தளத்திற்கு வந்தவுடன்,எனக்கு காதலன் வேண்டும் என்று கேட்பவர்கள் மத்தியில்,பழகிப் புரிந்து கொள்வோம்,பிடித்திருந்தால் இணைவோம் என்ற உங்களின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
நல்ல வாழ்க்கைத் துணையை கண்டடைய எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம்.
உங்கள் அனைவருக்கும் அன்பு வண்க்கங்கள். நானும் ஒரு ஓரின சேர்க்கையாளர் (bottom). வயது 24. படித்துக்கொண்டு இருக்கிறேன்.நல்ல அன்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எல்லா பெற்றோரை போல என் பெற்றோரும் பல கனவுகளோடு என்னை வள்ர்தனர்.ஆனால் எனக்கு ஆண்கள் மீது மட்டுமே காதல் கொள்ள வேண்டும் என்ற மனநிலை. அதனால் பெண்களை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. ஓரின மனதோடு வாளும் நான் எப்படி ஒரு பெண்ணை மணம் செய்து கொள்வது? ஓரின காதல் சாத்தியமா? ஓரின திருமணம் சாத்தியமா? பல குழப்பங்கள் நடுவில் ஒரு முடிவிற்க்கு வந்துள்ளேன்.
என் வாழ்வு முடிவுற்றது என்ற நிலையில் இருந்த எனக்கு இந்த தளம் ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.வாழ்நாள் முழுவதும் என் உயிராக இருக்கவும், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், அன்போடு அரவணைக்கவும் ஒரு துணையை தேடுகிறேன்.நிச்சயமாக நான் அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனது உயிராக ஏற்றுக்கொள்வேன். அவரின் உணர்வுகளை மதிப்பேன். ஓரினத்தவர் பல பேருடன் உடலுறவு கொள்வதை நினைத்து வருந்துகிறேன். என்னை பொறுத்த வரை உடலும், உள்ள்மும் ஒருவனுக்கே. அவருக்காக வாழ துடிக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்ள விரும்புவோர் என்னோடு நண்பர்களாகுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம். வாழ்க்கை நம் வசமாகும்.