தமிழில் நல்ல பயிற்சி இல்லாமல் நூல்களுள் அங்கங்கே ஐயத்திற்கிடமான சில செய்யுட்களை மட்டும் மனப்பாடம் செய்துகொண்டு, படித்த பண்டிதர்கள் யாரையேனும் கண்டால் அந்தப் பாடல்களைச் சொல்லி பொருள் கேட்பது சிலருடைய வழக்கம்!! இது எல்லா அறிஞர்களுக்கும் தெரிந்திருத்தல் கூடும்!!
அவ்வித குணமுள்ள ஒருவர் சிவஸ்ரீ மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் நீடாமஙகளத்தில் இருந்த போது அவ்விதமான பாடல்களுக்கு பொருள் கேட்டுவந்தார்..... மஹாவித்வான் பிள்ளையவர்களோ.... எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் பொருள் சொல்லிவந்தார்!!
கேள்வி கேட்டவரோ....இறுதியாக திகைத்துப் போய், அதுகாறும் தமக்குப் பொருள் தெரியாத, ஒரு பாடலுக்கு பொருள் கேட்டார்!! அந்த பாடல்:
பிள்ளையவர்கள் சொன்னார்; ' காலைக்காட்டும் என்பது இதன் பொருள்!! கழுக்குன்றத்தை அடைந்தால்அத்தலம் சிவபெருமான் திருவடியைக் காணச்செய்யும் என்பது இதன் கருத்து!! இது, 'பிணக்கில்லாத பெருந்துறைப் பெரும் பித்தனே!.... என்வினை யொத்தபின், கணக்கிலாத்திருக் கோல நீ வந்து காட்டினார் கழுக்குன்றிலே!!' என்பதை நினைத்து பாடப்பெற்றது! - என்றார்!!
(இதில் உள்ள காணிகள் மொத்தம் 20!! 20 காணி கொண்டது கால் என்னும் எண்!! காலென்து இங்கே பாதத்தைக் குறிக்கிறது!!)
இது போல் ஆழ்வார்கள் நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் இருக்கு தமிழன்,இவர்கள் எட்டுவிதமான கவியில் பாட வல்லவர்கள்...இப்போது கற்றுக் கொண்டு வருகிறேன் ...தேர் கவி என்று ஓன்று வாசித்து காட்டினார்கள்...it give the feel of running a chariot...whn I see this type of tamil poems I feel very guilty now...
-- Edited by samram on Sunday 26th of May 2013 07:11:05 PM