Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதலும் காதல் நிமித்தமும்


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
காதலும் காதல் நிமித்தமும்
Permalink   
 


1

அலைபேசியை கையில் எடுத்து, அதன் திரையை அழுத்திய அகிலன், ஹெட்செட்டை காதில் வைத்து “ஹலோ தமிழ் இருக்காரா?... நான் இங்கிலீஷ்பேசுறேன்...” என்றான்...

“சாரி... சிரிப்பு வரல....”

“ஹலோ தமிழ்... ஒரு காதலன் ஜோக் சொன்னா அனுபவிக்கணும், இப்டி ஆராயக்கூடாது... இது எழுதப்படாத காதல் விதி தெரியுமா?”

“தெரியாது...” பிடிகொடுக்காத பதில்...

“இன்னிக்கு என்னடா உனக்கு ப்ராப்ளம்?... நல்லாத்தானே இருந்த?”

“நான் எப்பவும் ஒரு மாதிரி தான் இருக்கேன், உன் பார்வைதான் அடிக்கடி மாறிட்டு இருக்கு.... பத்திரிகைகாரன்’ல, அதான் வித்தியாசமா யோசிக்குற போல...”

மறுமுனையில் மீண்டும் பிடிபடாத பேச்சு, மனதிற்குள் எரிச்சல் மேலோங்கியது அகிலனுக்கு....

“தயவுசெஞ்சு என்னன்னு சொல்லு, இப்டி உயிரை வாங்காத....”

“நான் பேசுறது உயிரை வாங்குற மாதிரிதான் இருக்கும் உனக்கு... காலைல ஆறு மணிக்கு நீ ஒரத்தநாடு வந்துட்ட, இப்போ சாயந்திரம் மணி ஆறு... இப்போதான் என் ஞாபகம் வருதுல்ல உனக்கு?.. அதுவும் போன்’ல பேசுற அளவுக்கு நான் அடுத்தவன் ஆகிட்டன்ல?”... எல்லாம் புரிந்தது அகிலனுக்கு... இதற்கு மேலும் அலைபேசியில் சமாதானம் பேசி பயனில்லை... அலைபேசியை துண்டித்துவிட்டு, கண்ணில் பட்ட ஒரு பேன்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறினான் அகிலன்...

“என்ன மாப்ள, சர்க்கஸ்’க்கு எதுவும் போறியா?... மஞ்சள் கலர் சட்டை, பச்சை கலர் பேன்ட்.... கலக்குற” ஹாலில் படுத்தபடியே அதிரசம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாமாவின் கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு, வாசலை நோக்கி விரைந்தான்....

“ஆத்தாடி... கைப்புள்ள கோவமா போறத பாத்தா, இன்னிக்கி எத்தன தல உருளப்போகுதோ?” மாமாவின் கிண்டல் வாசல் வரை தொடர, அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்ய தொடங்கினான் அகிலன்....

வீட்டிற்குள்ளிருந்து வேகமாக வெளிவந்த அம்மா, “டேய், பலகாரம் எதாச்சும் சாப்புட்டு போடா.... மாமா, காரைக்குடி பலகாரம் வாங்கிட்டு வந்திருக்கு....” பைக்கிற்கு அருகே வந்துவிட்டாள் அம்மா....

“வந்து சாப்பிடுறேன்.... நான் நிலாவுக்கு போகலம்மா, இங்க பக்கத்துலதான் போறேன்....” சொன்னபடியே வண்டியை எடுத்த அகிலன், வேகத்தில் பறந்தான்....

வயல்வெளிகளை கடந்து போனபோது, முன்பனி காலத்தின் பனிப்பொழிவை எதிர்கொள்ள பயந்ததை போல முற்றிய நெல் மணிகள், தலை குனிந்து நிற்கின்றது... அந்த குளிர் பொலிவையும் பொருட்டாக மதிக்காமல் இருட்டும் வரையில், தண்ணீருள் சூட்டினை தணித்துக்கொண்டிருக்கும் எருமைகள்... சில நேரம் ஊடல் உண்டாகும்போது நெல்மணியை போல சகிப்புத்தன்மையோடும், எருமையை போல பொறுமையாகவும் இருந்தால்தான் காதலில் வெல்ல முடியும்போல!...

செல்லும் வழியில் மருத மரத்தின் அருகில் கண்ணில் பட்ட “மஹா கூல்டரின்க்ஸ்” கடையை பார்த்ததும், அங்கு நிற்காமல் போக அகிலனுக்கு மனம் வரவில்லை... வண்டியை அகிலன் நிறுத்தியதை பார்த்த கடைகாரர், “வாப்பா.... பாதாம் கீர் போடசொல்லவா?” என்றார்... தலையை ஆட்டிவிட்டு, “பார்சல்...” என்று மட்டும் சொன்னான்... மின்னல் வேகத்தில் பார்சல் செய்யப்பட்டு, அதை வாங்கி வண்டியை எடுக்கப்போன அகிலனை நிறுத்தியது ஒரு கை...

“வணக்கம் தம்பி... நல்லா இருக்கியளா?... போன மாசம் வாலிக்கு இரங்கம் கட்டுரை எழுதிருந்திங்க... ரொம்ப அழகா இருந்துச்சு....”

“நன்றிங்க....”

“இனிமே இரங்கல் கட்டுரை எழுதுறப்போ, மறக்காம அவங்கள இழந்து வாடுற குடும்பம் பத்தியும் எழுதுங்க... அப்புறம், இறந்தவரோட நண்பர்கள் பத்தியும் எழுதுங்க....” மணியை பார்த்தான் அகிலன், இருட்டிக்கொண்டு இருக்கிறது... கடிகாரத்தின் சிறிய முள், ஏழினை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது... பத்திரிகை வாசகர் விடுவதாக இல்லை...

எரிச்சலான அகிலன், “சரிங்க.... செஞ்சுடலாம்... அடுத்த தடவை உங்களுக்கு எழுதுறப்போ எல்லாத்தையும் சரியா செஞ்சிடுறேன்...” என்று மட்டும் சொல்லிவிட்டு, அவர் யோசிக்க தொடங்கிய மணித்துளிகளில் வண்டியை விரைவாக செலுத்தி, தமிழின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்... வாசலில் விதை நெல் காயப்போட்டிருக்க, காக்கைகள் சில அவற்றை கொத்திக்கொண்டு போவதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தன.... அகிலனை பார்த்ததும் அருகிலிருந்த மரத்தில் தற்காலிக தஞ்சம் அடைந்தன காக்கைகள்....

கதவை திறந்த தமிழின் அம்மா, வழக்கமான உற்சாக வரவேற்பை கொடுத்துவிட்டு, தமிழ் இருக்கும் அறை நோக்கி அகிலனை அனுப்பி வைத்தாள்... “காலைலேந்து இஞ்சி தின்ன கொரங்காட்டம் இருக்கான்பா.... என்ன கேட்டாலும் எரிஞ்சு விழறான்...” இந்த கூடுதல் தகவல் அகிலனை இன்னும் கலவரப்படுத்தியது.... ஆனாலும், மனதிற்குள் கடவுளை வணங்கிய அகிலன், “முருகா!... இன்னிக்கு கலவரம் எதுவும் நடக்காம நீதான் காப்பாத்தணும்....” அறைக்குள் சென்றான்...

கட்டிலில் சாய்ந்தபடி பசுமை விகடனை புரட்டிக்கொண்டு இருந்தான் தமிழ்.... கண்களில் கனல் புகைந்தது, முகத்தின் சிவப்பு கடும் கோபத்தை பிரதிபலித்தது...

“ஹாய்டா.... இந்தா பாதாம் கீர், உனக்காக வாங்கிட்டு வந்தேன்...” என்றவாறே தமிழின் ரியாக்சனை நோக்கினான்... தமிழின் கண்கள் அருகிலிருந்த மேசையை பார்க்க, அதை அகிலனும் பார்த்தான்... மேசை மேல் இருந்த குவளையில் பாதாம் கீர், ஆனால் அது புளித்த தயிர் போல இருக்கிறது... எறும்புகளும், ஈக்களும் போட்டி போட்டுக்கொண்டு அதை நுகர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தன....

புரிந்தது, அகிலனின் வரவுக்காக காலை முதல் காத்திருக்கிறது போல அதுவும்.... அகிலன் உள்மூச்சை இழுத்து விட்டான்... மிகப்பெரிய யுத்தத்திற்கு தயார் ஆகிவிட்டான் என்று பொருள்....

“என்ன தமிழ் உனக்கு பிரச்சினை?”

“இவ்வளவு நேரம் ஆகியும் உனக்கு புரியலையா?”

“இல்லடா.... வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருந்தாங்க... அதான் வெளில வரவே முடியல... அதுவும் ஆறு மாசம் கழிச்சு ஊருக்கு வந்ததுல அவங்க ரொம்ப பிருசு பிடிச்சாங்க, அதான்...” தமிழின் அருகிலேயே அமர்ந்தான் அகிலன்....

“ஹ்ம்ம்... உனக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க... என்ன பாக்கவோ, பேசவோ கூட நேரமிருக்காது... ஆனால், சிரிக்கும்போது நான் சிரிக்கணும், நீ காதல் மொழி பேசுறப்போ நானும் பேசனும்ல?”

“அப்டி இல்ல தமிழ்.... உனக்கப்புறம் தான் மத்த எல்லாரும் எனக்கு... புரிஞ்சுக்கோ...” தமிழின் கைகளை பிடித்தான்... அந்த பிடிப்பிலிருந்து அவசரமாக தன்னை விடுவித்துக்கொண்டான் தமிழ்....

“நான் முட்டாள் இல்ல அகி... உனக்கு உங்க மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சு வைக்க தீவிரமா வேலை நடந்துட்டு இருக்கிறது எனக்கு தெரியும்... உங்க ரெண்டு பேர் ஜாதகமும் கும்பகோணம் ஜோசியர் வரைக்கும் போய் பொருத்தம் பார்த்துட்டு வந்ததும் எனக்கு தெரியும்.... இது எந்த விஷயத்தையும் நீ என்கிட்ட சொல்லல... நடக்குற எந்த விஷயத்தையும் நீ வீட்ல எதிர்க்கல... அப்டின்னா என்ன அர்த்தம்?”

அகிலனுக்கு விஷயம் இப்போதான் புரிகிறது... இன்று காலைதான் ஜாதக விஷயம் அகிலனுக்கே தெரிந்தது, அதற்குள் விஷயம் தமிழ் காதுகளுக்கு வந்தது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.... அவசரப்பட்டு எதுவும் பேசினால், இது பெரிய விளைவை உண்டாக்கும் விஷயம் என்பதால் பொறுமையாக பேசத்தொடங்கினான் அகிலன்...

“அவங்க ஜாதகம் பாத்த விஷயம் எனக்கு இன்னிக்கு தான் தெரியும்.... வந்ததும் சண்டை போட விரும்பாததால நான் அமைதியா இருந்தேன்... நிச்சயம் அம்மாகிட்ட பேசுறேன் தமிழ்... உன்னவிட்டுட்டு நான் வேற வாழ்க்கைய நினச்சு கூட பார்க்கல... இப்போ என்ன ஜாதகம் தானே பாத்தாங்க?... தேதியே வச்ச மாதிரி ஏன் டென்ஷன் ஆகுற?”

“இன்னும் பத்து படிய தாண்டனும்’லனு நீ சந்தோஷப்படுற.... அவங்க ஒரு படியை தாண்டிட்டாங்கன்னு நான் இங்க பயந்து போய் இருக்கேன் அகி... அப்பா, அம்மா, மாமா, அத்தைன்னு எதாச்சும் காரணம் சொல்லி நீ போய்டுவியோன்னு பயமா இருக்கு....” கண்கள் கலங்கியது தமிழுக்கு....

“ச்சி லூசு.... அப்டி ஒரு நிலைமை வந்தா, எல்லாரையும் தூக்கி போட்டுட்டு உன்கூடத்தான் நான் வருவேன்....”

“அப்டித்தான் நானும் நெனச்சேன்... ஆனால், இன்னிக்கு ஊர்லேந்து வந்ததும் நீ என்னை பார்க்க வராம, உன் சொந்தங்கள் தான் முக்கியம்னு அங்கேயே இருந்தத பாக்குறப்போ பயமா இருக்கு....”

“இப்போ நான் என்ன பண்ணினா நீ நம்புவ தமிழ்?... தீ குளிக்க சொல்றியா? மாடிலேந்து குதிக்க சொல்றியா? கோவில்ல பூ மிதிக்க சொல்றியா?” அகிலனின் வார்த்தைகளில் அவனை மீறிய கோபம் வெளிப்பட்டது....

“அப்டி உன்ன கஷ்டப்படுத்தி என்னை நம்பவைக்கனும்னு அவசியம் இல்ல...  உங்க சொந்தக்காரங்க சந்தோஷத்துக்கே நீ வாழு... என்னைய விடு....” வேகமாக எழுந்த தமிழ் மேசை மீது இருந்த குவளையை தட்டிவிட, கீழே “கீர் ஆறு” பாய்ந்தது..

அகிலனுக்கும் கோபம் மேலோங்க, வேகமாக அங்கிருந்து வெளியேறினான்... வீட்டிற்கு செல்ல மனமில்லை... வழியிலிருந்த பாலத்தின் திட்டினருகே வண்டியை நிறுத்தி, அங்கு அமர்ந்தான் அகிலன்... நிலவொளியை தவிர வேறு ஒளியில்லை, மெல்லிய காற்றில் வயல்களில் பயிர்கள் நளினமாக ஆடிக்கொண்டு இருக்கின்றன.... இந்த ரம்மியமான சூழல் அகிலனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது... மன்னிப்பு கேட்டிடலாம் என்ற எண்ணத்தில், அலைபேசியை கையில் எடுத்த அகிலன், டயல் செய்ய எத்தனிக்கையில், “ஆனந்த யாழை மீட்டுகிறாய்... ” என்ற ரிங்கடோன் ஒலித்தது.

தமிழிடமிருந்துதான்....

“ஹலோ அகி....”

“ஹ்ம்ம்... சொல்லு...”

“சாரிடா...”

“ஹ்ம்ம்...”

“ஐ லவ் யூ டா...”

“ஹ்ம்ம்...”

“ஐ லவ் யூ சொன்னா திருப்பி ஐ லவ் யூ சொல்லனும்னு ஒரு அடிப்படை காதல் விதி உனக்கு தெரியாதா?” சிரித்தான் தமிழ்....

சிரித்தபடியே அழைப்பை துண்டித்தான் அகிலன்....

அழைப்பை துண்டித்த மறு நொடி, அவசர அவசரமாக ஒரு குவளையை எடுத்த தமிழ், அதில் பாதாம் கீரை ஊற்றி மேசை மீது வைத்தான்... வாசலில், பைக் வேகமாக நிறுத்தப்படும் “க்ரீச்” சத்தம் கேட்க, அம்மாவின் குரலில் “வாப்பா அகிலா... எங்க போன திடீர்னு” குரலும் ஒலிக்க, மறு நிமிடத்தில் அறைக்குள் நுழைந்தான் அகிலன்.... நுழைந்தது அறைக்குள் மட்டுமல்ல, அவனுக்குள்ளும் தான்....

 

(தொடரும்)



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

அட, என நிமிர வைத்தது கதை!

வெகு இயல்பான கதை நகர்வு ஆர்வத்தை கூட்டுகிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Chance...illai, simply superb, i am visualising.. Amazing,

Thank you dear, keep rocking.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 29202428232425 2920242825 2821242124252424232425
Permalink   
 


Wonderfull story..! Kindly continue yar..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
RE: காதலும் காதல் நிமித்தமும்
Permalink   
 


nice ....next

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

முதல் எழுத்தே பிரமாதாமாக இருக்கிறது... முதல் வாக்கியமே முகத்தில் ஓர் புன்னகையை வரவழைக்கிறது... இருகரத்திற்கே இவ்வளவு வலிமையென்றால், ஐங்கரனுக்கு? கலக்குங்கள்....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very realistic ...nd good naration....keep it up....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 34
Date:
Permalink   
 

Nice starting boss
Eppudi than ippudilam eluthureenga
Naanum evlavo try pannren onnum mudiyala

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

ஆரம்பமே கலக்கலா இருக்கு....வாழ்த்துகள்

__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

continue bro

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

 

 

2

பங்குனி மாதக் கத்திரி வெயில் தார்ச் சாலையின் மத்தியில் கானல் காவிரியை ஏற்படுத்திக்கொண்டிருக்க, அந்தக் கானலைக் கிழித்துக்கொண்டு, அகிலனின் பைக் சீறிக் கொண்டிருந்தது. கைப்பேசி ஒலித்து அவனை அழைக்க, பைக்கை ஓரங்கட்டிவிட்டு, அழைப்பது யாரென்று பார்த்தான். தமிழின் அம்மா!

“ஹலோ.. சொல்லுங்க ஆன்டி..”

“தம்பி.. கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா?” குரலில் எட்டு ரிக்டர் பதற்றம்..

“என்ன விஷயம் ஆன்டி.. ஏதும் பிரச்சினையா?”

“போன்ல சொல்லற விஷயம் இல்லப்பா.. உடனே வர முடியுமா?”

“சரி ஆன்டி.. வர்ரேன்..”

“கடவுளே.. தமிழுக்கு ஏதாச்சும் ஆகியிருக்குமா?” பயம் அவனை மலைப் பாம்பாய்ச் சுற்றியது. தன் காதலை வீட்டில் சொல்லி, நேற்றே வீட்டை வேறு பகைத்துக் கொண்டாயிற்று. இப்பொழுது ஒரு பிரச்சினை என்றால், ஒரு உதவிக்குக் கூட அவனுக்கு ஆளில்லை..

பயம் தலைக்குமேல் பருந்தாய் வட்டமிட, தமிழின் வீட்டுக்கு வண்டியை ஓட்டினான். வீட்டினுள் நுழைந்ததும், கூடத்தில் கலவரமான முகத்துடன் தமிழின் அம்மா அமர்ந்திருந்தார். தமிழைத் தேடினான்.. வீட்டிலில்லை.

“என்ன ஆச்சு ஆன்டி.. ஏதச்சும் பிரச்சினையா?”

“கொஞ்ச நேரம் முன்ன உங்க அப்பாவும், மாமாவும் வந்திருந்தாங்கப்பா.. இனிமே தமிழ் உன்னோட பேசவோ, பழகவோ கூடதுன்னு மிரட்டிட்டு போனாங்க”

அகிலனுக்கு இப்போதுதான் உறைத்தது. அவன் தந்தையும், மாமாவும் அவனைக் கெஞ்சி, மிரட்டி, எமோஷனல் பிளாக்மெயில் செய்து, பற்றாக்குறைக்கு அவன் அம்மாவை விட்டும் நயமாகப் பேசவைத்து, எப்படியோ அவன் மனதை மாற்றப் பார்த்தார்கள். அகிலன் எதற்கும் பிடிகொடுக்கவில்லை. எனவே இப்படி ஒரு ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள்.

“என்னப்பா பிரச்சினை? தமிழ் ஏதும் தப்புப் பண்ணிட்டானா? எதுக்காக இப்படி மிரட்டிட்டு போறாங்க? உனக்கு ஏதும் தெரியுமா?”

அகிலன் என்ன சொல்ல என்று தெரியாமல் வாய்க்குள் வார்த்தைகளை மென்றுகொண்டிருக்க, தமிழ் அந்நேரத்தில் வீட்டினுள் நுழைந்தான். இருவர் முகபாவத்தையும் பார்த்தவன், ஏதோ தவறிருக்கிறதென உணர்ந்தான்..

“என்னடா? ஏதும் பிரச்சினையா? ஏன் ஒரு மாதிரி இருக்க? அம்மா.. உங்க முகமும் சரியில்லையே.. என்ன ஆச்சு?”

தமிழின் அம்மா வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை ஒட்டிக்கொண்டு, “அதெல்லாம் ஒன்னுமில்லை டா..” என்று சமாளிக்க முயல, “அப்பாவும் மாமாவும் வந்து மிரட்டிட்டு போயிருக்காங்க டா..” என்றான் அகிலன்.

பதறிப்போன தமிழ், “அம்மா… உனக்கு ஒன்னும் ஆகலயே..” என்று பாய்ந்து அருகில் வந்தான்..

“ஒன்னுமில்லைப்பா.. ”

“சாரி டா..” என்றான் அகிலன்.

“இல்லை டா.. இது என் தப்புதான்.. நான்தான உன்ன கட்டாயப்படுத்தி வீட்டுல சொல்லச் சொன்னேன்.. என் அவசர புத்தியாலதான எல்லாமும்..”

“அப்படி நினைக்காத டா.. என்னைக்கு இருந்தாலும், சொல்ல வேண்டிய விஷயம் தான..”

“என்னதான் பிரச்சினை.. கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்..”

இதற்கு மேல் எதையும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்த இருவரும், எல்லா உண்மைகளையும் சொல்லத் துவங்கினர்.. கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் கோவம், நிறைய கண்ணீருடன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார் தமிழின் அம்மா.. இறுதியில் ஏதும் சொல்லாமல் எழுந்து அடுப்படிக்குள் சென்றுவிட்டார்.

அடுத்தது என்ன என்று தோன்றாமல், இருவரும் குழம்பி நின்ற அந்த நேரத்தில், அகிலனின் கைப்பேசி அலறியது. அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவன், ஒரு சுருக்கமான உரையாடலுக்குப் பின் திரும்பி வந்து, “அசோஸியேட் எடிட்டர் கால் பண்ணார் டா.. வேதாரண்யம் தங்க பிஸ்கட் கடத்தல் மேட்டர கவர் பண்ண சொல்லி இருக்கார். நான் நாளைக்கே அங்க போகணும். பேசாம நீயும் எங்கூட வந்துடு. இந்தப் பிரச்சினை எல்லாம் கொஞ்சம் ஆறட்டும்” என்றான்.

தமிழ் எந்த பதிலும் சொல்லாது மௌனமாயிருந்தான். அவன் தாயின் மௌனம் அவனையும் ஊமையாக்கிவிட்டிருந்தது. அவன் தந்தையை இழந்த பின்பு, தனி ஆளாக நின்று அவனை ஆளாக்க அவள் பட்ட கஷ்டம் அவனுக்குத் தெரியும். இதுநாள்வரை அவன் தாய் அவன்மீது எதற்காகவும் கோவப்பட்டது இல்லை. இப்போது அவளின் கோவம் அவன் மனதுக்குப் பெரும் பாரமாயிருந்தது.

தமிழ் பேசாதிருந்தாலும் அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று அகிலனுக்குப் புரிந்தது. மௌனத்தின் அர்த்தம் புரியாதவனுக்கு வார்த்தைகளின் அர்த்தம் புரிய வாய்ப்பில்லை அல்லவா? அவன், “சரி டா.. நீ யோசி.  நான் சாயங்காலம் கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறச் சென்றான். வாசல்வரை சென்றவன் திரும்பிவந்து, தமிழின் நெற்றியில் முத்தமிட்டு, “கவலைப்படாத டா.. எவ்ரிதிங்க் வில் பி ஆல்ரைட்..” என்று சொல்லிவிட்டு, கிளம்பிச் சென்றான்.

அகிலன் சென்றதும் தமிழ் அடுப்படிக்குள் சென்று, “அம்மா.. எதுச்சும் சொல்லும்மா.. ஏன் இப்படிப் பேசாம இருக்க?” என்றான்.

“என்னடா பேசச் சொல்ற? அதான் எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டயே? இன்னும் நான் பேச என்ன இருக்கு?”

“இதே இப்ப ஒரு பொண்ண கூட்டிவந்து இவள தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி இருந்தா நீ சந்தோஷமா ஏத்துக்கிட்டிருப்ப இல்ல.. ஆனா என் மனசில இவன் மேல தான் காதல் வந்தது.. அது என் தப்பா?”

“நீ ஆயிரம் காரணம் சொல்லலாம்.. ஆயிரம் பேர உதாரணம் காட்டலாம். ஆனா எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ எடுத்துக் கொஞ்சனும்னு ஆசை இருக்காதா? அது முடியாதுல்ல?”

“கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பாக்கியம் இல்லாம எத்தனை பேர் இருக்காங்க? அது மாதிரி எனக்கு ஆகி இருந்தா என்னம்மா பண்ணி இருப்ப?”

“நீ நல்லா பேசக் கத்துக்கிட்ட.. ஆனா நீ என்ன சமாதானம் சொன்னாலும் என் மனசு ஆறாது டா.. இன்னும் என்ன என்ன எல்லாம் பண்ணப் போற? முன்னமே சொல்லிடு.”

“நாளைக்கு அகிலன் வேலை விஷயமா வேதாரண்யம் போறான். நானும் அவனோட போகலாம்னு இருக்கேன்”

“வீட்டைவிட்டு போகப்போறன்னு சொல்லு. அதானே”

“இல்லம்மா.. நாங்க இந்த இடத்த விட்டுப் போனாத்தான் இந்தப் பிரச்சினை ஆறும். அதான்..”

“என்னமோ.. எல்லாம் உன் இஷ்டத்துக்குத் தானே பண்ற.. இன்னும் நான் சொல்லி என்ன ஆகப் போகுது?”

இதற்கு மேல் என்ன சொல்வது என்று தமிழுக்குத் தெரியவில்லை. அதற்கு மேல் அவன் ஏதும் பேசவும் இல்லை.

அடுத்த நாள் மாலை.. தமிழும் அகிலனும் ஆளுக்கொரு டிராவல் பேகுடன் ஒரத்தனாடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். அங்கிருந்து பட்டுக்கோட்டை சென்று, பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் போக வேண்டும். பேருந்துக்காக காத்திருந்தபோது, “குட்டி..” என்று ஒரு குரல் அழைத்தது. தமிழ் சட்டென்று பின்னே திரும்பிப் பார்த்தான். இந்தப் பெயர் சொல்லி, அதுவும் இவ்வளவு வாஞ்சையாக அவனை அழைக்கும் ஒரே ஜீவன் அவன் தாய்தான்.. அவர்தான் அங்கு நின்றிருந்தார்.

இருவரும் தமிழின் தாயாரை நோக்கிச் சென்றனர். தமிழ் ஏதும் பேசவில்லை. தலைகுனிந்து மௌனமாக நின்றிருந்தான். இனிப்பைத் திருடும்போது பிடிபட்ட குழந்தையைப் போல.

“பத்திரமா பார்த்து போய்ட்டு வாப்பா.. உடம்பப் பாத்துக்கோ..”

“அம்மா..” என்றான் உடைந்த குரலில்.. வேறு வார்த்தைகள் வரவில்லை.

அவன் தாயாலும் மேலும் பேச முடியவில்லை. கண்களில் நீர் கோர்க்க, “இரண்டு பேரும் சந்தோஷமா, நல்லபடியா இருங்க..” என்று சொல்லிவிட்டு, விடுவிடு எனத் திரும்பிச் சென்றுவிட்டார்..

இருவரும் உறைந்துபோய் சிறிதுநேரம்அங்கேயே நின்றுகொண்டிருந்தனர். கண்கள் கண்ணீரால் திரையிட, வெளியிடத்தில் வைத்து அழுதுவிடக்கூடாது என்று தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டனர். சில கணம் சென்று அவர்கள் மீண்டபோது, அவர்களை ஏந்திச் செல்ல, துர்கா டிராவல்ஸ் பேருந்து காத்துக்கொண்டிருந்தது.

(தொடரும்)



-- Edited by aynkaran on Friday 13th of September 2013 01:24:21 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதையில் நல்ல வேகம்....முதலிலே க்ளைமாக்ஸ்ல வரும் விஷங்களோடு ஆரம்பித்திருப்பது வித்தியாசமாக இருக்கு ....முக்கியமா அம்மா & தமிழ் பேசுவது ரொம்ப இயல்பாக இருக்கு....இருவரின் பக்கமும் உள்ள உணர்வை நல்லா சொல்றீங்க....முதல் கதை மாதிரி தெரியலை....keep it up....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Yenna solrathu... Kathavidukkil sikki konda viral mathiri oru vali... Yenna solrathunne theriyale...

Mananromba baramage irukkirathu. Vittu varavum mudiyavillai, ammavai kastapaduthavum .......kudathu

Parpom

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Superb portion which exactly conveys a mom's heart..! But i felt like the continuety was missed..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

good , post next

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

3

தமிழில் திருமறைக்காடு என்று போற்றப்படும், வேதாரண்யத்தின் காலை நேர இளவெயில், அகிலனையும் தமிழையும் தழுவிக்கொண்டிருந்தது.

“அகி, இவங்களுக்கு தங்க பிஸ்கட் கைமாத்த வேற இடமே கிடைக்கலயா? சென்னை, அந்தமான் இந்த மாதிரி ஊர்ல கள்ளக்கடத்தல் பண்ணினா, உன்னைய மாதிரி பத்திரிக்கைக் காரங்களுக்கு சுலபமா இருக்கும்ல”

“தமிழ், நீ என்னையப்பத்தி கவலைப்படறயா, இல்ல உனக்கு நேரம் போக்க வழி இல்லைன்னு கவலைப்படறியா?”

“இரண்டுக்கும்தான்”

“சரி.. நான் சீக்கிரமா கிளம்பணும்.. போற காரியம் வெற்றிகரமா முடியனும்னு வீரத்திலகமிட்டு அனுப்பு தமிழ்”

“இப்படிப் பேசியே என்னைக் கவுத்துடு”

“ஏதோ, என்னால முடிஞ்சது செல்லம்”, என்று சொல்லி, எதிர்பார்க்காத ஒரு முத்தத்தையும் தந்து சென்றான் அகிலன்.

கடிகார முட்கள் நகர மிகவும் அடம்பிடித்தன. தொலைக்காட்சி பார்க்கலாமென்றால், நல்லாயிருக்கும் பெண் நாசமாய்ப் போவது எப்படி என்று எல்லா நெடுந்தொடர்களிலும் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

அம்மாவைப் பிரிந்து வந்த சோகம், தனிமை என்று எல்லாம் சேர்ந்து தமிழைக் கொடுமைப்படுத்தியது. இப்படியே உட்கார்ந்திருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் எனத் தோன்றியதால், தமிழ், திருமறைக்காடர் கோவிலுக்குச் செல்லத் தீர்மானித்தான். இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்களால் அந்தக் கோவில் மிகச்சிறந்த கற்றளியாகக் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கோவில் பிரகாரத்தைச் சுற்றிவரும்போது அலைபேசியில் மணி ஒலித்தது.

“என் இனிய பைந்தமிழே.. என்ன பண்ற?”

“உனக்கு அடுத்த ஜென்மத்துலயாவது அறிவு வரணும்னு வேண்டிக்கிட்டேன்”

“ஏன் இந்த ஜென்மத்துல வேண்டாமா?”

“அதுக்குத்தான் நான் இருக்கேன்ல.. உன் CID வேலை எல்லாம் எப்படிப் போகுது?”

“அவங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன். இங்கிருந்து காட்டுக்குள்ள போனா சிக்னல் கிடைக்காது.அதான் கால் பண்ணேன்”

“சரி அகில்.. சீக்கிரம் வா. தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு”

“என்னைய நினைச்சுட்டு இரு.. எல்லாம் சரி ஆகிடும்”

பதிலுக்கு தமிழிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு அலைபேசியை அணைத்தான் அகிலன். மணித்துளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தது. சூரியன் ஓய்வுக்குச் செல்ல, நிலவும், தன் நகர்வலத்தைத் தொடங்கி இருந்தது. அகிலனுக்கு அலைபேசியில் அழைத்தபோது, அவன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தான். அதற்குமேல் பொறுக்க முடியாமல் தமிழ், அகிலனைத் தேடிச் சென்றான்.

ஊர் பெரிதாய் இல்லாததும், ஊரிலிருந்த எல்லாருக்கும் பக்கத்தில் உள்ள காட்டிற்கு வழி தெரிந்திருந்ததும் தமிழுக்கு வசதியாய்ப் போயிற்று.ஒரு வழியாய் விசாரித்து அந்தக் காட்டிற்கு வந்தான்.

காடு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. உயர்ந்த மரங்களோ, அடர்ந்த செடிகொடிகளோ இல்லாமல், அடர்ந்த புதரும், குட்டையான மரங்களும் சூழ்ந்திருந்தன. அது ஒரு பின்மாலைப்பொழுது. தூரத்திலிருந்து வரும் கடல் காற்று சில்லென்று முகத்தில் அறைந்தது. இரவு வாழ்க்கைக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் சில பறவைகளும், விலங்குகளும் தவிர தமிழ் மட்டும்தான் தனித்திருந்தான். கொஞ்ச தூரம் சென்ற பிறகு, காற்றில் அசைந்தாடும் குட்டை மரங்களும், அதன் சலசலப்பும் அச்சத்தை ஏற்படுத்தின.

தூரத்தில் தெரிந்த பாறையில் சென்று அமர்ந்தான். எப்படியாயினும் இந்த ஒற்றையடிப் பாதையில் தான் அகிலன் வர வேண்டும். அதுவரை காத்திருக்க தமிழ் முடிவு செய்தான்.

ஒருவேளை வேறுவழியாக அகிலன் சென்றிருந்தால், எனத் தோன்றியவுடன், தமிழ் கிளம்ப யத்தனித்தான்.பாறையில் கையூன்றி எழுந்தபோதுதான் கையில் ஏதோ பிசுபிசுப்பாய் ஒட்டுவதை உணர்ந்தான். உற்றுப் பார்த்தபோது, இரத்தம்! ஏதாவது விலங்குடைய இரத்தம் என நினைக்கும்போதே, பக்கத்தில் அகிலனுடைய பேனாவும் அலைபேசியும் கிடந்தது. தமிழின் உடலில் அட்ரீனல் அதிகமாய் சுரக்க ஆரம்பித்தது. ஓடிச்சென்று அலைபேசியை எடுத்துப் பார்த்தபோது அது இன்னும் சொற்ப ஆயுளுடன் இருந்தது.

“கடவுளே! அகிலனுக்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாது”

அலைபேசியில் கடைசியாய் தன் எண்ணை அழுத்தியிருந்தான், இன்னும் கொஞ்சம் அலைபேசியை நோண்டியபோது, குரலைப் பதிவு செய்யும் வசதியில், சில குரல்கள் கேட்க, கடைசியாய் அந்தக் குரல் சொன்னது, “நம்ம இரகசியம் தெரிஞ்ச இவனைக் கல்லைக்கட்டி கடலில் இறக்கிரலாம்”



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

My God!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

twistu twistu

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Aiyo Pavam

__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

apram ennachu


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஐயோ என்ன இப்டி ஒரு ட்விஸ்ட்....கதை சூப்பர்...சீக்கிரம் பதிங்க...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

4
அகிலனுக்காக மானசீகமாய் நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டாலும்.. கண்கள் தன்னிச்சையாய் கண்ணீர் சொரிந்து.. சிதைந்து கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டியது.. 

 சொல்லி அழக்கூட ஆளில்லாத பரிதாப நிலை.. வந்த வழியே ஓட்டமும் நடையுமாய்.. காட்டுப்பாதை கடந்து.. சாலையை அடைந்தான்.. எங்கு போவது.. என்ன செய்வது.. ஒன்றும் புரியவில்லை.. ஆங்காங்கே மின்மினியாய் ஒளிர்ந்த தூரத்து விளக்குகளின் வெளிச்சம் தவிர.. முற்றிலும் மையிருட்டு.. 

 சொற்ப ஆயுளில் போராடிக் கொண்டிருந்த அகிலனின் கைபேசியிலிருந்து அசோஷியேட் எடிட்டரின் எண்ணைத் தேடி தன் கைபேசியில் ஒற்றினான்.. நீண்ட காத்திருப்புக்குப்பின் தூக்கம் பாழான எரிச்சலில் ஒரு பெண்குரல்.. 

 “ஹலோ..”

 “நான்.. ரிப்போர்ட்டர் அகிலனோட ஃப்ரெண்ட் தமிழ் பேசறேன்.. வந்த இடத்துல அகிலன் உயிருக்கு ஆபத்து.. எப்படியாவது அவர காப்பாத்தியாகணும்...” படபடப்பாய் ஆரம்பித்து கேவலோடு நிறுத்தினான்... 

 சடுதியாய் எதிர்பக்கக் குரல் மாறியது.. “கடவுளே.. அழாதீங்க.. ஒண்ணும் ஆயிருக்காது.. பொறுமையா இருங்க.. அவர எழுப்பறேன்...”

 அசோஷியேட்டின் குரலில் சன்னமாய் பதற்றம்.. ”இப்ப எங்க இருக்கீங்க..?”

 “தெரியலயே சார்..” இயலாமை அழுகையாய் வெளிப்பட்டது

 “ப்ச்.. இப்ப எதுக்கு அழறீங்க.. அகிலனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது... நிதானமா இருங்க. ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க... பக்கத்துல எதாவது லேண்ட்மார்க.. சைன் போர்ட்.. அதுவுமில்லனா.. மைல் ஸ்டோன்.. இருக்கான்னு பாத்து சொல்லுங்க..”

பழகியிருந்த இருளில் கண்களால் அளந்தான்.. “சார்.. ஒரு சைன்போர்ட் இருக்கு.. கெம்ப்ளாஸ்ட் சன்மார் போற வழின்னு காட்டியிருக்கு..”

 “ஓகே.. எங்கயும் போயிடாதீங்க.. ஃபைவ் மினிட்ஸ்ல கால் பண்றேன்.. உங்க பேர் என்ன சொன்னீங்க.. தமிழா?”

 “ஆமா.. தமிழ் சார்”

 “ஓகே.. பயப்படாதீங்க தமிழ்.. அகிலனுக்கு எதுவும் ஆயிடாது.. நான் வைக்கறேன்..”

 யுகங்களாய் கடந்த நிமிடங்களுக்குப் பின்.. அழைப்பு வந்தது.. “ஹலோ..”

 “தமிழ்.. நான் சீஃப் எடிட்டர் வரதராஜன் டாட்டர் வர்ஷா பேசறேன்.. இப்ப கொஞ்ச நேரத்துல கெட்வெல் ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் வரும்.. அதுல ஏறி வேதாரண்யம் போயிடுங்க.. இந்நேரம் அகிலன தேட ஆரம்பிச்சிருப்பாங்க.. அப்பா அதுக்கான ஏற்பாடெல்லாம் செய்துட்டார்.. நாங்க இப்பவே புறப்பட்டு அங்க வர்றோம்.. தைரியமா இருங்க.. நாம அகிலனோட தான் அங்க இருந்து கிளம்பறோம்.. டோண்ட் ஒர்ரி”

“சரிங்க” அழைப்பைத் துண்டித்து... சாலையின் இரு மருங்கிலும் பார்வையை செலுத்த ஆரம்பித்தான்.. 

 ஊர் தெரியாத ஊரில்.. அத்துவான இடத்தில்.. அகிலனின் நினைவு அலைகழித்தது.. அருவியாய் கண்ணீர்.. தேற்ற ஆளில்லாத துயரம்.. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்.. நெஞ்சை அழுத்திப் பிசைந்தது..

 அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில்.. வண்டி ஒன்று சற்றுத் தொலைவில் நின்றது.. ரோந்து வாகனமோ என்றெண்ணி தமிழ் சற்று தயங்க.. அந்நேரம் கைபேசியில் வந்த அழைப்பு.. அது இவனை அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் என்பதை உறுதிபடுத்தியது.. வாகன ஓட்டி தவிர்த்து.. மருத்துவமனை ஊழியர்கள் இருவர் அதில் இருந்தனர்.. தலைமையிடத்து உத்தரவால்.. சற்று அதிகமாகவே பவ்யம் காட்டினர்..

வந்த பாதையில் திரும்பி.. வண்டி சென்ற இடம்.. ஆற்காட்டுத்துறை!

கடற்கரை பரப்பு நெடுகே ஆட்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.. கவிழ்ந்திருந்த ஒரு படகினருகே எதிர்பார்த்து பரபரப்புடன் நின்றிருந்தார் மீனவர் தலைவர்.

“ஒண்ணும் பயப்படாதப்பா.. எல்லா பக்கமும் நம்ம ஆளுங்க தேடுறாங்க.. கிடைச்சுடும்”  ஆறுதல் படுத்துவதாக நினைத்துக் கொண்டார்..

 “கிடைச்சுடும்” அஃறிணையில் அவர் முடித்தது.. தமிழை கலவரப்படுத்தியது... பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான்..

“என்ன பேசறோம்னு கூடவா உனக்குத் தெரியாது.. நீயெல்லாம் தைரியம் சொல்ல வந்துட்ட.. போ.. போ.. நீயும் போய் தேடு..” கணவனை கடிந்து கொண்டபடியே படகை நோக்கி வந்தவள்.. “தம்பி.. பயப்படாத.. ஒண்ணும் ஆவாது.. இந்தா இந்த சாப்பாட்ட சாப்பிடு.. எந்நேரம் சாப்பிட்டியோ..”

 சோறு.. வெங்காயம், பச்சை மிளகாயுடன் வதக்கிய கருவாடு.. அவசரம் அவசரமாக செய்து  எடுத்து வந்திருந்ததை அவன் பக்கமாக நீட்டினாள்..

 மற்ற நேரமாயின்.. தட்டைக் கழுவ வேண்டிய அவசியம் கூட இல்லாமல் கபளீகரம் செய்திருப்பான்.. மறுத்து தலையாட்டினான்.. “என்ன ஏதுன்னு தெரியாம எனக்கு சோறு இறங்காதும்மா..” வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி மண்ணில் அமர்ந்தான்.. கால்களை முன்னாக மடக்கி நிமிர்த்தி முகத்தை முட்டிகளில் பதித்து கேவினான்.. 

 என்ன சொல்லித் தேற்றுவதென்று தெரியாமல் அமைதி காத்தனர்.. 

 மீனவர் தலைவர்.. கைபேசியும் கையுமாக இரவெல்லாம் தன் ஆட்களோடு பேசிக் கொண்டும், பிரயாணத்திலிருந்த வர்ஷாவோடும் பேசிக் கொண்டிருந்தார்... ஏனையோர் தூக்கக் கலக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருக்க.. தமிழ் எழுந்து நடந்து.. சற்று விலகி கடலையொட்டி நின்றான்.. சிற்றலையும் பேரலையும் போட்டி போட்டுக் கொண்டு பாதம் நனைத்து ஆறுதல் கூறின.. கடலை வெறித்தபடியே வெகு நேரம் நின்றிருந்தான்..

வைகறைப் பொழுதில்.. தலைவரின் கைபேசி அலறியது.. எல்லோரும் அவரை நோக்கிக் காத்திருக்க.. வேகமாய் பேசி முடித்துத் திரும்பினார்



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதை வேகம் பதற வைக்கிறது நாமும் அகிலனுக்காக காத்திருப்பது போல் உள்ளது ....வார்த்தை உபயோகிக்கும் முறை சூப்பர்....எல்லாரின் பதட்டமும் நாம் உணர முடிகிறது....வாழ்த்துக்கள் ....சீக்கிரம் தொடருங்க

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

slunga boss , wt hpndd

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Aynkaran,

Your story going on well excellent - keep rocking.

regards

Thiva

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

Superb..
Romba thrilling ah iruku..
Continue dude..

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

super


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

Story is super... but no update after Oct-1st... It is almost 45 days over....


__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

5

“ஆம்புலன்ஸ கலைஞர் பூங்காவுக்குத் திருப்புங்க.. சீக்கிரம்.. சீக்கிரம்.. எங்க அந்த தம்பி... ஆங்... உயிர் இருக்குதாம்பா.. மயக்கமா இருக்கானாம்... போற வழில வரதராஜன் சாருக்கு சொல்லிடலாம்.. அவங்க இந்நேரம் பாப்பாக்கோவில் தாண்டியிருப்பாங்கன்னு நினைக்கறேன்.. ”

ஆம்புலனஸ் சீறிக் கிளம்பியது.. கண்களை இறுக்க மூடிக்கொண்டு கண்ணீர் வழிய வேண்டியபடியே வந்தான் தமிழ்..

“உன் திருவடியை உறுதியென்றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க.. என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க.. பன்னிருவிழியால் பாலனைக் காக்க...” அம்மாவிடம் கற்றது.. கஷ்டமென்றால் கவசம் தான் துணை.. மெலிதாய் உதடு பிரித்து  வேண்டினாலும்.. கேட்கவே செய்தது.. தலைவர் கவலையோடு அவனைப் பார்த்தார்.. 

கலைஞர் பூங்கா தாண்டி கடற்கரையை ஒட்டி நின்றது.. புலரத் துவங்கியிருந்த நேரமாகையால்.. அவ்வளவாக கூட்டமில்லை.. ஒரு சிமெண்ட் பெஞ்சில் கிடத்தியிருந்தார்கள்.. உயிர் மட்டும் தான் இருந்தது.. அந்த கோலத்தில் அவனைப் பார்த்ததும்.. தமிழ் அதிர்ச்சியில் உறைந்தான்..

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.. அவசரகதியில் சுழன்றார்கள்.. சற்றைக்கெல்லாம்.. வண்டியில் ஏற்றப்பட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தது.. முன்புறம்.. ஓட்டுனருக்கும் தலைவருக்குமிடையே அமர்ந்து.. பின்பக்க சாளரத்தின் வழியே.. அகிலனுக்குத் தரப்படும் பராமரிப்பை விழிநீரோடு பார்த்துக் கொண்டிருந்தான்..

“எஸ் சார்.." "ஓகே சார்” களோடு..  ஆம்புலன்ஸ் ஊழியர் மருத்துவரின் கட்டளைக்களுக்குப் பதிலிறுத்துக் கொண்டு வந்தார்..

தலைவர்... வரதராஜன் சாரைத் தொடர்பு கொண்டு விவரம் சொன்னார். 

உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லன்னு தான் சார் நினைக்கறேன்..” அவஸ்தையோடு தமிழின் பரிதாப பார்வையைத் தவிர்த்தார்.

கண்கள் சொரிந்த கண்ணீரோடு உச்சாடனையைத் தீவிரப்படுத்தினான்.. அவன் மட்டில்.. எல்லா தருணங்களிலும் மெய்வருத்த முயற்சி செய்தாலும்.. கூலி என்னவோ தெய்வம் தருவதே!

கெட்வெல் மருத்துவமனை வெள்ளுடை தரித்த ஆள் அம்பு சேனையோடு ஆம்புலன்ஸை எதிர்கொண்டது.

தலைவர் வரதராஜன் சாரோடு மருத்துவமனையினுள் விரைய.. தனித்து விடப்பட்டவன்.. மருத்துவமனை வளாகத்தினுள் இருந்த சந்நிதிக்கு மாறினான். மூடிய கதவுகளை வெறித்துப் பார்த்தபடி நின்றான்... ஆம்புலன்ஸ் வாசலை எட்டும் முன்னே.. “சரணம் சரணம் சண்முகா சரணம்” சொல்லி முடித்திருந்ததால்.. மௌனமாக நின்றான்.. உளமாற இறைஞ்சும் பொழுது வார்த்தைகளுக்கு அவசியமேது..

 

நல்ல காலம்... பயப்படும்படியா எதுவுமில்ல.. ஹை டிப்பெண்டிசிக்கு ரெஃபர் பண்ணியிருக்கேன்.. சீக்கிரமே.. ஹி வில் பீ பேக் டு நார்மல்..” டாக்டரின் உத்தரவாதம் இறுக்கம் தளர்த்தியது..  ”இஃப் நெசசரி, லீகல் ஃபார்மாலிட்டீஸ் ப்ரொசீட் பண்ண ஆரம்பிச்சுடுங்க சார்.. யார் முதல்ல ஸ்பாட் பண்ணது..?”

அப்போது தான் தமிழ் பற்றிய நினைவே வந்தது.. ”அந்த தம்பி கூடவே தான இருந்துச்சு... எங்க போச்சுன்னு தெரியலையே...” மீனவர் தலைவர் சுற்றும் முற்றும் தேட.. 

“நீங்க இருங்க.. வர்ஷா.. வாசல் பக்கம் நிக்கறானான்னு கொஞ்சம் பாரம்மா.. இந்த களேபரத்துல அவன விட்ருப்போம்.. வேற எங்கயும் போயிருக்க மாட்டான்.. பாவம்.. ரொம்ப அழுதானாம்.. சாப்பிட மாட்டேனுட்டானாம்.. இங்க வராம என்ன பண்றான்..?”

வெளியே வந்து சுற்றும் முற்றும் தேடினாள்..  சந்நிதியின் பின்புறம் சுவற்றில் சாய்ந்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தான்.

கையொன்று தோளை அழுத்தவும்.. திடுக்கிட்டு திரும்பினான்..

“தமிழ்?”

வார்த்தையால்.. “ஆ..ஆமா..” பார்வையால்.. “நீங்க?”

நான் வர்ஷா... ஃபோன்ல சொன்னனே.. சீஃப் எடிட்டர் பொண்ணுனு.. நல்ல நேரத்துல கால் பண்ணி சொன்னீங்க.. நீங்க மட்டும் சொல்லலைன்னா.. மை காட்.. நினச்சிக் கூட பாக்க முடியல.. ஆமா.. நீங்க எப்படி அவரோட..”

“அ.. அது.. சும்மா தான் அவனோட வந்தேன்.. அவன் மட்டும் தான் நேத்து போனான்.. ரொம்ப நேரமா நாட் ரீச்சபிள்னு வந்ததால தான்.. போனேன்.. இப்படியெல்லாம் ஆகும்னு..” கேவலோடு நிறுத்தி.. தலை கவிழ்ந்து தோள் குலுக்கி அழுதான்..

“ரிலாக்ஸ்.. ஒண்ணுமாயிடல.. நல்லாயிருக்கார்.. வாங்க.. உள்ள போகலாம்..”

“முருகா.. இல்லைங்க.. எனக்கு அவன அப்படி பாக்கறதுக்கு சக்தியில்லங்க... அவன் நல்லாயிருக்கான்றதே எனக்குப் போதும்.. ஒரு முக்கியமான வேலயிருக்கு.. ஒரு சின்ன ஒப்லிகேஷன்.. ”

சொல்லுங்க”

“விலாவரிய சொல்ல முடியாது... எப்படியும் அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லியிருப்பீங்க... அவங்க வர்ற நேரம் நான் இங்க இருக்கக் கூடாது... என்னோட வந்தீங்கன்னா... ரூம் வெக்கேட் பண்ணிட்டு... அகில் திங்ஸ் உங்ககிட்ட ஒப்படைச்சுடுவேன்...”

என்ன சொல்றீங்க... ஒப்படைச்சிட்டு.. நீங்க எங்க போறீங்க...?”

“இப்பவே சொல்லணுமா..?”

“சரி இருங்க.. வரேன்... அப்பாகிட்ட சொல்லிட்டு... நம்ம வண்டில போயிடலாம்...”

நொடியில் திரும்பினாள்...

வண்டியை டிரைவர் செலுத்த.. பின் சீட்டில் அமர்ந்தார்கள்..

“அப்பா.. சரி சொன்னதா பாத்தா.. போலீஸுக்குப் போக மாட்டார்னு நினைக்கறேன்.. நீங்க இங்க இருக்கணும்னு அவசியமில்ல தான்... ஆனாலும்..  அவசியம் போய் தான் ஆகணுமா?”

அவனிடம் பதிலில்லை..

சற்றைக்கெல்லாம் வருண் லாட்ஜின் முகப்பில்... லெட்ஜரை தலைக்கு வைத்து படுத்திருந்தவன்... சட்டென எழுந்து.. குழப்பமாக பார்த்தான்.. ஆணும் பெண்ணுமாக அதிகாலை வேளையில்??

சந்தேகத்திற்கு இடமில்லாமல்... அவளை ரிசப்ஷனில் விட்டு... அறையை காலி செய்துவிட்டு திரும்பினான்..

அவன் வருவதற்குள்... சந்தேகம் முற்றிலும் நிவர்த்தியாகியிருந்தது... தன் பங்குக்கு வருத்தமும் ஆறுதலும் தெரிவித்து ரிசப்ஷன் ஆள் வழியனுப்பினான்...

அகிலனின் லாப்டாப், பை, இத்யாதிகளை அவளிடம் ஒப்படைத்து.. “சரிங்க.. நான் கிளம்பறேன்.. அகில நல்லா பாத்துக்குங்க” இமை பாரம் தாங்காமல் கண்ணீர்த் துளியை கன்னம் வழியே உருட்டி விட்டது... 

சிநேகமாய் கேசம் கலைத்து... “டோண்ட் ஒர்ரி... உங்க உயிர நாங்க பத்திரமா பாத்துப்போம்...” அவள் பார்வையில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது.

“எ.. எப்படி தெரியும்.. அ.. அ.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே...” என்றெல்லாம் பிதற்றுவது தான் அதை அனர்த்தமாக்கி விடும்.. 

தமிழ் அம்மாவிடம் வளர்ந்த பிள்ளை... சூது வாது இல்லையே ஒழிய.. சூட்சுமம் புரிந்தவன்... உதடு பிரியாது... ஈரவிழிகளோடு.. அவள் ஆறுதலுக்கு நன்றி சொன்னான்..

