Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: படித்ததில் பிடித்தது


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: படித்ததில் பிடித்தது
Permalink   
 


ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?
Ø சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

Ø வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

Ø வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

Ø அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது

Ø அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

Ø வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது

Ø வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது

Ø உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

Ø தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

Ø அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

Ø தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது

Ø தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது

Ø சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது

Ø விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது

Ø அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது

Ø குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

Ø கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது

Ø நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

Ø அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது

Ø இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன இருக்கிறது?

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வீழ்ந்தால் சரித்திரம் சிரிக்காது
வீரனை போர்க்களம் மறக்காது
எழும்வரை இகழ்வுகள் திரும்பாது
எழுந்தபின் விமர்சனம் வலிக்காது

கவலைகள் எல்லாம் போதிமரம்
கடந்த பின்னே ஞானம் வரும்
கட்டுக்கடங்கா வெற்றிகள் தான்
கவலைகள் கடக்கும் கட்டுமரம்

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கருவறையிலிருந்து யாரும் நடந்து வரவில்லை..!
விழுந்து புரண்டு எழுந்து தான் நடை பழகினோம்..!

தோல்வி ஒவ்வொன்றும் வெற்றியின் சாசனம்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கருவறையிலிருந்து யாரும் நடந்து வரவில்லை..!
விழுந்து புரண்டு எழுந்து தான் நடை பழகினோம்..!
--அருமையான வரிகள் நண்பா...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

maams i was fascinated by the first post of this page. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu

«First  <  1 2 | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard