இன்று, ஒரு பிரபல தமிழ் வார இதழில் ஒரு கதையைப் படித்தேன். கதை என்பதை விட, கொஞ்சம் நீளமான அசைவ நகைச்சுவைத் துணுக்கு என்று கூறலாம்... அதன் சுருக்கம்:
மூன்று நண்பர்கள் காட்டிற்குள் செல்லும்போது ஒரு வனதேவதையிடம் மாட்டிக்கொள்வர். அது அவர்கள் காட்டைவிட்டு திரும்பிப் போக முடியாது என்றும், மாற்றாக அவர்கள் மூவருக்கும் ஆளுக்கு ஒரு வரம் தருவதாகக் கூறும். முதல் இரண்டு நண்பர்களும் மிகப்பெரிய ஒரு அரண்மனையும், அவர்கள் இன்புற தினமும் ஆளுக்கொரு பெண்ணும் வேண்டும் எனக் கேட்பர். மூன்றாமவன் அந்த முதல் இரண்டு நபர்களையும் ஓரினச்சேர்க்கையாளர்களாக (அங்கு இந்த வார்த்தைதான் குறிப்பிடப்பட்டு இருந்தது) மாற்றிவிடும்படி கேட்பான்.
இதில் என்னை இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது, 'ஓரினச்சேர்க்கையாளர்' என்ற வார்த்தைதான். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் வில்லன் கதாபாத்திரம் வால்டிமார்ட். கதையில் அவன் பெயரைச் சொல்லவே எல்லா மக்களும் பயப்படுவர். அதுபோல, நம் வெகுமக்கள் ஊடகங்கள் இதுநாள்வரை, தன்பாலீர்ப்பைக் கண்டு அஞ்சுவதைப் போல புறக்கணித்தே வந்தன. நம் சமூகத்தில் யாரும் அப்படி இல்லை என்பது போல, அப்படி ஒரு விஷயமே இல்லாத்துபோல மௌனம் சாதித்து வந்தன. அது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
இப்போது அச்சில் வந்திருக்கும் இந்தச் சொல், ஒரு புதிய சகாப்த்ததின் ஆரம்பம் என்றெ சொல்லவேண்டும். சரியோ, தவறோ, நாமும் சில ஜீவராசிகள் இருக்கிறோம் என்பது தெரிந்தால்தான், அதன்பின் அந்த மக்களிடம் சென்று நம் நியாயங்களை எடுத்துவைக்க முடியும். நம்புவோம். காலம் மாறும்...
அன்புடன்
அரவிந்த்.
-- Edited by ArvinMackenzie on Tuesday 28th of May 2013 12:43:05 AM