Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நில்லுங்கள், மதன்..! (நிறைவு பகுதி)


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
நில்லுங்கள், மதன்..! (நிறைவு பகுதி)
Permalink   
 


அப்போது அது வரை ஊமையாக இருந்த மதுவின் மொபைல் போன் மெல்லிய குரலில்   "லா லா லா லால்லால் லா" என ராகம் பாடியது. மது அதை தொடர விட்டான். மதன் அந்த ரிங் டோனை கேட்டதும் மெமரி லாஸில் இருந்து மீண்டது போல் எகிறி குதித்தான்.

"டேய், இந்த ரிங் டோன்?"

" யெஸ், இது உங்களுக்கு பிடிச்ச பாட்டு. உங்க டாப் டென்ல எப்பவும் முதல்ல இருக்கிற பாட்டோட  ரிங் டோன் தான் இது.  ஓளங்கள் மலையாள படத்தில வர்ற "தும்பி வா.." சாங் தான்.  என்னோட மொபைல்ல கடந்த நாலு வருஷமா இதே ரிங் டோன் தான் தெரியுமா?"

"கடவுளே, பாரு எனக்கு அப்படியே புல்லரிச்சு போய் இருக்கு" என்றான் மதன்.

"இப்போ இதே ட்யூன் ஹிந்தி பா படத்துல வந்திருக்கு, முப்பது வருசத்துக்கு முன்னாடி தமிழ்ல "சங்கத்தில் பாடாத கவிதை" னு வந்திருக்கு,  இந்த தகவலை நீங்க தான் எனக்கு சொன்னீங்க, நினைவிருக்கா?.

"அப்போ நீயும் நானும் டவுன் பஸ்ல சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துகிட்டு இருந்தோம். பஸ்ல இந்த பாட்டு கேட்டோம்".  மதன் இரண்டு கைகளையும் அகல விரித்து பறவை போல் மலை உச்சியில் இருந்து குதித்தான்.  வான் வெளியில் சுழன்று சுழன்று  பழைய நினைவுகளில் மிதப்பதில் இருக்கும் சுகம் தரையில் இல்லை

சில நொடிகள் கூட நீடிக்கவில்லை,  மின்சார கம்பியில் சிக்கிய பறவை போல் பொத்தென மதன் கீழே விழுந்தான்.  அவன் மொபைல் ஒலித்தது.  மது அதை எடுத்து நீட்டியதும் மதன் நறுக்கென்று துண்டித்தான். மீண்டும் ஒலித்தது.

"யாருன்னு பாருங்க. முக்கியமான கால் போல் இருக்கு?"

"எங்க அம்மா கிட்ட இருந்து தான் போன்மூணு நாள் ஆச்சு, வீட்டை விட்டு வந்து. இந்நேரம் கல்யாணம் நின்னு போன விஷயம் தெரிஞ்சு இருக்கும்நான் வீட்டுக்கு போகணும் டா."

மது கட்டிலில் இருந்து எழுந்தான்சூடான காபியில் படர்ந்த ஆடையை விலக்குவது போல் மது பிரிந்து பால்கனி அருகே வந்தான்மழை விட்டு இருந்தது. இரண்டு கதவுகளையும் அகல திறந்தான்அவன் முழங்கால் வரை நீண்டிருந்த பெர்முடாஸ் தவிர வேறு உடை அவன் உடலில் இல்லைஅந்தி மாலை சூரியனின் கிரணங்கள் உடலை சுற்றி மஞ்சள் அவுட் லைன் வரைந்ததுஅவன் கைகள் தோளில் இருந்து விரிந்து கதவுகளின் மேல் விளிம்பை பிடித்து கொண்டு இருந்ததுஉயர்ந்த புஜங்கள்  எட்டு போல் முறுக்கி கொண்டு இருந்ததுஇங்கிருந்து பார்க்கும் போது ஒரு மெகா சைஸ் பிளவர் வேஸ் போல் தெரிந்தான். தரையில் இருந்து ஒரே சீராக இடுப்பு வரை உயர்ந்துபிறகு அங்கிருந்து பக்கவாட்டில் வி போல அகலமாக முதுகு விரிந்து இருந்ததுகண்ணாடி பூ குடுவையில் செருகி வைத்த துலிப் மலர் போல் அவன் தலை கவிழ்ந்து இருந்ததுஅதை தாங்கும் காம்பு போல் அவன் பின்னங்கழுத்து,

வீட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னதற்கு வருத்தப்பட்டு விலகி போனானோ என்று மதனிற்கு தோன்றியதுபடுக்கையில் மது இல்லாத வெறுமையை உணர்ந்தான்தனக்குள் பெருகும் தீயை அடக்க முடியாமல் திணறினான். கட்டிலில் இருந்து இறங்கவும்,  அவனுக்கு முன்பு அவசரப்பட்டு இடுப்பு வேஷ்டி இறங்கியதுஅதை இறுக்கி கட்டி மது அருகே நெருங்கி வந்தான்.

மதன் பின்னாலிருந்து அணைத்தான்.

"உனக்கு நான் போறது  பிடிக்கலையா?  இன்றைக்கு இரவும் இங்கேயே தங்கட்டுமா குட்டி?" என்று காதருகே கிசுகிசுத்தான்.  மது சட்டென்று திரும்பி அவன் கண்களை பார்த்தான்.  அது வரை அவன் மார்பை தாங்கி கொண்டிருந்த மதனின் கைகள் சறுக்கி அவன் இடுப்பை அரவணைத்தது.  

"இன்றைக்கு மட்டும் தானா? “  என்று மது கைகளை விலக்கி வெளியேறினான்.

"உனக்கு விருப்பம் இல்லையா?"

"இருக்கு, உங்களை விட்டு பிரிய எப்படி மனசு வரும், அதுவும் இத்தனை வருஷத்திற்கு பிறகு"

இருட்டி கொண்டு வந்தது. அவர்கள் இருவரும்  மனதின் மர்மத்தை முகத்தில் தேடினார்கள்.    வெளிச்சத்தில் தொலைத்து விட்டு இருளில் தேடினால் மட்டும் கிடைத்து விடுமா என்ன

"எனக்கும் தான்.  உன்னை தனியா விட்டு விட்டு போக எனக்கு மட்டும் மனசு இருக்கா?"

"இன்னும் எத்தனை நாள்  இந்த மனசு இப்படியே இருக்கும் ?"

 "எத்தனை நாள் ஆனாலும்  !!!"

 "குடிகாரன் பேச்சையும் , மோகத்தில் உளறுகிறவன் பேச்சையும் எப்படி நம்புவது?"

"அட பாவி, நான் உன்னை flirt பண்றதா நினைக்கிறியா?"

"இருட்டில் செய்யும் சத்தியங்களுக்கு விடிஞ்சா உயிர் இருக்காது பாஸ்"

"கிராதகா, என்னை சீண்டுகிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்"  என்று இறுக்கி அணைத்தான்.  மதனின் பரந்த மார்புக்குள் மது அண்டிக்கொண்டான். யாருடைய மூச்சை யார் சுவாசிக்கிறார்கள் என்று இனம் பிரிக்க முடியவில்லை. ட்யூபில் இருந்து பிதுக்கி கொண்டு வரும் டூத் பேஸ்ட் போல் மது துவளமதன் அவனை கவ்வ முயன்றான். வளைந்து கொண்டு இருந்த மது நிமிர்ந்து தடுத்தான்.

மீண்டும் அந்த மாற்றம்  மதனை திகைக்க வைத்தது.  அவன் அணைப்பில் இருந்து வெளியேற மது முற்ப்பட்டான்.

"ரொம்ப அவசரப்படாதீங்க சார், இந்த ராத்திரி மட்டும் இல்லை, எனக்கு எப்பவும் நீங்க வேணும்"

"நான் எங்க போக போறேன். உனக்காக எப்போ வேணுமானாலும் வருவேன் டா"

"ஹலோ, சார். இந்த வந்து போற வேலை எல்லாம் வேண்டாம்... இங்கேயே இருக்கனும்.. , முடியுமாஎன்னோடு தங்கிவிடுங்க.. எப்பவும்.. நிரந்தரமா.."

"எத்தனை நாள் உன்னோடு தங்கினாலும், ஒரு நாள் நான் போய் ஆகணுமேடா, குட்டி"

"வேண்டாம்,,, ரெண்டு நாள் கழிச்சு போறதுக்கு இப்பவே போய் விடுங்க..."

"இன்னும் சின்ன குழந்தைடா நீ"

"உங்களுக்கு பயம் தான் அதிகமா இருக்கு, காதலை விட !!. என்னோட காதல் உங்களுக்கு இடைஞ்சலா வந்திடுமோன்னு நீங்க பயப்படுறீங்க.. உங்களால் முடியாது. உங்களால் என்னோட வாழ முடியாதுஆரம்பத்தில் இருந்தே என்னை மறுக்கிறதுக்கு உங்க கிட்ட எப்பவும் ஒரு காரணம் இருக்கும்நான் ஒரு சுயநலவாதி. எப்பவும் என்னை பத்தி மட்டுமே சிந்திக்கிறேன். இன்றைக்கு உங்க எங்கேஜ்மெண்ட் கால் ஆப் ஆன நேரத்தில்  உங்களை நான் போர்ஸ் பண்றதா நீங்க நினைத்தால் என்னை மன்னிச்சிடுங்க."

"உனக்கு ஒன்னு தெரியுமா?  நேத்து நீ தான் மதுன்னு தெரிஞ்ச பிறகு, ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன். கடவுளே, நான் தொலைச்ச என் செல்லத்தை மீண்டும் என் கண்ணில் காட்டியதற்கு நன்றி. நான் தவற விட்ட தங்கத்தை எனக்கு திருப்பி கொடுத்ததற்கு நன்றி. இனிமேல் இந்த பொக்கிஷத்தை கண்ணுக்கு கண்ணாக பாதுகாப்பேன்யார் வந்து போனாலும் இனி என்னோட மொத்த ஆயுளும் இனி இவனோடு தான்”

பேரணையில் நீர் கசிவதை தடுக்க இருவரும்  முயற்சித்தார்கள். நேரம் கூட கூட அணையின் தடுப்பு சுவர் விரிசல் பெரிய துவாரமாகியது. அதை மாற்றி மாற்றி பொத்தி தடுத்து கொண்டிருந்தார்கள். எந்நேரமும் பேரணை உடையும் அபாயம் தெரிந்தது.

