Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காக இப்பதிவு அர்ப்பணிக்கப்படுகிறது.


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காக இப்பதிவு அர்ப்பணிக்கப்படுகிறது.
Permalink   
 


 


வணக்கம் நண்பர்களே..!

இன்றைய காலகட்டத்தில்

தன்னம்பிக்கை குறைவால் இன்றும் பல இளைஞர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்காமலே இருக்கின்றனர். தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிப்பெறுவது எப்படி எனப்பார்ப்போம். 

தன்னம்பிக்கை என்றால் என்ன?(What is confidence?) 

தன்னம்பிக்கை என்பது தான் நம்புவது.. தன்னால் ஒரு செயலைச் செய்து அதில் வெற்றி பெற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே(Deep faith) தன்னம்பிக்கை. குறிப்பாக சொல்லப்போனால் ஒரு செயலை செய்ய, தாம் எண்ணிய குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிப் பெறுவதே தன்னம்பிக்கை. 
Succeed in the rapidly
John Bardeen

கால அளவு (Time scale)

குறிக்கோள்கள், லட்சியங்கள் அவரவர் எண்ணங்களுக்கு தக்க மாறும். இதில் கால அளவு முக்கியமானது. ஒரு செயலைச் செய்ய எத்தனை நாட்களாகும், எத்தனை வருடங்களாகும், என்பதைத் தீர்மானித்து அந்த கால அளவிற்கு அதைச் செய்ய முனைவது வெற்றிப் பெற சிறந்ததொரு வழியாகும்.

ஒரு தன்னம்பிக்கை கதை

அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மாமேதை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 

குடும்பத்துடன் விழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கபட்டது. தன்னுடைய மகன்கள் இருவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். படித்துக்கொண்டிருப்பவர்களைதொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை. அதனால் மூன்றாவது மகனை மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்து சென்றார்.

விழாவிற்கு தன்னுடைய ஒரு மகனை மட்டும் அழைத்து வந்ததால், "குடும்பத்துடன் வரவில்லையா?" என சுவீடன் நாட்டு மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாக கடிந்துகொண்டார்.

"அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் அவர்களை அழைத்துவருகிறேன். இப்போது அவர்கள் படித்துக்கொண்டிருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்துவரவில்லை" என்றார் ஜான்பார்டீன்.

மன்னருக்கோ ஆச்சர்யம்.. ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.

1972 ம் வருடம். மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில் கலந்துகொண்டார்.. நோபல் பரிசு வழங்கப்பட்டது.. யாருக்கு? நம் ஜான்பார்டன் விஞ்ஞானிக்குத்தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார். எதற்கு? மின்சாரக் கடத்திகளைப் பற்றிய உண்மைகளை இவர் கண்டுப்பிடித்திருந்தார். விழாவில் மன்னர் திக்குமுக்காடிப் போனார்.

சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் பதினைந்து வருடங்கள். எப்படி இது சாத்தியமாகியது..? தளராத தன்னம்பிக்கை. மன உறுதி.. எடுத்துக்கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதி..இந்த மக்களுக்கு தன்னால் ஏதேனும் நன்மையை செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற தனியாத சமூக நோக்கம்.. வெற்றிப்பெற வேண்டும் என்ற வேட்கை.. வெறி.. மற்றவர்களைப் பாதிக்காதவாறு நடந்துகொண்ட விதம்.. இவற்றால் தான் இவரால் சாதிக்க முடிந்து. நோபல் பரிசு பெற முடிந்தது.. ஒரு முறையல்ல.. இரண்டுமுறை..

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தான் நினைத்ததை சாதிக்கவே விரும்புகிறான். அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிப் பெறுகிறார்கள். மற்றவர்கள் பின்தங்கி விடுகிறார்கள். காரணம் என்ன? தன்னம்பிக்கை இன்மை(Lack of confidence). ஒரு சிறு இடைஞ்சல், இடையூறு ஏற்பட்டாலும் மனதால் இவர்கள் சோர்ந்துவிடுகிறார்கள். தோல்வி இவர்களை பாதித்து விடுகிறது. இனி ஏதும் வழியில்லை.. இனிமேல் முயற்சித்தாலும் நமக்கு வெற்றிக் கிடைக்காது என்று எண்ணி விடுகிறார்கள். அந்த எண்ணமே நாளாக நாளாக இவர்கள் அடி மனதில் பதிந்துவிடுகிறது. 

எதிர்மறை எண்ணங்களின் தாக்கம்(The impact of negative thoughts)

இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் இவர்கள் அளவுக்கு அதிகமாக தாக்கி, ஒரு வைரஸ், பாக்டீரியாப்(Viral, bacterial) போல காலமுழுவதும் இவர்களுடனேயே தங்கி விடுகிறது. அதனால் இவர்கள் தன்னம்பிக்கை இழந்த நோயாளிகளாகவே காலம் முழுக்கவும் இருந்துவிடுகிறார்கள். 

மருந்து(Medicine)

இந்த நோய்க்கு மருந்து இல்லையா? தன்னம்பிக்கையின்மை நோய்க்கு நிச்சயம் மருந்து இருக்கிறது. உயிர்க்கொல்லி நோய்(Aids)களுக்கே மருந்து இருக்கும்போது, சாதாரண இந்நோய்க்கு மருந்து கிடைக்காதா என்ன? இதற்கும் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார். இவரைப்பற்றி விரைவில் பதிவிடுகிறேன். தற்போதைக்கு கைவைத்தியமாக(Hands on treatment) நம்மிடமே இந்த நோய்க்கு மருந்து உள்ளது. இவ்வாறு தோல்வியால் துவளும்போது ஏற்படும் எண்ணங்களை விரட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுதல்:(Virattutal negative thoughts:) 

மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு விரட்டுவது. முதலில் தோல்வி கண்ட மனம் துவளவே செய்கிறது. ஒரு நல்ல வெற்றியாளர் நிச்சயம் பல தோல்விகளைச் சந்தித்து இருப்பார். அதன் தாக்கத்தால்தான் மீண்டும் மீண்டும் முயற்சி(Try again) செய்து வெற்றிப் பெற்றிருப்பார். எனவே தோல்வி என்பது யாருக்கும் நிகழக்கூடியதுதான். தோல்வியைச் சந்திக்காத எவருமே இல்லை என்பதை மனதில் நிறுத்த வேண்டும். நம்மைவிட பின்தங்கியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்று எண்ணித் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும்.

உடலில் குறைபாடுள்ளவர்கள் கூட இன்று தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றியை ருசிக்கிறார்கள். அவ்வாறிருக்க முழு உடல் தகுதியுடன் இருக்கும் உன்னால் வெற்றி பெற முடியாதா என்ன? பேருந்து நிலையத்தில், பெரிய பெரிய கடைகளில், இதுபோன்ற தன்னம்பிக்கையாளர்களை நான் சந்தித்திருக்கிறோம். கண்ணொளி குறைபாடுள்ளவர்கள் செய்யும் வியாபாரத்தைப் பார்த்திருக்கிறேன். இத்தகையவர்களை கண்டு, அவர்களுடன் பேசி, அவர்களின் அனுபவங்களை அறிந்துகொண்டிருக்கிறேன். எத்தனையோ இடர்பாடுகளைச் சந்தித்தாலும் தினம், தினம் இவர்கள் தன்னம்பிக்கை குறையாமல் மீண்டும் மீண்டும் அவர்களின் வியாபாரத்தை கவனிக்க கிளம்பிவிடுகிறார்கள். 

தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடு:(Of self expression:)

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இப்படிதான் இருப்பார்கள். சோம்பேறியாக, மற்றவர்களின் வெற்றியை கண்டு வெதும்புபவராக, தொடங்கும் முயற்சியின் மீது நம்பிக்கை இன்மை. தோற்றுவிடுவோமோ என்ற பயம்(Fear of failure Fear), உடலைப் பற்றி கவலைப்படுதல்..சுற்றி இருப்பவர்களுடன் கலகலப்பாக பேசிப் பழகாமல் இருத்தல். 

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல்:(Improve positive feelings:) 

தோல்வியால் துவண்டாலும் அடுத்த முறை என்னால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இதோ அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறேன். முன்னை விட இன்னும் கூடுதல் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, அனுபவங்களையும் சேர்த்துக்கொண்டு நிச்சயம் வெற்றிப் பெற்றே தீருவேன் என்று உறுதி(Determined) எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மைவிட உடல் உறுப்புகளில் குறைபாடுகள் உள்ளவர்களே இன்று இமாலய சாதனைகளை, உலகளாவிய சாதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் வெற்றிப்பெற, சாதிக்க உடல் குறைபாடுகள் ஒரு காரணமல்ல. இதற்கு முன்பே நமது தங்கம்பழனி வலைத்தளத்தில் வெளியான "வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய சிறுவன்" என்ற இப்பதிவைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு தன்னம்பிக்கைப் பிறக்கும். 

எண்ணங்களை நிறைவேற்றல்(Realization of ideas)

எடுத்த முடிவுகளை உடனே செயல்படுத்த ஆரம்பித்துவிட வேண்டும். நீங்கள் ஓட்டப் பந்தய வீரர்(Athlete) என்றால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலையில் மாலையில் என நன்றாக தேர்ந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் உங்கள் பயிற்சிகளை அனுதினமும் மேற்கொள்ள வேண்டும். கடினமான உழைப்புக்கு என்றுமே தோல்வி(There is always not a defeat for hard work ) கிடையாது.. இவ்வாறு நீங்கள் விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான முயற்சி, பயிற்சி மற்றும் செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை. இவைகளை தொடர்ச்சியாக பின்பற்றும்போது நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றிப்பெறுவது திண்ணம். நீங்கள் நினைப்பது எதுவாக இருப்பினும் உங்களை வெற்றி தேடிவரும். 





info : http://www.techthangam.com/


__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காக இப்பதிவு அர்ப்பணிக்கப்படுகிறது.
Permalink   
 


எதிர்மறை எண்ணங்களை விரட்டுதல்:(Virattutal negative thoughts:) ....இது நன்றாக வேலை செய்யும்... நானே இதை அனுபவித்து வெற்றியும் பெற்று இருக்கிறேன்...நல்ல பதிவு....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

wow super anaa thanks for posting this

__________________

 

 I-Feel.jpg

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard