Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நகைச்சுவைத் துணுக்குகள்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
நகைச்சுவைத் துணுக்குகள்
Permalink   
 


நண்பர்களே,இந்தத் திரியில்,உங்களைக் கவர்ந்த,அதிகம் சிரிக்க வைத்த நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

____________________________________________________________________________________________________

 

"ந‌ம்ம நாராயணசாமி, ஒரு நூறு ரூபாகூட‌ இல்லாம கஷ்டப்படறாண்டா?"

"ஏ‌ன் உன்கிட்ட கேட்டானா?"

"இல்லைடா நாந்தான் அவன்கிட்ட‌ கேட்டேன். இ‌ல்‌ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ன்."



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

."யோவ் கபாலி.. எதுக்காக திருடிட்டு வீடு பூராவும் கையெழுத்து போட்டு
வெச்சிட்டு வந்தே?"

"சார்.. கையெழுத்து போட பழகிட்டேன். அதுக்கப்புறக் எதுக்காக கைரேகையை விட்டுட்டு வரனும்?"

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நாராயணசாமி : Train கண்டுபிடித்தது நல்லாதாப் போச்சிபா…

சர்தார்ஜி : ஏன்பா?

நாராயணசாமி : இல்லாட்டி போட்ட தண்டவாளம் எல்லாம் தண்டமா இல்ல போயிருக்கும்.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தலைவர் : ... நான் பேசியவை அனைத்தும் உண்மை, இதைத்தான் தான் திருவள்ளுவரும் தன் நூலில் தெரிவித்துள்ளார்

தொண்டன் : எந்த நூலில் தலைவா ?

தலைவர் : (பெயரை மறந்து...) அந்த நூலின் பெயரை எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்த போது அரசு குறிப்பில் இருந்து அழித்து சதிசெய்துவிட்டனர். அதற்கு இங்கே பலமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மேனஜர் : நீங்க சீக்கிரமே ஆபிஸ் வந்து நான் பார்த்ததே இல்லை ச்சே...!

கிளார்க் : சும்மா பொய் சொல்லாதீங்க‌ சார். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு செவ்வாய்கிழமை டான்னு ஒன்பது மணிக்கு நான் வந்தேன்... நீங்க பார்த்திருகீங்க‌.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மது பானக் கடையில் குடித்துக் கொண்டிருந்த ஒருவன் பாத்ரூம் செல்ல எழுந்த போது தனது விஸ்கியை யாரேனும் குடித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு துண்டு காகிதத்தில் ,''இதில் நான் எச்சில் துப்பியிருக்கிறேன்.''என்று எழுதி வைத்து விட்டுச் சென்றான்.

சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது அதே காகிதத்தில் வேறு ஒருவன் எழுதி வைத்திருந்தான்,''நானுந்தான்.''என்று.

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மனைவி : “என்னங்க....! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க.

மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..

கணவன் : “எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard