இன்று சன் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற தீர்வைத் தேடி என்ற நிகழ்ச்சி தமிழகம் இழந்த பகுதிகளை மீட்பது தொடர்பாக அமைந்தது. அதில் நானும் கலந்து கொண்டு என்னுடைய கருத்துக்களை முன்வைத்தேன். என்னோடு பேசிய முனைவர் அருகோ அவர்கள் கூறிய கருத்து தமிழர்கள் அனைவரும் சிந்திக்க வைத்தது.
ஆந்திராவில் தமிழர்கள் செரிவாக வாழும் 32000 சதுர கி.மி. பரப்பளவு கொண்ட சித்தூர் நெல்லூர் பகுதிகளில் இது வரை தமிழர்கள் சட்டமன்ற உறுப்பினராக வர முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் எத்தனையோ தெலுங்கர்கள் சட்டமன்ற உறுப்பினராக வர முடிகிறது. இதை நாம் கருத்தில் கொண்டால் தமிழ்நாட்டில் தமிழரையே சட்டமன்ற வேட்பாளர்களாக தேர்வு செய்வோம்.
இங்கு தமிழர் நாட்டில் தெலுங்கர்களும் மலையாளிகளும் வேரூன்றி வரும் நிலையில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் , காவல்துறை அதிகாரங்கள் மலையாளிகள் கையில் உள்ளது . அதனால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவும், தங்கள் இனத்திற்கு ஆதரவாக செயல்படவும் செய்கிறார்கள் மலையாளிகள். தெலுங்கர்களை போல், மலையாளிகளை போல், கன்னடர்களை போல் தமிழர்கள் நாமும் இன உணர்வோடு ஒன்றுபட்டால் அன்றி தமிழர்களுக்கு உய்வு இல்லை.
வெளி மாநிலங்களிலோ,வெளி நாட்டிலோ தமிழர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் நன்றாக பழகுங்கள்,தமிழர்கள் தமிழர்களுக்கு உதவத் தயங்காதிர்கள்.
மலையாளிகளை கவனித்திருக்கிறீர்களா,ஒரு இடத்தில் பேக்கரி வைத்தால்,கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் சொந்த இன மக்களை அங்கு வேலைக்கு அமர்த்தியும்,அவர்களுக்கு உதவியும் உயர்ந்து விடுகிறார்கள்.
தமிழர்களோ,காழ்புணர்ச்சி கொண்டு,நம் இன மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமலும்,நம் இன மக்களைத் தூற்றுவதிலுமே கண்ணாய் இருக்கிறோம்.
தமிழர்கள் தமிழர்களுக்கு உதவ வேண்டும்,தமிழர்களுடன் பேசும் போது தமிழில் பேச வேண்டும்.
சாதி மத பேதம் கடந்து இனத்தால் ஒன்றுபடவேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.
நம் இனம் வாழவும்,நம் மொழி சிறக்கவும் இன உணர்வு அவசியம்.
தமிழராக இணைவோம்,தமிழராக எழுவோம்........
//அனைவரும் இப்பதிவைப் படிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கு பதியப் படுகிறது//