Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நானும் பாரியும்….! - 3


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
நானும் பாரியும்….! - 3
Permalink   
 


நானும் அவனும் தாம்பரம் ரயிலில் தான் செல்ல வேண்டும். அவனை விட்டு விலக வேண்டும் என தான் விரும்பினேன்  ஏனெனில் பெரிதாக ஈடுபாடு எதுவும் இதுவரை அவனிடம் ஏற்படவில்லை. இந்த பத்து நிமிடத்திற்கு பிறகு இதை வளர்க்க விரும்பவில்லை. ஏனோ அவனை நெருங்க விட கூடாது என்கிற எண்ணங்களே என்னை நிறைத்து கொண்டு இருந்தது. என்னை சுற்றி ஒரு வேலி இருக்கிறது. நான் தான் அதை தாண்டி வெளியே வருவேன். அந்த எல்லையை மீறி யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டேன். இவனை பார்த்தால் தடைகளை உடைத்து நீக்கமற நிறைபவன் போலவே தோன்றியது.

"ஓகே, எனக்கு எக்மோர் வரை கொஞ்சம் வேலை இருக்கு, அப்போ நான் இந்த பக்கம் வர்ற ட்ரைன்ல போறேன், பை, பை" என்று அவனை பார்த்து சொல்லி விட்டு, பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தேன். அவன் கண்களில் நான் பிரிந்து போகிற ஏக்கம் இருந்தது. என்னை மறுக்காதே என்கிற வேண்டுகோள் அதில் இருந்தது. அவனுடைய உதடுகள் திறந்து பேசும் முன்னர் அவனை விட்டு விலகி எதிர் பக்கம் வரும் ரயிலை நோக்கி சென்றேன்.

அவனை திரும்பி பார்க்கவில்லை. எனக்கு தெரியும் அவன் என்னை நோக்கிக்கொண்டே நின்றிருப்பான். அதோ எக்மோர் வரை செல்லும் ரயில் நெருங்கி வந்து கொண்டு இருந்தது.

அவனை கண்ட அந்த நொடியில் இருந்து இதோ இந்த கடைசி தருணம் வரை எங்கே அவன் எல்லை மீறினான்?. அவசர அவசரமாக ஓடி வந்தவன் ஏன் அதே ரயிலில் செல்லவில்லை? எதற்காக நான் புத்தகத்தை மூடி வைத்து முகத்தை உயர்த்தும் வரை என்னை அணுகவில்லை? பத்து நிமிடத்திற்குள் என்னை கவர்ந்து அந்த நேரத்தை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்ற பதற்றம் அவனிடத்தில் இல்லை. கொடுத்த வாக்கை அவன் மீறவில்லை. இப்பொழுதும் கூட நான் ரயிலில் ஏற போகும் அந்த கடைசி நொடி வரை என்னை தொடர்ந்து வந்து தொந்தரவு செய்யவில்லை.

புத்தகத்தின் முகப்பை வைத்து அதன் மதிப்பை சொல்லி விட முடியாது . முகப்பு வேறு மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளேயும் ஒரு இனிய வியப்பு மறைந்து இருக்கும். புத்தகத்தின் உள்ளே புதைந்து கிடக்கும் சுரங்கங்கள் அட்டையில் தெரிந்து விடுமா என்ன? புத்தகத்தை ஏற்கனவே படித்த ஒருவர் பரிந்துரைத்தால் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். இறங்கி பார்த்தால் தானே கடலின் ஆழம் கண்டறிய முடியும். அது போல் திறந்து படிக்க வேண்டும். வரிக்கு வரி படித்த பிறகு தான் அது என்ன புத்தகம் என்று அறிந்து கொள்ள முடியும். அது தரும் செய்திகளையும் அது தரும் அனுபவங்களையும் வைத்து தான் அந்த புத்தகம் மனதுக்கு மிக நெருக்கமாக அமையப்பெறும். அதற்கு முன்பே நிராகரிக்கலாமா என நான் கையில் சுருட்டி வைத்து இருந்த புத்தகம் என்னை கேட்டது. ஆறடிக்கும் குறைவான உயரத்தில் இருந்த அந்த புத்தகதை திரும்பி பார்த்தேன்.

 

நிறைய பேசினோம். நிறைய ரயில்கள் கடந்து போனது. கல்வி, வேலை, இளமை காலம், சினிமா என பேச்சு தடம் மாறிக்கொண்டே வந்தது. பால்யத்தில் தந்தையின் கடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்து, பிறகு வளர்ப்பு தாயான அத்தையை எண்ணி திரும்ப வீட்டுக்கு வந்தது. சிறு வயதில் தற்கொலைக்கு முயன்றது. அப்பாவை பழி வாங்குவதாக எண்ணி தன் படிப்பை பாழாக்கி கொண்டது. இப்பொழுது சுயமாக தொழில் செய்வது வரை சொல்லிக்கொண்டே போனான். அவனுக்கு அத்தை என்றால் என்னை வளர்த்தது மாமா. எனக்கும் பல முறை வீட்டை விட்டு ஓடி வரும் எண்ணம் அலைக்கழித்து இருக்கிறது.

எல்லோரையும் அச்சுறுத்தும் வண்ணம் அவனுடைய முரட்டுத்தனமான தோற்றம் எளிதில் நெருங்கவிட தடுக்கும். அவன் பேசுவது, அணுகுவது என் எல்லாவற்றிலும் ஒரு பக்குவம் இருந்தது. எப்படியும் என்னுடைய மேலான விருப்பங்களுக்கு அவன் பணியப்போவதில்லை. அவனுக்கும் என்னை போன்றே மேலான எண்ணங்கள் இருந்தால் அதற்கு நான் வளையப்போவதில்லை. வெகு விரைவிலே இருவரும் மீண்டும் கை குலுக்கி பிரிய போகிறோம். ஏக்கங்கள், தாபங்கள், சாமர்த்தியங்கள். அதை தீர்த்து கொண்ட தருணங்கள் என இருவரும்பரஸ்பரம்பரிமாறிக்கொண்டோம்.  என்விருப்பங்களைஅவனுக்குதெளிவுபடுத்தினேன். என்எதிர்பார்ப்புலிஸ்டில்இருந்தஅனைத்தையுமேடிக்செய்தான்.

 

நீ மட்டும் அப்பொழுதே சொல்லி இருந்தால் உன்னை அள்ளி கொண்டு போய் சொர்க்கத்தை காட்டி இருப்பேன். நீ சும்மா பேசியே டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்த. எவ்வளவு காய்ஞ்சு போயிட்டேன் தெரியுமா?. கூடவே பயம் வேறு. எங்க டா இவன் கிட்ட ஓவரா எக்ஸ்போஸ் பண்ணினா பிடிக்காமா போய் விடுவானோன்னு பயமா இருந்திச்சு. அதனால தான், நீ கேட்ட எல்லாத்துக்கும் ஓகே சொன்னேன்.

நேரம் உருண்டோடியது. பேச்சும் வளர்ந்து கொண்டே போனது.

அவனுக்கு ஆன்மீகத்தில் அபார நம்பிக்கை. நிறைய கடவுள், முன் ஜென்ம வினைகள், கோவில்கள் என நிறைய சொற்பொழிவாற்றி கொண்டு வந்தான். அவனால் தான் இன்றைக்கும் நாள் கிழமை பார்த்து கோவில்களுக்கு நான் செல்வது வழக்கமாகி விட்டது.

இன்றைக்கு அமாவாசை. தப்பி தவறி நான்-வெஜ் சாப்பிட்டு விடாதே.

நடுவே மீண்டும் ஒரு முறை வெளியே சென்று தம் அடித்து விட்டு வந்தோம். மணி எட்டை தாண்டி விட்டது. அந்த நேரத்திற்கு பிறகு வந்த ரயில்கள் எல்லாம் கூட்டமாகவே வந்தது.   இருவருக்குள்ளும் பரவிக்கொண்டிருந்த வெப்பம் ரயில் கூட்டம் நெருக்கியதில் உச்ச நிலையை நெருங்கி கொண்டு இருந்தது. முகங்கள் நேருக்கு நேராக பார்த்து கொண்டிருந்தது. என் மூச்சு அவன் காதருகே படபடத்து கொண்டிருந்தது. அவன் இதயம் துடிக்கும் ஓசை அவன் கண்களில் தெரிந்தது. ரயில் அசையும் போதெல்லாம் அவன் மீது சாய்ந்தேன். அவனுடைய வாசனை என்னை கிறங்கடித்தது.

"எவ்வளவு அழகு டா நீ. உன்னை மட்டும் ஆண்டவன் ஏன் இவ்வளவு பேரழகனா படைச்சான்? ஒவ்வொரு முறை ரயிலில் நீ  என் மீது மோதும் போதெல்லாம் உடம்பு அப்படியே பத்திக்கும். தடுமாறி நீ என்னை தொடும்போது தட தடன்னு என் மேல ரயில் போற மாதிரி இருந்தது. நீ சாதரணமா தான் என்னை பார்த்தாய், நான் எப்படிநொறுங்கி போனேன் தெரியுமா? வெளிய மட்டும் தான் திடமா ரயில் கம்பியை பிடிச்சு கிட்டு இருந்தேன். ஆனா உடம்பு உள்ள ஒவ்வொரு பார்ட்டா கழண்டு விழுந்திச்சுடா. உன் ரெண்டு கண்ணும் அப்படியே தீ பந்தம் மாதிரி ஜெகஜ்ஜகன்னு எரியுது. அதில் என்ன பார்த்தேன் தெரியுமா? அதில் தாண்டா என் மீதி ஆயுளையும் பார்த்தேன்..!!"

