1). தினமும் உங்கள் வேலைகளை 30 நிமிடங்கள் திட்டம் செய்து கொள்ளுங்கள். ஒரு தாளில் அவற்றை எழுதி கொள்ளுங்கள், வரிசை எங்களை இட்டு, அவற்றிற்கு முக்கியத்துவத்தை பொறுத்து வரிசைபடுதவும்.
2). தினசரி செயல்பாடுகளை திட்டம் தீட்டி வைத்து கொள்ளுங்கள், இன்றைய வேலை நிறைவடைந்து விட்டால், நாளைய வேலைகளை செய்யுங்கள் இன்றே, இதனால் நீங்கள் பெரிய வேலைகளையும் எளிய முறையில் செய்து முடிக்கலாம்.
3). உங்கள் மனதும் உடம்பும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் வேலைகளை செய்து முடியுங்கள் சிலர் காலையும், சிலர் மாலையும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
4). உங்கள் வேலையை ஒரு நேரத்திற்குள் முடிக்க உங்களுக்குள் போட்டி போடுங்கள். இந்த வேலையை நான் 15 நிமிடத்தில் செய்து முடிப்பேன் என்பது உங்களை ஊக்க படுத்தும். 45 நிமிடங்களுக்கு ஒரு 10 நிமிடங்கள் ஓய்வு என்பது அறிவியல் ரீதியாக உடல் நலத்துக்கு நல்லது.
5). இடைவெளி உங்களுக்குள் நீங்கள் கொடுத்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தை நீங்கள் உங்களை உற்சாக படுத்தவோ, களைப்பாறவோ பயன்படுத்தலாம்.
6). உங்களுடைய வேலைகளை தினம் முடித்தவுடன், முடித்த வேலைகளை நீங்கள் படியலில் இருந்து அடித்து விடுங்கள். அது உங்களுக்கு மனதில் சந்தோசமும் ஒரு வேலையை செய்து முடித்த ஒரு நிம்மதியும் கிடைக்கும்.
7). அவ்வபோது உங்கள் பட்டியலை சரிபார்த்து கொள்ளுங்கள். நீக்குவது, சேர்ப்பது உங்களுடைய விருப்பமாக இருக்கட்டும். இன்று உங்கள் மொபைல் போனில் அந்த வசதி வந்து விட்டது பயன்படுத்துங்கள்.
8). உங்கள் சந்தோசத்திற்கு நேரம் ஒதுக்குங்கள், அப்பொழுது தன உங்கள் செயல்பாட்டில் அலுப்பு தட்டாமல் செயல்பட இயலும்.
9). தினமும் 6-8 மணி நேரமாவது கண்டிப்பாக நீங்கள் தூங்க வேண்டும், அப்பொழுது தான் உங்கள் மூளையின் செயல்பாடு, ரத்த ஓட்டம், தெளிவான சிந்தனை, சுறுசுறுப்பான நடவடிக்கைகள் ஏற்படும்.
very useful tips but i follow only one in the above list that is உங்கள் வேலையை ஒரு நேரத்திற்குள் முடிக்க உங்களுக்குள் போட்டி போடுங்கள். இந்த வேலையை நான் 15 நிமிடத்தில் செய்து முடிப்பேன் என்பது உங்களை ஊக்க படுத்தும். ...if I finished in time I had my cup of (filter)coffee..