உறைய வைக்கும் குளிர்; நிறைந்திருக்கும் கூட்டம்; கண்ணாடி சுவர் அது தான் கூட்டத்துக்கும் விளையாட்டுக்குமான தடுப்பு;
சப்தம் ஒங்குகிறது; கறுப்பு நிற சட்டையும் நீல நிற சட்டையும் எதிரெதிர் அணிகள். கறுப்பு உள்ளூரணி, நீலம் வெளி அணி.
அவர்கள் காலில் கூர்மையான தகட்டைப் பொருத்திய காலணி; ஆம் அவர்கள் பனித்தரையில் ஹால்ப் விளையாடுகிறார்கள் கறுப்பு அணியும் நீல அணியும் சம அளவில் புள்ளிகள் எடுத்துள்ளன இன்னும் சில விநாடிகளில் அடிக்க வேண்டும்.
அந்த தக்கையை ஒருவன் லாவகமாக அடித்து வருகிறான். அப்படியே மேலே பார்த்தால் அவன் கறுப்பு அணியை சேர்ந்தவன் என்பது தெரிகிறது. அவன் முகம் தெரியவில்லை, காரணம் அவன் பந்தை அடிக்க முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் சட்டையின் பின்புறத்தில் "ஸ்டோன் 17" என அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் திறமையாக கடக்கிறான் எதிர்ப்பவரை எல்லாம்.
ஒரு நொடியில் "சுற்றிப் பார்க்கிறான்; கறுப்பு அணியினர் நீல அணியினரை ஆங்காங்கே இடை மறித்து சமாளிக்கின்றனர்; மக்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது; அவனை முன்னேறி செல்லும் படி சக நபர் கூறுகிறார்;".
அடுத்த நொடியில் அவன் கட்டை அந்த தக்கையை சரியாக உதைக்கிறது அந்த வலையை நோக்கி...
அப்போது மக்களின் ஆரவாரம் எழும் முன் நடுவர், "நேரம் முடிந்ததாக" அறிவிக்கிறார்.
ஸ்டோன், "என்ன...?
நீங்கள் கேலி செய்கிறீரா? உங்களுக்கு பார்வை குறைபாடா...?" என்று சொல்லிக் கொண்டே அந்த கண்ணாடி சுவரில் சாய்கிறான்.
கூட்டம் களைகிறது; அவன் சாய்ந்தவாறே மேலே இருக்கும் ஷ்கோர் போர்டை பார்த்தான்.
அதில் இன்னும் 2 விநாடிகள் இருப்பதாக காட்டியது.
அவன் நடுவரிடம் அதை விளக்கினான். அதற்கு நடுவர் அந்த தகவல் சரியானது அல்ல என்று தன் கழுத்தில் தொங்க விடப்பட்டிருந்த அந்த குறும் எலக்ட்ரானிக் கடிகாரத்தை காட்டுகிறார். ஆனால் அதிலும் 2 விநாடிகள் இருப்பதை இருவரும் கவனிக்கவில்லை..."
தங்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன் எதுவாக இருப்பினும் பரவாயில்லை உண்மையை சொல்லுங்கள் அடுத்த பதிப்பு உங்கள் கருத்துகளை பொறுத்தே தொடங்கலாம் என நினைக்கிறேன்