என் முதல் கதையை ஏற்று கொண்ட இனிய வாசகர்களுக்கு நன்றி.
"நில்லுங்கள், மதன்" இது நான் அடுத்து தொடரப்போகும் கதையின் தலைப்பு. என்றைக்கும் நம்மை தொடர்ந்து வருவது நம் மனது. யார் வந்து போனாலும் நம்மோடு பயணம் செய்வது நம் தோழன் மனது. வந்தவர்கள் விட்டு போன சுவடுகள் உறங்கும் போது கனவுகளாய், உறங்காதபோது நினைவுகளாய் நம் மூச்சோடு கலந்து இருக்கும்.
துரத்தும் கனவுகள், அழைக்கும் நினைவுகள். இரண்டுக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மது. அவன் நினைவில் மட்டும் வாழும் மதன். மது சக்ரவர்த்தி மனதில் தீராத பாரத்தை இறக்கி விட்டு சென்ற மதன் அண்ணாவை தேடுகிறான். மது மதனை சந்திக்கிறானா? இது தான் கதை.
படித்து விட்டு தப்பித்து செல்லாதீர்கள் நண்பர்களே தவறாமல் உங்கள் கருத்தினை பதியவும்.