உசிர் பிரிஞ்ச அடுத்தநாளே கொசுக்கள் முட்டை வைக்குது மூன்றாம் நாளில் பூஞ்ச புடிச்சு ரத்தமெல்லாம் கருக்குது நகமெல்லாம் கழண்டுபோயி நாலாம் நாளில் உதிருது அடுத்தநாளில் ஈறுகெட்டு பல்லெல்லாம் கழ்ழுது
ஆறாம் நாளில் மூளை உருகி அகப்படாம போகுது ஏழாம் நாளில் காத்தடைத்து வயிறு வெடிச்சு பிரியுது ரெண்டாம் மாதம் உடம்புமொத்தம் உருகி இழகி ஓடுது எல்லா உடம்பும் மரித்த பின்னே இப்படித்தான் மாறுது
நல்லா யோசி நீ செஞ்ச பகட்டு எங்க போகுது இன்னைக்காவது புரிஞ்சுகடா அழகு எங்க வாழுது ?
அளவுகளுக்கும் நிறங்களுக்கும் அழகியலில் இடமில்லே நீ நினைக்கும் அழகெல்லாம் பனியளவும் நிலையில்லே
இருக்கும்போது சிரிக்கவச்சா வழியெல்லாம் வலியில்லே -நீ இறந்து போயி அழவச்சா ,வாழ்ந்த வாழ்க்க பொய் இல்லே