ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. " " என்ன சொல்றே? நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?
அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.
எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.
கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன். அப்பா... என்னம்மா... யார் இந்த பையன் இவர்தாம்பா அவர் அவர் ...ன்னா அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.
அப்படியா வாப்பா..உட்கார். உட்கார்ந்தான். உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.
இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.
அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ? கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.
சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே ? அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.
சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.
அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?
அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.
தோழனே எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்! நீயும் என்னை பார்த்ததில்லை.. நானும் உன்னை பார்த்ததில்லை... இங்கே சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்! உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்! நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்! நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம். ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம் நானிருப்பேன் கலங்காதே,
wow...கதைய விட கவிதை சூப்பர்... ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம் நானிருப்பேன் கலங்காதே,...என்ன ஒரு வார்த்தைகள் ....this is every one need...fully energised words...thnks tamilan...
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதியகாரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுசிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவுபக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்டஅப்பாவுக்கு கோபம் தலைகேறியது…
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறைஉள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான்கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைகொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள்முறிந்துவிட்டதால்.. இனி விரல்களைகுணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து”அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும்இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாகவெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டிஉதைத்தார். கண்ணீருடன் தலையில் கையைவைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்னஎழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் ” ஐ லவ் யூ அப்பா”.
கண்ணம்மாவை குழந்தையாக நினைத்து பாரதி பாடிய பாடல் _____________________________________ சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! ... 1
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே! . ... 2
ஓடி வருகையிலே - கண்ணம்மா! உள்ளங் குளிரு தடீ! ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ! ... 3
பாரதியார் கவிதையில் இல்லாத விஷயமே இல்லை என்பார்கள் ...பெரிய நடனமேதைகளும் இந்த பாட்டிற்கு ஆடி பேர் வாங்கியிருக்கிறார்கள்... உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ! என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! என்னுயிர் நின்ன தன்றோ? ... 7....இந்த வரிகள் பாடும் போது நம் கண்ணில் கண்ணிர் வரும்....
wow...superaa iruku...உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்.அவைகளே உங்கள் நடத்தையாகின்றன....this is really true...whn we have bad habits the view on others is related to that...whn we avoid those habits, its sure that view also changes...short nd sweet...anbaithedi
1. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். சிலர் உங்களது பலவீனத்தை அவர்களது பலமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
2. பள்ளி, கல்லூரிகளில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து முட்டாள் என்று சொல்லும் ஆசிரியரே முதல் முட்டாளாக இருப்பார்.
3. உங்களை விட்டு விலகிப்போவதால் நன்மை நிகழும் என்று சிலர் கருதினால், அவர்கள் விலகும் முன் நீங்கள் விலகிவிடுங்கள். உங்களுக்கு நன்மை நிகழும்.
4. நாகரீக வளர்ச்சி என்பது ஆடையின் அளவைக் குறைத்துக் கொள்வதல்ல. சிந்தனையின் அளவை வளர்த்துக் கொள்வது.
5. உண்மையாக வாழ்ந்து பாருங்கள். சிலருக்குப் பிடிக்கும், பலருக்குப் பிடிக்காது.
6. உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.
7. உங்கள் குழந்தையை பணக்காரனாக வளருங்கள், தவறில்லை. ஆனால் ஏழையை புரிந்துகொள்ளும் படியாக வளர்க்காவிட்டால் இந்த சமுதாயம் தவறாகிவிடும்.
8. முதுமை காலத்து கொடுமையையும், மழலை காலத்து சந்தோசத்தையும் ஒருவனா(ளா)ல் கொடுக்க முடியுமென்றால், அவனே(ளே) உங்களுக்கு உற்ற துணை.
9. உங்கள் எழுத்திற்கு எதிர்ப்பு அதிகமென்றால் அதன் பலம் அதிகமென்றே பொருள்.
10. தியாகத்திற்காக சிறை சென்று திரும்பியோர் குற்றவாளிகளாகக் பார்க்கப்பட்டனர் அன்று. குற்றத்திற்காக சிறை சென்று திரும்புவோர் தியாகிகளாகக் பார்க்கப் படுகின்றனர் இன்று.
11. தலையா ? தன்மானமா ? என்ற நிலை வந்தால், தலையை இழக்கலாம், தன்மானத்தையல்ல.
12. உங்களைவிட்டு எளிதில் விலகிச்செல்ல நினைப்போரை எளிதில் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள்.
13. ஒரு ஆணின் உணர்வுகளையோ அல்லது ஒரு பெண்ணின் உணர்வுகளையோ புரிந்துகொள்ள, நாம் அந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன மனநிலையில் இருப்போம் என்ற அடிப்படையை புரிந்துகொள்ள முயன்றாலே போதும்.
14. பள்ளி, கல்லூரிகளில் பெரும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை. அது ஒட்டுமொத்தத் திறமையல்ல.
15. மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் நண்பர்கள் ஆவதில்லை. அப்படியே ஆனாலும் அது நீண்டகாலம் நிலைப்பதில்லை.
16. சில விடயங்களைப் பேசித் தீர்ப்பது நல்லது. சிலவற்றை பேசாமல் இருப்பது நல்லது.
17. உங்களை மிகைப் படுத்திக்கொள்ள மற்றவருடன் நீங்கள் உயர்ந்தவர்களும் அல்ல. உங்களைத் தாழ்த்திக்கொள்ள அவர்களைவிட நீங்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.
18. நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலே போதும், உங்களின் கருத்துக்கள் 90 சதவீத மக்களைச் சென்றடைந்துவிடும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே அந்த கருத்தின் மதிப்பிற்காகச் சென்றடையும்.
19. பள்ளி, கல்லூரிகளில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவனின் ஒட்டு மொத்த அறிவு/திறமை என்று எண்ணும் நமது சமுதாயமே, அறியாமையின் உச்சகட்ட அளவுகோள்.
20. சில தருணங்களில், ஒருவருடைய இயலாமை அவர்களின் பொறாமையாக வெளிப்படுகிறது.
21. என்னை எவரோடும் ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இவ்வுலகில் என்னைப்போல் நான் மட்டும் தான்.
22. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்துபோகும். ஆனால் அது போன்ற உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.
23. சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
24. நமக்குப் பிடித்தோர் பேசாமல் இருப்பதைவிட வேண்டா வெறுப்பாகப் பேசுவது அதிகமான வலியைத்தரும்.
25. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட அதுவே காரணமாக அமையலாம்.
26. நடந்து கொண்டுவரும் மனித அழிவிற்கு பலநூறு காரணங்களை நாம் பட்டியலிடலாம். ஆனால் மூல காரணம் மனிதன் மட்டும் தான்.
27. நமது நோயைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனையில் உள்ள ஒவ்வொரு மருந்துப் பொருட்களிலும், அதை சோதனை செய்ய இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில், திரைமறைவில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களின் ரத்தக்கறை படிந்திருக்கும். அவர்களும் ஏழைகளாகவே இருப்பார்கள்.
28. நமது நாட்டில் நல்ல தொண்டர்களுக்குப் பஞ்சமில்லை. தலைவர்களுக்கு மட்டுமே.
29. எவனொருவன் சாதி, மத அடையாளங்களைத் தாண்டி மனிதனுக்காக மட்டும் போராடுகிறானோ அவனோடு கைகோர்க்க எனது விரல்கள் காத்துக்கொண்டிருக்கும்.
30. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாக்கப்படும் உறவுகள் யாவும் நீண்டகாலம் நீடிக்கும்.
அனைத்தும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை....ரொம்ப பிடித்தது.... உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.
1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. 2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும். 3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது. 4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது. 5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது. 6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது. 7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது. 8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது. 9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும். 10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.
ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்.. ஏதாவது ஒன்று.உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது…நம்பிக்கை நங்கூரம் போல.கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேலை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும். மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
ரொம்ப நாளாச்சு தமிழன்....10ம் சூப்பர் ....எனக்கு ரொம்ப பிடித்தது ..ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும். nd நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
வாவ் சூப்பர்...just இன்னைக்கு எனக்கு இது ரொம்ப பொருந்தும்...in compputer class I finsished my second seession including project nd started next session the ohter three whom always crtisize mr(already share this with u) got a break in coarse but still continuing the same with others...thnks tamilan