அவன் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே உள்ளே சென்றார்கள் இருவரும், வாங்கப்பா இது நவீன் என்னோட பையன் என்று அறிமுகபடுத்தி வைத்தார், லீவுக்கு அவங்க மாமா வீட்டுக்கு போயிட்டு இன்னிக்கு காலைலதான் வந்தான், நாளைக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுதுல்ல உங்க கிளாஸ் தான் என்றார் சுஜா, இவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைதான், இவர்களும் சிரித்தனர், பிறகு அனைவரும் அமர்ந்து உணவு உன்ன ஆரமித்தனர், நவீன் சகஜமாக பேசினான், சிறிது நேரத்திலேயே இவர்களுடன் நன்றாக ஒட்டி விட்டான், மேடம் இங்க சமையல் செயரதுக்கு யாராவது இருப்பாங்களா, எதுக்கு டா நீங்க டெய்லி இங்கயே சாப்டுக்கலாம் என்றார் சுஜா, இல்ல மேடம் அது வேணாம் என்று தயங்கினான் தீபன், சரத்தும் இதனை ஆமோதித்தான், சுஜா எவ்வளவு சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை, சரி நான் ஏற்பாடு பண்றேன் என்றார் சுஜா, இதற்குள் காலை உணவு முடிந்தது, மேடம் நாங்க ஷாப்பிங் போயிட்டு வர்றோம் என்றனர், உங்களக்கு இங்க எதுவும் தெரியாதுல்ல நவீன கூட கூடிட்டு போயிட்டு வாங்க என்றார்கள் அவனும் அம்மா நான் கார்ல போயிட்டு வரவா என்றான், நீ தனியா போகாத டா இல்ல மேடம் நான் நல்ல டிரைவ் பண்ணுவேன் என்றான் தீபன், ஓகே பார்த்து போயிட்டு வாங்க என்றார், நவீன் நாங்க ஒரு 5 மினிட்ஸ்ல ரெடி ஆகி வந்துடறோம் என்றனர், ஓகே தீபன் நானும் அதுக்குள்ள நானும் ரெடி ஆகிடுறேன், அனைவரும் கிளம்பினர், தீபன் காரை வெகு லாவகமாக செலுத்தினான், சிறிது தூரம் சென்றதும் தீபன் கார நான் டிரைவ் பண்ணவா என்றான், நவீன் நீ நல்லா டிரைவ் பன்னுவிஆ என்றான் தீபன், என்ன இப்புடி கேட்டுட்ட 4 நாள் ட்ரிவிங் கிளாஸ் போய் இருக்கேன் என்றான், அட பாவி என்ன 4 நாள் போனியா, வேணாம் டா சாமி என்று பயந்தான் சரத்.
இல்ல மச்சி இப்போ வேணாம்,அம்மா ஸ்கூல் க்ரௌண்ட்ல இன்னொரு நாள் நானே சொல்லி தரேன் என்றான் தீபன், ஓகே மச்சி என்று அமைதியானான் நவீன், இவ்வாறு பேசி கொண்டு செல்லும் போது ஒரு கார் இவர்களை உரசியவாறு கடந்து சென்றது , தீபன் அவர்களை முந்தி செல்ல வேண்டும் என்று கேட்டான் சரத், உன்னால முடியுமா மச்சி என்றான் சரத், இந்த வார்த்த தீபனை உசுபெற்றியது, என்ன சொன்ன இப்போ பாரு என்று ஆக்சலடேரை மிதித்தான் தீபன், இவர்கள் பின்தொடர்வதை பார்த்த அந்த கார் இவர்களை விட வேகமாக சென்றது, நவீன் மணிக்கு 110 கீமீ வேகத்தில் சென்றான், அந்த காரை நிறுத்தியே ஆக வேண்டும் என்று இன்னும் வேகத்தை கூட்டினான், சரத்தும் நவீனும் ஆரம்பத்தில் என்ஜாய் பண்ணுனாலும் தற்போது தீபனின் வேகத்தை கண்டு சிறிது பயந்தனர், மச்சி வேணாம் டா அவங்க போனா போகட்டும் என்றான் சரத், முடியாது மச்சி அவங்க போற ஸ்பீட பார்த்தா எதோ தப்பா தெரியுது கொஞ்ச நேரம் பேசாம வா என்றான், இப்பொழுது ஸ்பீடாமீட்டர் 125ஐ தொட்டு கொண்டிருந்தது, என்ன நடக்க போகுது என்று தெரியாமல் சரத்தும் நவீனும் பயந்தபடி இருந்தனர். தீபன் அவர்களை நெருங்கினான், அப்பொழுது தான் சரத் அந்த காரின் உள்ளே உற்று நோக்கினான், அதிர்ந்தான்.
கதை நல்லாருக்கு ....கொஞ்சம் தனுஷ் டைப் ஹீரோவாக தீபன் தெரிகிறார் ....பட் இந்த மாதிரியான கதைக்கு வயது கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்...ஆனால் please அதையே காரணமாக வைத்து கொச்சைப்படுத்தும் வகையில் எழுத முயற்சிக்காதிங்க ....உங்கள் வேகமான கதை சொல்லும் விதம் நல்லாருக்கு ....புது பிரண்ட்ஸ் கூட நம்ம past life sharing மாதிரி இருக்கு ....waiting for the next ...
@விஜய்.... அப்டி ஆட்கள் இருந்திருந்தால், அப்போல்லாம் எனக்கு நிறைய வசதியா இருந்திருக்கும்....நல்லவேளை இல்லை இருந்தா எங்களுக்கு இப்டி கதை சொல்லமாட்டிங்க....காதில் கம்மலோடு பாரினில் இருப்பிங்க...jus ஹா ஹா....
செல்வராகவன் படத்து நாயகன் போல எல்லாத்தையும் இந்த வயசுலேயே செய்றான்.... ஒரு சந்தேகம், அப்போ இருபதுகளில் அவன் ரசித்து செய்ய எதுவுமே இருக்காதே?.... விருவிருப்பா கொண்டு போற,.... சொல்லுப்பா..... காருக்குள்ள யாரு?....
@சாம்....
உண்மைதான் நண்பா.... ஆனால், ரசிச்சு வாழ்ந்திருக்கலாம்....
அதிர்ச்சியான சரத் நவீனை அழைத்து காண்பித்தான், அங்க பாரு டா காருக்குள்ள யாரயோ கட்டி வச்சுருக்காங்க, நவீனும் அவன் சொன்னதை ஆமோதித்தான், இப்பொழுது நிலைமை இன்னும் மோசம் அடைவதை உணரத்தான் நவீன், ஆனால் இது எதுவும் தெரியாமல் அந்த காரை முந்திசெல்வதிலேயே முழு கவனத்துடன் இருந்தான், இன்னும் ஓரிரு நிமிடங்களில் அவர்களை கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தான் தீபன். சரத் தீபனிடம் நிலைமையை உணர்த்தினான், அப்பொழுது தான் அதனை கவனித்தான் தீபன், நவீன் உடனடியாக சுஜாவிற்கு அலைபேசியில் அழைத்து இந்த விவரங்களை சொன்னான், சுஜா பதறினார், அந்த கார் நம்பர் என்னனு பார்த்து சொல்லுங்க என்று கேட்டாள் நவீன் அந்த வண்டியின் விவரங்களை சுஜாவிற்கு அனுப்பினான், உடனே சுஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது, நீங்க அந்த வண்டி பின்னாடியே போங்க ஓவர் டேக் பண்ண வேணாம், இப்போ உனக்கு DSP அங்கிள் கால் பண்ணுவாங்க என்றார், நவீன் அழைப்பை துண்டித்து விட்டு இந்த விவரங்களை தீபனிடம் சொன்னான், அவனும் முன்னேறும் முயற்சியை விட்டு விட்டு அந்த வண்டியை பின்தொடர்ந்தான். நவீனின் அலைபேசிக்கு ஒரு புது என்னில் இருந்து அழைப்பு வந்தது, புரிந்து கொண்டான் நவீன், அம்மா சொல்லி போலீஸ் கால் பண்றாங்க டா என்றான் சரத்திடம், எடுத்து பேசு என்றான் சரத், அழைப்பை ஏற்ற்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் நவீன், ஓகே நவீன் இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் அங்க வந்துடும், அதுவரைக்கும் அந்த வண்டிய பாலோ பண்ணுங்க என்று அழைப்பு துண்டிக்க பட்டது, சிறிது நேரத்தில் சைரென் ஒலியுடன் ஒரு போலீஸ் வண்டி வருவது தெரிந்தது, சரத் தலையை வெளியே நீட்டி அவர்களை அழைத்தான், முன்னே சென்ற வண்டியின் ஓட்டுனர் இந்த செய்கையை கண்ணாடியில் பார்த்து விட்டான், போலீஸ் என்றான் பதட்டத்துடன், அவனுடைய சகாக்களும் பார்த்தனர், இப்போது அந்த வண்டியை ஓவர் டேக் செய்ய முனைந்தான் தீபன், 5 நிமிடத்தில் அந்த வண்டியின் குறுக்கே தனது காரை நிறுத்தினான் நவீன்.
நாமக்கல் பிள்ளைகளா இது?.... ஊர் பெயரை மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ்'னு மாத்தினா, இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..... ஹாலிவுட் எபெக்ட்'டா இருக்கு..... வித்தியாசமான பார்வை, சொல்லுங்க மேலும்....
தங்களது வாகனத்தின் குறுக்கே இன்னொரு கார் வந்து நிற்பதை பார்த்ததும் புதியவர்கள் பயந்தனர், அவசர அவசரமாக கீழே இரணக முற்பட்டனர், அதற்குள் போலீஸ் வந்து அவர்களை சுற்றி வளைத்து நின்றனர், வண்டிக்குள் இருந்து ஒரு சிறுவனை மீட்டனர், இவர்களை பாராட்டிய DSP கண்டிக்கவும் செய்தார், உங்க வயசுக்கு நீங்க கார் ஓடுனதே தப்பு இதுல சேசிங் வேறயா, சாரி அங்கிள் இனிமேல் இப்புடி பண்ண மாட்டோம் என்று சொல்லி விட்டு கிளம்பினர், வெளியே வந்த நவீன் தம்பிங்கள இனிமேல் ஷாபிங் போகலாமா இல்ல வேற பிளான் எதாச்சும் இருக்க என்றான் நவீன் கொஞ்சம் கடுப்பாக, இல்ல மச்சான் போகலாம் என்று சொல்லி கிளம்பினர்.
