பாலத்தின் நடுபகுதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி சரணின் தோள் மீது கை வைத்து அழுத்திய படி இறங்கி கைப்பிடி சுவற்றிற்கு அருகில் ஓடினான் கார்த்தி. அங்கிருந்து பார்க்கும் பொழுது நீலத்திரை கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் நாகை மீன்பிடி துறைமுகமும், அங்கு அழகுற வரிசை படுத்தி நிற்க வைக்க பட்டிருக்கும் விசைப்படகுகளும் கண்ணுக்கு விருந்து வைத்தன.
வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாட்களில் அதிகம் தொலைகாட்சிகளில் காட்டப்படும் அல்லது
அதிகம் பேசப்படும் நாகை அக்கரைபேட்டையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டு தான் கடலின்
கவின்மிகு காட்சியை பார்த்து கொண்டிருக்கிறான் கார்த்தி.
நம் வாழ்க்கையில் எத்தனை முறை பார்த்ததாலும் அலுக்காத சில விஷயங்களில் கடலுக்கு என்றுமே முதலிடம் உண்டு. அதுவும் மேற்சொன்ன பாலத்தின் மீது நின்றுகொண்டு பார்க்கும் பொழுது மனதை பறிகொடுக்காதவர் இருந்தால் அவர்களுக்கு அடிபடையில் எதோ ஒரு கோளாறு இருப்பது உறுதி.
“இந்த இடத்துல நின்னு இதோட லட்சித்தி ஒருதடவையாவது இதேமாதிரி பாத்திருப்ப அப்டி என்னதான் இருக்கோ?” என்று தன் ஆசை காதலனை செல்லமாக கடிந்து கொண்டபடி வண்டியை நிறுத்தி விட்டு அருகில் வந்தான் சரண்.
“சும்மாவா சொன்னாங்க முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவின்னு” எதுமே நமக்கு ரொம்ப கிட்ட இருந்தா அதோட மதிப்பே தெரியாதுடா........... எப்பவாவது பாக்குறவங்களுக்குதான் அதோட மதிப்பு தெரியும் என்று சரணை பார்த்து கூறி விட்டு மீண்டும் விரிநீரின் அழகை தன் விரிந்த விழிகளால் ரசிக்க தொடங்கிவிட்டான் கார்த்தி.
கரையில் நின்று ரசிப்பவர்களுக்கு பலவித ஆச்சர்யங்களை கொடுக்கும் கடல், நித்தம் நித்தம் பலவித இன்னல்களுக்கு இடையில் சான் வயிற்றிற்காக ஊன் உறக்கம் இன்றி உழைக்கும் மீனவர்களுக்கு அதே ஆச்சர்யங்களை தருவதில்லை. எனவே அத்தகைய மீனவர்களில் ஒருவனான சரணுக்கு மேற்குறிப்பிட்ட காட்சி ஆச்சர்ய படுத்தாததில் எந்த வித வியப்பும் இல்லை!.
சரி…..!! காதல் பறவைகள் இரண்டும் கடலின் அழகை ரசித்து முடிப்பதற்குள் இவர்களை பற்றிய சிறு விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்.
எங்கள் காவிரியின் புகழ்பாட, இன்னொரு கலைஞனும் வந்துவிட்டான்.... மிக்க மகிழ்ச்சி...
அக்கரைபேட்டை, அடிக்கடி சிங்கள ராணுவத்திடம் சித்திரவதை படும் மீனவ கிராமம் அது... நல்ல தொடக்கம்....
இரட்டை குதிரை சவாரி என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்.... இரண்டு கதையையும் கவனமா கையாளுங்க...
மேற்கண்ட பழமொழி டெல்ட்டா வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்த படும் ஒன்று. இதையே திருவாரூர், சிதம்பரம் பகுதிகளில் வீதியிலே தேர் ஓடினாலும் விடியாமூஞ்சி பாக்காது என்று வழங்குவார்கள்.
திரு குருஜி! அவர்களுக்கு....
பேருவகையாக இருக்கிறது என்னையும் கலைஞனென்று அங்கீகரித்தது. தங்களின் வாழ்த்துகள் துணை இருக்கும் பொழுது எனக்கு எந்த சிரமமும் இருக்காது.
திரு ஷ்யாம்! அவர்களுக்கு.......
வரவேற்பு இருக்குமா என்று சந்தேகித்ததால் தான் குறைவாக பதிவிட்டேன்.
கறுத்த நிறமும், கடைந்தெடுத்த முகமும், கார்த்தியை கவரவே வந்த வேலையை மறந்து சரனை சைட் அடிக்க தொடங்கி விட்டான் கார்த்தி. ...சினிமாவில் heroin அறிமுகம் மாதிரி அட்டகாசமான intro...very nice narration
முதற்கண் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் ! நன்றி கலந்த வணக்கங்களும்.!
தொடரட்டும் வாழ்த்துகள்.....
திரு ரோதீஸ் அவர்களுக்காக: துள்ளு கெண்டை என்பது உவர்நீர் வகை மீன்தான், நமக்கெல்லாம் செங்காளை மீன் அல்லது செங்காரா மீன் என்ற பெயரில் விற்பனை செய்ய படுகிறது.
உண்பதற்கு சுவை மிகுந்ததாகவும்
பார்ப்பதற்கு சிவந்த நிறத்திலும் இருக்கும். முட்களும் குறைவாக இருக்கும். மீன் விரும்பிகள் யாரும் இந்த மீனை தவிர்க்க முடிந்திருக்காது ஆனால் மீன் பிடி தொழிலாளர்களும் அதனை சார்ந்தவர்களும் இதனை துள்ளு கெண்டை என்றுதான் வழங்குகிறார்கள்.
//முதற்கண் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் ! நன்றி கலந்த வணக்கங்களும்.!
தொடரட்டும் வாழ்த்துகள்.....
திரு ரோதீஸ் அவர்களுக்காக: துள்ளு கெண்டை என்பது உவர்நீர் வகை மீன்தான், நமக்கெல்லாம் செங்காளை மீன் அல்லது செங்காரா மீன் என்ற பெயரில் விற்பனை செய்ய படுகிறது.
உண்பதற்கு சுவை மிகுந்ததாகவும்
பார்ப்பதற்கு சிவந்த நிறத்திலும் இருக்கும். முட்களும் குறைவாக இருக்கும். மீன் விரும்பிகள் யாரும் இந்த மீனை தவிர்க்க முடிந்திருக்காது ஆனால் மீன் பிடி தொழிலாளர்களும் அதனை சார்ந்தவர்களும் இதனை துள்ளு கெண்டை என்றுதான் வழங்குகிறார்கள்.//
@chathero.....
//முத்தத்துல காவேரி முழுவ மாட்டா மூதேவி// வீட்டு முற்றத்தில் காவிரி பாய்ந்தாலும் குளிக்க மாட்டாள் மூதேவி//
thanks for posted the meaning chathero.....first enaku puriyala...... ipo ok..... nice one.... ha ha ha...
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரியான விளக்கம் தான் ஆனால் வெறும் குளிப்பது மட்டும் என்று பொருள் பட்டு விடாது நண்பரே!
மயிலாடுதுறையில் உள்ள மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஐப்பசி திங்கள் முதல் தேதியிலிருந்து துலா உற்சவம் நடைபெறும்,
மாதத்தின் முப்பதாம் நாள் கடைமுக தீர்த்தவாரி (முழுக்கு) காவிரிக்கரையில் (துலாகட்டம்)நடைபெறும்,
ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டதில் நீராடினால்
பாரதத்தின் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம், கரண்ட் பில்லகூட கடைசி நாள்லதான நாம கட்டுவோம்!?, அதே போல கடைசி நாள் தான் அதிகம் பேர் நீராடுவாங்க
அன்றைக்கு இங்கு உள்ளூர் விடுமுறையுடன் சிறப்பாக கொண்டாட படும், இந்த வைபவத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து நீராடினாலும்
மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களில் சிலர் வந்து வேடிக்கை பார்த்து விட்டு நீராடாமல் செல்லுவார்கள் . அதற்குதான்
"முத்தத்துல காவிரி முழுவ மாட்டா மூதேவி" என்றார்கள்
திரு பிரிட்ஜெர் அவர்களுக்காக :
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே! மச்சம் என்றால் மீன் அதனால் உங்கள் கூற்று சரிதான். வாழ்த்துகள் தொடரட்டும்.
மேலுமிரண்டு முறை சென்று வந்து மீன்களை கொட்டியபின் கீழே அமர்ந்து நல்ல மீன்களை தரம் பிரித்தகொண்டிருந்த சரணுக்கு சிறிது நேரம் கழித்ததுதான் தெரிந்தது அவனை ஒருவன் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பது. “பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல முதல் பார்வையிலேயே கார்த்தியை புரிந்து கொண்ட சரன், தொடர்ந்த பார்வை படலங்களுக்கு முற்று புள்ளி வைத்து, அவன் பையுடன் வந்திருப்பது மீன் வாங்கதான் என்பதை அறிந்தவனாய் மெல்ல சென்று பேச்சு கொடுத்தான். பின் அவனுக்காக மலிவு விலையில் மீன் கொடுத்தான், பின் கைபேசி எண் கொடுத்தான் அவன் சென்ற பின் அவனிடம் அவன் மனதையும் கொடுத்தான். காற்று வாங்க போனவன் கவிதை வாங்கியதை போல மீன் வாங்க போன கார்த்தி ஆங்கொரு ஆண் வாங்கி வந்து விட்டான்.
. தொடர்ந்த பல பேச்சுகளும், மறைமுக உறவுகளும், அவர்களுக்கு இடையே காதலை வளர்க்க, நண்பர்கள் என்ற போர்வையில் அவர்கள் காதலிக்க ஆரம்பித்து இன்றோடு ஐந்து மாதம் ஓடிவிட்டது. இந்த ஐந்து மாத காலத்தில் சரணுக்கு கார்த்தியை பிடித்ததை விட சரணின் தங்கை ஈஸ்வரிக்குதான் கார்த்தியை மிகவும் பிடித்து விட்டது. எப்போது பார்த்தாலும் கார்த்திண்ணா.........!!. கார்த்திண்ணா..........!! என்று அவள் உரிமையுடன் அழைப்பது இவனுக்கும் பிடிக்கும்.
வாழ்வளிக்கும் கடல் மாதாவே சாவளிக்கும் சவக்குழியாய் மாறிசுனாமி என்ற பெயர் தாங்கி கடலோர மக்களை காவு வாங்கிய பொழுது சரணும் ஈஸ்வரியும்தான் அவர்கள் குடும்பத்தில் தப்பித்தனர். உலகில் தாய்ப்பாசத்திற்கு இணையான பாசம் தங்கை பாசம். சரணின் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரி தனக்கு இணையாக தன் அண்ணன் மீது கார்த்தியும் பாசம் காட்டுவதால் தான் கார்த்தியையும் ஓரு அண்ணனாக ஏற்று கொண்டிருந்தாள்.கடந்த ஒரு மாதமாக அமலில் இருக்கும் தடைக்கால மறியலால் சரண் அதிகம் பாடுக்கு செல்லமல் கார்த்தியுடன் சுற்றி வருகிறான்.
தற்பொழுது மீன்கள் இனபெருக்க காலம் என்பதால் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கு நாற்பத்தி ஐந்து நாட்கள் அரசு தடை விதித்துள்ளது. இந்நாட்களில் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், புது வர்ணம் தீட்டவும் பயன்படுத்தி கொள்வர் அதனதன் உரிமையாளர்கள். புதிதாக விசைப்படகு கட்டி கொண்டிருப்பவர்கள் தடைகாலம் முடியும் போது கடலில் படகை இறக்கிவிடும் முடிவோடு முனைப்பாக செயல்படுவர். விசைப்படகில் ஊதியதிற்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலை கட்டுவது, வலைக்கு செல்வதுமாக (நாட்டு படகில் மீன்பிடிக்க செல்வது) இருப்பர், வெல்டிங் தெரிந்தவர்கள் படகு கட்டும் சாலைகளுக்கு சென்று வேலை பார்ப்பதும் உண்டு. வியப்படைய வேண்டாம்!!, இன்றைய மீனவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் டிப்ளமா அல்லது ஐடிஐமுடித்தவர்கள்தான். வருமானம் மிகையாக கிடைப்பதால் வேறுவேலைகளுக்கு செல்லாமல் கடலில் பாடுக்கு செல்கின்றனர். வேறு வேலைகளுக்கு செல்வோரும் உண்டு. ஏன்? நமது சரண் கூட மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தவன்தான்.
சரி பாலத்தின் மீது நிற்கும் காதலர்கள் எதோ பேசிகொள்வது போல் தெரிகிறது வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.!!
என்று துரித படுத்திய சரணின்கைபேசி அழைத்தது. எடுத்துபார்த்த பொழுது திரையில் ராஜ், காலிங் என்று ஒளிர்ந்ததால். அதுவரை சரணின் கைகளை தழுவி கொண்டிருந்த செல்போன் இப்போழுது அவனது காதை தழுவி கொண்டது.
“ ஹலோ...... சொல்லு மச்சான்......”
“ எங்கடா இருக்க முக்கியமான விஷயம் பேசனும்டா”
“ம்ம்ம்..... இங்கதாண்டா பாலத்துகிட்ட இருக்கோம் நானும் கார்த்தியும் ஏன்டா என்ன விஷயம்”
“இல்ல மச்சான் ஒரு ஹெல்ப் பண்ணனும்டா........ உன்னால முடியுமா தெரியல.....!!!!”
“சொல்லாம எப்டிடா தெரியும் சொல்லு முடிஞ்சா செய்யிறன். அத்த எப்டிடா இருக்கு.?“
“ம்ம் நல்லாருக்குடா........ ரெண்டு வாரமா அதுக்கு ஆஸ்பத்திரி செலவு அது இதுன்னு ஒன்றலட்சம் கிட்ட தட்ட செல்வாயிட்டுடா..... இப்ப போட்டுக்கு ராடார், நோய்சர் (ஆமைக்கூட்டங்கள் வலையில் சிக்கி விடாமல் விரட்டும் சாதனம்) வக்கிறது, வயரிங் செலவுன்னு பாக்கி வேலக்கி சுத்தமா காசு இல்லடா..... மறியல் முடிஞ்சதும் போட்ட ஏறக்குறது கஷ்டம் போல இருக்குடா........ அதான் உனக்கு தெரிஞ்ச இடத்துல எங்கியாவுது ஒரு ரெண்டு லட்சம் பொரட்டி குடுக்கமுடியுமா......னு கேக்கலாம்னு........?!!!!”
“நான் எங்கடா பொரட்டுறது? என்று சற்று யோசித்தவன் சரிடா.......... ஈசு கல்யாண செலவுக்குன்னு ஒரு அஞ்சு லட்சம் பேங்க் ல போட்டு வெச்சிருக்கன். அதுல வேணா எடுத்து தரன்டா..... உன்னால முடியிரப்ப குடு போதும்.” என்று இன்னும் சிறிது நேரத்தில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
தன்காதலனின் பேச்சை வைத்தே ஒருவாறு கணித்த கார்த்தி
“யாரு தங்கம்!!........ராஜியா.......? என்று சரியாக கேட்டான்
“ஆமாண்டா........ போட்டு செலவுக்கு பணம் வேணுமாம் அதான்......... நாளைக்கு பேங்க்ல போய் எடுத்துகுடுக்கணும்”
“கல்யாணத்துக்குனு வெச்சிருக்குற பணத்த யோசிக்காம குடுக்குறியே.... ஒரு வேளை சமயத்துல அவன் தருலனா என்னடா.....பண்னுவ?
"ஆமா......!! இப்ப என்ன நாளா வெச்சிருக்கு அடுத்த வருஷம் தானடா....... கல்யாண பேச்சே தொடங்கணும். அபடியே அவன் தரலைனா நான் என்ன செத்தா போ போறான் அதுக்குள்ள சம்பாரிச்சிட மாட்டனா.....? என்று கேட்டவனின் கன்னத்தில் பொளேரென ஒரு அறை விழுந்தது."
என்று கூறி விட்டு கோபத்துடன் நடையை கட்ட ஆரம்பித்து விட்டான் கார்த்தி. கார்த்தியை அடிக்கடி இப்படித்தான் உசுப்பேத்தி ரசிப்பான் சரண். இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை மூண்டுவிடும். சரி இவனுங்க இப்ப சமாதானம் ஆக இன்னும் கொஞ்சம்நேரம் ஆகும். அதுக்குள்ள போனவாரம் இதே காரணத்தால் நடந்த ஒரு சிறு சண்டையை பற்றி கூறிவிடுகிறேன்.
சற்று முன்பு போனில் பேசினானே ராஜ் அவன் சரணின் நண்பன், தனது தந்தை காலத்தில் சொந்தமாக ஐந்தாறு விசைப்படகு வைத்திருந்த குடும்பம். ஆழிப்பேரலையின் போது அந்த படகுகள் எல்லாம் சிதைந்து விட்டது. அந்த கவலையிலேயே அவனது தந்தையும் போய் சேர்ந்து விட்டார். நன்றாக வாழ்ந்த குடும்பம் அன்றாட வாழ்விற்கே அல்லாடிய பொழுதுதான் சொந்தமாக விசைப்படகு கட்டுவது என்ற குறிக்கோளுடன் சிறுக சிறுக பணம் சேர்த்து லட்ச கணக்கில் செலவு செய்து படகு கட்டி வருகிறான் இன்னும் இரண்டு வாரத்தில் கட்டுமானம் முடிந்து கடலை முதல் முறை பார்க்க இருக்கிறது அந்த புதிய படகு. இந்நிலையில் சென்றவாரம் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்க பட்டிருந்த ராஜின் தாயாருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அறுவை சிகிச்சைக்காக அப்போலோ வில்அனுமதிக்க பட்டிருந்தார். அவரை காணும் சாக்கில் சரனும் கார்த்தியும் சென்னைக்கு சென்று அறை எடுத்து தங்கி நன்றாக ஊர் சுற்றி பார்த்து காதலாகி கசிந்துருகி உரையாடி கொண்டிருக்கும் பொழுது
“கார்த்தி என்ன ஏன்டா நீ இவ்ளோ லவ் பண்ற.......? நான் திடீர்னு உன்ன விட்டுட்டு போய்ட்டா.........? என்னடா பண்ணுவ,..........?”
“ஓத வாங்க போறான் பாரு ஒருத்தன்....!!! அப்டியே நீ ஓடுனாலும் என்ன தவிர வேற ஒருத்தனும் உன்னைய ரெண்டு நாளுக்கு மேல வெச்சுக்க மாட்டான்”நக்கலாக சொல்லிவிட்டு சிரித்தான் கார்த்தி.
“சரி அப்ப அதுவேணாம், நான் செத்து போயிட்டா என்ன பண்ணுவ......?”
இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி அருகில் பழம் வெட்ட வைத்திருந்த
கத்தியை எடுத்து தனது உள்ளங்கையில் சரேலென கிழித்தான்..... ரத்தம் அதிலிருந்து பீறிட்டு கிளம்பியது.
கதையை ஏன் இவ்வளவு வேகமா நகர்த்துறிங்க?.... கடலில் போகும் ஸ்டீமர் போல, அல்லாமல் ஆற்றில் போகும் படகு போல இருப்பதுதான் காதல் பயணத்துக்கு சிறப்பாக இருக்கும்... ஆனாலும், இந்த வேகம் நன்றாகவே இருக்கு.... தொடருங்க....
"முன்னே, பின்னே"-நு கதை நல்ல போகுது. மீனவர் விஷயங்களில் தாங்கள் குறிப்பிடும் பல சொற்கள், எனக்கு புதியதாய் உள்ளது. கதையோடு அவற்றையும் கற்றுக் கொள்கிறேன்.
ரத்தம் வழிய வழிய வலியால் துடித்த படி இப்புடி கிழிச்சுகிட்டு செத்துடுவண்டா....? நீ இல்லாத என்
வாழ்க்கைய என்னால நெனச்சு கூட பாக்க முடியாதுடா.. என்று கண்ணீர் மல்க
கூறி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
.அதன் பின் அவனை நாகை வருவதற்குள் சமாதன படுத்தவே சரணுக்கு நேரம் போத வில்லை. விளையாட்டாக கேக்க போய் வினையாக முடிந்ததை எண்ணி சரணுக்கு வருத்தம் என்றாலும் தன் மீது உயிரையே வைத்திருக்கும் கார்த்தியை எண்ணி பெருமையாக இருந்தது.
எவ்வளவு கோபமிருந்தாலும் சரண் தனது இரும்பு கரம் கொண்டு கார்த்தியின் இடுப்பை அணைத்தால் அதில்
சொக்கி அனைத்தையும் மறந்து விடுவான் கார்த்தி. இதேபோன்ற நிகழ்வொன்றை நாம் பேசிகொண்டிருக்கும்
இவ்வேளையில் நமக்கு தெரியாமல் சரண் நடத்திவிட்டதால் இருவரும் சமாதனம் ஆகி வண்டியில்
ஏறி படகு கட்டும் தளத்திற்கு விரைந்தனர்.
தடைக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கார்த்தியின் வீட்டிற்கு ஒரு கடிதம்
வந்தது... அதனை வாங்கி பார்த்த கார்த்தியின் தந்தைக்கு முகமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியில் ஆயிரம்
வாட்ஸ் பல்புகள் எறிந்தன.......!!! ஆனால் தற்பொழுது கார்த்தியும் சரணும் படகு கட்டும் தளத்தில் ராஜ்குமார்
அக்கரைபேட்டை என்று தேசியக்கொடி போன்று மூவர்ணத்தில் எழுதப்பட்ட ராஜின் புதியபடகின் அருகில்
நின்று கொண்டு எதையோ படு தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்தனர் அதில் ராஜ் யின் முகம் மட்டும்
சற்று கவலையுடன் இருந்தது.
“இதுக்கு போய் ஏண்டா வருத்த படுற...... ரெண்டுநாள்தான....!!! “ என்று கேட்டான் சரண்.
“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற.. இவ்ளோ நாளா கஷ்ட்ட பட்டு கடன உடன வாங்கி போட்ட கட்டுனா......
கடல்ல இறங்குற நாள்ல போய் எவ்ளோ பிரச்சன இருக்குறப்ப டீசல் விலையேறுனதுக்காக ஸ்ட்ரைக் பண்ண
போறங்குரானுகளே இது நியாயமாடா......?” என்றான் ராஜ்.
“அப்புறம் என்னடா பண்ண சொல்லுற....? இதுமாதிரி எதாவது பண்ணத்தான் நம்ம கவர்மெண்ட்க்கு புரியும் இதுவும் நல்லதுதான்னு நெனச்சிக்க.” இது கார்த்தி.
“இல்ல கார்த்தி... இந்த ஸ்ட்ரைக்லாம் வேலைக்கு ஆவாதுடா......போட்டுக்கு போறவன் வேலைநிறுத்தம்
பண்ணுனா....... வலைக்கு போறவன் (நாட்டு படகு மூலம் மீன் பிடிக்க செல்வது) புடிக்கிற மீன் கெடைகிறதால
நம்மளோட ஸ்ட்ரைக் தடம் தெரியாம போய்டுது. இதுக்காக தீர்வு கெடைக்கிற வரைக்கும் வலைக்கு போவாம
இருந்தா வயித்துக்கு என்ன பண்றது....? எல்லா போராட்டத்தையும் ஒருங்கினைக்கிறதுக்கு ஒரு ஆள்
இல்லைனா எல்லாம் வீண் வேலைதான்....... எங்க பிரச்சனைக்காக போரடுறதுக்காக
ஒரு தலைவர்னு யாருமே கெடயாது, அதுமாதிரி யாராவது இருந்து எல்லா மீனவர்களையும்
இணைச்சு போரடுனாதான் டீசல் பிரச்சனயிலேருந்து, சிலோன்காரண்ட்ட அடிவாங்குறது வரைக்கும்
தீர்வு கெடைக்கும்” மடைதிறந்த வெள்ளம்போல பேசிய தன் காதலனின் சமூக விழிப்புணர்வு வார்த்தைகள்
கேட்டு பெருமித பட்டான் கார்த்தி.
“சரி மாமா..... நாளன்னைக்கு போட் மொத வலைக்கு போவும்போது நீயும் வேலைக்கு வரணும் நீ
இருந்தா எனக்கு எல்லாமே நல்லதா நடக்கும்டா என்று சரணை பார்த்து ராஜ் கூறும் போது கார்த்தியின்
செல்போன் ஒலித்தது.
“சொல்லுங்கப்பா.......””
“கார்த்தி எங்கருந்தாலும் உடனே வீட்டுக்கு வாடா...ஒரு சந்தோசமான விஷயம் காத்திருக்கு.” என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தார் அவர்
வீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த கார்த்தியிடம் மேற்சொன்ன கடிதம் தரப்பட்டது. பிரித்து படித்தான்.
அவன் எப்பொழுதோ எழுதிய ரயில்வே தேர்வில் வென்று விட்டதாகவும் இன்னும் இரண்டு வாரத்தில்
நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் அகமதாபாத்தில் பணியேற்க வேண்டும் என்று கடிதம்
வழங்கிய செய்தி கார்த்தியின் தலையில் இடியாக இறங்கியது.தாய் தந்தையருக்காக பொய்யாக
மகிழ்ச்சி காட்டி உடனே சரணை காண புறபட்டான் கார்த்தி.
கடிதத்தை சரணிடம் காட்டிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் கார்த்தி.
“ஹேய்ய்ய்ய்........இந்த வேலைக்கு போனா.......என்னோட இருக்க முடியாதுன்னு வருத்த படுரியா.....?” இதுக்கு வருத்தப்பட என்னடா இருக்கு?” என்று கேட்டான் சரண்
“அப்பனா........நான் போனா உனக்கு கவலை இல்லையா?”
“அப்பனா..... எனக்காக இந்த வேலைக்கு போகாம இருக்க போறியா,?”” அடிவாங்குவ.... உங்கப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரயும்ல.....?”
“அதுக்காக என்னோட ஆசா பாசத்தலாம் வெருக்கனுமா நீ இல்லாம நான் எப்டிடா இருப்பன்...? அங்க போய்ட்டா நாம இப்ப இருக்குற மாதிரி பேச முடியாது பழக முடியாதுடா?”
“தங்கம் புரிஞ்சிக்கடா... எனக்காகடா....ஒரு வருஷம்தான் அதுக்குள்ள ஈசுக்கு ஒரு நல்ல மாப்புளையா பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துடுவண்டா... அப்புறம் கண்டிப்பா..... உன்கிட்ட வந்துடுவண்டா.....!!!!!!!! நாம அப்புறம் ஒன்னாவே இருக்கலாம் டா.... வேணா வெளிநாடு கூட போய்டுலாம்டா...எனக்காக இந்த வேலைக்கு நீ போடா..!!” என்று ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான்.
“அடுத்த வாரம் கழிச்சு சென்னைக்கு செர்டிபிகேட் காட்ட நாம் ரெண்டு பேரும்தான் போகணும் புரியிதா..?” என்றுகூறி விட்டு இல்லத்திற்கு சென்றான் கார்த்தி.
அன்றிலிருந்து இரண்டாம் நாள் தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கடலுக்குள்சென்று கொண்டிருந்தன....புதிய படகுகள் எல்லாம் புதுமணப்பெண் போல அலங்கரிக்க பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தயாராக இருந்தது.
அநேகமாக இலங்கை கடற்படையின் வரவாக இருக்குமென நினைக்கிறேன்.... நீங்கள் அவசரப்படுத்தியதற்கான காரணம் இப்போ புரியுது.... நல்ல போக்கு, தொடருங்கள்....
இந்த மீனவர்கள் பற்றி நான் ஒன்னு சொல்லணும்.... சில நேரங்களில் அவங்க செயல்பாடு எரிச்சல் ஊட்டும் விதமாக இருக்கும்... ஏன் அவங்களுக்குள் ஒற்றுமை இல்லைன்னு எனக்கு புரியல.... இலங்கை கடற்படையால் அதிகம் பாதிக்கப்படுவது டெல்டா மாவட்டங்கள், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்து மீனவர்கள்தான்.... இதனை தென்மாவட்ட மீனவர்களோ, வடமாவட்ட மீனவர்களோ பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள்... அதே போல கூடங்குளம் விஷயத்திற்காக போராடுவது நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்ட மீனவர்கள் மட்டுமே.... ஒருவேளை கூடங்குளம் பிரச்சினையையயும், இலங்கை கடற்படை பிரச்சினையையும் ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்றாக அணுகி போராடி இருந்தால், என்றைக்கோ எல்லா பிரச்சினைகளுக்கும் விடிவு கிடைத்திருக்கலாம்.... நான்கு மாடுகளாக நம்மவர்கள் பிரிந்திருக்க, சூழ்ச்சியான சிங்கம் நம்மவர்களை அழித்துக்கொண்டு இருக்கிறது.... இந்த நிலைமை எப்போது மாறுமோ?
அருமையான களம், கதை.. உங்கள் படைப்பு ஒவ்வொன்றிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது.. நுணுக்கமான தகவல்களுடன் கதை எழுதுவதால் வாசிப்பவர்களும் கதையின் போக்குடன் பயணிப்பது எளிதாகிறது.. அதிர்ச்சிகள் இப்போதுதான் ஆரம்பிக்கின்றன என நினைக்கிறேன்.. உங்கள் குருநாதரைப் போல கொலைகாரராய் இராமல் கொஞ்சம் கனிவுடன் இருக்க வேண்டுகிறேன்.. அழகான இளைஞர்கள் துன்பப்பட்டால், என்னால் தங்கிக் கொள்ள முடியாது...
Coincidence-ஆ என்னன்னு தெரியல.. இன்னிக்கு செய்தியிலயும்.. மீனவர் பிரச்சனை பத்தி பாத்தேன்.. கதைக்கோசரம் படகேறி அனுபவப்பட்டீங்களா? Your attention to details is just mind blowing!
நானும் தான் coastal town.. மீனவ நண்பர்கள் தம்பி மூலமாக அறிமுகம் உண்டு... அவ்வப்போது.. அழைப்பின் பேரில்... அவர்கள் வீட்டிற்கு சென்று... இறாலோ.. நண்டோ.. வாங்கி வந்த அனுபவமும் உண்டு.. ஆனா ஒரு நாளும்.. அவங்க பொழப்ப பத்தியெல்லாம்.. கேட்டதில்ல..
தவிர.. msvijay சொல்லியிருந்த மாதிரி.. இலங்கை அச்சுறுத்தல் எங்கள் தென் பகுதி மீனவர்களுக்கு இல்லையென்பதால்.. அவர்கள் (நானுமே) அதில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகத் தோன்றவில்லை.. இனி திருத்திக் கொள்ள வேண்டும்..
நல்லதொரு ஆக்கம் ராஜ்குட்டி.. வாழ்த்துக்கள்!!!!
-- Edited by Rotheiss on Wednesday 31st of July 2013 11:01:24 AM
காதலா ! ஐ மீன் ராஜ் குட்டி காதலா!.. சான்சே இல்லை..
சரண் - கார்த்தி அருமையான பாத்திரப்படைப்பு.
எளிமையான மனதை கொள்ளை கொள்ளும் நடை. அதே சமயம் அழுத்தமான வரிகள் .சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லும் நயம்.
//எவ்வளவு கோபமிருந்தாலும் சரண் தனது இரும்பு கரம் கொண்டு கார்த்தியின் இடுப்பை அணைத்தால் அதில் சொக்கி அனைத்தையும் மறந்து விடுவான் கார்த்தி.// - இந்த வரிகள் காதல் வயப்பட்ட மனதின் துடிப்பை எடுத்துக்காட்டினால்..
கடைசி வரிகளோ, " வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள் முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?" - காதலனின் இழப்பை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது.. இழப்பு தரும் வலி எத்தகைய எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை துல்லியமாக சொல்லி இருக்கிறீர்கள்.
சிங்கள வீரன்////
இந்த வார்த்தையை பயன்படுத்தாதிங்க ராஜ்..... நிராயுதபானியின் முன்பு ஆயுதம் காட்டி மிரட்டும் கோழைக்கு பெயர் வீரனா?.... சிங்கள கடற்படையை சேர்ந்தவன் என்று சொல்லலாம், அல்லது காடையன் என்று சொல்லுங்க.....
சிங்கள வார்த்தைகளை எங்க புடிச்சிங்க?.... சின்ன விஷயமானாலும் உங்கள் மெனக்கடல் பாராட்டிற்குரியது....
////இலங்கை கடற்படை அட்டூழியம்;
நாகை, காரைக்கால்,ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் சுட்டு கொலை, ஐம்பதுக்கும் அதிகமானோர்
கைது, வலைகள், படகுகள் சூறையாடல்////
இந்த வழக்கமான செய்திக்கு பின்னால் இருக்கும் ஆயிரம் வலிகளை உங்களின் இரண்டு பத்தி சுருங்க சொல்லிவிட்டது......
மனதை கனமாக்கிய முடிவு, ஆனால் இதுதான் நிஜம்... நித்தமும் நாம் பார்த்து கடக்கும் நிஜம்....
எல்லா போராட்டம்களுக்கும் ஒருகாலத்தில் கிடைக்க இருக்கிற விடியலின் மீதான நம்பிக்கையில் நானும் இருக்கிறேன்....
சிறப்பான முயற்சி, அழகான நடை.... நல்ல விதமான சொல்லாடல்கள், வழக்கு மொழிகளை சிறப்பாக கையாண்டு உள்ளீர்கள்... உங்கள் பயணம் இன்னும் வெகுதூரம் செல்ல எனது வாழ்த்துகள்....
Cant control my tears .no words...படித்துவிட்டு மனசு ரொம்ப கஷ்டமாகிவிட்டது ...கார்த்தி உணர்ச்சிவசப்பட்டு விபரீத முடிவு எடுக்காமல் நல்ல முடிவு தந்தது அருமை...