Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?
Permalink   
 




1. கத்ரினாவுக்கு பொடுகு, கத்ரினாவுக்கு தலைமுடி பிரச்சினை, ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது. 

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

3. உங்கள் தகுதிகளை விட உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள். 

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தைவிட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள். 

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள் அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத்தான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்-கை மூஞ்சி முழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள். 

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல் வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போதுதான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.

கடைசியாக, இதை மட்டும் ஆங்கிலத்திலேயே தருகிறேன் -

20.Mutualfundinvestmentsaresubjecttomarketriskspleasereadtheofferdocumentcarefullybeforeinvesting.

 

#சுட்டது



__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?
Permalink   
 


Totally true..! Even me and my family members talk about some disgusting ads..! Mainly about the men's body pray ads..! They cheaply portraits the womens as sluts..! But the worst thing is womens are doing this type of ads by the sake of money..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ரொம்ப அருமையான விஷயம்..இந்த ad பார்க்கும்போது இது கண்டிப்பாக நினைவு வரும்...கடைசி 20 is super ....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

14 th point is ultimate

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

rmba sariya sonnanka

__________________

praveen



புதியவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink   
 

very nice! really i give a big laugh to every points.



__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

obviously true....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard