Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உங்களுடன் ஒரு கணம்:


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
உங்களுடன் ஒரு கணம்:
Permalink   
 


இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்களைப் பற்றி ஏற்கெனவே ஒரு இணையதளப் பத்திரிகையில் "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் நான் எழுதி எனக்கு உலகளாவிய அளவில் 2 லட்சம் வாசக நண்பர்களை பெற்றுத்தந்த தொடரில் இருந்து சில பகுதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

 

"திரை இசை மூவர்" -  திரை இசையில் மும்மூர்த்திகளாக திகழும் இசை அமைப்பாளர்கள் மூவரைப் பற்றி நான் எழுதி இருந்தேன்.

 

அவர்களில் ஒருவரான திரு. ஜி. ராமநாதன் அவர்களைப் பற்றி இப்போது தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

 

அடுத்த இருவரையும் உங்களுக்கு அறிமுகப் படுத்தலாம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றி இருக்கிறது.

 

இது வெறும் சம்பவங்களின் சேர்க்கை அல்ல.  படிப்பவர்கள் நெஞ்சில் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் அதிகப் படுத்தும் தொடர்.

 

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் சோர்ந்து போக பல சம்பவங்கள், சந்தர்ப்பங்கள் வரலாம்.  அந்த நேரத்தில் நெஞ்சுறுதியோடு சவால்களை எதிர்கொள்ள எனது எழுத்துக்கள் எள்முனை அளவாவது உதவினால் - 

 

அதையே என் எழுத்துக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக நான் கருதுவேன்.

 

சோர்ந்த நெஞ்சங்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் ஒரு டானிக்காக எனது எழுத்துக்கள் அமையும் என்ற நம்பிக்கையுடன்

தொடர்கிறேன்.

 

அடுத்து வரும் சாதனைச் சரித நாயகர் 

 

"திரு. சி. ஆர். சுப்பராமன்"



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

தாராளமாக தொடங்குங்கள், உங்கள் பணியை தொடருங்கள்... வாழ்த்துகள்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Vazhthukkal nanba!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard