காதலின் பெயரால் ஏமாற்றும் கயவர்கள் 'கே' சமூகத்தில் புதிதல்ல. அப்படிப்பட்ட பெருந்தகையோர் சிலர் நம் தளத்தில் அறிமுகமாகிக் காதல் வலைகளை வீசி வருவதாகத் தெரிகிறது. நண்பர்களே.. காதலிப்பது உன்னதமான விஷயம் தான். ஆனால் அதை சுயலாபத்திற்குப் பயன்படுத்திவிட்டுப் பின் எச்சில் இலையைப் போல தூக்கி எறியும் உத்தமர்கள் தான் இங்கு அதிகம்.
எனவே நண்பர்களே, உன்னை காதலிக்கிறேன், என் வாழ்க்கை உன்னோடுதான் என்றெல்லாம் போலியான வார்த்தைகளுக்கு மயங்கி விடாதீர்கள். இந்த தளத்தை "dating" தளமாகப் பயன்படுத்தும் எண்ணம் எவருக்கேனும் இருந்தால் தயவுசெய்து அதைக் கைவிட்டு விடுங்கள். இந்தத் தளத்தின் மாண்பைப் பாழாக்கும் விதமாய் நடந்துகொள்ளும் உறுப்பினர் யாராக இருந்தாலும் உடனடியாக தடை செய்யப்படுவார்.
குறிப்பு:
*இந்தத் தளத்தில் இருக்கும் யாருடனாவது காதல் வயப்பட்டாலோ,,அல்லது நீங்கள் ஏற்கெனவே காதலர்களாக இருந்தாலோ உங்களைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
*இங்கிருக்கும் உறுப்பினர்களால் எமாற்றப்பட்டிருந்தாலோ,யார் மேலாவது சந்தேகம் இருந்தாலோ,வேறு ஏதாவது பிரச்சனை இருந்தாலோ...........தயவு செய்து அவர்களின் பெயர் மற்றும் அவரைப் பற்றி நீங்கள் அறிந்த தகவலுடன் ஒரு பதிவிடுங்கள் அல்லது நிர்வாகிகளுக்கு அறியத்தாருங்கள்.
*இங்கிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் கண்காணிக்கப் படுகிறார் என்பதைக் கருத்தில் கொள்க
இது ஏமாறுவதையும்,ஏமாற்றப் படுவதையும் தடுக்க உதவும்......
தங்கள் மேலான ஆதரவை எதிர் நோக்கி.......
அன்பைத்தேடி குழுமம்
::பொதுத் தளத்தில் பதியத் தயக்கமாக இருந்தால் நிர்வாகிகளிடம் உங்கள் புகார்களைத் தெரிவியுங்கள்,அவர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்::
-- Edited by anbaithedi on Thursday 20th of June 2013 09:14:50 PM
வேறு ஏதேனும் முன்னெச்சரிக்கை தேவை என நீங்கள் கருதினால் தாராளமாகக் கூறுங்கள்,உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...... //இதுக்கு மட்டும் யாரும் பதில் சொல்லலையே
தளத்தின் உறுப்பினர்கள் மீது கொண்ட அக்கறையால் தமிழன் கூறியிருக்கும் விஷயம் எல்லாம் சரிதான்.. அனால் அதை தமிழன் பதிவுசெய்தது தான் தவறாகிவிட்டது. ஆளாளுக்கு ஒரு திசைக்கு கொண்டுபோய் இந்தப் பதிவையே ஒரு காமெடி ஆக்கிவிட்டார்கள்.. இதுபோல சீரியஸ் விஷயம் எல்லாம் இனிமே நீங்க முயற்சி பண்ணாதீங்க நண்பா.. நமக்கெல்லாம் காமெடிதான் ஒர்க் அவுட் ஆகும்...