Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள் - தொடர்வதற்கு முன்னாள் சில விளக்கங்கள்.


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள் - தொடர்வதற்கு முன்னாள் சில விளக்கங்கள்.
Permalink   
 


பாராட்டி வரும் அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

அதே சமயம் நண்பர் ராஜ்குட்டி காதலன் அவர்கள் ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.  நண்பர் நிஷாந்த் அவர்களும் அதனை வழி மொழிந்து இருக்கிறார்.

"உடல் பலம் வந்த பின் சிறுவர்களே வேலைக்கு சென்று குடும்பத்தை தாங்கும் இந்த காலத்தில்

தாய் ஒரு பாலியல் தொழிலாளி என்று தெரிந்தும் அவருடைய உழைப்பிலேயே படித்தது வாழ்ந்தது என்பது எல்லாம் கதிரவனுக்கு அழகா?

எதோ ஒரு வேலைக்கு சென்று கொண்டு அரை வயிறு கஞ்சி யாவது ஊற்றி தாயை தாயாக ஏன் அவன் வைக்க வில்லை?" - என்றெல்லாம் கேள்விக்கணைகளை அடுக்கி இருக்கிறார் நண்பர்.

இந்த சந்தேகம் படிக்கும் மற்றவர்கள் மனதிலும் இருக்கும்.

சமீபத்தில் - அதாவது ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னதாக "ஆனந்த விகடன்" வார இதழில் கொல்கத்தாவில் பாலியல் தொழில் புரியும் ஒரு பெண்ணின் மகன் போட்டோகிராபியில் தேர்ச்சி பெற்று அவரது அம்மாவின் வாழ்க்கை அனுபவங்களை புகைப்படங்களாக எடுத்து (தன் தாய் ஒரு வாடிக்கையாளருடன் இருக்கும் படங்களும் அதில் அடங்கும்) - அவரது பேட்டிக்கட்டுரையும் வெளியாகி பரபரப்பை கூட்டி இருந்தது.

ஒரு பாலியல் தொழிலாளியின் மகனின் வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல சாதாரணமானது அல்ல. அந்த அடையாளமே பெருத்த அவமானத்தை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியது.  சாதரணமாக ஒருவரை மிகவும் பச்சையாக திட்டக்கூடிய உச்சகட்ட வசவு வார்த்தையே பாதிப்பை உண்டு பண்ணும். அப்படி இருக்க அதையே ஒரு அடையாளமாக கொண்டு வாழும் ஒருவனுக்கு வேறு வழி இருக்காது.

தவிர ஜமுனாவும் தன் மகன் இந்த சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் கல்வி ஒன்று தான் அதற்கு சரியான வழி என்று தீர்மானித்து அவனை ஆளாக்குவதற்க்காக எந்த அவமானத்தையும் சகித்துக்கொண்டு வாழும் ஒரு பெண்.  

இரண்டாவது அத்தியாதத்தில் கதிரவனின் வார்த்தைகளில் இதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.  

உங்கள் பார்வைக்கு அந்த வரிகளை இங்கே தருகிறேன்.

"அந்த பள்ளத்துலே இருக்குற மத்தவங்க பசங்க - ஒன்னு ஆணாக இருந்தால் "பிம்ப்" ஆக மாறுவாங்க. பெண்ணாக இருந்தால் ..   அப்படி எல்லாம் நான் கெட்டு சீரழியக்கூடாதுன்னு ஆசைப்பட்டு என்னை படிக்க வச்சாங்க அம்மா.  அவங்க ஆசையை நிராசையாக்கக் கூடாதுன்னு  நானும் படிச்சேன்.  மத்தவங்க பொறாமை என் மேல அள்ளி வீசின வார்த்தைச் சேறுகளை எல்லாம் துடைச்சுப் போட்டுட்டு படிப்பிலேயே கவனம் செலுத்தினேன். 

பி.எஸ். சி. டிகிரி வாங்கினதும் வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. இன்னும் மேல படின்னு அம்மா சொன்னதாலே தொடர்ந்து எம்.எஸ்.சி. படிச்சேன்.  

"இத்தனை நாள் கஷடப்பட்டுட்டேன்.  இன்னும் கொஞ்ச நாள் கூட கஷ்டப்படுறதுலே என்ன வந்துடப்போகுது?   எனக்கு மவுசு இன்னும் குறையலே ராஜா.   வேற எதையுமே சிந்திக்காம நீ படிக்கற வயசுலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிச்சுடு.  நீ நல்ல நிலைமைக்கு வந்தா தான் நான் வாழ்க்கையிலே ஜெயிச்சதாக அர்த்தம் என்று சொல்லுவாங்க அவங்க. "

கதிரவன் கதாபாத்திரம் ஆனந்த விகடனில் நான் படித்த அந்த கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் மகனை ஆதாரமாக வைத்து,  உருவாக்கிய கதாபாத்திரம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.

இது போல முரண்களோ, சந்தேகங்களோ தோன்றினால் உடனே எழுதுங்கள்.

எனக்கு தெரிந்தவரை தீர்க்க முயற்சிக்கிறேன்.

சரிதானே ?

அன்புடன் - உங்கள் அன்பைத்தேடும் - fridger

 



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: பனித்துளியில் சில மலர்கள் - தொடர்வதற்கு முன்னாள் சில விளக்கங்கள்.
Permalink   
 


நானும் அந்த பெண்ணை பற்றிய நேர்காணலை விகடனில் படித்தேன்,... அந்த பெண்ணின் பெயர் கூட "ஜமுனா" என்று படித்ததாக நினைவு, சரியா தெரியல..... இப்போ அந்த மகன், தன் அம்மாவின் வாழ்வை புகைப்படங்கள் மூலம் பதிவு செய்திருப்பது ரொம்ப அழகா இருந்துச்சு.... எத்தனை பசங்க இப்டி தன்னை வெளிப்படுத்திப்பாங்க?னு அதை படிக்கும்போது ஆச்சரியப்பட்டேன்... உங்கள் கதையில் "ஜமுனா" பற்றி நீங்க சொன்ன முதல் வர்த்தையின்போதே, எனக்கு விகடனில் வந்த அந்த அம்மாவின் முகம்தான் நினைவில் வருது... இப்போவரை கூட கதையின் ஓட்டத்தில், ஜமுனா பற்றி நீங்க சொல்லும்போதும் எனக்கு அந்த பெண்ணின் முகமே கதையாக வரும்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நல்ல விளக்கம்.........

அருமை........

தொடருங்க.........

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Thanks!

Go ahead boss,

We are waiting.

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அன்பு நண்பர் திரு பிரிட்ஜெர் அவர்களே!!!

 

                            தங்களுக்கு இருக்கும் எத்தனையோ பணிகளுக்கு மத்தியில் எனது சந்தேகங்களையும் ஒரு பொருட்டாக மதித்து 

அதற்கென ஒரு தனி பக்கத்தில் விடை அளித்தற்காக முதற்கண் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் கதையின் போக்கிலேயே எனது கேள்விகளுக்கு விடையளிப்பீர்கள் என்று கருதி இருந்தேன். மிக்க நன்றிகள்.

"அந்த பள்ளத்துலே இருக்குற மத்தவங்க பசங்க - ஒன்னு ஆணாக இருந்தால் "பிம்ப்" ஆக மாறுவாங்க. பெண்ணாக இருந்தால் .. அப்படி எல்லாம் நான் கெட்டு சீரழியக்கூடாதுன்னு ஆசைப்பட்டு என்னை படிக்க வச்சாங்க அம்மா. அவங்க ஆசையை நிராசையாக்கக் கூடாதுன்னு நானும் படிச்சேன். மத்தவங்க பொறாமை என் மேல அள்ளி வீசின வார்த்தைச் சேறுகளை எல்லாம் துடைச்சுப் போட்டுட்டு படிப்பிலேயே கவனம் செலுத்தினேன்.

பி.எஸ். சி. டிகிரி வாங்கினதும் வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. இன்னும் மேல படின்னு அம்மா சொன்னதாலே தொடர்ந்து எம்.எஸ்.சி. படிச்சேன்.

"இத்தனை நாள் கஷடப்பட்டுட்டேன். இன்னும் கொஞ்ச நாள் கூட கஷ்டப்படுறதுலே என்ன வந்துடப்போகுது? எனக்கு மவுசு இன்னும் குறையலே ராஜா. வேற எதையுமே சிந்திக்காம நீ படிக்கற வயசுலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிச்சுடு. நீ நல்ல நிலைமைக்கு வந்தா தான் நான் வாழ்க்கையிலே ஜெயிச்சதாக அர்த்தம் என்று சொல்லுவாங்க அவங்க. "

இந்த வரிகளை நினைவில் கொள்ளாமல் கேள்விகள் கேட்டது எனது தவறுதான். ஒரு படைப்பின் முழு சாராம்சத்தையும்  புரிந்து கொள்ளாமல் 

இவ்வாறு கேள்விகளை கேட்டதால் உங்கள் மனம் எவ்வளவு கனப்பட்டிருக்கும் என்பது நீங்கள் எனக்கு அளித்துள்ள பதிலிலேயே புரிகிறது.

அதற்காக மன்னித்து கொள்ளவும். 

ஒரு தாய் படும் துன்பம்தான் என்னை இவ்வாறு கேட்க வைத்து விட்டது. 

மேலும் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வாரம் தவறாமல் ஆனந்தவிகடன் படிக்கும் வாசகன் 

இப்பொழுது நான் பொறியியல் பட்டம் வாங்கி ஓராண்டு காலம் முடிந்து விட்டது.

இன்னும் இந்த ஆனந்தவிகடன்  படிக்கும் வழக்கம் மட்டும் மாறவில்லை.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த பேட்டி எனக்கு படித்ததாக நினைவில் வரவில்லை.

ஈழ போராளி பெண்மணி ஒருவர் பாலியல் தொழிலாளியாக இருப்பதாக

ஒரு பேட்டி வந்துள்ளது ஒருவேளை அதை குறிபிடுகிறீர்களோ என்று குழப்பமாக 

உள்ளது. எனக்காக அந்த பேட்டி வெளிவந்த விகடனில் இட்ட தேதியை நினைவிருந்தால் 

குறிப்பிடவும். தங்களை சோதிக்கிறேன் என்று கருத வேண்டாம் அதற்கு எனக்கு தகுதியும் இல்லை அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.

படிக்கலாமே என்ற ஆவலில் கேட்டு கொள்கிறேன்.

மனதை புண் படுத்தியதற்கு மனமார்ந்த மன்னிப்புகளையும், என்னையும் ஒரு பொருட்டாக மதித்தற்கு நன்றிகளையும் 

மீண்டும் பதிவு செய்கிறேன்.

 

என்றும் தங்கள் நல்லாதரவை இறைஞ்சி நிற்கும் ராஜ்குட்டி காதலன்.

 

                                                   



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Fridger,

Hats off for you man. Keep on Rocking pa


regards

Thiva

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

//உங்கள் கதையில் "ஜமுனா" பற்றி நீங்க சொன்ன முதல் வர்த்தையின்போதே, எனக்கு விகடனில் வந்த அந்த அம்மாவின் முகம்தான் நினைவில் வருது.//

எனக்கும் அப்பெண்ணின் முகமே ஞாபகத்திற்கு வந்து போகும். அந்த பேட்டியின் சில வரிகள் படித்ததுமே மனதற்கு பாரமாகி, படிக்கவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து தான் படித்தேன்.

'ஈழ போராளி பெண்மணி பேட்டி' வெறும் கற்பனை என 'நம்பத்தகுந்த' தகவல்கள் தெரிவிக்கின்றன.

__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

மனதுக்கினிய நண்பர் திரு.. ராஜ்குட்டி காதலன் அவர்களுக்கு.

எனது விளக்கங்களுக்கு உங்கள் பதில் பதிவை கண்டேன்.

அது என்ன நண்பா? "எனது சந்தேகங்களையும் ஒரு பொருட்டாக மதித்து" அதற்கென ஒரு தனி பக்கத்தில் விடை அளித்தற்காக முதற்கண் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்"

- என்னைப் பொறுத்த அளவில் எனது கதையைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவருமே எனக்கு மதிப்பெண் போடும் ஆசிரியர்கள் தான்.

உங்கள் பாராட்டுக்கள் எனக்கு தங்க மெடல் வாங்கியதற்கு சமம்.

உங்களது சந்தேங்களுக்கு சரியான விளக்கம் அளித்து அதிக மதிப்பெண்களைப் பெறவேண்டியது எனது கடமை அல்லவா.

இதில் யாரையுமே நான் குறைவாக மதிப்பிடுவது இல்லை.

ஆகவே உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கவேண்டியது மிகவும் அவசியமான கடமை நண்பா.

"இவ்வாறு கேள்விகளை கேட்டதால் உங்கள் மனம் எவ்வளவு கனப்பட்டிருக்கும் என்பது நீங்கள் எனக்கு அளித்துள்ள பதிலிலேயே புரிகிறது. அதற்காக மன்னித்து கொள்ளவும்." - என்று மன்னிப்பு எல்லாம் கேட்டிருக்கிறீர்கள்.

உண்மையில் உங்கள் கேள்விகளால் என் மனம் எள்ளளவும் கனப்படவே இல்லை. மாறாக எனது எழுத்துக்களையும் இப்படி கண்ணும் கருத்துமாக படிக்கும் வாசக நண்பர்கள் இருக்கிறீர்களே என்று அளவு கடந்த மகிழ்ச்சி தான் எனக்கு ஏற்பட்டது.

அந்த ஆனந்த விகடன் வெளியான தேதி எனக்கு சரியாக நினைவில் இல்லை. பிப்ரவரி முதல் மே மாதத்துக்குள்ளாக ஏதோ ஒரு வாரம் படித்த நினைவு.

நண்பர் msvijay அவர்கள் இதைப் படித்ததாக தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.

கதிரவன் பாத்திரம் அந்த புகைப்படக் கலைஞரை ஆதாரமாகக் கொண்டு நான் கற்பனையில் அமைத்தது தான்.

விஜய் அவர்கள் அந்தப் பெண்ணின் பெயர் கூட ஜமுனா என்று படித்ததாக சொல்லி இருக்கிறார்.

உண்மையில் நான் அந்தப் பெண்ணின் பெயரைக்கூட மறந்துவிட்டேன். கதை எழுதும் போது எனது கதாபாத்திரத்துக்கு என்று என் மனதில் தோன்றிய பெயராக அந்த "ஜமுனா" என்ற பெயரை வைத்தேன்.

மற்றபடி அந்த தாய்க்கும் என் கதைக்கும் இம்மி அளவு கூட சம்பந்தம் இல்லை.

என் மனதை நீங்க ஏதோ புண்படுத்திவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு எல்லாம் வேறு கேட்டிருக்கிறீர்கள்.

ஒரு வாசகரின் மனதில் எழக்கூடிய சந்தேங்களை தீர்க்கவேண்டியது எழுத்தாளனாகிய எனது தலையாய கடமை.

இன்னும் சொல்லப்போனால் நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இப்படி ஒரு சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும் அளவுக்கு வழ வழ கொழ கொழ என்று எழுதி இருக்கிறேனே. தெளிவில்லாமல் எழுதியதற்கு நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

ஆகவே. இதுபோல வேறு என்ன குறை உங்கள் மனதில் பட்டாலும் தைரியமாக எழுதுங்கள்.

தவறே இல்லை.

நீங்கள் வெளிப்படையாக கேட்டிருக்கிறீர்கள். உங்கள் வாயிலாக வெளிப்பட்ட சந்தேகம் இன்னும் எத்தனை வாசகர்கள் மனதில் எழும்பி இருக்குமோ.

ஆகவே வெளிப்படையாக நீங்கள் கேட்டதற்காக எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து உங்கள் பேராதரவை எனது அனைத்து படைப்புகளுக்கும் நாடி நிற்கிறேன்.

என்றும் உங்கள் அன்பையும் நல்லாதரவையும் தேடும்.

உங்கள் மனதுக்கினிய நண்பன் fridger .

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

இன்னும் சொல்லப்போனால் நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இப்படி ஒரு சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும் அளவுக்கு வழ வழ கொழ கொழ என்று எழுதி இருக்கிறேனே. தெளிவில்லாமல் எழுதியதற்கு நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

 இந்த வார்த்தைகள் தங்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது நண்பரே.!!!

மனதுக்கினிய நண்பர் திரு.. ராஜ்குட்டி காதலன் அவர்களுக்கு.

இந்த மரியாதை எனக்கு பேருவகையை தருகிறது. தொடரட்டும் தங்கள் எழுத்துலக சேவை

எனது கதைகளின் மீதும் உங்கள் கடிகன் பார்வையை கொஞ்சம் வீசுங்கள்

என்றும் அன்புடன் அன்பு நண்பன்

 

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 17
Date:
Permalink   
 

MIGA AROKKIYAMANA KARUTHTU PARIMATRAM ENAKKU VIYAPALIKKIRATHU. RAJKUTTYKKU VAZHTHUKKAL, FRIDGER AVARGALUKKU VANAKKAM.

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Dear Mr Manian,

Hats off to you, please post the story as soon as possible

I'll give my comments at the end of the story.

Regards.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களத்துக்கு இட்டுச் சென்றதுக்கு வாழ்த்துக்கள்.. அதிலும் முக்கியமாக.. கதை பற்றின சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு தாங்கள் தொடங்கியிருக்கும் தனி இழை சிறப்பாக இருக்கிறது.. 

 

நான் தங்களிடன் தனி செய்தியில் சொன்னது போல.. என்னுடைய சந்தேகங்களைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளேன்..

 

1. “எதிர் சுவரில் இருந்த போஸ்டர் ராயல் தியேட்டரில் நாடோடி 

மன்னன் படம் ஓடிக்கொண்டிருப்பதை தெரிவித்துக்கொண்டிருந்தது.”

 

முதல் அத்தியாயத்தில்.. இதைப் பார்த்ததும்.. கதைக்கான காலகட்டம்.. தற்காலமல்லவோ என்று நினைத்தேன்.. ஆனால் மூன்றாம் அத்தியாயத்தில்.. “தனது ஹோண்டா சிட்டி காரை நிதானமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் திவாகர்.” பார்த்த பிறகு தான் தெளிவடைந்தேன்.. “நாடோடி மன்னன்” மீள் வெளியீடு என்பதைக் குறிப்பிடிருக்கலாம்.. இல்லையேல்.. எதாவது ஒரு புதுத் திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்..

 

2. திவாகரின் தந்தையார் பெயர்.. அத்தியாயம் மூன்றில் ராஜசேகர்.. அத்தியாயம் ஏழில் சோமசேகர்

 

3. //இன்றைக்கெல்லாம்

இருந்தால் என்னை விட இரண்டு வயது சின்னவனாக இருப்பானா என்ன?  ஆமாம் 

சின்னவன் தான்.  இவனது ரெஸ்யூமே சொல்கிறதே.    இந்த வயசில் எவ்வளவு 

மெச்யூரிட்டியுடன் சிந்திக்கிறான் இவன்.//

 

சந்திரசேகர் ஜமுனாவுடன் “உடன்போக்கு” நிகழ்த்தும் முன்பதாகவே திவாகரின் அப்பாவுக்குத் திருமணம் ஆகி விட்டதா?

 

சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு சிறப்பாக செல்லும் உங்கள் கதையின் அடுத்த அத்தியாயத்துக்காக... ஆவலுடன்.. காத்திருக்கிறேன்..

 



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard