நான் ஒழுங்கா தூங்கி இன்னையோட பதினஞ்சி நாள் இருக்கும். தெருவுல மணிசத்தம் கேட்டா ஐஸ் வண்டியோ பஞ்சி முட்டாயோவருதுன்னு எல்லாருக்குமே தெரியும்
“டிங் டிங் டிங்” ன்னு அந்த சத்தம் கேட்டாலே சின்ன புள்ளைங்கலேருந்து பெரியவங்க வரைக்கும் ஒரு குதுகலம் இல்லாம இருக்காது. ஆனா போன ரெண்டு வாரமா இந்த சத்தத்த கேட்டாலே எனக்கு ஒருமாதிரியா இருக்கு,
ஒருமாதிரின்னா!!! அதுல ஏமாற்றம், ஏக்கம், அழுகை, பயம்ன்னு எல்லாமே இருக்கு. இத ஏன் சொல்றன்னா நீங்க வேற ஒரு “ஒருமாதிரிய” நெனச்சிட கூடாதுல்ல அதான்.
இப்ப கூட பாருங்க தெருவுல அதே சத்தம் தான் கேட்டுகிட்டு இருக்கு. எப்டி இருந்தாலும் அந்த மணி சத்தம் எங்க வாசல்ட்ட வரும் போது வழக்கம் போல எழுந்து போய் பாக்கத்தான் போறன் அதுக்குள்ள என்ன நடந்துதுன்னு உங்கள்ட்ட கொஞ்சம் சொல்லிடுறன். உங்களுக்காவது என் வேதன புரியிதான்னு சொல்லுங்க.
ரெண்டுமாசத்துக்கு முன்னாடி பேரளம் சரகத்துல சேந்த பூந்தோட்டத்துக்கு ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க போனப்ப கையில கொஞ்சம் அடி பட்டுடுச்சி அதுநால டூட்டிக்கு ஒன்ற மாசம் லீவ் போட்டுட்டு வீட்லதான் இருக்கன்.
மொதல்ல சொன்னேன்ல!! அதுமாரி போன மாசம் ஒருநாள் இப்புடித்தான் வாசல்ல மணி சத்தம் கேட்டுது. “டிங் டிங் டிங்” ன்னு
“மாமா மாமாஐஸ்கிரீம் ஐஸ்கிரீம்” ன்னு ஓடி வந்தான் எங்க அக்கா பையன் ராஜ்,
சரி வாங்கி கொடுப்போமேன்னு பர்ஸ எடுத்துகிட்டு அவன தூக்கி கிட்டு வெளில வந்தன்.
அது போலேநாத் ஐஸ்கிரீம் வண்டி. ஏற்கனவே எங்க தெரு பசங்க அந்த வண்டிய சுத்தி நின்னுகிட்டுதான் இருந்தாங்க.
நான் வண்டிக்கு எழுத்த மாதிரி நின்னுகிட்டு இருந்தன், வண்டி மேல இருந்த தட்டி மறச்சதால அவனோட முகம் எனக்கு தெரில. ஆனா அந்த விசித்திரமான கரண்டியால ஐஸ்கிரீம வழிச்சு கோனுல வெச்சி பசங்களோட கையில குடுத்துட்டு அவங்க கன்னத்த செல்லமா கிள்ளுற அவன் கை மட்டும் அழகா தெரிஞ்சிது.
மெலிதா நரம்பு தெரியிற கை, செம்பட்டை கலருல பூனமுடி இருக்குற கை. இது போதாதா எனக்கு? உடனே நவுந்து அவனோட முகம் தெரியிற மாதிரி நின்னுகிட்டன்.
செக்க சிவந்த நிறம், ஆனா நம்ம ஊர் சிவப்பு இல்ல, நீளமான கோரைமுடி ஆனா நம்ம ஊறு கறுப்பு இல்ல, செம்பட்டை. அதுல எண்ணெய் வச்சு சீவியிருந்தான். அளவெடுத்து செஞ்ச மாதிரி அழகான முகம், அழுக்கான சட்டை, தண்ணின்னா என்னா?னு கேக்குற ஜீன்ஸ் பேன்ட்ன்னு பாத்ததுமே சொல்லிடலாம் அவன் ஒரு வடநாட்டுகாரன்னு.
இப்புடி அவன வர்ணிக்கிற அளவுக்கு நான் பாக்குறது கூட கவனிக்காம குனிஞ்சி குனிஞ்சி ஐஸ்கிரீம் குடுத்தவன் சட்டுன்னு என்ன ஒருதடவ பாத்தான்.
“ஏக் ஐஸ்கிரீம்” எனது இந்தி புலமையை வெளிபடுத்தினேன்.
ஒரு கரண்டி கிரீம கோன்ல முட்ட மாதிரி வெச்சு அது தல மேல கொஞ்சம் சிண்டு மாதிரி வெச்சு கொடுத்தான். அத வாங்கிகிட்டு ராஜி இறங்கி விளையாட போயிட்டான். ஆனா நான் போமுடியுமா?
“தமில் நை நோனா?” கதம்பமான மொழில எனக்கே புரியாம அவனுக்கு தமிழ் தெரியுமான்னு கேட்டன்.
அவன் அழகா சிரிச்சிகிட்டே புருவத்த தூக்கி “கொச்சம் தெரியும்” என்றான்.
வண்டிய திருப்பிகிட்டு கிளம்பியவன் கொஞ்சம் தள்ளி போய் நிறுத்திட்டு வந்து நான் நக்கி கிட்டு இருந்த கப்ப வாங்கி எடுத்துட்டு போய் இன்னொரு கரண்டி கிரீம் வச்சு கொடுத்து சிரிச்சுட்டு போனான்.
இதுதான் எங்களுக்குள்ள நடந்த முதல் சந்திப்பு.
என்னோட நாலு வருஷ சப்இன்ஸ்பெக்டர் வாழ்க்கைல ஸ்டேஷனுக்கு வந்தவனுங்கள்ளையும்சரி, விசாரிக்க போன இடங்கள்ளையும் சரி, எங்கியாச்சும் பெஸ்டிவெல் டூட்டி பாக்க போன இடத்துலயும் சரி; எத்தனையோ பசங்கள பாத்துருக்கன், பழகிருக்கன், படுத்துருக்கன். ஆனா எல்லாம் அந்த அந்த நிமிஷம் தான்.
ஆனா இவன பாத்ததுமே ஏன்னு தெரிலங்க மனசுக்குள்ள அல அடிச்ச மாதிரி இருந்துது. அதும் எனக்காக அவன் குடுத்த எக்ஸ்ட்ரா ஐஸ் கிரீம் இன்னும் என்னன்னவோ தோன வச்சிது.
மறுநாள் எங்கியோ போய்ட்டு வீட்டுக்கு வண்டில வந்துக்கிட்டு இருந்தேன். தார் ரோடுலாம் தணல் ரோடாவுற மாதிரி வெயில் அடிச்சிகிட்டு இருந்துது பாத்துக்குங்க. தூரத்துல வரும் பொழுதே தெரிஞ்சிட்டு நேத்து பாத்த அதே ஐஸ்கிரீம் வண்டிதான்னு. ஆர்வமா கிட்ட வந்ததும் நிறுத்தினேன்.
அடிச்ச வெயில்ல நெத்தி வேர்வ அவன் கண்ணுல வழிஞ்சி எரிஞ்சிருக்கும் போல, கண்ண தொடச்சி கிட்டே என்ன நிமிந்து பாத்தான்.நேத்து வெளிபடுத்துன அதே சிரிப்பு!. நாபகம் வெச்சிருக்கான்.!!
“என்ன சார் ஐஸ் வேண்மா?”
“ம்ம் குடு”
அதே விசித்திர கரண்டியால ரெண்டு தடவ எடுத்து வச்சிகிட்டே பேச துவங்கினான்.
“என்னது நூத்தம்பதா!!?” என்ன சொல்லுற அநியாயமா இருக்கே?”
இதுக்கு பதில் சொல்லாம சிரிச்சிகிட்டே வண்டிய தள்ளிகிட்டு கெளம்புனவன் சட்டுன்னு நிறுத்தி நேத்தி மாதிரியே இன்னொரு கரண்டி கிரீம் வெச்சுட்டு போனான். அப்ப அங்கேருந்து கெளம்புனவன் அப்புடியேஎன் நெஞ்சிக்குள்ள வந்துட்டான் பாத்துக்குங்க.
எனக்கு மனசுல ஆயிரம் கேள்வி; அதோட அவன மேல இருக்குற பரிதாபமும் சேந்துகிட்டு. கொஞ்ச நேரம் அவன் வண்டிய பாத்துகிட்டே இருந்துட்டு வீட்டுக்கு கெளம்புனன். அதுக்கப்ரம் பச்ச புள்ளைங்க ஐஸ்வண்டிக்கு காத்துகிட்டு இருக்குற மாதிரி அவனுக்காக நான் நெதமும் காத்துகிட்டு இருப்பேன். அந்த மணி சத்தம் தெருவுல கேக்க ஆரம்பிச்சாலே ஓடி வந்து வாசல்ல நின்னுப்பன் அவனும் வருவான், சிரிப்பான், கொடுப்பான், எடுப்பான், போயிடுவான் இப்புடியே ஒரு மாசம் ஒடுணுது.
எங்க ரெண்டுபேருக்குமே தெரியும் எங்களுக்குள்ள எதோ ஒன்னு இருக்குன்னு ஆனா அது வெளிக்காட்டிக்காம இருந்தோம். முன்னாடிலாம் அழுக்கு துணி போட்டு வந்தவன் இப்பலாம் நல்லா போட்டுட்டு வந்தான்
ஒருநாள் “இந்த சேப்பு கலர் சட்டை உனக்கு நல்லாருக்குன்னு” சொன்னேன். அப்பா!!! அவன் மொகத்துல ஒரு வெக்கம் வந்துது பாருங்க அதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
“டேய் அந்த டிவி சவுண்டயாவது கொறச்சி தொலையேண்டா”
“ம்ம் சரி சரி கொறைக்கிறேன்”
அது எங்கம்மாங்க; இப்புடித்தான் ஒருத்தவங்கள்ட்ட செத்த நேரம் பேச முடியாது!! எதாவது ஒரு வேலை சொல்லிகிட்டே இருப்பாங்க.
சரி நீங்க கேளுங்க; ஒருநாள் இப்புடித்தான் வெளில போயிருந்தப்ப நல்லா வெயிலடிச்சிகிட்டு இருந்த வானம் திடீர்னு மூடிகிட்டு மழை பெய்ய ஆரம்பிச்சிட்டு.!! ஒதுங்குறதுக்கு இடமே இல்ல ஆனா ரோட்டு ஓரத்துல கூர கொட்டா ஒன்னு இருந்துது. அதுல ஒதுங்கி நின்னன். அது எதோ பெட்டிகடை போல இருந்துது ஆனா பூட்டி இருந்துது. எதுக்க இருக்குறவங்க மொகம் தெரியாத அளவுக்கு மழ கொட்டி தீத்துச்சு அப்ப.
-- Edited by rajkutty kathalan on Thursday 8th of August 2013 07:18:41 PM
பட்டுன்னு வண்டிய நிறுத்திட்டு “சரி சரி விடு உன்ன பத்தி எனக்கு தெரியும்”ன்னு சொல்லி சமாதான படுத்தி கொண்டு போய் அந்த ஐஸ்பேக்டரி கிட்ட இருந்த சின்ன குடிசைல விட்டுட்டு வந்தன். அங்க இவன மாதிரி நெறைய பசங்களும், ஐஸ்வண்டிகளும் இவனுக்காக காத்துகிட்டு இருந்தனர்.
அப்ப கண்ண தொடச்சிகிட்டே என்ன ஒரு பார்வை பாத்தான் பாருங்க!! அதுக்கு ஆயிரம் மொழி இருந்தாலும் அர்த்தம் சொல்ல முடியாதுங்க.
அதுக்கப்றம் ரெண்டுநாளா அவன் ஐஸ் விக்க வரல. ஆனா நான் மட்டும் சாயந்திரம் போய் பாத்துட்டு வந்தேன். அவன் அதிகமா பேசுல; உதடு வேற வீங்கி இருந்துது. கண்ணாலேயே கதை பேசிட்டு வந்துடுவேன்.
மூணாவது நாள் எங்க ஊருக்கு அடுத்த ஊர்ல இருக்குற கோயில்ல திருவிழா!!. அங்க மாவிளக்கு போட அம்மாவ கூட்டிட்டு போயிருந்தேன் அதுனால அவன பாக்க போவ முடில. ஆனா அன்னிக்கு ராத்திரி அங்க போடுற நாடகத்த பாக்க போயிருந்தன். ஏராளமான கடைகளுக்கு நடுவுல ராமோட கம்பெனி பசங்களும் ஐஸ் வித்துகிட்டு இருந்தனுங்க. உடனே ஆச்சர்யத்துடன் தேடுன என் கண்ணுக்கு விருந்தா அவனும் ஐஸ் வித்துகிட்டு இருந்தான். கிட்ட போன என்ன பாத்ததும் அவன் மொகத்துல அத்தனை பிரகாசம்; அந்த இருட்டை கூட கிழிச்ச மாறி ஒரு பிரகாசம். அவன் என்ட்ட கேட்ட ஒரே கேள்வி
“நீங்க போலீசா?” தான் சிரிச்சிகிட்டே தலையாட்டினேன்அப்புறம் அவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வியாபாரத்த கெடுக்க வேணாம்ன்னு அங்க டூட்டில இருந்த எங்காளுங்க கிட்ட பேச போயிட்டன்.
பத்து மணிக்கு ஆரம்பிச்ச நாடகத்துல “பபூன் டான்ஸ்” ஜோக்குலாம் முடிஞ்சி கதை ஆரம்பிச்சுது; கூட்டமும் கனிசமா கொறஞ்சிது. சரி அவன போய் பாப்போன்னு போனேன். ஒரு மூலையில ஐஸ் வண்டிலாம் நின்னுது. ஆனா யாரையும் காணும். சரின்னு அப்டியே சுத்தி வந்தப்ப
“ம்ம்ஹும். ன்னு தலையாட்டினான்” கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம் அப்ப யாரோ என் பேர சொல்லி கூப்ட்டாங்க திரும்பி பாத்தா அந்த நட்ராஜ்.
கிட்டவந்தவன் மொதல்ல ராம பாத்துட்டு
“ஹோ சாரிப்பா அன்னைக்கு அந்த புள்ள கடைசில மாடில தான் தூங்கி இருந்துருக்கு. தெரியாம உன்ன போட்டு அடிசிட்டோம்”ன்னு சொன்னான்
எனக்கு அப்டியே பத்திகிட்டு வந்துது. ஆனா காட்டிக்காம
“நீ எப்படா வந்த? இவ்ளோ நேரம் காணும்” ன்னு கேட்டேன்
“அதுலாம் அப்புறம் பேசிக்கலாம் வா..... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு கைய புடிச்சி அங்கேருந்து இழுத்துட்டு போனான். கூட்டதுல ராமோட முகம் கொஞ்சம் கொஞ்சமா கண்ணுலேருந்து விலகுணுது. அவனோட கண்ணுல ஏமற்றம் அப்பட்டமா தெரிஞ்சிது.
சொன்னா நம்புவீங்களான்னு தெரில அதுக்கப்றம் அவன நான் பாக்கவே இல்ல!! இன்னையோட பதினஞ்சி நாள் ஆகுது. தேடாத இடம் இல்ல, ஏறாத பஸ் இல்ல. வடநாட்டு கார பசங்க தங்கிருக்குற இடத்தல்லாம் தேடி தேடி போய் விசாரிச்சேன் போர்வை விக்கிறவன்லேருந்து கொசுவலை விக்கிறவன் வரைக்கும் கெடச்சானுங்க ஆனா என் ராம் மட்டும் கெடைக்கில.
பஞ்சிமுட்டாய் விக்கிறவன், கல்லை விக்கிறவன், குல்பி விக்கிரவன்னு தெருவுல மணி சத்தம் கேட்டா ஓடி ஓடி பக்குறதுதான் என் வேலை நெதமும்.
ஆனா இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரிஞ்சிட்டு இதோ என் கையில இருக்குற நியூஸ் பேப்பர பாருங்க.
“உத்தரகாண்ட் வெள்ளத்தில் குடும்பத்தை தொலைத்து புகைப்படத்தை வைத்து தேடும் வாலிபர்” ன்னு போட்டுருக்குற நியூஸ்க்கு மேல கையில அவனோட குடும்ப போட்டோவ வெச்சிகிட்டு யார்ட்டையோ காட்டி விசரிக்கிறான்ல இதான் என்னோட ராம். நான் எடுத்து குடுத்த சேப்பு சட்டைதான் போட்டுருக்கான். கையில இதயம் போட்டு அதுக்குள்ள “தமிழ்” ன்னு தெளிவா பச்சை குத்திருக்கான். அதுகூட தெரியுது பாருங்க.
“டேய் “தமிழு” இன்னும் அந்த பேப்பர வெச்சுகிட்டு என்னடா பண்ணுற? பத்து மணிக்கு வேன் வந்துடும். போய் சீக்கிரம் ஷேவிங் பண்ணிக்கிட்டு கெளம்பு. உனக்கு பொண்ணு பாக்க போறோம் நாபகம் இருக்கா இல்லையா?”
“பாத்திங்களா எங்கம்மா கொல்லைல இருந்துகிட்டு என்ன சொல்லுறாங்கன்னு?” இப்ப சொல்லுங்க என் வேதனை இங்க யாருக்கு புரியும்?.”
உங்களுக்காவது புரியிதா?
- நிறைந்தது
-- Edited by rajkutty kathalan on Thursday 8th of August 2013 07:40:49 PM
எங்கேருந்தோ வேகமா ஐஸ்கிரீம் வண்டிய தள்ளிகிட்டு வந்து நிறுத்திட்டு அதுலருந்து எதோ ஒரு கவர் மாதிரி எடுத்துகிட்டு தொப்பறையா நனைச்சு போயி கொட்டாயில வந்து நொழஞ்சான். அவனுக்கு என்ன பாத்தது அதிர்ச்சி கலந்த ஆசை அது அவன் கண்ணுலேயே தெரிஞ்சிது. எனக்கோ என்ன சொல்லுறதுன்னே தெரில!!. என் கர்ச்சிப்ப எடுத்து குடுத்து தலைய தொவட்ட சொன்னேன். கையில இருந்த கவர என்ட குடுத்துட்டு தொவட்டுனான்.
நான் அந்த கவர பிரிச்சு பாத்தேன். அது ஒரு பழைய போட்டோ. இவன் பக்கத்துல அப்புடியே இவன மாதிரி ஒரு பையன் ஒரு பொண்ணு
கண்டிப்பா தம்பி தங்கச்சியாத்தான் இருக்கணும். மூணு பேரும் தரைல உக்காந்திருந்தாங்க. பின்னாடி சேர்ல முக்காடு போட்ட ஒரு அம்மாவும், தலப்பா கட்டுன ஆள் ஒருத்தரும் இருந்தாங்க. அவங்க யாரா இருக்கும் ன்னு உங்களுக்கு சொல்ல வேண்டாம்ன்னு நெனைக்கிறேன்.
அத பாத்துட்டு அவன பாத்தன். அப்ப என்ன வெச்ச கண்ணு வாங்காம பாத்தவன் பட்டுன்னு என்னோட பார்வையால சட்டுன்னு குனிஞ்சிகிட்டு தடுமாறிய படி
“மேர். மெர்ர.... மேரா. பரிவார்”ன்னு சொல்லி சமாளிச்சான்.
“வெறும் வாயயே மெல்லுற எனக்கு அவல் கெடச்சா சும்மாவா இருப்பேன்”
ஈரத்தால ஊறி போயிருந்த அவன் கைய புடிச்சேன். ஒன்னும் சொல்லாம தலைய குனிஞ்சிகிட்டே என் கைய இறுக்கி புடிச்சான். பட்டுன்னு இழுத்து கட்டி புடிச்சி அந்த குளிருக்கு இதமா அவன் உதட்டுல இருந்து வர வென்னீர அப்புடியே எனக்கு உள்ள அனுப்புனன். கொஞ்ச நேரம் உலகத்த மறந்துட்டு நின்னப்ப ஒலகம்ன்னு ஒன்னு இருக்குன்னு நாபக படுத்துற மாதிரி இன்னொரு வண்டி அங்க வந்துது. சடார்ன்னு விலகுனோம்; நல்ல வேலை அவனுங்க பாக்குல!!. மழை விட்டுச்சு. ஆனா தூறல் விடுல. எங்க மனசுலயும் தான். ஆனா வேற வழி இல்லாம கெளம்பிடோம்.
அன்னைக்கு சாயந்திரம் ஒருவேளையா செம்பைக்கு வந்தன். கடதெருல நின்னுகிட்டு இருந்தப்போ போலிஸ் ட்ரெய்னிங் ல என்னோட பிட்டா இருந்த நடராஜ பாத்தேன் மேல முக்குட்டுல. பைக்க நிறுத்திட்டு அங்க நின்ன ட்ராபிக் போலீஸ்கிட்ட பேசிகிட்டு இருந்தான் யூனிபார்ம் போட்டுருந்தான். இவன் ஈரோடுலல்ல இருந்தான் ன்னு சந்தேகத்தோட நான் கிட்ட போய்
“ஹெய் மச்சான் என்னடா இங்க நிக்கிற?” என்றேன்
“ஏய்ய் பார்ரா...... உன் நம்பர தொலசிட்டுதாண்டா கஷ்ட்ட படுறேன். ஒருசின்ன பிரச்சனயில மாட்டிடண்டா அதன் இங்க டிரான்ஸ்பர் பண்ணிடாங்க. ஜாயின்ட் பண்ணி ஒரு வாரம் ஆகுதுடா உங்க சரகத்துக்கு இப்ப நாந்தான் “சப்.”
“அடேங்கப்பா”
“சரி! சரி!! வா.... ஸ்டேஷனுக்கு போய் பேசிக்கலாம்” என்றவனுடன் வண்டிய எடுத்துகிட்டு நானும் போனேன். வண்டிய நிறுத்திட்டு உள்ள போவும்போதே
“என்ன? கோவிந்தன்னே.... உண்மைய சொன்னானா? இல்லையா?”ன்னு கேட்டுகிட்டே போய் அவன் சேர்ல உக்காந்தான். நானும் போயி உக்காந்துகிட்டு, “என்ன கேசுடா ?” ன்னு கேட்டேன்.
“அது ஒரு கொழந்தை கடத்தல் மாமா, ஐஸ் விக்கிற மாதிரி போயி கொழந்தய தூக்கி இருப்பான்னு நெனைக்கிறேன், உங்க ஊர் பக்கம் தாண்டா. உள்ள செல்லுல இருக்கான் பாரு. எவ்ளோ அடி அடிச்சாச்சு!! வாயவே தொறக்க மாட்டுறான்!!!.
எனக்கு கை உதற ஆரம்பிச்சிட்டு. நாங்க உக்காந்து இருக்குற இடத்துக்கு நேரா இருந்த செல்லு உள்ள வெறும் ஜட்டியோட, வாயெல்லாம் ரத்தத்தோட, கண்ணெல்லாம் தண்ணியோட, முகமெல்லாம் என்னால ஏற்பட்ட வெக்கம் கலந்த கலவரத்தோட என்ன பாத்தான் என் ராம்.
எனக்கு கண்ணுல தண்ணி முட்டிகிட்டு வந்துது இருந்தாலும் காட்டிக்காம
“ஹே நட்ராஜ் இவன் எனக்கு தெரிஞ்சவண்டா!! இவன் அதுலாம் பண்ணிருக்க மாட்டண்டா” யாருடா சொன்னா? இவன்தான்புள்ளைய கடத்துனான்னு?”
“மதியம் மழைக்கு முன்னாடி அந்த தெருவுல ஒரு புள்ளைகிட்ட ஐஸ் வித்துருக்கான்டா. அப்ப அந்த புள்ளைய தூக்கி செத்த நேரம் வெச்சிருந்தத பாத்ததா அந்த தெரு மக்கள்லாம் சொல்லுறாங்க. அதுக்கப்புறம் அந்த புள்ளைய காணுமாம்; இவனையும் காணுமாம். புள்ளைய தேடி பாத்துட்டு வந்து கம்ளைன்ட் குடுத்தாங்க. இவந்தான்னு சந்தேக பட்டாங்க அதான் இவன தேடி கண்டு புடிச்சிட்டு வந்து உள்ள போட்டுருக்கோம், இவனல்லாம் நம்ப முடியாதுடா இப்பலாம் வடக்கேருந்து வரவனுங்கதான பாதி தப்பு பண்ணுறானுங்க, காசுக்காக செஞ்சாலும் செஞ்சிருப்பான்.”
எனக்கு ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது ஆனா காட்டிக்காம
“ஏய் இவன எனக்கு நல்லா தெரியும்டா மதியம் கூட இவன பாத்தண்டா நல்லவன்டா கண்டிப்பா இவன் செஞ்சிருக்க மாட்டான்” இவனுக்கு நான் கேரண்டி மொதல்ல வெளில விடுடா பாவம்டா”
அவன் போட்டுருந்த அந்த சேப்பு சட்டை நாரா கிழிஞ்சிருந்துது.அத புடுங்கி தூக்கி எறிஞ்சிட்டு கடதெருக்கு கூட்டி வந்து டாக்ட்டர்ட காட்டிட்டு அவனுக்கு அதே சேப்பு கலர்ல ஒரு சட்டையும், சாப்பாடு வாங்கி கொடுத்தேன். அதுவரைக்கும் அவன் வாயவே தொறக்குல கண்ணுல மட்டும் தண்ணி வழிஞ்சி கிட்டே இருந்துது. நானும் அவன்ட்ட ஏதும் பேசுல. எந்த தைரியத்துல இதுலாம் செஞ்சேன்னு எனக்கு தெரியாது!! ஆனா எனக்கு தெரியும் இவன் அத செஞ்சிருக்க மாட்டான்.
அந்த சட்டைய போட்டுக்கிட்டு எண்ட இருந்த சில்லற காச வாங்கிட்டு போய் அங்கருந்த ஒருபா காயின் போன்ல எதோ ஒரு நம்பருக்கு ட்ரை பண்ணான்.
லைன் கெடச்சிருக்காதுன்னு நெனைக்கிறேன். திரும்ப வந்தவன்ட்ட எங்க தங்கிருக்கன்னு கேட்டு கிட்டு வண்டில ஏத்திகிட்டு கெளம்புனேன். கடைதெரு தாண்டுற வரைக்கும் அமைதியா இருந்தவன் பட்டுன்னு பின்னடிலேருந்து என்ன கட்டி புடிச்சு கிட்டு ஓ ன்னு கத்தி கதறி அழுதான்.
“இவனுக்கு இந்த உரிமைய யார் குடுத்தா? என் மேல எவ்ளோ நம்பிக்க இருந்தா இப்புடி கட்டி புடிச்சி அழுவான் சொல்லுங்க?”
என்னால முடியல ராஜ்.. ரொம்ப சோகமான முடிவு.. நெஜ கதை மாறி இருக்கு.. ரொம்ப உணர்ச்சிவச பட்டுட்டேன்.. கதையோட தாக்கம் அப்படி.. ஒரு வாசகன இப்படி feel பண்ண வைக்கறதுதான், எழுத்தாளரோட வெற்றி.. நீங்க ஜெய்ச்சிடிங்க.. வித்தியாசமான படைப்பு.. இது பாராட்டபட வேண்டிய விஷயம்.. வார்த்தையே இல்ல.. அற்புதம் பண்ணிடிங்க.. superb..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
ராஜின் அடுத்தகட்ட பரிமாணம் "சிறுகதை" வடிவில்....
பாராட்டத்தக்க முயற்சி.....
நேட்டிவிட்டி ரொம்ப அழகா வந்திருக்கு.... க்ளைமாக்ஸ் எதிர்பாராதது, இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்......
வடநாட்டு இளைஞர்களை பற்றிய தவறான புரிதல்களுக்கு சரியான சவுக்கடி.....
சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை" நினைவுக்கு வருது....... நல்ல முயற்சி...... வாழ்த்துகள்....
அருமையான கரு.. பல சமூகப் பிரச்சினைகளை ஒரே கதைல கையாண்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்...
பிள்ளையைக் காணோம்னதும் வடநாடு நாயகன் மேல சந்தேகப்பட்டது யதார்த்தமான பதிவு.. ஊருக்குள்ள நடக்குறத அப்படியே பதிவு பண்ணி இருக்கீங்க.. ஆனா, வீட்டு மாடியில கூட தேடாமையா போலீஸ்ல புகார் கொடுப்பாங்க?
இதயம், உள்ள தமிழ்.. ரொம்ப அற்புதம்.. நெஞ்சைத் தொட்டுட்டீங்க.. நீங்க தமிழ ரொம்பவும் நேசிக்கிறது நல்லா தெரியுது..
ஊருக்குள்ள ஒருத்தர் 'இயல்புவாதக் கதை' எங்கேன்னு மண்டை முடியப் பிச்சிக்கிட்டு அலையறார்.. அவர் சொன்னார்னு நானும் சில கதைகளை வாசிச்சேன்... உங்க கதைலயும் கொஞ்சம் தேய்வழக்குகள் (cliche) தவிர்த்து, கொஞ்சம் வர்ணனைகளையும் விவரிப்பையும் கவனமா பயன்படுத்தினா, நான் படித்த அந்தக் கதைகளின் தரத்துக்கு உங்களாலும் ஒரு இயல்பியல் படைப்பை உருவாக்க முடியும். முயற்சி பண்ணி பாருங்களேன்...
Wonderfull short story..! And can feel the worry of 'thamizh's character..! Finally you give the touch of reality with the disaster..! So nice..! Keep rocking..!
இந்த கதைய படுச்சி முடிக்கும் போது என் மியூசிக் ப்ளேயர் ஆனந்த தாண்டவம் படத்துல இருந்து 'பூவினை திறந்து கொண்டு ' -ஐ பாடிக் கொண்டிருந்தது.
"விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்,
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் "
இந்த வரிகளும் கதையின் கடைசி வரிகளும் சங்கமித்த போது ஏற்பட்ட உணர்வை சொல்ல முடியவில்லை.
(மும்பை போலிஸ் படத்தில் போலிசாய் நடித்த ப்ரித்வியும் அவரது காதலராக நடித்த நிஹல் பிள்ளையும் (Nihal Pillai) இக்கதையின் கதாப் பாத்திரங்களாக எம்மனதில் தோன்றினர்.)