கொண்டனர் காதல் கண்டனர் திருமணம் வந்தது எனக்கு அழைப்பிதழ் - நான் நெற்றியில் பட்டை என் கலாச்சார சட்டை தோளிலே வேண்துண்டு - தமிழனாக நான்
அலைமோதும் சனக்கூட்டம் மங்கள வாத்தியங்கள் அதிர மான் விழியரும் மழலையரும் கூடி அசைந்தாட -காளைகள் வெள்ளையனின் கறுப்புடையில் காரியங்களை நோக்க தமிழரின் மங்கள விழாவில் தமிழனை தேடினேன்
நேற்று காய்த்த பிஞ்சில் இருந்து நாளை விழ இருக்கும் பழம் வரை எல்லோர் நுணி நாவிலும் ஆங்கிலம் நர்த்தனம் ஆட என் தாய்த்தமிழ் -என் காலடியில் குற்றுயிராய் குறுகி கிடந்தது. உடுத்த உடையில் இருந்து கொடுத்த உண்டி வரை எல்லாமே ஆங்கில நாகரீக ஆதிக்கம்.
தமிழரை அங்கும் இங்கும் தேடினேன் எங்கும் ஆங்கிலத்தமிழன் கருந்தோல் கொண்ட ஆங்கிலத்தமிழா உனக்கேன் உன் தாய்த்தமிழ்மீது இவ்வளவு வெறுப்பு? நக்க வந்த நாட்டில் உனக்கேன் இந்த சோடிப்பு? என் தேனினும் இனிய தமிழை விடவா நீ நக்கும் ஆங்கிலம் இனிமையானது?
இரத்த கண்ணீருடன் என் காலடியில் குற்றுயிராய் இருந்த என் தாய்த்தமிழை தட்டி எழுப்பினேன், கண்ணீரால் எதோ கிறுக்கி இருந்தால் படித்தேன் கண்கலங்கினேன்.
"ஆட்சி இழந்தாய் திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ உயிர் வாழ்ந்து தொலைத்தாய்!-உன்
அடிமை உன் வாழ்வில் ஏன் இந்த நடிப்பு?....nice words...sorry...அருமையான வார்த்தைகள் ...என்ன செய்வது நாங்கள் முதலில் தமிழை அறிமுகம் ஆவதே ஆங்கில வழியில் தானே...முதலில் abcd(easya varumam)...அதன் பின் தான் அ,ஆ,இ,ஈ....என் சில நண்பர்களுக்கு எது உயிரெழுத்து எது மெய்யெழுத்துனே தெரியாது just we say...அ,ஆ,இ,ஈgroup nd க,ஞ,ச group...