எல்லா பொருளும் வாங்கி வீட்டுக்கு திரும்புவதற்குள் மணி இரவு 8 ஆனது, இவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் சுஜா மிகவும் சந்தோசத்துடன் வரவேற்றாள், DSP எல்லாம் சொன்னாரு, உங்கள பத்தி புகழ்ந்து தள்ளிடாறு அந்த சின்ன பையன் கரூர் கலெக்டரோட பையனாம், அதே மாதிரி இனிமேல் உங்களுக்கு கார ஓட்ரதுக்கு தர கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடாரு, என்னமா இது தீபன் எவ்ளோ சூப்பரா கார் ஓட்றான் தெரியுமா, "இருக்கட்டும் டா பட் இப்போதைக்கு நோ" சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டார் சுஜா, இவர்கள் பேசிகொண்டிருக்கும் போது ரூமில் இருந்து வெளியே வந்தார் சுஜா, சத்தம் கேட்டு திரும்பினர் மூவரும், "என்னமா கைல பார்சல்" என்றான் நவீன், உங்க மூணு பேருக்கும் ஒரு சின்ன கிப்ட் என்றார் சிரித்தப்படி, கண்கள் அகல விரிய அதை வாங்கினான் நவீன், இதெல்லாம் எதுக்கு மேடம் என்றனர் தீபனும் சரத்தும், நீங்க எவ்ளோ பெரிய விசியம் பண்ணி இருக்கீங்க அதுக்கு இது ஒரு சின்ன கிப்ட் என்றார் புன்னகையுடன், என்னமா வாங்கி இருக்கீங்க இவ்ளோ பெரிய பாக்சா இருக்கு என்றான், பிருச்சு பாருடா, பிரித்த நவீன் கண்கள் விரிய பார்த்தான்...................
உள்ளே இருந்தது ஒரு அழகான ஹெம்ஸ்டேர்ஸ் ஜோடி, மூவரும் மிகவும் மகிழ்ந்தனர், அம்மா ரொம்ப தேங்க்ஸ் என்றான் நவீன் மகிழ்ச்சியுடன், அதற்குள் சரத் அந்த ஹெம்ஸ்டேர்ஸ் கிட்ட ரொம்ப நெருங்கி விட்டான், ஹே தீபன் இதுங்களுக்கு என்ன பேரு டா வைக்கலாம், யோசிச்சு நல்ல பேரா நாளைக்கு வைக்கலாம் இப்போ போய் சாப்டுட்டு படுங்க என்றார் சுஜா, இல்லமா நாங்க வெளிய சாப்டுட்டோம் என்றான் நவீன், சதோஷம் எனக்கு வேல மிச்சம், ஓகே நாங்களும் தூங்க போறோம் என்றனர் சரத்தும் தீபனும்," ஓகே டா குட் நைட் நானும் தூங்க போறேன் என்றான் நவீன்", சரத்தும் நவீனும் அறைக்குள் நுழைந்து படுக்கையை தயார் செய்து கொண்டிருந்தனர், ஹே தீப்ஸ் என்ன அருமையா கார் ஓட்ற, இவ்ளோ நல்லா கார் ஓட்ட தெரியும்னு சொல்லவே இல்ல என்றான் சரத், சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான் தீபன், அது உனக்கு வேணும்னா பெருசா இருக்கலாம் டா, எனக்கு பெரிய விசியம் நீதான் டா, குட் நைட் என்று சொல்லிவிட்டு படுத்தான் தீபன், அவனை அணைத்தவாறே சரத்தும் படுத்தான், என்மேல எவ்ளோ பாசம் இருக்கு டா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்று மனதுக்குள் சொல்லியவாறே தூங்கினான், காலை முதலில் எழுந்தான் சரத், எழுந்ததும் ஹெம்ஸ்டேர்ஸ் ஜோடிக்கு உணவு வைத்து விட்டு தீபனை எழுப்பினான், தம்பி இன்னிக்கு ஸ்கூலுக்கு முதல் நாள் ஒழுங்கா என்துரிச்சு கிளம்புற வழிய பாரு என்றான் சரத், இருவரும் குளித்து புறப்பட்டு கொண்டிருந்தனர், சரத் கதவ தொரடா என்று நவீனின் குரல் ஒலித்தது, என்ன டா இவ்ளோ பரபரப்பா இருக்க என்றான் சரத், எவ்ளோ பெரிய விஷயம் நடந்து இருக்கு தெரியுமா இங்க பாரு என்றான் நவீன், பார்த்ததும் ஆச்சரியமடைந்தான் சரத்........