type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
சத்தற்ற வாழ்க்கை என்று...சலித்தது போதும் இன்றேனும் முடிவெடு
இருப்பது கொஞ்சம் காலமே.. வசதியே வாழ்க்கையல்ல வரையறைப்படுத்து அதை
இருப்பதுபோதும்..இப்போது வேண்டாம் எதிர்மறைச்சிந்தனைகள் எப்போதும் வேண்டாம்
வாழ்விழந்து போனாலும்.....வாயிலிருந்து வருவது... வாழ்த்துகளாய் இருக்கட்டும்
பிரிவினைகளால் உனைநீ பிணைத்துத்துக் கொள்ளாதே சுதந்திரமாய் இரு
சுருக்கங்கள் வேண்டாம் முகத்திலும் ...அகத்திலும்...
உடலை உறுதி செய் உலகப்பயணத்தின் வாகனம் அது ,வாகனம் பழுதென்றால்....வாழ்க்கையும்....
தகறாரா தள்ளிவை....அவதூறா அலட்சியம் செய்
உன் உடையைப்போலவேஉள்ளமும் தூய்மையாயிருக்கட்டும்கூடவே..உடலும்..உயிரும் ...
உனக்கே நீ உண்மையாகு உதடுகள் உச்சரிப்பதுஉள்ளிருந்து வரட்டும்
அதுவும்உலகிற்கு உபகாரமாய் இருக்கட்டும்
எதையும்நீசொல்லோடு நில்லாதே...செயலில் காட்டு...சொல் என்பது வார்த்தை உதிர்ப்பது...செயல் என்பது வாழ்க்கை உயிர்ப்பது
அழுவதற்காய் அழு, சிரிப்பதற்காய் சிரி,அழுதாலும் சிரித்தாலும் அது அக்கணத்தோடுப் போகட்டும் உணர்ச்சிகளில் நீ உருக்குலைந்துப் போகாதே..
உணர்வை விட்டுத் தனியனாகு... உனக்கே நீ இனியனாகு, ஐம்புலனை கொஞ்சம் அடக்கிவை.. அறிவை மட்டும் பெருக்கிவை. ...
உன்னையே நீ உன்னில் தேடு தேடலிலே நீயே தொலைந்துபோ மீண்டெழுந்து வரும்போது... மீண்டும் பிறந்திருப்பாய்.. புதிதாய்...
ஆன்மாவை அறிந்துகொள்,அதன் அடியாழத்தில் அமிழ்ந்து செல் அதுவே நீயாகி அடங்கு அதனுள்ளே...
அடங்கியது அடக்கினால் அகிலமும் அடங்கும்...அதில்... அறிந்துகொள் ....
அடக்குவது எல்லாம் அதிகாரமும் அல்ல... அடங்குவது எல்லாம் அடிமைத்தனமும் அல்ல அது உன் ஆன்மாவின் சுதந்திரம்.