“அப்பாடா... எங்க போறீங்கன்னு இப்பவாச்சும் சொல்வீங்களா?”

“ம்ம்... நிச்சயமா... பழனிக்கு”

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

good

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

காலம் கடந்து வந்தாலும் கலங்க வச்சுட்டீங்களே...ஏன் இந்த பிரிவு யோசனை தமிழுக்கு ?...முடிந்தால் சீக்கிரம் பதிங்க

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

 

காலையில் எப்போதோ துடைக்கபட்ட தரையிலிருந்து மெல்லிய “லைசால் வாடை மூக்கை நெருடவே.. “நாம் எங்கிருக்கிறோம் என்ற கேள்விதான் முதலில் எழுந்தது அகிலனுக்கு. கேள்வியின் பதிலை கண்டறிவதற்குள் தான் கட்டிலில் படுத்திருப்பதையும் தலையில் பயங்கர வலியிருப்பதையும் கண்கள்மூடி கொண்டிருப்பதையும் அவன் உணர துவங்கியிருந்தான். எல்லாவற்றையும் ஒன்றுகொன்று தொடர்புபடுத்தி பார்த்த பொழுது தமிழுடன் வேதாரணியம் வந்தது, தான் மட்டும் கோடியக்கரை சென்றது அங்கு மர்ம நபர்களின் மூலம் தாக்குண்டது அனைத்தும் நினைவு அலைகளில் தென்படும் மங்கலான மீன்களை போல தோன்றினாலும் மேற்பரப்பில் தெரியும் நுரையாய் தெளிவாக தெரிந்தது அவனுக்கென்னவோ “தமிழ் எங்கிருக்கிறான்? என்ற கேள்விதான்.

மெலிதாக கண்களை திறந்த பொழுது ஏதோ மிக நவீனமான மருத்துவமனையில் தான் படுத்திருப்பதை உணர்ந்து கொண்டு பக்கவாட்டில் பார்வையை திருப்பினான். குளித்து முடித்து இருக்க வாரப்பட்டு பின்முடித்த கூந்தலோடு மஞ்சளும் குங்குமமும் தவழும் முகமாய் எப்போதும் தோன்றும் தன்தாய் கவலை தோய்ந்த முகத்துடன் கலைந்த கேசத்துடன் கிட்டத்தட்ட பரதேசம் போனவளை போல ஆழ்ந்த அசதியில் மெலிதாக கண் மூடியவளாய் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் இருந்து பார்வையை விளக்கி அறையின் மற்ற பகுதிகளை நோட்டம் விட்டான் ஆனால் அவன் கண்களின் கேள்விக்கு பதிலளிக்க தமிழ் அங்கில்லாதது ஏமாற்றமே!! குரலை திடப்படுத்தி கொண்டு தன் தாயை நோக்கி “அம்மா.. என்று அழைத்து முடிப்பதற்குள் சுதாரித்தவர்,

“அகிலா!! கண்ணு முழிசிட்டியாப்பா.. என்று கதறியபடி அருகில் வந்து அனைத்து கொண்டு அரற்றினார். தாயின் அரவணைப்பு அவனுடைய மனதை பிசையவே கண்கள் அவனறியாமல் நீர் முத்துகளை வாரி இறைத்தது. சத்தம் கேட்டு அறையின் வெளியிலிருந்து அகிலனின் அப்பா அக்கா மாமா என்று ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து உறவினர்களும் உள்ளே வந்து ஆனந்தத்தில் அவனை திகைக்க வைத்தனர். ஆனால் அந்த கூட்டத்திலும் அவனுடைய தமிழை மட்டும் காணவில்லை. மேலும் அவனது சீப் எடிட்டர் அவரது மகள் வர்ஷா உள்ளிட்டோருடன் தன் பக்கத்துவீட்டு பையன் விஜய் யும் கூட நிற்பது ஒருவித ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் “இத்தன பேர் இருக்கும் போது அவன் மட்டும் எங்க போயிட்டான் என்ற கேள்விதான் அகிலனிடம் தொக்கி நின்றது.

அங்கு நடந்த ஆர்ப்பாட்டங்களை சிறிது நேரம் மவுனமாய் கவனித்தவன் மெல்ல எழுந்து உட்க்கார முற்படவே அனைவரும் உதவமுன் வந்தார்கள் ஆனால் அவனுக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை சாதாரணமாக எழுந்து உட்கார்ந்துவிட்டான். பிறகு “தமிழ் எங்கம்மா? என்ற போது அவன் தாய் கூறியதாவது:

“அகிலா எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்டா. அஞ்சு நாள் கழிச்சு கண் முழிச்சிருக்க மொதல்ல இந்த பால குடிடா

“என்னது அஞ்சு நாள் கழிச்சா என்று ஆச்சர்ய பட்டவனுக்கு விதவிதமான கேள்விகள் பூதாகரமாக எழுந்தாலும் அனைத்து பூதங்களின் மீதும் தமிழ்தான் அமர்ந்திருந்தான். யார் யாரோ ஏதேதோ பேசிகொண்டிருக்க எதுவும் அவனது கவனத்தில் ஏறாதபோது கண்களில் ஏற்பட்ட நீர்த்திரைக்கு முன்னால் பக்கத்துவீட்டு பையன் விஜயின் ஒருவிதமான தவிப்பு தென்பட்டது அவனை நோக்கிய பொழுது விஜய் தன் கையில் இருந்த ஒரு கவரை காட்டி,

“ எல்லாம் அப்புறம் சொல்லுறேன் இப்ப பேசாம இருங்கண்ணா என்பது போல சைகை செய்தான்

தனக்கும் தமிழுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படை அவனுக்கு தெரியாவிட்டாலும் அவர்களது அன்பின் ஆழம் விஜய்க்கு தெரியுமாதலின் “ஏதோ விஷயம் இருக்கு என்று புரிந்து கொண்டவனாய் கேள்விகனைகளை கண்ணீர் கேடயத்தால் எதிர்கொண்டபடி அமைதியாகிவிட்டான். தமிழுடைய வீட்டுக்கு சென்று அராஜகமாக நடந்து கொண்ட அவனது உறவுகள் யாரிடமும் அவன் பேசுவதற்கு விரும்பவில்லை. சிறிது நேரத்தில் டாக்டர் வந்தார் ஏதேதோ சோதித்தார் பிறகு மலர்ந்த முகத்துடன் “ஓகே மிஸ்டர் அகிலன் யூ ஆர் கம்ப்லீட்லி ஆல் ரைட் ரெண்டு நாள் ரெஸ்ட்டுக்கு அப்புறம் வீட்டுக்கு போலாம் என்று கூறி விட்டு சீப் எடிட்டரிடம் ஏதோ பேசியபடி வெளியேறவே மொத்த குடும்பமும் அவருடன் சேர்ந்துகொண்டது. இதுதான் சமயம் என்று எதிர்பார்த்திருந்த விஜய் அகிலனிடம் ஓடி வந்து

“அண்ணா!! தமிழண்ணன் வீட்ட காலி பண்ணிட்டு அவங்கம்மாவ கூட்டிகிட்டு எங்கயோ போய்ட்டார்ண்ணா, இந்த லெட்டர பிரிக்காம நீங்க கண் முழிச்சதும் உங்கள்ட்ட கொடுக்க சொன்னார் என்று கையில் இருந்த கவரை கொடுத்தான். அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய கண்ணீருடன் அவசரவசரமாக அந்த கடிதத்தை படித்த பொழுது அதில் எழுதபட்டிருந்ததாவது:

“என் உயிர் அகிலா.. மிஸ் யூ சோ டா.. உன்ன பிரிஞ்சி எப்டி இருக்க போறேன்னு தெரிலடா ஐ லவ் யூடா.. நான் மட்டும் உன்ன தேடிக்கிட்டு வரலான நீ உயிரோட இருக்கங்கற சந்தோசம் கூட எனக்கு கெடச்சிருக்காதுடா.. உன்ன காணும்னு தேடி பாத்துட்டு கடைசியில உயிருக்கே ஆபத்தான நிலமையில உன்ன பாத்தப்ப உசுரே போற மாதிரி இருந்துதுடா.. அதுக்கப்புறம் ஹாஸ்பிட்டல்ல உங்க அம்மா அப்பாலாம் பாத்தேன் அவங்க உனக்காக அழுதாங்கபாரு அத என்னால மறக்க முடிலடா.. அப்பத்தான் என்னோட சுயநலம் எனக்கு புரிஞ்சிது.. அஞ்சி வருஷமா பழகுன எனக்கே உன்னோட சின்ன பிரிவ தாங்கமுடில.. இருபத்தி எட்டு வருஷமா பெத்து வளத்தவங்களுக்கு எவ்ளோ வேதன இருக்கும்... அவங்கள்ட்டேருந்து உன்ன பிரிக்க நான் விரும்பலைடா.. அதான் நான் போறேன்..  நீ எப்போதும் நல்லா இருக்கனும்டா வீட்டுல சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு மிஸ் யூ டா..

                                                                                                                                                                             உனதன்பு தமிழ்

கடிதவரிகள் கண்ணீரில் குளித்திருந்தது, போதாதென்று அகிலனும் தன்பங்கிற்கு துவங்கியிருந்தான், காகிதத்தை முகத்தில் பொத்தி தமிழை எண்ணி அரற்றியவனை அருகிலிருந்த விஜயோ வர்ஷாவோ சமாதான படுத்த முயலவில்லை. பிறகு தானே அழுகையை நிறுத்தி விஜய்யிடம் “அவன் எங்க போறான்னு சொன்னானா? என்று கேட்டான்

“இல்லையண்ணா என்பது போல தலையாட்டினான் விஜய்.

அதனை பார்த்து மேலும் பரிதாபமாக போன அகிலனின் கவனத்தை “பழநிக்கு என்ற வர்ஷாவின் குரல் கலைத்தது.

“என்னது பழநிக்கா

“ஆமா மிஸ்டர் அகில், தமிழ்தான் எங்களுக்கு கால் பண்ணி உங்கள காணும்னு சொன்னார் அதுக்கப்பறம் நாங்க எடுத்த முயற்சிலதான் உங்கள கண்டுபிடிச்சோம்.. ஆனா ஹாஸ்பிடல் வந்து உங்களக்கூட அவர் பாக்கல, வெளில கோயில்ட்ட உக்காந்து அழுதார் அப்புறம் நான் போறேன்னு மட்டும் சொன்னார். எங்கனு கேட்டேன் பழனிக்கு அப்டின்னார்.

வர்ஷா முடிப்பதற்குள் வெளியேறியிருந்த உறவுகள் அறைக்குள் நுழைந்தனர். சந்தோஷ குதூகளிப்பிலும், பாசவிசாரிப்புகளிலும் நிரம்பி வழிந்தது அந்த அறை, ஆனால் அகிலனின் சிந்தனை பழனியை நோக்கியே இருந்தது

“பழநிக்கா, இது என்ன சம்பந்தம் இல்லாம பழனிக்கு போயிருக்கான். பழனிக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்று அன்று இரவு வரை நினைவுக்கடலில் வலைபோட்டு கொண்டிருந்தவனுக்கு சிக்கியது என்னவோ அரவிந்தன் என்ற பெயர்தான்

“பழனி அரவிந்தன், இந்த பேர எங்கியோ கேட்டுருக்கோமே!! எங்க கேட்டோம்.. ஆனா தமிழ் சம்பந்த பட்ட பேர்தான், என்னது? யாரிது? என்று மீண்டும் யோசித்தவனுக்கு கடைசிகட்டமாக நினைவுக்கு வந்தது ஆறுமாதம் முன்பு நடந்த சம்பவம் ஒன்று. அதுவென்னவென்றால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பும் நிறுவனத்திற்கு சொந்தக்காரனான தமிழின் அத்தை மகன் அரவிந்தன் தமிழை சிங்கபூர் அனுப்ப செய்திருந்த முயற்சிதான். தமிழ் பெயருக்கேற்றபடி தமிழ்படித்து மிகுந்த தமிழறிவோடு இருந்தான். சிங்கபூர் பள்ளிஒன்றில் தமிழாசிரியர் பணிக்கு ஆள்தேவை படுவதாகவும் அதற்கு கட்டாயம் தமிழ் செல்லவேண்டும் என்று விசாவை கையில் வைத்துகொண்டு வீட்டுவாசலில் நின்றான்.

காதல்தீவிரத்தில் சிங்கபூர் வேலை துச்சமாக தெரிந்தது தமிழுக்கு, “முடியாது நான் வரலை என்றவனிடம் “நல்லா யோசிச்சு பாருடா இந்த விசால இன்னொருப்பையன அனுப்புறேன் அஞ்சு மாசத்துல இன்னொரு ஆள அனுப்பனும் அதுக்கு வேணாலும் நீ போ நான் வைட் பண்ணுறேன் உனக்குதாண்ட நல்லது சொல்லிவிட்டு போய்விட்டான் அரவிந்தன்

அகிலனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது, ஆனால் மிகுந்த பயம் பற்றிகொண்டது ஏற்கனவே ஐந்துநாள் கடந்துவிட்டது ஒருவேளை இந்நேரம் தமிழ் சிங்கபூர் போயிருப்பானா?.

நாளைகாலை மருத்துவமனையில் இருந்து கிளம்பலாம் என்றார்கள், ஆனால் அன்று இரவு புறப்படுவதற்கு அகிலன் முடிவெடுத்துவிட்டான், தன்னுடைய பர்சை கேட்டுவாங்கி அதில் ஏடிஎம் இருக்கிறதா என்று பார்த்துகொண்டான், செல்போனைவாங்கி கையில் பத்திர படுத்திகொண்டான். உறவுகள் ஒவ்வொன்றாக விடைபெற்றது. தாயும் தந்தையும் நிம்மதியாக தரையில் படுத்து உறங்கினர்.. இதான் சமயம் என்று வெளியேறி சிப்பந்திகள் கண்ணில்படாமல் மெயின்கேட்டை ஏறிக்குதித்து வெளியேறினான்..

பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்து “ஸ்ரீனி திண்டு என்று சேமிக்கப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டான். நீண்ட நேரத்திகுப்பின் சோம்பலான குரல் ஆச்சர்யத்துடன் பதில் சொன்னது

“டேய் ஸ்ரீனி நான் அகிலன்டா தமிழ்ன்னு. முடிப்பதற்குள் ஸ்ரீனி துவங்கினார்

“நல்லருந்துதாடா? நிறையப்பேர் போன்பண்ணி சொன்னங்க நான் தமிழ்மொழி பத்தி போன வாரம் எழுதிருந்த ஆர்டிகல படிச்சிட்டு நல்லாருந்துதுன்னு, நீ போன்பன்னுவன்னு நெனச்சேன் ஆனா இவ்ளோ லேட்டா பண்ணுவன்னு எதிர்பக்குலடா

அகிலனுக்கு ஆத்திரம் பொத்துகொண்டு வந்தது “டேய் மொக்க என்று துவங்கி ஏதோ பேசினான். அவர்கள் பூர்வ கதையை பேசி முடிப்பதற்குள் இந்த ஸ்ரீனி யாரென்று சொல்லிவிடுகிறேன். அகிலன் வேலை பார்க்கும் அதேபத்திரிக்கையில் ஸ்ரீனிவாசனும் வேலை செய்கிறார் ஆனால் அவர் திண்டுக்கல் மாவட்ட நிருபர். உடுமலைபேட்டை சொந்தஊர் அகிலனும் அவரும் டா போட்டு பேசும் அளவுக்கு நெருக்கம். கதையின் ஓட்டத்தில் இவரை சந்திக்க நேர்ந்தால் வாயை கொடுத்துவிடாதீர்கள்.. தொன தொணவென்று ஏதாவது பேசிகொண்டிருப்பார்.. அப்புறம் உங்கள் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு இல்லை. சரி வாருங்கள் அகிலனை பார்ப்போம்

“சரிடா நீ பழனில அந்த டிராவல் ஏஜென்சி எங்க இருக்குனு கண்டுபுடிச்சு வை, நான் பஸ் ஏறுறன். காலைல மீட் பண்ணுவோம்

மேற்கு நோக்கிய இரவுப்பயணம் பழனி பேருந்துநிலையத்தில் போய் முடிந்தது. இருசக்கர வாகனத்தில்வந்து காத்திருந்தார் ஸ்ரீனிவாசன்.

தமிழ என்பவன் தன்னுடைய நண்பன் வீட்டிலிருந்து கோவித்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவனைத்தேடி வந்திருக்கிறேன். அரவிந்தன என்பவனை கண்டால் தமிழ் குறித்த விவரம் தெரிந்துவிடும் என்றெல்லாம் நேற்று இரவே பேசிமுடித்து இருந்ததால், தன் செல்வாக்கை வைத்து அந்த ட்ராவல் ஏஜென்சி குறித்த விவரத்தை நேற்று இரவே திரட்டி வைத்திருந்தார் அவர்.

இருவரும் வெகுசீக்கிரமே சென்றுவிட்டதால் அந்த டிராவல் ஏஜென்சி பூட்டிக்கிடந்தது காத்திருந்தார்கள், காலைவெயில் ஏறுவெயிலாகி எரிக்க துவங்கிவிட்ட பத்து மணியளவில் ஒருவன் வந்து கதவை திறந்தான்.

போய்விவரம் கேட்டனர். ஆனால் அவன் அரவிந்தன் இல்லையென்றும் வேலை செய்யும் பணியாள் என்றும், தமிழ் என்பவர் நேற்றுவரை தன்னறையில்தான் தங்கி இருந்ததாகவும், இன்று மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்படப் போவதாகவும். கூறியதை கேட்டதும் மெலிதாக விசும்பியபடி தலையில் கைவைத்து கொண்டு அங்கு கிடக்கும் பெஞ்சில் உக்கார்ந்துவிட்டான் அகிலன்

“ஏங்க என்னாச்சு ஏதும் அவசரமா?

“ஆமா! தமிழ அவசரமா இவர் பாக்கணுமாம். தமிழ் சென்னை கெளம்பிட்டாரா எப்ப போனார்?, அவர் மொபைல் நம்பர் கூட ஸ்விட்ச்ஆப் ஆயிருக்கு, வேற ஏதும் காண்டாக்ட் நம்பர் இருக்கா? என்று கேட்டார் ஸ்ரீநிவாசன்

“அவருகிட்ட மொபைல் இருந்துதுங்க ஆனா சிம்ம கழட்டி வச்சிருந்தார்.. அடிக்கடி அந்த மொபைல்ல ஏதோ ஒரு போட்டோவ பாத்து பாத்து அழுவார். எது கேட்டாலும் சொல்லமாட்டார். இன்னைக்கு காலைல என்கிட்டே தமிழ  சென்னைக்கு பஸ் ஏத்திவிட சொல்லியிருந்தார் அரவிந்த் சார். நான் பஸ்ஸ்டான்ட்க்கு போனப்ப ‘நான் மலைமேல போகணும், முருகன ஒருதடவ பாத்துட்டு பஸ் ஏறிக்கிறேன், என்ன அடிவாரத்துல விட்டுட்டு நீங்க போங்க ன்னு சொன்னார். சரின்னு நானும் டிராப் பண்ணிட்டு போயிட்டேன்

மேற்கண்ட சம்பாஷனை புதிய வீறு கொள்ள வைத்திருந்தது அகிலனை. அவன் எழுந்து “ஏங்க அவன எப்பங்க விட்டிங்க இப்பதான் விட்டு வரீங்களா? மலைமேல போனா அவன பாக்கலாமா? என்று ஆர்வமாக கேட்டான்

“இல்லங்க நான் காலையில எட்டுமணிக்கு விட்டேன், ரூம்க்கு போய்ட்டு இப்பதான் வரேன், போய் பாக்குறதுன்னா பாருங்க உங்க அதிர்ஷ்டம் இருந்தாலும் இருப்பார்

“சரி ஸ்ரீனி வா போகலாம் என்ற பொழுது ஸ்ரீனிவாசனின் செல்போன் ஒலித்தது.

எடுத்து காதில் வைத்தவர் வாய்விட்டு எதுவும் பேசாமல் “சரி நீங்க அங்கேயே இருங்க நான் இப்ப வரேன் என்று சொல்லி அணைத்தார்.

“என்னாச்சு ஸ்ரீனி நீ மலைமேல வரலையா?
“ஆமாண்டா கொஞ்சம் வேலை இருக்கு நீ மேல போ நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் போன ஆன்லையே வச்சுக்கடா
என்று சொல்லி அகிலனை பழனிமலை அடிவாரத்தில் விட்டுவிட்டு ஸ்ரீனி காட்சியிலிருந்து கழண்டு கொண்டார்.

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

 

கல்கண்டு, பஞ்சாமிருத, விபூதி கடைகளை தாண்டி, நடைபாதை வியாபாரிகளை கடந்து அடிவார பிள்ளையாரை வணங்கும் நெரிசலான மக்களை தாண்டி மலையேறினான் அகிலன். முருகனை தேடி மக்கள் வெள்ளம் அரகரா கோஷமிட்டு மேலேறிகொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் “பழனிமலை முருகனுக்கு... அரஹரோஹரா.. என்ற கோஷங்களும் மொட்டைத்தலைகளும், காவி துணிகளும், விபூதி கற்பூர வாசனையும் மனதை நிறைத்தாலும் அகிலனின் மனதை தமிழ் இருக்கிறானா இல்லையா தெரிய வில்லையே என்ற கேள்வியும் கண்களை ஆற்றாமையின் கண்ணீரும்தான் நிறைத்தது.

 

எதிற்படும் நபர்களில் தமிழ் இருக்கிறானா? உட்க்கார்ந்திருக்கும் கூட்டங்களில் தமிழ் இருக்கிறானா? படுத்திருக்கும் பாதசாரிகளில் தமிழ் இருக்கிறானா? என்று எங்கு நோக்கினும் தமிழ் தமிழ் என்ற வேட்கைதான் இருந்தது அகிலனுக்கு, ஆனால் தமிழின் சாயலை ஒத்த ஒருவன் கூட அங்கு இல்லை. படிகள் ஏறஏற முட்டியில் இருக்கும் காயம் நெறிப்பட்டு இரத்தகசிவு உண்டாகியது, பாதிமலை ஏறியப்பின் ஒரு அடி இனி எடுத்து வைக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு வலி பின்னி எடுத்தது கால்கள்,

 

ஓடிப்போய் அருகிலிருக்கும் பக்கசுவரில் அமர்ந்தான், “ கடாங் “கடாங் என்று கோயிலிலிருந்து மணியோசை கேட்டது.

 

மனதார முருகனை எண்ணினான். “முருகா.. நீ இருக்குற மலையில்தான் என் தமிழோட மூச்சுகாத்து சுத்துது, அவன் எங்கண்ணுல காட்டு முருகா,, காலம்பூரா உன்ன மறக்க மாட்டேன், கால்வலி தாங்க முடில என் தமிழ் மேலதான் இருக்கானான்னும் தெரில, கைவிட்டுடாத முருகா, இல்லனா உன் மலையிலருந்தே கீழ குதிச்சு என் உயிரை போக்கிப்பேன் மனதார வேண்டி கண்ணீர் விட்டு அழுதான்.. கால் முட்டியில் தலை வைத்து கூனிக்கொண்டு அமர்ந்திருந்தவனை தோள்மீது கைவைத்து உசுப்பியது ஒருகுரல்.

 

“அங்கிள்!!” நிமிர்ந்து பார்த்தவனுக்கு தலையை மொட்டையடித்து சந்தனம் பூசி இருகாதுகளிலும் புதியகடுக்கன் போட்டு பட்டுவேட்டி கட்டிய ஒரு ஐந்து வயது பாலகன் நிற்பது தெரிந்தது.

 

“ஏன் அங்கிள் அழுவுறீங்க, கால்ல வேற ரத்தம் வருது? ரொம்ப வலிக்குதா.?

அழுதான்

“இன்னும் கொஞ்ச தூரம்தான் மேல போங்க அங்கிள் உங்க வலியெல்லாம் முடிஞ்சிடும் என்றது அந்த பிள்ளை.

அந்த பாலகனின் குரல் புதுதெம்பை கொடுத்தது போலிருந்தது அகிலனுக்கு அதற்குள் “குமரா..!! “குமாரா..!! என்று விளித்தபடி ஒரு இளம்மாது ஓடிவந்து அந்த பையனை பிடித்து கொண்டு..

கடையில கார் கேட்ட! அதுக்குள்ள ஓடிவந்துட்டியா..? என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

அகிலன் அந்த பெண்ணிடம் சிநேகமாக புன்னகைத்து குழந்தையிடம் பெயர் என்னவென்று விசாரித்தான்

“ரோதீஸ் குமரன் என்று சொல்லிவிட்டு மேலே செல்லுமாறு சைகை செய்து தாயுடன் சென்றுவிட்டான் அவன்.

முருகனே நேரில் வந்து வழி சொல்லியது போல தோன்றியது அகிலனுக்கு வலியை பொறுத்துக்கொண்டு மேலே ஏறி ஆலய வளாகத்தை அடைந்தான். அலைந்தான். பலமான கூட்டம் சல்லடை போட்டு தேடினான். தேவஸ்தான அலுவலகம் அருகில் அவன் தேடிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பட்ட ஒரு வாலிபன். “அய்யயோ இது என்னங்க இவ்ளோ இரத்தம் வருது.. ஏதும் அடிபட்டுடுச்சா என்று தானாகவே வந்து ஆஜரானான்

“இல்லங்க ஏற்கனவே அடிபட்டதுதான்.. படியேறி வந்ததுல இரத்தம் கசியுது என்று நகர முற்பட்டவனை

“அட வாங்கங்க.. இவ்ளோ ரத்தம் போகுது, கொஞ்சம் மருந்து வச்சு கட்டாவது போட்டுக்கிட்டு போங்க என்று வலுகட்டாயமாக தேவஸ்தான அலுவலகத்துக்குள் அழைத்து சென்று முதலுதவி பெட்டியில் இருந்து மருந்து உள்ளிட்ட இத்யாதிகளை கொண்டு சிகிச்சை செய்தவனின் பேச்சிலிருந்து அவன் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு புதிதாக பணியேற்று கொண்டவன் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. வாய் வேறு தொனதொனவென்று ஓயாமல் உளறிகொண்டு இருந்தது.

சலிப்புடன் ஜன்னல்வழி வெளிநோக்கிய அகிலனுக்கு தங்கத்தேர் நிறுத்தும் இடத்தில் யாரோ ஒரு ஆடவனின் கால்கள் மட்டும் மறைவாக தெரிந்தது.. எழுந்து ஓடிசென்று பார்த்தான் கைகளில் முகம் புதைத்து கண்ணீரை பெருக்கி கொண்டிருந்தான் தமிழ். அருகில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் ஒரு டிராவல் பேக். மேலும் நெருங்காமல் அங்கிருந்தே அதிக சத்தமின்றி “தமிழு குட்டி என்று விளித்தான் அகிலன்.

குரல்கேட்ட திசையை நோக்கிய தமிழின் முகத்தில் மேய்ச்சலுக்கு சென்ற தாயாட்டை கண்ட குட்டியின் மகிழ்ச்சி.. “அகிலா..!!

என்று கத்தியே விட்டான். எழுந்து அகிலனை நோக்கி அனைத்து கொள்ளும் ஆவலுடன் வந்தவனுக்கு “பளார் என்று ஒரு அரை கன்னத்தில் விண்ணென்று தெறித்தது. ஆனால் அரை ஒன்று விழுந்ததற்கான சிறு அடையாளத்தைகூட முகத்தில் காட்டிகொள்ளாமல் ஒரேடியாக யுகத்திற்கும் சேர்த்து அனைத்து கொண்டான் தமிழ். அகிலனும் கட்டிக்கொண்டு அழுதான். அது ஒரு பொதுஇடம், தமிழகத்தின் பிரசித்திபெற்ற ஆலையம் என்பதையும் மறந்து இருவரும் பாசமழை பொழிந்தனர், எக்காரணம் கொண்டும் இனி ஒருவரை ஒருவர் பிரிவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டனர், அருகிலிருந்த ஒரு குடிநீர்குழாயில் முகம் கழுவினான் அகிலன். இருவரும் இணைந்தபடி பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கர்ப்பகிருகத்தில் நுழைந்தனர்.

கருவறையில் வழக்கத்திற்குமாறாக கூட்டம் குறைவாக இருந்தது. தலையில் இரத்தின தலைப்பாகையுடன் இராஜாங்ககோலத்தில் தண்டாயுதம் தாங்கி மென்முருவளுடன் காட்சி அளித்தான் பழனியாண்டவன். எழிற்கோலம் கண்டு மனமுருகி நன்றி செலுத்தினர் அகிலனும் தமிழும், தீபாராதனை காட்டப்பட்டது எங்கிருந்தோ ஆனந்தபைரவி இராகத்தில் கெட்டிமேளம் கொட்டும் ஒலி கேட்டது. இதுதான் சமயம் என்றவனாய் தன் விரலில் கிடந்த மோதிரம் ஒன்றை கழற்றி அகிலனின் கைவிரலில் அணிவித்தான் தமிழ். அகிலனும் ஒரு ரிங்கை கழற்றி தமிழுக்கு அணிவித்தான். சந்தடியில்லாமல் மனமொத்த திருமணம் ஒன்று அங்கு அரங்கேறியது.

ஆலயத்தை வலம் வர இருவரும் வெளியேறியபொழுது அகிலனின் செல்போன் ஒலித்தது. ஏதோ புதிய எண்.

 

“ஹலோ யாரு

 

“நான் ராஜ்குமார் பேசுறேங்க

 

“ராஜ்குமாரா? எனக்கு யாருன்னு தெரியலையே

 

“அதாங்க காயத்துக்கு கட்டு போட்டேனே மறந்துட்டிங்களா?

 

“அட ஆமாங்க என் நம்பர் உங்களுக்கு எப்டி தெரியும்

 

“கொஞ்சம் திரும்பி பாருங்க

 

திரும்பியவனுக்கு அகிலனின் குடும்பத்தினரும், ஸ்ரீனிவாசனும், கையில் ஒரு பிரசாதத்தட்டு சகிதமாக ராஜ்குமாரும் நின்றிருந்தார்கள்.அகிலனின் தாயும் தந்தையும் அருகில் ஓடிவந்து “அகிலா உன் இஷ்ட்டப்படியே தமிழோடையே இருந்துக்கடா.. நீ யாரையும் கல்யாணம் செஞ்சிக்க வேணாம், ஆனா எங்கள இப்புடி தவிக்க விட்டு போயிடாதடா என்றனர்.

 

இராஜ்குமார் அருகில் ஓடிவந்து இந்தாங்க அகிலன், சுவமியோட அபிஷேக பஞ்சாமிருதம், ஸ்ரீனிவாசன் எனக்கு தெரிஞ்சவர் அவர்தான் உங்கள பத்தி விவரம் சொல்லி நம்பர் கொடுத்து பேச சொன்னார். என்று பிரசாத தட்டை இருவரின் கைகளிலும் திணித்தான்.

 

ஒரே சிரிப்பும் மகிழ்ச்சியுமாக முருகனுக்கு நன்றி சொல்லி அனைவரும் மலையிலிருந்து கீழே இறங்கினர். அந்த பஞ்சாமிருத டப்பாவை உடைத்து அனைவரும் நக்கி கொண்டே வந்தனர். ஆனால் தமிழும் அகிலனுக்கும் அதில் கலந்து கொள்ளவில்லை அவர்கள் வாழ்க்கையே பஞ்சமிருதமாகி விட்ட பிறகு இனி அது எதற்கு?

        காதலும் காதல் நிமித்தமுமாக “ஐந்தினையில் பயணித்த “தமிழ் அகிலன் கதை குறிஞ்சியில் நிறைகிறது.  

 

 

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

hpie ending ..nice

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

just i have read this last episode .....nice ending... aanalum intha lolluku onnum koracha illa

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Aynkaran,

Very nice ending you made me cry for the last episode. well ending keep it up bro.

regards

Thiva

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard