உங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயர்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.
ஆனால் இத்தகைய கதைகளின் இலக்கியமதிப்பு வேறுசில அழகியல்கூறுகளாலும் தீர்மானிக்கபப்டும். இவை சற்று மாறுபட்ட உலகைச்சார்ந்தவை என்பதனாலேயே இயல்புவாத அழகியலே இவற்றுக்குச் சரிப்படும். அதாவது மிக்க்க்கறாராக, எது நிகழ்கிறதோ அதைமட்டுமே சொல்லும் முறை. குறைவாகச் சொல்லும் முறை.
நேர் எதிரானது வணிக எழுத்தின் உணர்ச்சிகர நடை அல்லது தேய்வழக்குகள் மிக்க நடை. அதை கதைகளில் தவிர்ப்பது கதைகளின் சமநிலையைப்பேண உதவும். நல்ல உரைநடையில் தேய்வழக்குகள் இல்லாமல் எழுதும்போதே இவ்வகை எழுத்தின் இலக்கியத்தரம் உறுதியாகிறது. தொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்
வாழ்த்துகள்
ஜெ
(நண்பர்களே, இந்த "ஜெ" யார் தெரிகிறதா?... தமிழ் இலக்கிய உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்...... நம் எழுத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தூரமில்லை என்று என்னை இன்னும் அதிகமாக நம்பவைத்த இந்த மின்னஞ்சலை எனக்கு நேற்று அவர் அனுப்பி இருக்கிறார்.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.... நான் கத்துக்க வேண்டிய விஷயம் இன்னும் எவ்வளவோ இருக்கு.... இனி எழுத்தாளர் அவர்கள் சொன்னபடி "இயல்புவாத அழகியல்" படைப்புகளை தேடி படிக்கணும்.... )
ரொம்ப சந்தோசமாக இருக்கு விஜய்....சரியான நேரத்தில் வந்த அங்கிகாரம்னு நினைக்கிறன் .... "இயல்புவாத அழகியல்" படைப்புகளை தேடி படிக்கணும்.... வெகு ஆவலாக இருக்கு சீக்கிரம் படிங்க...உங்கள் முலம்தான் அதையும் தெரிஞ்சக்கணும்....உங்கள் சேவைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ரோத்திஸ்....
நன்றி அண்ணாச்சி.... உண்மைதான்.... இதற்கு முன்பு கூட ஒருபால் ஈர்ப்பு நபர்கள் பற்றி பாசிட்டிவாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் ஜெ.... அநேகமாக எழுத்துலகத்து மேதைகள் அதிகம் வாய் திறக்காத விஷயத்தில், துணிச்சலுடன் எழுதியவர்... இப்போ நம்மையும் ஊக்குவிப்பது ரொம்ப சந்தோஷப்பட வேண்டிய விஷயம்....
@கதிர்....
நன்றி நண்பா..... வாய்ப்பு கிடைத்தால் எதையும் செய்யலாம் நண்பா....
@நிஷாந்த்.....
அவர் இங்கு வரவில்லை நண்பா.... பேஸ்புக்கில் ஒரு க்ரூப் மூலமாக, இணைப்பில் கதையை படித்துள்ளார்.....
நீவிர் மேலும் மேலும் சிறப்பாய் எழுதி, ஓரின காதல் குறித்த ஒரு நல்ல கண்ணோட்டத்தை இச்சமூகத்தில் விதைப்பீராக...!
உமது எழுத்துக்கள் தேய்வழக்குகளாக மாறி வருவதை நான் உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் சொன்னாற் போன்ற யதார்த்த நடை உனக்கு மிக இயல்பாக வருகிறது. உண்மையில் இலக்கியத்தரம் மிக்க பல சிறுகதைகளை நீ எழுதி இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
தேய்வழக்கு வான்மீகி ராமாயணம் போன்றது. சொல்லவந்ததை அப்படியே “ரா”வாக சொல்வது.
இரண்டில் எது சிறந்தது என்பதை நாம் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.
மணிரத்தினம் படமும், ஷங்கர் படமும் வேறு வேறு வழியில் எடுக்கப்பட்டாலும், பார்க்க சுவாரஸியமாகவே இருக்கும். அது போலத்தான்.
ஜெயமோகனின் கருத்துகளில் எனக்கு எவ்விதமான எதிர்க்கருத்தும் இல்லை. இருந்தாலும், உணர்ச்சிமயமான, கவிதையும் கற்பனையும் கலந்த மிகை நடையையே அடியேன் விரும்புகிறேன். எழுதியும் வந்துள்ளேன். அவை கல்கியின் தாக்கம். சுஜாதாவின் தாக்கம். பழங்கால தமிழ் இலக்கியங்களின் தாக்கம்.
விஜய் தம்பி, நீயும் இரெண்டு நடைகளிலுமே சிறந்து விளங்குகிறாய். கற்பனை கலந்த கவித்துவமான நடையை நாம் இழக்க கூடாது. அவ்வாறு இழந்தால் மொழிவளத்தை இழந்து விடுவோம். பல சொற்களுக்கு வேலையின்றி போய்விடும்.
ஆக, நமக்கு யதார்த்த நடையும் வேண்டும். சுவாரஸிய நடையும் வேண்டும்.
இது எனது தாழ்மையான கருத்து. வேறுபாடு இருப்பின் பொறுத்தருள்க...!
சில நாட்களாகத்தான் உங்கள் கதைகளை படித்துவருகின்றேன் . இதைப்போன்ற எழுத்துக்கள் வெளியுலகத்திற்கு தெரியாமல் போகின்றதே என்று எண்ணியது உண்டு ."இயல்புவாத கதைகள் என்பது, நடப்பதை நடக்கும்படியே சொல்வது...." - இதைப்போன்ற இயல்புவாத கதைகளை உங்களைப்போல் சிலரால்தான் முடியும் . ஆவலுடன் காத்திருக்கின்றோம் வாழ்த்துக்கள் .
@ராதா ராஜேஷ்....
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி அண்ணா... இப்போ எழுதுற எங்களுக்கு முன்னோடி உங்களை போன்றவர்கள்தான்... நீங்கள் சொல்வது மிகவும் சரியே.....
ஒரு விஷயம் எனக்கு புரியல....
சுஜாதாவின் தீவிர வாசகன் நான்.... நீங்கள் சொல்வதை போல அவர் கட்சிகளில் கற்பனை, கவிதை நயம் இருந்து நான் பார்த்ததில்லையே?.....
நான் இரண்டு விதமாகவும் எழுதுவதாக சொன்னிங்க.... உதாரணமாக எதாவது கதையை இரண்டு விதத்துக்கும் ஒன்னொன்னு சொன்னிங்கன்னா எனக்கு புரிஞ்சுக்க எளிதா இருக்கும்.... அதில் எந்த நடை எனக்கு நல்லா வருது? எதை நான் தொடரலாம்?னும் உங்கள் கருத்துக்களை சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்....
@சிநேகிதன்....
ரொம்ப நன்றி நண்பா.... இயல்புவாதம் என்றால் எதை சொல்றீங்க?... கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லா இருக்கும்... ஜெ அவர்கள் நான் இயல்புவாத அழகியலில் எழுதுவதில்லை என்ற பொருள்படும்படி அல்லவா சொல்கிறார்?
‘உள்ளது உள்ளபடி’ - என்பதைத்தான் இயல்புவாதம் என்று கூறுவார்கள், நீங்கள் "விரைவில் அப்படி ஒரு கதையுடன் நிச்சயம் சந்திக்கிறேன்...." என்று சொன்னதிற்காக நான் கூறினேன் "உங்களைப்போல் சிலரால்தான் முடியும் . ஆவலுடன் காத்திருக்கின்றோம் வாழ்த்துக்கள்" என்று
@சிநேகிதன்....
புரியுது நண்பா.... ஆனால், ஜெ அவர்கள் குறிப்பிட்ட ஒரு கதையை நான் படித்தேன்.... அதில் இயல்புவாதம் என்று எதை சொல்கிறார்? என்று எனக்கு புரியவில்லை... அதனால்தான் அது உங்களுக்கு விளக்கமாக தெரியுமா? என்று கேட்டேன்....