Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் ....நீ .....நம் காதல்


கவி

Status: Offline
Posts: 67
Date:
நான் ....நீ .....நம் காதல்
Permalink   
 


என்னவனும் நானும் கடற்கரையில் 

 
கால் நனைத்து நடந்து சென்ற பொழுதில் கேட்டேன் ....
 
எப்படி தொடங்கியது நம் காதல் ...
 
ஒரு மௌன தருணத்தில் ஒரே நேரத்தில் 
 
பேச தொடங்கிய போதா......
 
எனக்கு பிடித்த பாடலை நீ முணுமுணுத்த போதா .....
 
உனக்கு பிடிக்கும் என்று நானும் ,
 
எனக்கு பிடிக்கும் என்று மதிய உணவை பரிமாறிக் 
 
கொண்ட போதா .....
 
ஓர் மழை நாளில் குடை இருந்தும் நனைந்தபடி வீதியில் நடந்த போதா ..
 
முழு நிலவு நாளான்று  மொட்டை மாடியில் என் மடிஉறங்கி போன போதா ....
 
மெய் சிலிர்க்க முதன் முதலாய்  என்னுள் கலந்த போதா ....
 
சொல்லிவிடு என்னவனே !!!
 
சிரித்துக் கொண்டே சொன்னாய் ...
 
நீண்ட இந்த ஆகாயத்தை பார் ....
 
பரந்திருக்கும் இந்த கடலை பார் ....
 
இவை எங்கு தொடங்கின.....
 
விட்டுவிடு வீண் ஆராய்ச்சி எல்லாம் ...
 
நம் காதலும் அது போலத்தான் .....
 
தொடங்கிய பொழுது தெரியவில்லை என்றாலும்....
 
அது முடிய போவதும் இல்லை ......


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! Excellent quote..! i like the smartness of the second one..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Superb...
Ennanga achu... kalakkala kaathal kavithai ellam solreenga.. something something???!!!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சிறப்பு மாமா........ வாழ்த்துக்கள்........ ரொம்ப அருமையா இருக்கு .....

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 


.விட்டுவிடு வீண் ஆராய்ச்சி எல்லாம் ...

நம் காதலும் அது போலத்தான் .....

தொடங்கிய பொழுது தெரியவில்லை என்றாலும்....

அது முடிய போவதும் இல்லை ......இந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது ...nd சூர்யா,ஜோ பாடல் ...சுடிதார் அணிந்து வந்த சொர்கமே...ஞாபகம் வருகிறது

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

அருமையான கவிதை..

__________________

gay-logo.jpg

 



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

En kadhalum ippadiye thodangitru..
Iruthiyai iruvarum arivom
Subamaai alla
Sumayaai.....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

நீண்ட இந்த ஆகாயத்தை பார் ....

பரந்திருக்கும் இந்த கடலை பார் ....

இவை எங்கு தொடங்கின.....

விட்டுவிடு வீண் ஆராய்ச்சி எல்லாம் ...

நம் காதலும் அது போலத்தான் .....

தொடங்கிய பொழுது தெரியவில்லை என்றாலும்....

அது முடிய போவதும் இல்லை ......


those words touched me alot


regards

thiva



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard