"முக்கியமான விஷயமா கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கேன். யாரையும் மீட் பண்ண விடாதீங்க ஸ்ரீ. நீங்களே கொஞ்ச நேரம் ஒரு அரை மணிநேரம் எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணிக்குங்க. இன் கேஸ் ஆப் எமெர்ஜென்சி என்னை இன்டெர்காமில் காண்டாக்ட் பண்ணுங்க. " என்று சொல்லிவிட்டு - தனது மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு கதிரவனைப் பார்த்து "சிட் டவுன் கதிர்." என்றான் திவாகர்.
"கதிர்.. நேற்று உங்களை அந்த கிறுக்கன் கிட்டே விட்டுட்டு போனப்புறம் நான் ரொம்ப பீல் பண்ணினேன். இன்பாக்ட் எனக்கு வீட்டுக்கு போகவே மனசு இல்லே. என்ன பண்ண? இப்படி எல்லாம் கூட கஸ்டமர்ஸ் இருக்காங்க. அவன் மந்திரி மகன். அதனாலே மரியாதையே தெரியாதவன். பார்த்தீங்க இல்லே. என் கிட்டேயே அவன் பேசின பேச்சுக்களை. " என்று நிறுத்தினான் திவாகர்.
"ஆமாம் சார். நான் கூட கவனிச்சேன். நீங்க அவர் கிட்டே சமாளிச்ச விதம் ரொம்ப நல்லா இருந்துச்சு சார். " என்றான் கதிரவன்.
ராஜேந்திரனை கதிரவன் "அவர்" என்று குறிப்பிட்டதை கவனித்தும் கவனிக்காதவன் போல தன் பேச்சைத் தொடர்ந்தான் திவாகர்.
"உங்களை உடம்பு பிடிச்சு விட சொன்னானே. இட் வாஸ் ரியலி அன் இன்சல்ட் டு யு. அதுக்கு நான் ஒத்துக்கிட்டு இருந்து இருக்க கூடாது தான். பட் நீங்க தான் நான் டீல் பண்ணிக்கறேன்னு சொன்னதாலே என்னால அதை அவாய்ட் பண்ண முடியாம போயிருச்சு. ஐ அபாலஜைஸ் பார் தட். " என்றான் திவாகர்.
"நோ நோ. என்ன சார் இது.. என் கிட்டே அபாலாஜி எல்லாம் கேட்டுகிட்டு.. தேவையே இல்லை சார். " என்றான் கதிரவன் அவசரம் அவசரமாக.
"நீங்க சொல்லறதை பார்த்தா - அதுவும் அவனை அடிச்ச நீங்களே இப்படி பேசறதை பார்த்தா.. ரூமுக்குள்ளே அவன் பிஹெவியர்லெ செம சேன்ஜ் இருந்து இருக்கும் போல தோணுது. ஐ திங் சம் திங் இண்டரெஸ்டிங் ஹாவ் ஹாப்பெண்ட். என்ன நடந்துச்சு நான் தெரிஞ்சுக்கலாமா." என்று வெளிப்படையாக கேட்டுவிட்டான் திவாகர்.
ஒரு கணம் திணறிப் போனான் கதிரவன்.
என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று புரியாமல் விழித்தான். சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கமும் அவனுக்குள் ஏற்பட்டது.
திவாகரே தொடர்ந்தான். "கதிரவன். நீங்க ஹெசிடேட் பண்ணறதை பாக்கறப்போ ஏதோ சம்திங் அன் யூஷுவல் மைட் ஹவ் ஹாப்பெண்ட் என்று நினைக்கிறேன். உங்களை நான் என் கீழே வேலை செய்கிறவரா மட்டும் நினைக்கலே. லைப்லே ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துட்டு இருக்கறவர் நீங்க. உங்க மேல எனக்கு ரொம்ப அட்டாச்மெண்ட் - அதுவும் உங்க கதைய கேட்டப்புறம் - உங்களை என்னாலே அந்நியமா நினைக்க தோணவில்லை. அதான் கேட்கறேன். உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்லவேண்டாம். பட் ஏன் இப்படி கேக்கறேன்னா நாளைக்கே ஏதாவது சிக்கல் உங்கள் லைப்லே வந்துடுச்சுன்னா அதை சரி பண்ண நான் ஒருத்தன் இருக்கேன் என்கிற எண்ணத்துலே தான் கேக்குறேன். அப்போ உங்களுக்கு என்கிட்டே பேச இன்னும் தயக்கம் வரும். எதுவா இருந்தாலும் வெளிப்படையா நீங்க பேசினீங்கன்னா நான் சந்தோஷப்படுவேன். பயப்படாதீங்க. இந்த ரூமுக்குள்ளே நீங்க சொல்லற ஒவ்வொரு வார்த்தையும் வெளியே யாருக்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் போகவே போகாது. உங்களுக்கு சொல்லணும் என்று நினைத்தால் நீங்க சொல்லலாம். " என்றான் திவாகர்.
திவாகர் இப்படிப் பேசியதும் கதிரவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
"பெரிய இடத்துப் பிள்ளை.. அதற்கேற்ற மாதிரி ரொம்ப அருமையா நாகரீகமா நடந்துக்குறாரு. இவர் கிட்டே சொன்னால் தப்பு இல்லே." என்ற முடிவுக்கு வந்தவன்.
"அது வந்து சார். ரூமுக்குள்ளே போனதும்.....என்ன நடந்துச்சுன்னா.. " என்று திக்கி திணறி, "முதல்லே அவர் என்னை மசாஜ் பண்ணச் சொல்லி சட்டைய கழட்டினாரு. அப்புறம் என்ன தோணிச்சோ போதையிலே," எனக்கு மசாஜ் பண்ணப்போறேன்னு சொல்லி என்னை டிரெஸ்ஸை கழட்டச் சொல்லி ரொம்ப கம்ப்பெல் பண்ணினாரு. என்னாலே மறுக்க முடியலே. நானும் டிரெஸ்ஸை கழட்டிட்டு படுக்கையிலே படுத்துக்கிட்டேன். என் மேல கைவச்சி.. அவர் தடவினப்போ எனக்கு என்னவோ ஒரு புதுவிதமான பீலிங் வந்துச்சு. நான்.. அவர். ரெண்டு பேரும்.. அது வந்து.. எப்படி சொல்லறதுன்னே புரியலே திவாகர். இதுக்கு மேல என்ன சொல்லறது எப்படி சொல்லறதுன்னு..." - தயங்கி தயங்கி ஒரு வழியாக நிறுத்தினான் கதிரவன்.
ஒரு கணம் அதிர்ந்து போனான் திவாகர்.
"யு மீன்.. செக்ஸ்?" - என்றான் திவாகர்.
"எஸ் சார்." என்று தலை குனிந்தான் கதிரவன்.
மெல்ல அவனருகில் நெருங்கி அவன் தோளைத் தொட்டு முகத்தை நிமிர்த்தினான் திவாகர்.
நிமிர்ந்த கதிரவனின் கண்கள் கலங்கி இருந்தன.
"ஹேய்.. என்ன கதிர் இது? சின்னப் பிள்ளை மாதிரி .. கண் கலங்கறீங்க." என்றான் திவாகர் ஆதரவாக.
அப்படியே அவன் கையில் முகம் சாய்த்துக்கொண்டு அழத்தொடங்கினான் கதிரவன். அவனை அப்படியே அழட்டும் என்று விட்டுவிட்டு ஆதரவாக அவன் முதுகை வருடிக்கொடுத்தான் திவாகர்.
"என்னை மன்னிச்சுடுங்க திவாகர்." என்றான் கதிரவன் ஒருவாறாக தன்னை தேற்றிக்கொண்டே.
அப்படியே டேபிள் மீது சாய்ந்து அங்கிருந்த டம்ப்ளரில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து அவனுக்கு நீட்டிய திவாகர்," முதல்லே டேக் சம் வாட்டர். " என்றான்.
ஒரே மூச்சாக தண்ணீரைக் குடித்து முடித்தான் கதிரவன்.
மெல்ல அவன் தோளைத் தட்டிக்கொடுத்து,"ரிலாக்ஸ் கதிர். ரிலாக்ஸ். உங்களை நான் எதுக்கு மன்னிக்கணும்? நீங்க தான் ஒரு தப்புமே செய்யலையே." என்றான் திவாகர்.
"என்ன திவாகர்.. ஒரு ஆணோட உடல் உறவு வச்சுக்கிட்டு அசிங்கப் பட்டுப் போயிருக்கேனே அது தப்பு இல்லையா?" என்றான் கதிரவன்.
"தட் இஸ் பியூர்லி யுவர் பெர்சனல். அது என்னை எந்த விதத்திலாவது பாதிச்சு இருந்தா என் கிட்டே மன்னிப்பு கேக்கறதுலே நியாயம் இருக்கு. அதனாலே அதுக்கு என் கிட்டே மன்னிப்பு கேக்கறது அர்த்தமே இல்லை கதிர்." என்றான் திவாகர்.
பதிலே பேசாமல் அவன் முகத்தையே ஏறிட்டு பார்த்தான் கதிரவன்.
"எஸ். கதிர். ரெண்டு நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் தோள்மீது கைபோட்டுக்கறதும், சமயத்துலே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ளுவதும் நட்பிலே சர்வ சாதாரணமான விஷயம் தான். அது எல்லாராலும் எற்றுக்கொள்ளக்கூடியதும் கூட. கட்டிப் பிடிச்சுக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கற பிரெண்ட்ஸ் அநேகம், ரொம்ப நெருக்கமான பிரெண்ட்ஸ் அப்படித்தான் இருப்பாங்க. அந்த நெருக்கம் இன்னும் அதிகமாகும் போது இருவரும் ஆடையே இல்லாமல் படுத்துக்குவதும், செக்ஸ் வச்சுக்குவதும் நடக்குது. பட் அந்த உறவு நட்பின் உச்ச கட்ட நிகழ்வாக இருந்தால் அதுலே தவறே இல்லை."என்று ஒரு கணம் நிறுத்திய திவாகர் தொடர்ந்து," உங்க கிட்டே இந்த விஷயத்தை புரியவைக்க சில கேள்விகள் கேட்கலாமா கதிரவன்?." என்று கேட்டான்.
"கேளுங்க திவாகர்." என்றான் கதிரவன்.
"உங்களுக்கும் ராஜேந்திரனுக்கும் இதுக்கு முன்னாலே அறிமுகம் உண்டா?"
"இல்லை." என்று தலை அசைத்தான் கதிரவன்..
"நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா? "
இதற்கும் இல்லை என்றான் கதிரவன்.
"அப்படி இருக்க அவனோடு எப்படி இப்படி ஒரு உறவில் ஈடுபட உங்களால் முடிந்தது. ?" என்று கேட்டான் திவாகர்.
பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் கதிரவன்.
"கதிர் உங்களை சங்கடப்படுத்தணும் என்று நான் இப்படிப் பேசலே. விஷயத்தை புரிய வைக்கணும் என்றே பேசுகிறேன். நடந்தது நடந்து போச்சு. இனிமே ராஜேந்திரனுடன் உடல் உறவுக்கு சம்மதிக்காதீங்க. உங்க மனசை நல்லா புரிஞ்சுகிட்டு ஆத்மார்த்தமான அன்புடன் உங்க கிட்டே பழகுற ஒரு ஜீவன் - வெதர் இட் ஈஸ் எ மேல் ஆர் பீமேல் - கிடைச்சால் - அவனுடைய இல்லை அவளுடைய சம்மதத்தோட யு கேன் ஹாவ் செக்ஸ். அதுலே தப்பு இல்லே. என்ன நான் சொல்வது புரிந்ததா?" என்றான் திவாகர் தெளிவாக.
"ஆமா திவாகர் சார். நீங்க சொல்லறது சரிதான். எனக்கு இப்போ தான் விஷயம் தெளிவாச்சு. குழம்பிப் போயிருந்த என் மனசுக்கு இப்போ தான் நிம்மதி கிடைச்சது. ரொம்ப தாங்க்ஸ் திவாகர். என் மேல நீங்க வச்சு இருக்குற அக்கறையை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சார். "என்றான் கதிரவன்.
"நான் உங்க கிட்டே நிறைய பேசணும் என்று வந்தேன். நான் பேச வந்த விஷயங்களே வேற. இந்த மாதிரி கஸ்டமர்ஸ் கிட்டே பொறுமையா நிதானமா நடந்துக்கணும். அவசரப்பட்டு கைய நீடிடக்க் கூடாது. என்று நிறைய சொல்லணும் என்று வந்தேன். பரவாயில்லே. எப்படியோ உங்களுக்கு தெளிவு கிடைச்சது இல்லே. அதுவே போதும் எனக்கு." என்றான் திவாகர் லேசான புன்முறுவலுடன்.
அந்தச் சமயம் இண்டர்காம் ஒலித்தது.
ரிசீவரை எடுத்து அதனை அட்டெண்ட் செய்தான் திவாகர்.
மறுமுனையில் ஸ்ரீதர்..
"சொல்லுங்க ஸ்ரீதர்.. எனி ப்ராப்ளம்?" என்று கேட்டான் திவாகர்.
wonderful story..! really divakar is a gem of person...! and he know how to handle a situation..! again he proved that he's well educated..! pls continue sir..!
திவாகரையும், கதிரவனையும் என்ன செய்ய போறீங்கன்னு தெரியல.... பாவம் கதிர், அவனை எதுவும் சோகமான முடிவுக்கு ஆளாக்கிடாதிங்க.... நிஜமாவே கதை கலக்கல் பாஸ்.... கொஞ்சம் கலவரமாவும் இருக்கு... சீக்கிரம் அடுத்த பதிவை பதியுங்கள்...
கதிரவன்க்கு இப்பொழுது ஒரு நல்ல ஆத்மா அதுவும் திறமையான வழிகாட்டி கிடைத்தது சந்தோசமாக இருக்கு...கதிரவன் மனம் நோகாமல் அவர் கூறும் வார்த்தைகள் அருமை...
.உங்க மனசை நல்லா புரிஞ்சுகிட்டு ஆத்மார்த்தமான அன்புடன் உங்க கிட்டே பழகுற ஒரு ஜீவன் - வெதர் இட் ஈஸ் எ மேல் ஆர் பீமேல் - கிடைச்சால் - அவனுடைய இல்லை அவளுடைய சம்மதத்தோட யு கேன் ஹாவ் செக்ஸ். அதுலே தப்பு இல்லே...கலக்றீங்க நண்பா...waiting for the next...
"கதிர் உங்களை சங்கடப்படுத்தணும் என்று நான் இப்படிப் பேசலே. விஷயத்தை புரிய வைக்கணும் என்றே பேசுகிறேன். நடந்தது நடந்து போச்சு. இனிமே ராஜேந்திரனுடன் உடல் உறவுக்கு சம்மதிக்காதீங்க. உங்க மனசை நல்லா புரிஞ்சுகிட்டு ஆத்மார்த்தமான அன்புடன் உங்க கிட்டே பழகுற ஒரு ஜீவன் - வெதர் இட் ஈஸ் எ மேல் ஆர் பீமேல் - கிடைச்சால் - அவனுடைய இல்லை அவளுடைய சம்மதத்தோட யு கேன் ஹாவ் செக்ஸ். அதுலே தப்பு இல்லே. என்ன நான் சொல்வது புரிந்ததா?" என்றான் திவாகர் //
இப்போது பெரும்பாலானோருக்கு வேண்டிய தெளிவு இதுதான்........