நான் மூச்சு முழுதும் அவனை நுகர்ந்து கொண்டிருந்தேன். அந்த நிமிடம் என்னை கடத்திக்கொண்டு போவதற்கு க்ளோராபார்ம் கர்சீப்  தேவைப்பட்டிருக்காது. அவனுடைய வாசனையில் வேர்வையின் ஈரம் இல்லை. அவனுடைய மூச்சில் உயிர் தரும் ஆக்சிஜன் இல்லை. அது என்னை விஷம் போல மயக்கி கொண்டிருந்தது. எல்லா வாசனையும் காற்றில் கரையும் வரை தான். சில வாசனைகள் மட்டும் அப்படியே நெஞ்சில் நிற்க்கும். அம்மாவின் பின்னங்கழுத்து வாசனை, அப்பாவின் அணைப்பில் ஒரு பத்திரமான வாசனை வீசுமே அது. குழந்தையின் பவுடர் வாசனை. உயிரில் கலந்த அந்த வாசனைகளை நினைத்தாலே காற்றில் பரவும். அவனுடைய வாசனையை ஏற்கனவே எங்கோ நுகர்ந்து இருக்கிறேன். எனக்கு மிகவும் பரிச்சியமான வாசனை அது. எப்போது என்று தெரியவில்லை. எந்த ஜென்மத்தில் என்று தெரியவில்லை. அது தான் என்னை அவனோடு இந்த ஜென்மம் முழுக்க இழுத்து சென்று கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

நான் இறங்கும் இடம் வந்தது. நான் இறங்க போவதை அவனுக்கு அறிவித்தேன்.

 

"போகதே ப்ளீஸ். என்னோடு வா" என்றான்.  நான் மயக்கத்தில் கிறங்கி கிடந்தேன்.



-- Edited by Night on Sunday 15th of September 2013 11:16:36 PM

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Nice,

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Arputhamaana nadai... ungaludaya kutty kutty yaana sila varigal.. ennai apdiye vaseegarikirathu... keep writing

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

MR. Night,

Very Nice story pa. அவனுடைய வாசனையை ஏற்கனவே எங்கோ நுகர்ந்து இருக்கிறேன். எனக்கு மிகவும் பரிச்சியமான வாசனை அது. எப்போது என்று தெரியவில்லை. எந்த ஜென்மத்தில் என்று தெரியவில்லை. அது தான் என்னை அவனோடு இந்த ஜென்மம் முழுக்க இழுத்து சென்று கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை- those words impressed me alot. keep rocking man

regards

Thiva

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

great

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

சொல்லத்துடிக்குது மனசு.... ஆனால் சொல்லாமல் தவிக்குது....

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

"எவ்வளவு அழகு டா நீ. உன்னை மட்டும் ஆண்டவன் ஏன் இவ்வளவு பேரழகனா படைச்சான்? ஒவ்வொரு முறை ரயிலில் நீ என் மீது மோதும் போதெல்லாம் உடம்பு அப்படியே பத்திக்கும். தடுமாறி நீ என்னை தொடும்போது தட தடன்னு என் மேல ரயில் போற மாதிரி இருந்தது. நீ சாதரணமா தான் என்னை பார்த்தாய், நான் எப்படிநொறுங்கி போனேன் தெரியுமா? வெளிய மட்டும் தான் திடமா ரயில் கம்பியை பிடிச்சு கிட்டு இருந்தேன். ஆனா உடம்பு உள்ள ஒவ்வொரு பார்ட்டா கழண்டு விழுந்திச்சுடா. உன் ரெண்டு கண்ணும் அப்படியே தீ பந்தம் மாதிரி ஜெகஜ்ஜகன்னு எரியுது. அதில் என்ன பார்த்தேன் தெரியுமா? அதில் தாண்டா என் மீதி ஆயுளையும் பார்த்தேன்..!!"//

தேர்ந்த எழுத்தாளரய்யா நீர்

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//புத்தகத்தின் முகப்பை வைத்து அதன் மதிப்பை சொல்லி விட முடியாது . முகப்பு வேறு மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளேயும் ஒரு இனிய வியப்பு மறைந்து இருக்கும். புத்தகத்தின் உள்ளே புதைந்து கிடக்கும் சுரங்கங்கள்அட்டையில்தெரிந்து விடுமா என்ன? புத்தகத்தை ஏற்கனவே படித்த ஒருவர் பரிந்துரைத்தால் உடனே படிக்க வேண்டும்என்றஆவல் பிறக்கும்.இறங்கி பார்த்தால் தானே கடலின் ஆழம் கண்டறிய முடியும்.அது போல்திறந்து படிக்க வேண்டும்.வரிக்கு வரி படித்த பிறகு தான் அது என்ன புத்தகம் என்று அறிந்து கொள்ள முடியும். அது தரும் செய்திகளையும் அது தரும் அனுபவங்களையும் வைத்து தான் அந்த புத்தகம் மனதுக்கு மிக நெருக்கமாக அமையப்பெறும். அதற்கு முன்பே நிராகரிக்கலாமா என நான் கையில் சுருட்டி வைத்து இருந்த புத்தகம் என்னை கேட்டது. ஆறடிக்கும் குறைவான உயரத்தில் இருந்த அந்த புத்தகதை திரும்பி பார்த்தேன்.// migavum rasithu padithaen..! Azhagaana sledai..!

//அவனுக்குஆன்மீகத்தில்அபாரநம்பிக்கை.நிறையகடவுள்,முன்ஜென்மவினைகள்,கோவில்கள்எனநிறையசொற்பொழிவாற்றிகொண்டுவந்தான்// felt like reading about me..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard