமனும் இன்றி, போலிகளை மறைக்காமல், பொய் திரையும் அணிந்து கொள்ளாமல், உள்ளது உள்ளவாறே வெளிப்படுத்த ஒரு ஆண்மை வேண்டும். நான் இது தான், நான் இவ்வாறு தான், என்னிடம் பொய் இல்லை என்பதாக இருந்தது அவனது குரல். அது தான் அவன் ஆளுமை. உள்ளே ஒரு குரலும் வெளியே வேறு குரலிலும் அவன் பேசவில்லை. கட்டிடத்திற்குள் செல்வதற்கு முன்னும் சென்ற வந்த பிறகும் அவனிடத்தில் மாற்றம் இல்லை. நான் அவனை ரசிக்கிறேன் என்பதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கருப்பு வெளிச்சம்,போர் வீரர்கள்............


எடுத்துக்காட்டாய் சொல்ல வேண்டுமென்றால் கதையில் ௭௫(75)% வரிகளை பதிய வேண்டும்.........சிறப்பு

__________________



கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

vaseegaramaana eluthu nadai ungalukku vaaithu irukkirathu..... ungal kathaiyai padikkumpothu.. neengal arugil irunthu kathai solvathu pol ullathu

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Yen bayapadukirrergal yenru theriyavillai,
Yaarai kandu bayam?

Ungalai kanda?
Appadithaan therikirathu,

Ungalai surri oru vattam pottu kondu, ulle yaraiyum vara vidamal athe samayam neengalum veliye varamal...

En entha kanna moochi?

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//என் மனமே, இனி நீயாவது எனக்கு பணிவாயா? கடவுளே, நான் தேடும் ஒருவனை நீ அனுப்பி விட்டாயா? இவன் துணையோடு தான் இனி என் இரவுகளை கடப்பேனா? இது தான் பரமமா? இது தான் பேரின்பமா? இது தான் உன்னதமா?// thats called love..! wonderfull narration..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard