அசோக் இதுக்கு மேல போக வேண்டாம். இப்ப அடுத்து என்ன பண்றதுனு தெரியல. ஆதி அண்ணாவும் அதுக்கப்பறம் புது நம்பர் மாத்திட்டாங்க. வேற எதுவும் ஃபோன் காலும் வரலை. இதோட இந்த கண்டுபிடிக்கறதை நிறுத்திக்கலாமா? HRக்கு போன் பண்ணா பிரச்சனை. அதுக்கு வேற வேலை தேடிட்டு இங்க இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.
ஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.
"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா"
"என்னடா சொல்ற?"
"நம்ம ஆதி அண்ணாவுக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தினேனு சொன்னாங்க இல்லை"
"ஆமாம்"
"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"
"நம்ம போன் பண்ண பசங்களும், பொண்ணுங்களும் ஆதி அண்ணா மாதிரி நம்பர் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"
"ஆமாம்டா மச்சான். அதை எப்படி மிஸ் பண்ணோம்? இது தான் முக்கியமான விஷயமே. சரி இப்ப அவுங்க நம்பர் எங்க இருந்து கண்டுபிடிக்கறது?"
"எப்படியும் அந்த டேட்டா பேஸ்ல யார் யாரு எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு லிஸ்ட் இருக்கும். இன்ஸ்டிடியூட்ல எப்படியும் அதை மெயிண்டெயின் பண்ணுவாங்க. அந்த லிஸ்ட்ல இருந்து அவுங்க கம்பெனியை பிடிப்போம். அந்த கம்பெனில நம்ம ஃபிரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களானு பார்த்து நம்பர் பிடிப்போம்"
"சூப்பர்டா மச்சான். ஆனா நாளைக்கு லீவாச்சே. எப்படி நம்பர் பிடிக்க? நாளான்னிக்கு திங்க கிழமை தானே. அப்ப பிடிப்போம். ஓகே?"
"இல்லை. இதுல இருக்கற லிஸ்ட்ல எப்படியும் TCS, Infy, Wiproல யாராவது சேர்ந்திருப்பாங்க. அங்க இருக்குற நம்ம ஆளுங்க எவனையாவது நாளைக்கு ஆபிஸ் போய் நம்பர் பார்த்து சொல்லுவோம். அதுல எப்படியும் ஓரளவுக்கு நிறைய பேர் கிடைப்பாங்க. சுலபமா கண்டுபிடிச்சிடலாம்"
"ஓகே. டன்"
ஒரு வழியா பத்து பேரோட ஃபோன் நம்பர் பிடிச்சிச்சாசிங்க. இது மட்டும் வொர்க் அவுட் ஆகிடுச்சினா அடுத்து என்ன பண்ணனும் யோசிக்கனும். இப்ப ஃபோன் பண்ண தான் போயிட்டுருக்கேன். கொஞ்சம் கரகரப்பான குரல்ல பேசணும். அவ்வளவு தான். நேத்து நான் பேசும் போது நீங்க கேக்கல இல்லை. இப்ப கேளுங்க.
"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"
"வாட். ஹூ ஆர் யூ? ஹூம் டூ யூ வாண்ட்?"
என்னடா உடனே கட் பண்ணிட்டனேனு பாக்கறீங்களா? இதுக்கு மேல பேசினா ஆப்பு தான். இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன். இன்னைக்கு எப்படியும் இந்த பத்து பேருக்கு பண்ணிட்டா ஃபிரி ஆகிடலாம்.
"ஹலோ லஷ்மி"
"ஆமாம். நீங்க யார் பேசறது?"
"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"
"நான் கொடுத்து ரெண்டு வாரம் கூட ஆகலயே. ஏன் இப்படி என் உயிரை எடுக்கறீங்க? என்னை தயவு செஞ்சி விட்டுடுங்களேன். ப்ளீஸ்"
"சரி. மறுபடியும் ஒண்ணாம் தேதி பண்றோம்"
ஓ. காட். அப்ப இதை பண்றது கண்டிப்பா ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல இருக்கற ஒரு ஆள் தான் பண்ணியிருக்கனும். இல்லை இது ஒரு குருப்பா கூட இருக்கலாம்.
இன்னைக்கு பண்ண பத்து பேர்ல ஆறு பேர் ஏற்கனவே காசு கொடுத்திருக்காங்க. அப்ப பிரச்சனை இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் தான். இருங்க உடனே சரவணாக்கு ஃபோன் பண்ணணும்.
"ஹலோ நாந்தான் பேசறேன்"
"நாந்தானு எனக்கு தெரிஞ்சவங்க யாருக்கும் பேர் இல்லையே"
"லூஸு விளையாடறதுக்கு இது நேரமில்லை. ஒரு முக்கியமான விஷயம்"
"சொல்லுங்க சார். நாங்க உங்க கூட எதுவும் விளையாட மாட்டோம்"
"மொதல்ல இந்த விஷயத்தை கேளு. பிரச்சனை எங்கனு நாம கெஸ் பண்ணது கரெக்டா ஒர்க் அவுட் ஆகிடுச்சி. பிரச்சனை அந்த டிரெயினிங் இன்ஸ்டிடியூட்ல தான். ஆனா யார் காரணம்னு போக போக தான் கண்டுபிடிக்கனும்"
"இல்லை. யார்னு தெளிவா தெரியாம, சரியான விட்னஸ் இல்லாம போனா நமக்கே பேக் ஃபையர் ஆகிடும்னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு வாரம் வெயிட் பண்ணுவோம். அதுக்குள்ள இன்னும் பலமான விட்னஸ் கிடைக்கும். அப்ப மொத்த பேரையும் பிடிக்கலாம்"