ஒரு முக்கியமான் பொது கூட்டதுக்காக 3 சீனர்களும், 3 தமிழர்களும் இந்திய ரயிலில் பயணம் செய்தார்கள், சீனர்கள் தங்களுக்கான பயணச்சீட்டு வாங்கியிருந்தார்கள், தமிழர்களோ மூவருக்கும் சேர்த்து ஒரே பயணச்சீட்டுதான் வைத்திருந்தார்கள், இவர்கள் எப்படி ஒரே பயணச்சீட்டில் மூவரும் பயணிக்க போகிறார்கள் என்பது சீனர்களுக்கு வியப்பாகவே இருந்தது..
ரயிலில் ஏறியவுடன் மூவரும் கழிவறைக்குள் சென்று கதவைசாத்திக் கொண்டனர்.. டீ.டீயார் வந்து கழிவறை கதவைத்தட்டினார், கதவை லேசாக திறந்து ஒருவர் சீட்டை நீட்டினார், சரிபார்த்து விட்டு டீ.டீயார் சென்றுவிட்டார், இதைப் சீனர்கள் தங்களுக்கு ஏன் இந்த யோச்னை தோன்றவில்லை என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டனர்..
கூட்டமும் முடிந்து திறும்புகயில், சீனர்கள் ஒரே பயணச்சீட்டு வாங்கினார்கள், தமிழர்களோ எதுவும் வாங்கவில்லை, ஒரு சீனர் கேட்டார் எப்படி பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பீர் என்று, பாருங்கள் என்றனர் தமிழர்கள்..
ரயிலில் ஏறியவுடன் சீனர்கள் கழிவறைக்குள் சென்று கதவைதாழிட்டுக் கொண்டனர்.. சிறிது நேரம் கழித்து கதவுதட்டப்பட்டது.. கதவை லேசாக திறந்து ஒரு கரம் சீட்டை நீட்டியது.. சீட்டை பெற்றுக் கொண்ட தமிழர்கள் மறுகழிப்பறையில் நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டனர்..