Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கார்த்தியின் அப்பா - முடிவுரை


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
கார்த்தியின் அப்பா - முடிவுரை
Permalink   
 


முடிவுரை 

பிரபு வாசுதேவன்

வெற்றிக்கு செமஸ்டர் வெகேசன் முடியும் வரை அவனை விட்டு பிரியவில்லை. ஒ எம் ஆரில் இருக்கும் இன்னொரு பார்ம் ஹவுஸிலும் இங்கேயும் மாறி மாறி இருந்தோம். வேலைகளை தெளிவாக டெலிகேட் செய்து ஏவல்களை ஈமெயில் வழியாக அனுப்பி கொண்டு இருந்தேன் மிக மிக ரம்யமாக மாறி கொண்டு வந்தது என் வாழ்க்கை. அவன் என்னை பிரபு வாசுதேவனாக தான் பார்த்தான். என்னுடைய அடையாளங்கள் அவனை அச்சுறுத்தவில்லை. எனக்கு பின்னே இருக்கும் சாம்ராஜ்யம் அவனை அசைக்கவில்லை. அவனிடம் எந்த பிசிறும் இல்லை. தெளிவான எண்ணங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவனால் எல்லா சூழ்நிலைகளிலும் கவனத்துடன் அணுக முடிந்தது. உணர்ச்சி வசப்படும் நிலைகளை எல்லாம் கடந்தவன்.அவனால மட்டும் தான் என்னையும் என் குடும்ப சூழல்களுக்கும் அனுசரித்து போக முடியும். ஒரு நாளும் அவனுடைய அன்பு என்னை கட்டி போட்டது இல்லை. ஒரு நாளும் இந்த உறவு எதற்கும் குறுக்கே வந்தது இல்லை. அவன் அவனாகவே வாழ்கிறான். அந்த சிறுவனுக்குள் இருக்கும் முதிர்ச்சியும் எனக்குள் இருக்கும் இளமையும்  எங்களை இன்னமும் ஒன்றாக பிணைத்து வைத்து இருக்கிறது. வெற்றி, முகமூடி இல்லாத நேர்மையானவன் காதலிலும் உறவிலும்.

 வெற்றி செல்வன்

அதற்கு பிறகு ஹாஸ்டலில் கடைசி வருடம் நானும் கார்த்தியும் ஒரே அறையில் தான் இருந்தோம். முன்பே நாங்கள் முடிவு செய்தது தான். அவனுக்கு ப்ராஜெக்ட், மேற்படிப்புக்கு தேவையான தேர்வுகளுக்கும் தயார் செய்து கொண்டு இருந்தான். என்னுடைய நட்பில் மாற்றம் இல்லை. அந்த குழந்தையும் மாறவில்லை. நான் முன்பை விட சாந்தமானது அவனுக்கு பிடித்து இருந்தது. நான் தான் அந்த கடைசி வருடத்தை பேலன்ஸ் செய்ய நிறையவே தடுமாறினேன். வார கடைசியில் பிரபு காரில் வந்து அள்ளி கொண்டு போய்விடுவார். கல்லூரி முடிந்தது. அவனும் எம் எஸ் படிக்க போய்விட்டான். நீயும் அங்க போய் படிடா என்று அவர் சொன்னாலும் என்னுடைய எண்ணம் எல்லாம் மிக சிம்பிள் ஆன வாழ்கை. அது இங்கே தான். பிரபுவோடு தான். வெளியே வேலை கிடைத்தது.அடிக்கடி வற்புறுத்தி கொண்டு இருந்தார். மிக சமீபத்தில் தான் அவருடைய நிறுவனங்களின் மேலாண்மையில் பங்கெடுத்து இருக்கிறேன்.

 

எல்லோருக்கும் உறவுகள் அமையும். கொஞ்சம் அன்பும் நிறைய  கமிட்மென்ட் இருந்தாலே போதும். பொருந்தாத உறவுகள் கூட சிறப்பானதாக மாறும்.

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...very nice...seems like viewing a movie..முதலில் கொஞ்சம் ஆபாசமாக தோன்றியது but infront of their love it diminishes...esp Im very impressed by the the last line of the story...கலக்குறிங்க night...எல்லோரும் gay lovena sad ending தான் கொடுப்பாங்க.. I like ur happy and perfect ending...waiting for the next...MOVIE...sorry story...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

ரொம்ப அருமையான முடிவு

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எல்லோருக்கும் உறவுகள் அமையும். கொஞ்சம் அன்பும் நிறைய கமிட்மென்ட் இருந்தாலே போதும். பொருந்தாத உறவுகள் கூட சிறப்பானதாக மாறும்./////

அருமை........

__________________



புதியவர்

Status: Offline
Posts: 17
Date:
Permalink   
 

மிக அருமையான கதை, 50 சதவிகிதம் என்னுடைய fantacy க்கு பொருந்துகிரது. மிக்க நன்ட்ரி நன்பரெ

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

good

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard