Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாலி எனும் இறவா புகழ் கொண்ட ஏந்தல்


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
வாலி எனும் இறவா புகழ் கொண்ட ஏந்தல்
Permalink   
 


வாலி எனும் இறவா புகழ் கொண்ட ஏந்தல்

 

 

                                                                  images.jpeg

   

   கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்" என்ற தேவகானம் கேட்காதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் அரிது.ஒரு அஞ்சல் அட்டையில் 

மேற்கண்ட படலை எழுதி டிஎம்எஸ் க்கு எழுதி அனுப்பி விட்டு காத்திருந்தாராம் கவிஞர். அப்பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டு விட்டு அதற்கான சன்மானம்

பதினைத்து ரூபாயுடன் சேர்த்து சென்னைக்கு வர சொல்லி கடிதம் எழுதினாராம் பாடகர். அன்று திருவரங்கத்தை விட்டு கிளம்பி திரையுலகத்திற்கு வந்தவர்

இன்று தரையுலகம் தவிர்த்து இறையுலகம் சென்றுவிட்டார். அவர்தான் என்றும் அழியா புகழை கொண்ட கவிஞர் வாலி அவர்கள்.

 "வெள்ளுடை தரித்து வெளிர் மயிர் தாடியோன் சொல்லுடைத்து எழுத 

துவங்கினால்; கல்லுடையும் அதிலிருந்து கனிச்சாறு கொட்டும்,

எள்ளுடையும் அதிலிருந்து எண்ணெய்க்கு பதில் எண்ணங்கள் கொட்டும்,

கொட்டியதை கோர்த்தெடுத்தால்! கள்ளுடைய பானை போன்ற மயக்கம் தரும்.!"

 

ஒன்றுமே அறியாத எனக்கே இத்தனை எதுகை மோனையுடன் எழுத்து வருகிறதென்றால் அதற்கு காரணம் கவிஞர் வாலி அவர்களின் எழுத்துக்கள்தான். கவிஞர்

வாலி போல தமிழின் எதுகை மோனைகளை அதிகம் பயன் படுத்தியவர்கள் இருக்க முடியாது. உடலுக்கு வயதாகும் உள்ளத்திற்கு வயதாகாது என்று நிரூபித்தவர்

அவர்.

 

இளமையில் கற்பனை என்றாலும் என்று முருகனை புகழவும் தெரியும், முதுமையில் கலாசலா கலசலா என்று மல்லிகா செராவத்தை வர்ணிக்கவும்  தெரியும்

அவருக்கு.

 

பெரிய பெரிய காண்டங்களாக சாமானியர் படிக்க முடியாத ராமாயணத்தையும் பாகவதத்தையும் மகாபாரதத்தயும் சாத்திரம் அறிந்த சாதகர் முதல் பாத்திர திருடும்

பாதகர் வரை தன் பேனா முனையால் கட்டி இழுத்து படிக்க வைத்த பெருமையும் கவிஞர் வாலி அவர்களையே சாரும்,

 

ஆனந்த விகடனில் எளிய தமிழில் கிருஷ்ண விஜயம் எழுதினர் அதனால் ஆத்திகர் இல்லம் முதல் நாத்திகர் இல்லம் வரை கிருஷ்ணனே விஜயம் செய்தார்.ரகுராமன்

கதையை அவதார புருஷனாக்கினார், பாரதத்தை பாண்டவர் பூமியாக்கினார்.  வாலியின் எதுகை மோனைகளை கையாளும் விதத்தையும் அவ்ருக்கிருந்த

சொற்புலமையும் மேற்கண்ட நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும், உதாரணமாக சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் அவருக்கு இணை அவர் மட்டுமே.....

பாண்டவர் பூமியில் பாஞ்சாலி துகிலுரியப்படும் சமயம் கண்ணனை அழைக்கும் காட்சியில் திருமாலின் அவதாரங்களை அழகாக வரிசை படித்தி இருப்பார். அந்த

பத்தியை உங்களுக்காக போடுகிறேன் படியுங்கள் பின் களியுங்கள்.

 

     கண்ணா! கண்ணா! கமலபூங்கண்ணா!

    வண்ணா! வண்ணா! வானமழை வண்ணா!

     உண்ணா உலர்ந்திட உன்பேர் அழைத்தேன் (உண்ணா – உள் நாக்கு )

     அண்ணா! அண்ணா! அபயம்! அபயம்!.

 

     தூணை பிளந்து ஒரு தூய நரசிங்கமாகி (நரசிம்ம அவதாரம்)

    ஆணை பிளந்தவனே! அபயம்! அபயம்!. (இரண்யகசிபு மார்பை பிளத்தல்)

 

    நெடியான் என நின்று நீனிலத்தை ஒருமூன்று (வாமன அவதாரம்)

    அடியால் அளந்தவனே! அபயம்! அபயம்!. (உலகை மூன்றடிய்ல் அளந்தது)

 

    தூமையாய் கிடந்த கடல் தயிராய் கடைவதற்கு (கூர்ம அவதாரம்)

    ஆமையாய் கிடந்தவனே! அபயம்! அபயம்!.  

 

     ஊனம் குடிபுகுந்த உள்ளத்தால் சொல்கேட்டு (கைகேயி)

     மீனம் குடிபுகுந்த மைவிழியால் கைபற்றி (சீதை)

    கானம் குடிபுகுந்த காகுந்தா! (வனவாசம்)

    கற்புடையாள் மானம் குடிபுகுந்த மேனியினை காவாயோ!

 

இது ஒரு உதாரணம் தான் படிக்க படிக்க தமிழின் மீது காதலை உருவாக்கும் எழுத்துக்கள் கவிஞர் வாலியினுடயது.

 

கற்பகம் திரைப்படத்தில்

“கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போவதில்லை“

“மண்ணை விட்டு போனாலும் மனதை விட்டு போவதில்லை

என்று அவர் எழுதிய வரிகள் அவருக்கே பொருந்தி விட்டது. இன்று இந்த மண்ணுலகை விட்டு அவர் விடை பெற்றாலும் அவர் கொடுத்த படைப்புகள் தமிழுள்ள

வரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இறுதியாக!

அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம்   

பெருமை!

    இவர் வீழ்ந்த காரணத்தால் தமிழுக்கே ஏற்பட்டது தீராத

    வறுமை!

 அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி அவருடைய படைப்புகளை படிப்பதும் பாதுகாப்பதும்தான் 

என்றும் நட்புடன் 

-ராஜ்குட்டி காதலன்

                                                        



Attachments
__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

என் எழுத்துலக இறைவன் அமரர் சுஜாதா அவர்கள் இறந்தபோது, இப்போது அமரராகிவிட்ட கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதையிலிருந்து ஒரு வரி.....

"ஒரே ஊர்;
ஒரே பேர்
ஆம்,
அவனும் நானும் -
'ரங்கராஜன்' ஊரில்
'ரங்கராஜன்' பேரில்!"...

இப்படிப்பட்ட சிலேடைகளை வாலியை மிஞ்ச எவருமில்லை...
கண்ணதாசன் காலம் முதல், இப்போது மதன் கார்க்கி காலம் வரை எத்தனையோ கவிஞர்களுக்கு ஈடுகொடுத்து திரையுலகில் தன் தனித்துவமான இடத்தை பெற்றவர்....
இப்போது சுஜாதாவை சந்திக்க, அமரலோகமும் சென்றுவிட்டார் போலும்!...

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைந்திட, இறைவனை பிராத்திப்போம்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஆமாம் குருஜி அவர்களே!!!

              திரு சுஜாதா அவர்களுக்கும் ஈடு இணையே இல்லை. அவர்போல அறிவியலை எளிய மனிதருக்கும் புரியும் வகையில் 

இணைத்து கதை எழுதும் திறன் யாருக்கும் இல்லை, அவருடைய சிறுகதைகளும், நாவல்களும் நெஞ்சில் கனத்தை உண்டு பண்ணும், அவருடய துப்பறியும் கதைகள் 

படு சுவாரஸ்யமாக இருக்கும், அவருடைய மீண்டும் ஜீனோ, ஹரி பிரசாத்தின் கடைசி நாள், மலை மாளிகை, விருப்பம் இல்லா திருப்பங்கள், 

திசை கண்டேன் வான் கண்டேன் ................... போன்ற எண்ணற்ற நாவல்களை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருப்பேன்.

ஆனந்த விகடனில் அவர் எழுதிய கற்றதும் பெற்றதும், என் எதற்கு எப்படி போன்றவை களெல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை

நாம் பார்க்காமல் ரசிக்கும் மனிதர்களின் மரணத்திற்கு கண்ணீர் சிந்து கின்றோம் என்றால் 

அது இது போன்ற படைப்பாளிகளுக்காக தான் இருக்கும்



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard