திரும்பவும் நான் எழுந்த போது மணி பதினொன்று. அவர் விசயத்தை சொல்லி விட்டு போய் விட்டார். அவர் திரும்ப வரும் வரை வீட்டிலேயே இருக்க சொன்னார்.குளித்து மதியம்சாப்பிட்டு விட்டு மறுபடியும் தூங்கினேன்.நடுநடுவே போன் செய்து பேசினார். ஆளை அடித்து போட்ட மாதிரி ஒரு உறக்கம். அவர் மட்டும்மாலையில் வந்தார். கண் விழித்து அவராய் பார்த்த போதுஉடலிலும் மனதிலும் அசதி அகன்று ஒரு புது வலிமை வந்தது போல் இருந்தது.
அவர் குளித்து விட்டு வந்து என்னை அவசர அவசரமாக கிளம்ப சொன்னார். மயானத்தில் காரியம் முடிந்ததாக சொல்லி சிறிது நேரத்தில்எல்லோரும்வரபோவதாக சொன்னார். நாம் இங்கிருந்து உடனே போக வேண்டும் என்று அவசர படுத்தினார்.எங்கே போக போகிறோம் என்று தெரியவில்லை. வீட்டுக்கு போய்விடலாம் என்று முடிவுசெய்தேன். லேப்டாப் எடுத்து வைத்து கார்த்திக்கு போன் செய்தேன்.
"கார்த்தி, உடனே அப்பா வர சொன்னார்.எதோ அவசர வேலை இருக்காம்.நான் வீட்டுக்கு போய் விட்டு போன் செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுநானும் கிளம்பினேன் அவனும் என்னை நாள் முழுக்க தனியாக விட்டு விட்டதற்காக வருத்த பட்டான்.
காரை திறந்துஉட்கார சொல்லிவிட்டு வாட்ச் மேனிடம் ஏதோ பேசினார். அவர் வெள்ளை டி ஷர்ட் நீல நிற ஜீன்ஸ்அணிந்து இருந்தார். மாலை வெளிச்சத்தில் அவர் இன்னும்அதிகமாகஒளிர்ந்தார்.அவர் உடல்மொழியில் கம்பீரம் வழிந்தது. கையை உயர்த்தி பேசும் போதும், கைவீசி நடக்கும் போதும் அவர் என்னை வசீகரித்தார். குரலில் காந்தம் ஈர்த்தது.அவர் பேசும் போது மீசை நகர்ந்ததும், உதடு அசைவதும் ரகசியமாய் ரசிக்க தூண்டும். அவர் ஒவ்வொரு செயலிலும் ஆளுமை மிளிர்ந்தது.
குளு குளு ஏசி. கார் வழுக்கி கொண்டு நகர்ந்தது. கேட் தாண்டி மெயின் ரோட்டிற்கு வந்ததும்,“உங்களுக்கு அவசர வேலை இருந்தால் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுங்கள்" என்றேன்.உடனே காரைநிறுத்தவும் எனக்கு எதுவும் புரியவில்லைஅடுத்து அவர் செய்தது ஆச்சரிய பட வைத்தது. சீட் பெல்டை போட்டு விட்டு, சீட்டை பின்னுக்கு தள்ளி விட்டார். என் மேல் உரசி மெல்லிய முத்தம் தந்தார்.
"எங்கே போறோம்” என்றேன்.
"உங்க வீட்டுக்கு" என்றார் நான் மௌனம் ஆனேன்.
"அமைதியா என்னோடு வா.போன பிறகு உனக்கே தெரியும்." என்றார்.
நிறைய பேசினோம். சினிமா கமல் கல்லுரி வாழ்க்கை இளையராஜா காதல் பெண்கள் என்று பேச்சு கிளை கிளையாக பிரிந்தது. சில நகைச்சுவைகளுக்குவாய் விட்டு சிரித்தார். நடு நடுவே என் தலையை தடவினார். குறும்பான என் கலாய்த்தலுக்குகாதை திருகினார். இந்த பயணம் இருவரின்இடைவெளியைஇன்னும்குறைத்தது. நிறைய பேச பேச இருவருக்கும் சுலபமான புரிதல் உருவானது.
நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி பஸ்சில் பயணம் செய்து வந்தேன். திரும்ப செல்லும் போது ஒரு அரசனின் பல்லக்கில், அதுவும் அந்த அரசனே எனக்காக கார் ஒட்டுகிறான். ஓர் இரவு எவ்வளவு மாற்றங்களை தந்துள்ளது.
ஒரு மிக பெரிய வீட்டின் முன் கார் நின்றது. காரின் வெளிச்சத்தை தவிர எங்கும்இருள் அடர்ந்து இருந்தது. காவலாளி கதவை திறக்க உள்ளே சென்றோம்.எனக்கு வியப்பாக இருந்தது. அத்தனை கலை நயம், சிறப்பான இன்டீரியர்ஸ்.
"இனி இது தான் உன் வீடு" என்றார். நான் பரிகசித்தேன்.
"நீ நான் மட்டும் தான் இருக்கபோறோம்" என்றார்.
எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அவை வெறும் அந்த நேரத்து வார்த்தைகள். என்னை கவர்வதர்க்கான கானல் வார்த்தைகள். இப்படியெல்லாம் புனைந்து பேசி மயக்கினால் தான் நான் இன்னமும் இணக்கமாவேன் என்று என்ன வேண்டாம் சார்.பொய் பேசி நடிக்க வேண்டாம்.நீங்கள் நீங்களாகவே இருங்கள். நான் நானாகவே இருக்கிறேன். ஆசை தீரும் வரையில் ஒன்றாக திளைத்து இருப்போம். சுயநினைவு வந்ததும் மயக்கம் தெளிவோம்.நான் நிறைய ஏமாற்றத்தைசந்தித்து வந்திருக்கிறேன் சார். மற்ற இளைஞர்களை போல மயங்க மாட்டேன். வீணாக மயக்க முயற்சிக்க வேண்டாம் மாறாக என்னிடம் அன்பை காட்டுங்கள்.
என் மனதின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு அவரிடம் தயங்கினேன்.எது உண்மை எது நடிப்பு என்று பிரிக்க முடியவில்லை அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டாமல்காத்திருந்தேன் எனக்கு நம்பிக்கை வரும் வரை அவர் சுயரூபம் இன்றில்லைஎன்றாலும்நாளை அல்லது இன்னொரு நாள், என்றைக்குமோகம் அலுக்குமோ அன்று வெளிப்படட்டும் அதுவரை பொய்யோ மெய்யோ உங்கள் அன்பை நான் மதிக்கிறேன் சார்.அது வரை என்னை நீங்களும் உங்களை நானும் எக்ச்ப்லாயிட் செய்வோம்.
மாடிக்கு அழைத்து போனார்.மிக பெரிய அறை, அதன் உள் கதவை திறந்தால் காற்று ஜில்லென்று வீசியது. முதலில் காற்றின் இரைச்சல் போல் இருந்தது, உற்று பார்த்து உணரும் போது அது அலைகளின் இறைச்சல். நான் இருப்பது ஈ சி ஆரா.தூரத்தில்கடல்.
":இல்லை இது பாண்டி சேரி அருகில். என்னுடைய பீச் ஹவுஸ்" என்றார். கட்டை சுவரில் சாய்ந்து தம் எடுத்து நீட்டினார். இன்றைக்கு இது தான் முதல் சிகரட்.
"நானும் தான். காலைல இருந்து ஒரே ஓட்டம். இப்போ தான் ரிலாக்ஸ்டா இருக்கு" என்றார்.
லேசாக சிரித்தேன். அந்த இடம் ரம்யமாக இருந்தாலும் பொருந்தாமல் தவித்தேன். என்னை கடத்தி கொண்டு வந்தது போல் உணர்தேன். சடாரென்று என் மனம் மாறுவதை தவிர்க்க முடியவில்லை.
"ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத. உன்னோடு இருக்கணும். இதை தவிர எனக்கு எதுவும் தெரியவில்லை. இழவு வீட்டில் இருந்தாலும்பகல் முழுதும் உன்னை தான் நினைச்சு கிட்டு இருந்தேன். நீ எனக்கு வேணும். ப்ளீஸ் தயவு செய்து மௌனமா இருக்காத. என்னை புரிஞ்சக்க டா குட்டி. ப்ளீஸ்" என்று அவர் இரங்கிய போதுஎனக்குள் இருந்த அச்சங்கள் விடைபெற்றது.
அவருடைய கண்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்பாராமல்கிடைத்த அரிய சுகங்களை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கை ஒளிர்ந்தது, அவருக்குள் மறைந்து இருந்த இச்சைகளை வேட்டை ஆடியவன் நான். என்னிடம் அவர் மன்றாடுவது என்னை தவிப்புக்கு உள்ளாக்கியது. மார்புக்கு குறுக்கே அவர் கை கட்டி நின்றது அவருடைய மேனரிசம் இல்லை. ஒரு சிறுவனிடம் யாசகம் கேட்பது அவர்உள்ளுணர்வயும் தாண்டி எனக்கு வெளிப்பட்டது. நான் எந்த மாற்றமும் வெளிபடுத்தாமல் இழுத்து புகை விட்டேன். நான் அவரை ஏளன படுத்துவதாக அவர் உணர்ந்து இருக்க வேண்டு, இன்னும் மௌனமாக தம் அடிப்பது அவரை இம்சை படுத்த .என்கண்களை சந்திக்க மறுத்து திரும்பி நின்று கடலை பார்த்தார். சிகரெட்டை சுண்டி விட்டு, அவர் அருகில் வந்தேன். பின்புறமாக அவரை அணைத்தேன்.முதுகில் முகத்தை தேய்த்தேன். அவர் திரும்பி ஆர தழுவினார். ஆவேசமான தழுவல், அனுமதி கிடைத்ததும் அவருக்குள் பொங்கிய உற்சாகம் அவர் முகத்தால் என் முகத்தை தேடும் போது புரிந்தது. முகமெங்கும் முத்தம் கொடுத்தார். வெற்றி வெற்றி என்று பிதற்றினார். விலக்கிதிரும்பவும் அணைத்தார் என் கண்களை பார்த்து, ஐ லவ் யூ என்றார்.
பிறகு இருவரும்அறைக்குள் வந்தோம். மிக அழகிய படுக்கை, சுவரில் அலங்கார சித்திரம். மேன்மையான ரசனை இந்த வீட்டை உருவாக்கியவனுக்கு இருக்க வேண்டும். வேறு யார் அவராக தான் இருக்கு முடியும்.
"குளிக்கலாமா?" என்றார். "கீழே ஸ்விம்மிங் பூல் இருக்கு, ஸ்விம் பண்ணுவியா"" என்று கேட்டார். எனக்கு டக்கென்று மௌத் ஆர்கன் வாசிக்க தெரியுமா என்று வாலி படத்தில் அஜீத்தை கேட்டது போல் இருந்தது. தெரியாது என்று சொன்னால் இவர் கற்று தர போகிறாரா.
"நான் சொல்லி தரட்டுமா?" என்று கேட்டார்.
என் கண் முன் அவர் எந்த தயக்கமும் இன்றி உடைகளை களைந்தார். முற்றிலும் ஏதும் இன்றி உடைகளை கொக்கியில் மாட்டினார். இனி இருவருக்கும் நடுவில் என்ன ஒளிவு மறைவு. என்ன தயக்கம். அந்த வெளிபடையான செயலில் அவருடைய தெளிவான ஆளுமை தெரிந்தது. அது வரை யாரையும் நம்பாத ஒருவர் என் மீது நம்பிக்கை வைத்து என் முன்பு தயக்கம் இன்றி வெளிச்சத்தில் அந்தரங்கத்தை துகிலுரித்து காட்டினார்.முழு மேனியுடன்சுலபமாக அவர் என்னை எதிர்கொள்வது வியப்பாக உள்ளது. அதில் அவருக்கும் எனக்குமான இன்டிமசி வெளிப்பட்டதுஎதிர் பக்கம் சாதரணமாகநடந்து கப்போர்டில் இருந்து டவல் எடுத்து இடுப்பை சுற்றி கட்டி கொண்டார்என்னை பார்த்து கெட் ரெடி என்றார்.
வெற்றியை நினைத்து வருத்தமாக இருக்கு...அன்புக்கு ஏங்கும் அவனை வாசுதேவன் புரிந்துகொள்வாரா என்று பயமாகவும் இருக்கு...I can understand his feeling...his only love and affection is his dad...so he is in need of that frm a man of same age group...Is it correct Mr.night ?...Ok waiting for the next
-- Edited by samram on Tuesday 21st of May 2013 11:48:42 AM