முதல் முதலாக மது முகத்தில் பிரகாசம் தோன்றியது.

"பிறகு எதுக்கு இவ்வளவு தயக்கம் உங்களுக்கு?"

"எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்க்க துணிவும் சமாளிக்க பக்குவமும் எனக்கு இருக்கு. எல்லோரையும் சமாளிச்சு எல்லா சிக்கல்களையும் மீறி உன்னால் வர முடியுமா?"

 மதன் வியந்தான். எந்த தருணத்தில் மொட்டவிழ்ந்து மலரானது  என்று தெரியவில்லை. மது அவனை பாய்ந்து அணைத்து முத்த முத்திரைகளை முகமெங்கும் பதித்து கொண்டு இருந்தான். பெறுவதில் இன்பமா அல்லது தருவதிலா என்று அவர்கள் நீயா நானா என யோசிக்கவில்லை. இருவரும் வள்ளள்களாக மாறி வாரி வழங்கி கொண்டு இருந்தார்கள்.  சுழற்சி முறையில் விநியோகம் நடந்தது.

 கடவுளை கண்ட பக்தன் போல்  மதன் இன்னும் திகைப்பில் இருந்து மீள வில்லைஒவ்வொரு முறையும் நிறுத்தி அவனிடம் மாற்றத்தை கேட்டு விடலாம் என்று நினைக்கும் போது எதிர்பாராமல் கிடைத்த வரம் அவனை வாயடைத்தது.

"சொல்லு டா குட்டி,,"

"அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.." 

முத்தத்தில் எத்தனையோ வகை உண்டு, அதில் இதை சேர்க்காமல் விட்டு விட்டார்கள். சைவம், அசைவம், ஆங்கிலம், பிரெஞ்சு என பட்டியலில் இந்த மீசைக்கும் மீசைக்கும் உண்டான முத்தத்தை மறந்து விட்டார்கள்.  

"போகலாம் எழுந்திரு" என்றான் மதன்.

"எங்கே?"

"வா ஷாப்பிங் போகலாம். ரெண்டு நாளாக ஒரே டிரஸ். மாத்திக்க துணி இல்லை. நாளை ஆபீஸ் போக ரெண்டு பார்மல் டிரஸ் எடுத்துகிட்டு வரலாம், ஓகே வா? அப்படியே வீட்டுக்கு தேவையான க்ரோசெரீஸ் காய்கறிகள் வாங்கிட்டு வரலாம் குட்டி.. வேற  என்ன  வேண்டும் சொல்லு, எல்லாம் வாங்கிட்டு வரலாம் "

 பேரணை உடைந்து  அங்கே காதல் பெருக்கெடுத்தது.  அந்த அறை முழுதும் காதலில் மிதந்து கொண்டு இருந்தது.



-- Edited by Night on Sunday 8th of September 2013 04:09:14 PM

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Love is sweeter,

'All right.Oh, I feel so happy.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

இனி மதனின் தீர்மானத்தில் மறுபரிசீலனைக்கு இடமில்லை என்றேத் தோன்றுகிறது.. இனி தடுப்பணை ஏதுமில்லாது பொங்கிப் பிரவாகிக்கும் அன்பு வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பதையே அல்லாமல்.. அவர்கள் வேறொன்றிலும் நாட்டம் கொள்ளப் போவதில்லை..! :)

வழக்கம் போல.. down to earth metaphors -உடன் நல்ல கதை நகர்வு..

தும்பி வா தும்பகுடத்தின்.. இதயத்தை கொள்ளை கொள்ளும் பாடல்.. எனிக்கு வளரே இஷ்டமானு சாங்கானு.. :)

வாழ்த்துக்கள்!!!!



-- Edited by Rotheiss on Monday 9th of September 2013 10:41:08 AM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

good ending

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

@ரோத்தீஸ் - நன்றி.

http://www.youtube.com/watch?v=kb-lqDK4KOc - இது தான் தும்பி வா வின் ஆந்திர பதிவு. (படம் - நிரீக்க்ஷனா) இதே படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அதே பாடல் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்றது. என்ன இருந்தாலும் ஆண்டுகள் பல கடந்தாலும் ஒரிஜினல் தும்பி வா தான் என்னுடைய டாப் 10ல் முதலில்.

மீண்டும் நன்றி. 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

நெகிழ்வான முடிவு நண்பா!! அருமை.

தொடரட்டும் தங்கள் பயணம்



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Night,

Superb very nice ending. i am very happy pa yippadi oru nice ending yeluthina kaiku yen anbu muthangel.


Regards

Thiva

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Nice ending....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

wow nice finishing ♥

__________________

 

 I-Feel.jpg

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard