தலைவர் : ... நான் பேசியவை அனைத்தும் உண்மை, இதைத்தான் தான் திருவள்ளுவரும் தன் நூலில் தெரிவித்துள்ளார்
தொண்டன் : எந்த நூலில் தலைவா ?
தலைவர் : (பெயரை மறந்து...) அந்த நூலின் பெயரை எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்த போது அரசு குறிப்பில் இருந்து அழித்து சதிசெய்துவிட்டனர். அதற்கு இங்கே பலமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
மது பானக் கடையில் குடித்துக் கொண்டிருந்த ஒருவன் பாத்ரூம் செல்ல எழுந்த போது தனது விஸ்கியை யாரேனும் குடித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு துண்டு காகிதத்தில் ,''இதில் நான் எச்சில் துப்பியிருக்கிறேன்.''என்று எழுதி வைத்து விட்டுச் சென்றான்.
சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது அதே காகிதத்தில் வேறு ஒருவன் எழுதி வைத்திருந்தான்,''நானுந்தான்.''என்று.
மனைவி : “என்னங்க....! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க.
மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..
கணவன் : “எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”