இரவு முழுவதும் சரியான தூக்கம் வரவில்லை கதிரவனுக்கு.
அந்த மீட்டிங் முடிந்தபிறகு அங்கு புக் செய்யப்பட்ட அறைகளில் அவர்கள் அனைவரும் ஜோடி ஜோடியாக தங்கினார்கள்.
இப்படிக்கூட ஒரு கலாச்சாரமா?
அதுவும் நமது இந்தியாவில்? - என்று ஒருகணம் அவன் மனம் தன்னைத் தானே கேட்டுக்கொண்டது.
அப்புறம் அதுவே "அது என்ன இந்தியாவில் என்று குறிப்பிட்டு சொல்கிறாய். இங்கு உள்ளவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா.? ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான ஆசைகள் இருக்கத்தானே செய்யும். நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு எல்லைகள் மாறுபடலாம். ஆனால் இதயங்கள் போதுதானே. அவற்றில் தோன்றும் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் எல்லைகள் எது?" - என்று கேட்டபோது அவனுக்கு ஏற்பட்ட படபடப்பு அடங்கியது.
ராம்சந்தரும் லாரன்சும் பேசிய பேச்சுக்களும், அவர்களது மனப்போக்கும் அவனுக்குள் ஏற்படுத்திய பிரமிப்பு அவனுக்கு அடங்கவே இல்லை. இவர்களைப் போலவே அங்கு கூடி இருந்த ஆண்கள் அனைவரும் ஒருபாலீர்ப்பாளர்களாக இருந்தது அவனுக்கு பேரு வியப்பை ஏற்படுத்தியது.
சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினர் என்றால் இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று அவனால் ஒதுக்கிவிடமுடியவில்லை. அவர்களுக்கு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் தங்களுக்குள் தோன்றும் வக்கிர எண்ணங்களை எல்லாம் நியாயப்படுத்தி அவர்களுடைய அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் என்று கூட ஒரு கணம் அவன் நினைத்தான்.
அதே சமயம் - அப்படிப் பார்த்தால் நான் மட்டும் என்ன டாட்டா பிர்லாவின் பரம்பரையா? எனக்குள்ளும் எழும்பும் ஆசைக்கு பெயர் என்ன? அதை என் மன விகாரம் என்று சொல்லலாமா?
இப்படி அவன் நினைத்தபோது அவன் மனக்கண்ணின் முன்னால் திவாகரின் வசீகரமான முகமும் வாட்டசாட்டமான கட்டுடலும் தோன்றி மறைந்தது.
திவாகரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவன் உடம்பில் உச்சிமுதல் பாதம் வரை சிலிர்ப்பு மின்னல் ஒன்று தோன்றி ஊடுருவுகிறதே.
தற்செயலாக அவன் தன் முதுகில் ஒரு பாராட்டாக - தட்டிக்கொடுக்கும் போதெல்லாம் அவனது விரல்கள் பட்டதும் இனம் தெரியாத ஒரு இன்பம் உடல் முழுக்க பரவுகிறதே?
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவனை அப்படியே கட்டித்தழுவ வேண்டும் போல தோன்றுகிறதே.?
ஏன் இப்படி?
சட்டென்று தன்னை ஒரு கணம் உலுக்கிக் கொண்டான் கதிரவன்.
"ச்சே.. என்ன இது. நான் ஒரு ஆண்மகன். அதுவும் சுத்தமான கம்பீரமான ஒரு ஆண்மகன். ஒரு பெண்ணிடம் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டால் அதுதான் நியாயம். பெண் தன்மை இருக்கும் ஒருவனுக்குத்தான் ஆண்மகனிடம் ஈடுபாடு ஏற்படும். எனக்கு ஏற்படக்கூடாது. அது நியாயம் இல்லாத ஒன்று. " என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்ள முயன்றான் அவன்.
அப்படி என்றால் நீ திவாகரைப் பார்த்தாலே பரவசம் அடைகிறாயே ஏன்? - அவன் மனம் எதிர்க் கேள்வி கேட்டது.
அது அது வந்து.. ஆ. ராம் சார் சொன்னாரே..ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள். அந்த மாதிரி ரசனை தான் அது. ஜஸ்ட் எ ஹீரோ வொர்ஷிப் - நாட் தன் தட்" - என்று தன்னைத்தானே சமாதனம் செய்துகொள்ள முயன்றான் அவன்.
அப்படி என்றால் மேடை ஏறி மைக் போட்டு " என் மனம் என் வசம் இல்லை. அது இன்னொருவர் வசம் இருக்கிறது. " என்று அறிவித்தாயே.? யார் அந்த இன்னொருவர்.
உனக்கு இதுவரை எந்தப் பெண்ணுடனாவது பழக்கம் உண்டா என்ன? கிடையாதே. வாழ்வில் உன் அன்னையைத்தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் நீ பழகியதே இல்லையே. கல்லூரியிலும் கூட ஆண்கள் கல்லூரியில் தானே படித்தாய். அப்போதும் கூட சக ஆண்களுடன் கூட பழகாமல் ஒதுங்கித்தானே நீ இருந்தாய். அப்படி இருக்க மேடையில் தைரியமாக ஒருவரை நீ காதலிப்பதாக அறிவித்தாயே. யார் அது. கண்டிப்பாக ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி என்றால்..அது திவாகர் தானே." என்று அவன் மனசாட்சி கொக்கி போட்டு இழுத்து வைத்து கேள்விமேல் கேள்வியாக குடைந்தெடுக்க திணறிப்போனான் கதிரவன்.
"ஆமாம். அது திவாகர் தான்? இருந்தால் என்ன தப்பு? எஸ். ஐ லவ் ஹிம். வாட் ஈஸ் ராங் இன் இட்? அவருடன் என் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை எந்தப் பெண்ணும் என்னுடைய குடும்பச் சூழலுக்கு என்னை திருமணம் செய்துகொள்ளவே முன்வரமாட்டாள்.? ஒரு விலைமகளின் மகனாக இருக்கும் எனக்கு பெண் கொடுக்க எந்தப் பெண்ணைப் பெற்றவராவது முன்வருவார்களா என்ன? என்னைப் பற்றி புரிந்துகொண்ட முற்போக்கான மன நிலை கொண்ட ஒருவரோடுதான் நான் என் வாழ்வை இணைத்துக்கொள்ள முடியும். அப்படி எந்தப் பெண்ணும் கிடைக்கவே மாட்டாள். அப்படி இருக்க முற்போக்கான எண்ணம் - மற்றவரை அவர்களது பலம் - பலவீனத்தோடு ஏற்றுக்கொள்வது எல்லாமே திவாகரிடம் தானே இருக்கிறது. எனக்குத் தெரிந்து திவாகர்தான் எனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர். என் மன உணர்வுகளைப் புரிந்துகொண்ட அவர் என் உடல் உணர்வுகளையும் சரியாக புரிந்துகொண்ட என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?" - தனக்குள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் கதிரவன்.
"அது சரி.. நீ இவ்வளவு யோசிக்கிறாய். திவாகர் உன்னை காதலிக்க வேண்டுமே? உன் காதலை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? ஏற்றுக்கொள்வாரா என்ன? - மனம் எதிர்க்கேள்வி போட்டது.
"வொய் நாட்? ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார்? கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார். இன்பாக்ட் அவருக்கும் இப்படி ஒரு எண்ணம் இருக்கப் போய்த்தானே அவரே என்னை இந்த கான்பெரென்சில் பணிபுரிய வாய்ப்பை கொடுத்தார். ஓரினச் சேர்க்கையைப் பற்றி நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் நினைத்ததால் தான் என்னிடம் இந்தப் பொறுப்பை கொடுத்தார்? ஆகவே அவருக்கும் இப்படி ஒரு எண்ணம் என்னிடம் இருக்கிறது என்பது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தெளிவாகவில்லையா என்ன? ஸோ கண்டிப்பாக திவாகரும் என்னை விரும்புகிறார்.- என்ற தீர்மானத்துக்கே வந்துவிட்டான் கதிரவன்.
"அப்படியானால் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய். " - என்று மனம் அவனைக் கேட்டது.
"நாளைக்கே அவரிடம் வெளிப்படையாக என் மனதைத் திறந்து அவரிடம் எனக்கு ஏற்பட்டிருக்கும் காதலை வெளிப்படுத்திவிடப் போகிறேன். ராம் சொன்னாரே இதில் எல்லாம் தள்ளிப்போடக்கூடாது என்று. அதனால் நாளையே திவாகரிடம் வெளிப்படையாகப் பேசிவிடப்போகிறேன்." - என்று முடிவுக்கு வந்தான் கதிரவன்.
அதுவரை குழம்பிக் கொண்டிருந்த மனம் அதற்குப் பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தது. அதன் பிறகு தான் அவனுக்கு thookkame வந்தது.
மறுநாள் காலை. - இரவு தாமதமாகத் தூங்கினாலும் சரியான நேரத்துக்கு முழிப்பு வந்துவிட்டது கதிரவனுக்கு.
அன்றைய பொழுது புலர்ந்ததே அவனுக்காகத்தான் என்று தோன்றியது.
உற்சாகமாக கவிழித்தான் அவன். மளமளவென்று குளித்து முடித்து வழக்கத்துக்கு மாறாக பளிச்சென்று ரெடியாகி ஹோட்டல் லாபிக்கே வந்து விட்டான் அவன். மனதின் உற்சாகம் அவன் செயல்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.
கான்பெரென்ஸ் முடிந்து இரவு தங்கி பொழுதைக் கழித்தவர்கள் மறுநாள் அதிகாலை முதலே ஹோட்டல் அறைகளை காலிசெய்துகொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
கதிரவன் வந்த சமயத்தில் தங்கள் அறைகளைக் காலிசெய்துவிட்டு MUMBAI செல்ல VIMAANA நிலையம் செல்ல கால் டாக்ஸிக்காக லாபியில் காத்துக்கொண்டிருந்த ராமும் லாரன்சும் கதிரவைக் கண்டதும் சிநேகமாகப் புன்னகைத்தார்கள்.
சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பும்போது கதிரவனிடம் வந்த ராம்,"ஹாய் கதிரவன்? நான் நேற்று சொன்னது நினைவிருக்கிறதா? சீக்கிரம் உங்க மனம் கவர்ந்தவரிடம் உங்க காஹ்டலை சொல்லிடுங்க. நெக்ஸ்ட் டைம் நாம் மீட்பண்ணும் போது உங்களை தம்பதிகளாகத்தான் பார்க்கணும்.குட் லக் " என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு கை கைகுலுக்கி விடைபெற்றான்.
மனதின் மலர்ச்சி முகத்தில் வெளிப்படையாகத் தெரிய திவாகரின் வருகைக்காக காத்திருந்தான் கதிரவன்.
சரியாக ஒன்பது மணி முப்பது நிமிடம்.
திவாகரின் கார் ஹோட்டல் வாசலில் வந்து நின்றது.
காரிலிருந்து ஒரு காரிபாக் நிறைய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பார்சல்களுடன் நுழைந்தான் திவாகர்.
அவன் மனமும் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
தன எதிரே நின்ற கதிரவனைப் பார்த்ததும் "ஹாய் கதிர்..என்ன இவ்வளவு சீக்கிரமா ரெடியாயிட்டீங்க போல இருக்கே?' என்றான் திவாகர்.
"நான் எப்பவுமே உங்களுக்காக ரெடிதான் திவாகர்." என்றான் கதிரவன்.
அவனையே கண்கள் விரியப் பார்த்தான் திவாகர்.
"வழக்கத்துக்கு மாறா உங்க முகத்துலே ஒரு PUTHU களை தெரியுதே கதிரவன். என்ன விஷயம்? " என்றான் திவாகர் தன் கேபினை நோக்கி நடந்துகொண்டே.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே திவாகர்." என்று சொல்லிக்கொண்டே அவனுடன் இணைந்து நடந்தான் கதிரவன்.
அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்துகொண்ட திவாகர் கையில் இருந்த கேரிபாகில் இருந்து ஸ்வீட் பாக்சை வெளியே எடுத்தான்.
"அட. என்ன இவர்? ஸ்வீட்டோட வந்திருக்காரே. அப்படீன்னா இவரே என் கிட்டே தன்னோட லவ்வை ப்ரொபோஸ் பண்ணப் போகிறாரா?" - உற்சாகத்தில் மிதந்தது கதிரவனின் உள்ளம்.
"கதிர்.. உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா? நானும் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா வந்திருக்கேன். அதை முதல்லே உங்க கிட்டே தான் பகிர்ந்துக்கப் போறேன். ""- என்று திவாகர் சொன்னதும் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது கதிரவனின் மனம்.
"என்ன விஷயம்? சொல்லுங்க திவாகர்." - என்றான் கதிரவன் ஆர்வம் பொங்க.
ஸ்வீட் பாக்சை திறந்த திவாகர் அதை கதிரவனிடம் நீட்டியபடியே, "முதல்லே ஸ்வீட்டை எடுத்துக்குங்க கதிரவன். விஷயத்தை சொல்லறேன்."- என்று நீட்ட அதை கதிரவன் எடுத்துக்கொண்டதும்..
"ஒரு ஹாப்பி நியூஸ் கதிரவன். நான் அப்பாவாகப் போகிறேன்." - என்றான் திவாகர்.
கையில் எடுத்த மில்க் கேக் கதிரவன் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
பாவம் கதிர் அதைவிட அவன் அம்மா எவ்ளோ கனவோடு இருப்பார்....கதை நல்ல வேகம் சில விஷயங்களை நேரில் பார்ப்பது போல் இருக்கு ...கதிர் மனசோடு பேசும் பேச்சு ரொம்ப நல்லாருக்கு.....சீக்கிரம் பதிங்க
What to say you are simply rocking the story, well again i wish to note this (even though its a story) please dont spoil khatiravan's life at the same time The couples life i mean Thivager and Kalpana's. Well if Khatir followed to his wish he may spoil 2 persons hope No. 1 His beloved Mother who is thinking that the son may become a sucessful and honest person in his life; and No. 2 he will spoil the hope of Thivager who is inocently caring for Khatir and at the same time Khatir mite spoil the life of his own sister and the gud name of Thiva.
Pls pa dont break anyones hope. pls maintain Khathir in a respectable way.