காதலில் தோற்றுவிட்டாயா ? சரி .. நான் உன்னை தேற்றட்டுமா ?
எனக்கென்ன உன் வலி தெரியும் என்கிறாயா ?
தம்பி
நீ காதலில் தோற்றதால் காதலியை இழந்தவன் நான் தோற்றதால் வாழ்க்கையை இழந்தவன்
இப்போது சொல் நான் தேற்றலாமா ?
முதலில் கேள்விகளுக்கு பதில் சொல் ...
உனக்கு தேவை காதலியா இல்லை காதலா ?
காதல் போதும் என்றால் அவள் போனதிற்கு ஏன் அழுகிறாய் ? நீ நேசிக்க உலகமே இருக்கிறதே ...
அவள் தேவை என்கிறாயா ? காதல் மறந்த அவளை இனி தேடுவதற்கு வேறு உடல் பார்க்கலாமே ..
சரி
என்ன சொல்லி பிரிந்தாள்?
உன்னிடம் பணமில்லை என்றாளா ? விடு பணம் கொட்டும் எந்திரம் மட்டுமே கணவனாக முடியாது என காலம் அவளுக்கு சொல்லித்தரும் ..
அழகில்லை என்றாளா ? விடு சதையும் நிறமும் பருவத்தோடு பறந்து போகும் என நரைக்கும்போது புரியும் அவளுக்கு ..
அவள்மேல் நீ கொட்டிய பாசம் போதவில்லை என்றாளா ? விடு , பாசத்துக்கு அளவுகோல் பெண்ணின் பக்கத்துக்கு பக்கம் மாறும் .
இன்னொருவனை பிடிக்கிறது என்றாளா ?
சந்தோஷமாய் விலகு , நாளை அவனையும் தாண்டி அவனி தேடுவாள் .
பெற்றோர் பாசம் தடுக்கிறது என்றாளா ? விடு ,பெண்ணுக்கு கணவன் அடுத்த தகப்பன் என புரியாததை வைத்து என்ன செய்ய போகிறாய் ?
கல்வியில் நீ குறைச்சல் என்றாளா ? வாழ்க்கையும் கல்வியும் வேறு வேறு என்ற வாழ்க்கை கல்வி புரியாதவள் விடு உயிரென சொன்னாளா ? உணர்வோடு உடலையும் பகிர்ந்துகொண்டாளா ? உறவென்றால் நீமட்டும் என உறுதியாய் இருந்தாளா ? எப்படி மறந்தாள் என புரியவில்லை என்கிறாயா ? தம்பி இயற்கையை மறந்துவிட்டாயா ? ஆணுக்கு உடல் மட்டும் பலம் மனது நொடியில் உடையும் பெண்ணுக்கு மனது பலம் உடல் எளிதில் வளையும் நீ மனதை தொடவில்லையே ...
எந்த சமாதானமும் ஏற்கவில்லையா நீ ?
என்ன செய்யபோகிறாய் ?
குடிக்கவா ? செய் .. குடித்து குடித்து நீ எடுக்கும் வாந்தியோடு அவள் நினைப்பும் வெளியேறிவிடும் என்றால் குடி..