type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
மூன்று மாதம் வளரும் பயிரை
முப்பது நாளில் வளர்க்கிறார்கள் ....
அறுபது வயதிலும் ஆரோக்கியம் காணும் நாம் ..
முப்பது வயதில் முடி உதிர்ந்து முதுமை காணும் காலம்!
உறங்கும் போதுகூட குழந்தை தன்னை மறக்ககூடாது என்று
தன் சேலையில் தூளி கட்டி தூங்க வைத்த காலம் போய்...
பால்குடியை உடனே மறக்கடித்து வேலைக்கு
செல்லும் தாய்களின் காலம் !
எங்கேயோ இருக்கும் நண்பனுக்கு சோசியல் நெட்வொர்க்கில்
வாழ்த்து சொல்லி .... அருகிலிருக்கும் அன்னையிடம்
அன்பு வார்த்தை பேச மறுக்கும் மகன்/மகள்களின் காலம் ...
ஆர்டர் செய்தால் எதுவும் கிடைக்கும் காலம் ( அன்பை தவிர்த்து ).....
இருக்கும் இடத்தில் எல்லாம் கிடைக்கும் காலம் ( பாசத்தை தவிர்த்து )!
இது ஒரு நவீன கற்காலம் !
எல்லாம் இருப்பதாய் நினைத்து !
அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழும் காலம் !