ஒவ்வொரு அடி முதுகுல விழுந்துது. எங்களுக்காவது பரவால்ல சீமாச்சுவ கீழ தள்ளி அவன் வாயில பூட்ஸ் காலால
மிரிச்சான் அந்த கலெக்டர். அப்பவும் இந்த சீமாச்சு விடலையே வாயிலருந்து வந்த உதிரத்த தொடச்சிட்டே சொன்னான்
“வந்தே மாதரம்” ன்னு ஆனா நாங்க யாரும் எழுத்து கேக்கல எல்லா அடியையும் வாங்கிகிட்டோம் நாங்கதான்
அகிம்சா வாதியாச்சே!!
எனக்கு மட்டும் கையில ஒரு துப்பாக்கி இருந்தா அப்டியே அந்த கலெக்டர சுட்டு பொசுக்கி இருப்பேன். ஆனா அந்த
நேரத்துலதான் கரெக்டா அந்த கலெக்டர் க்கு குறி வெச்ச குண்டுங்க சிலஅவனோட சாரட்டுல பட்டு தெறிச்சிது குறி தப்பி
துப்பாக்கி வெடிச்ச சத்தம் கேட்ட எடத்துலருந்து எங்கள மாதிரி கொஞ்சம் பசங்க ஓடினது தெரிஞ்சிது அவங்கள புடிக்க அந்த பட்டாளத்தனுவோ ஒடுனதும் நாங்களாம் தப்பிச்சு அங்கங்க போய் பதுங்கிட்டோம்
அங்க இருந்த ஒரு மாட்டு கொட்டாயில தான் ஓடி போய் நான் பதுங்குனன் தொழுவத்துல பாதிக்கு மேல வைக்கபோர் மறச்சிருந்துது அதுக்கு அந்தாண்ட போய் உக்காந்ததும் தான் தெரிஞ்சிது அங்க இன்னொரு ஆள் இருக்குறது. அது யார் தெரியுமா? அதான் நான் முன்னாடி சொன்னேன்ல்ல என் செல்லான்னு அவன்தான். அவன அப்பத்தான் நான் மொத மொத பாத்தேன்
ஆஹா..... இத விடவா பெரிய பாக்கியம் வேணும் நான் தயார் ன்னு சொன்னேன். அப்பத்தான் இந்த ஜெயில்ல
கொண்டு வந்து என்ன போட்டாங்க
அதாங்க முன்னாடி சொன்னேன்ல வைத்திய காரவங்க தாதிமாருங்கலாம் அதிகமா இருக்காங்கனு சொன்னேன்ல அந்த
ஜெயில்தான்.
என்ன? இங்கயும் யாரும் சொதந்திரத்துக்கு போராடுறது இல்ல நான் போய் எல்லாரையும் கூப்ட்டு பாப்பேன் வரமாட்டங்க.
நேத்திக்கூட கூப்டேன் நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சி அறுபத்தி ஆறு வருஷம் ஆயிட்டு இப்ப போய் போராட
கூப்டுறன்னு சொன்னான் ஒருத்தன். எனக்கு வந்துது பாருங்க கோவம் கையில இருந்த கம்பாலையே போட்டு அடிச்சிட்டேன். முன்னாடிலாம் எல்லாருகிட்டயும் நல்லாத்தான் பேசுவேன் ஆனா எல்லாரும்
தேசபக்தி பைத்தியம் தேசபக்தி பைத்தியம்னு சொல்லுவாங்க அதுனால நான் யார்ட்டையும் அதிகம் வெச்சிக்கிறது இல்ல.
எல்லாம் கொஞ்ச நாள் தான் இன்னும் ஒரு வருஷத்த்துல நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சிடும். என் செல்லாவும்
வந்துடுவான் அப்புறம் எனக்கு இந்த ஜெயிள்ளருந்து விடுதலைதான்.
-நிறைந்தது
புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை, சுதந்திரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை, அந்த சுதந்திரத்திற்காக எங்களுக்கு வழங்கப்பட கூடிய தண்டனைகளால் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலி பீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகிறோம்
இரு வேறுபட்ட போராட்ட குணமுடைய இருவர்.. எதிர்பாராத சூழ்நிலையில் சந்திக்க நேர்ந்து... ஒரிரவு ஒன்றாக ஒளிந்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகி.. காதல் வயப்பட்டு...
கொண்ட கொள்கைக்காக.... காதலை மென்று விழுங்கி.. கடைசி வரை காதலை வெளிபடுத்திக்கொள்ள சந்தர்ப்பம் வாய்க்காமல் போனது துரதிருஷ்டவசமானது...
ஆனாலும்.. ஒரு சின்ன ஆறுதல்.. நல்ல வேளையா செல்லா திரும்பி வரவேயில்ல.. மணியும் மனநலம் பாதிப்படைஞ்சிட்டார்..
ஒருக்கால்.. திரும்பி வந்து அவங்க சேர்ந்திருந்தா... இந்த சமுதாயம் அவங்கள சும்மா விட்டிருக்குமா..??
இன்னும் அந்த பாழாப்போன வெள்ளக்காரன் போட்ட சட்டதிட்டத்த தான.. கட்டி அழறானுங்க...
சோ.. ஒரு வகைல.. அவங்க காதல் அமர காதல் ஆயிடுச்சி... :)
கடந்த கதையில் இல்லாத ஒரு அழுத்தமான முடிவு, இங்க இருக்குது.... கடைசிவரை அவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்பதை நீங்க சொல்லும்வரை யூகிக்க முடியல.....
சிறப்பான முயற்சி..... இருவரும் தனியே நிகழ்த்தும் உரையாடல் நல்லா இருந்துச்சு.... இறுதியில் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனா மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொன்ன விதம் நல்லா இருந்துச்சு....
கதைப்படி எனக்கு பிடிச்சிருக்கு.... கருத்துப்படி எனக்கு உடன்பாடு இல்லை.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், அதில் தவறில்லை....
தமிழருக்கென்ற ஒரு நாடு உருவாகி கொடியேறும் நாள்தான் எனக்கான விடுதலை நாளாக நான் நினைக்கிறேன்.... இது என் கருத்து மட்டும்தான்....
@ரோத்திஸ்....
ஏன் வெள்ளைக்காரனை திட்டுறீங்க?... சட்டம் போட்டது அவன்தான்.... சரி... இப்போ அவன் நாட்டுலையே அந்த சட்டத்தை மாத்திட்டான்ல, அப்போ புத்தி யாருக்கு இல்ல?...
எல்லா தப்பையும் செஞ்சுட்டு வெள்ளைக்காரனை பின்பற்றுவதா சொல்லுவாங்க, சரியானதை செய்ய சொன்னா "கலாச்சாரம்"னு ஒரு விஷயத்தை புடிச்சுகிட்டு ஆடுவாங்க.... வாழ்க சனநாயகம்....
வார்த்தைகளே இல்ல நண்பா.. அற்புதமான படைப்பு..
//என்ன அண்ணி சுதந்திரம் கெடச்சா செல்லா வந்திருப்பானே!! அப்பனா இன்னும் சொதந்திரம் கெடைக்கில பொய் சொல்றீங்கன்னு சிரிச்சன்//
ஆழமான காதலை அற்புதமாக வெளிப்படுத்தும் வரிகள்..
hats off நண்பா...
@msvijay
//கருத்துப்படி எனக்கு உடன்பாடு இல்லை......
எங்க மாறுபடுறீங்க?
//தமிழருக்கென்ற ஒரு நாடு உருவாகி கொடியேறும் நாள்தான் எனக்கான விடுதலை நாளாக நான் நினைக்கிறேன்//
+1 :)
ஒரு டாகுமெண்டரி பிலிம் பார்த்த மாதிரி இருக்கு....பாவம் மணி...சில இடங்கள் நிறுத்தி மறந்தது போல விட்ட இடத்திலிருந்து சொல்லும் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கு....முடிவில் அவர் மனநலம் பாதிக்கப் பட்டவர் என்று தெரியும் போது கஷ்டமாக இருக்கு....அதை தெரியாமல் கதை நகர்வு சூப்பர்...இன்று பதிவு செய்தது மிக பொருத்தமாகவும் இருக்கு ....