Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துன்பச்சுற்றுலா


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
துன்பச்சுற்றுலா
Permalink   
 


@samram
நன்றி நண்பா.. தொடர்ந்து எனக்கு அதரவு அளித்து வருகிறீர்கள்..

@ramnav
டேன் பிரவுன் உடன் என் கதையை ஒப்பிட்டு அளவுக்கு அதிகமாக என்னைப் பெருமைப்படுத்திவிட்டிர்கள் நண்பா.. அவருடைய "digital fortress" படித்திருக்கிறீர்களா? என்னுடைய அடுத்த பதிப்பில் அதன் தாக்கம் கொஞ்சம் இருக்கும்.

இன்னொரு விஷயம் நண்பர்களே.. சிறுகதைப் போட்டிக்கு கதை தயார். இன்று இரவு அனுப்பப்போகிறேன்.



-- Edited by ArvinMackenzie on Sunday 2nd of June 2013 10:44:40 PM

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

7

“மித்ரா! இந்த விண்வெளி நிலையத்தோட வயர்லெஸ் கண்காணிப்புக் காமிரா கனெக்ஷன் எல்லாம் என்க்ரிப்ட்(Encrypt : மறைமொழியாக்கம்[†]) செய்யப்பட்டிருக்கா?” என்று தன் மின்னணுக் காரியதரிசியிடம் கேட்டான். அது ஒரு பெருக்கல் குறியைக் காட்டியது. “முழு இயங்குநிலைக்கு மாறு” என்று கட்டளையிட, “இயங்குநிலை மாற்றப்பட்டது” என்று பதிலளித்தது. “சரி. அந்த என்கிரிப்ஷன்?” என்று விஜய் கேட்க, “எதுவும் இல்லை. ப்ளைன் ஆகத்தான் இருக்கிறது” என்று பதிலளித்தது.

விக்கி மிக ஆச்சரியமாக, “இது பேசுமா டா?” என்று கேட்டான்.

“பாடவே செய்வேன். என்ன பாட்டு வேணும்?” என்று கேட்டது மித்ரா.

“இவ்ளோ நேரம் அது பேசிக் மோடில் இருந்தது டா. இது பெரிய வாயாடி. பாக்கத்தான போற..” என்றான் விஜய். விக்கி வாய்பிளந்து நின்றான்.

“நீங்க பாக்கவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு” என்று அறிவித்துவிட்டு, மித்ரா தன் திரையில் ஒரு காணோளியைக் காட்டியது. அதில் ஒரு நபர் கையில் லேசர் துப்பாக்கியுடன் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தான். “பெயர் உதய். டோவப் தீவிரவாதி.” என்றும் அறிவித்தது.

விக்கி ஆச்சரியத்தில் உறைந்து போனான். “உயிரோட இருந்தா பின்னால ஆச்சரியப்பட்டுக்கலாம். இப்ப வர்றவன கவனிக்கணும்.” என்றான் விஜய்.

“சரி என்ன பண்ணலாம்?”

“ஏன் எப்பவும் என்னயே கேக்குற? ஆக்ஷன் எல்லாம் உனக்குத்தான் நல்லா வரும் நீயே இத சமாளி.”

“ஆக்ஷனா? அது நல்லா வரும்.. நீ எங்கயாச்சும் பாதுகாப்பா போய் ஒளிஞ்சுக்க. இத நான் பாத்துக்கறேன்.”

“அவன் கைல துப்பாக்கி இருக்கு. வீரத்த கொஞ்சம் கட்டுப்படுத்திக்க.”

“எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ வேகமா பொய் ஒளிஞ்சுக்க.”

“பேசுனது போதும். அவன் வந்துட்டான். போய் ஒளிஞ்சுக்குங்க.” இடைமறித்தது மித்ரா.

சில நொடிகளில் உதய் உள்ளே நுழைந்தான். “நீங்க இரண்டு பெரும் இங்கதான் ஒளிஞ்சு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். வெளிய வாங்க.”

எந்த சலனமும் இல்லை.

“ஒழுங்கா வெளிய வாங்க. நானா கண்டுபிடிச்சா உடனே கொன்னுடுவேன்.”

“வர்றோம். சுட்டுடாத” என்று கேட்டது விஜயின் குரல். விஜய், விக்கி இருவரும் கைகளை உயர்த்தியபடி வெளியே வந்தனர். துப்பாக்கி அவர்கள் மார்பைக் குறிபார்த்துக்கொண்டிருந்தது.மெல்ல உதயை நோக்கி வந்தனர். அவர்கள் அவனை நெருங்கவும், வாசலில் இருந்து அதிகாரமாக ஒரு குரல் “உதய்” என அழைத்தது. இருவர் முகத்திலும் அதிர்ச்சி.. என்ன என்பது போல உதய் திரும்பிப் பார்த்தான்.

அவ்வளவுதான்..  ஒரே நொடியில் விக்கியின் கால்கள் காற்றில் சுழன்றன. துப்பாக்கி எகிறிப் பறந்தது. அடுத்த உதை உதயின் தலையில் விழ, அவன் மூர்ச்சையாகித் தரையில் விழுந்தான்.

“இவனை என்ன பண்ணலாம்?” என்று கேட்டான் விக்கி.

“அவன் இங்கதான் வந்தான்னு இவன் கூட்டாளிகளுக்குத் தெரியும். வேற எங்கயாச்சும் ஒளிச்சு வைக்கணும்.”

“எங்க?”

“இரு வர்றேன்”

நேராக வாசல் அருகில் சென்றவன், நிலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த மித்ராவை எடுத்து கைகளில் மாட்டிக்கொண்டான்.

“எப்படி.. சரியான நேரத்தில குரல் கொடுத்தேனா”

“கரக்டா செய்த மித்ரா.. இப்ப நம்ம இந்த காமிராவ எல்லாம் குருடாக்கணும்.”

“அத எல்லாம் ஆப் பண்ணிட்டா நம்மள கண்டுபிடிச்சுடுவாங்களே”

“ஆப் பண்ணாத. இந்த நிமிஷம் நடக்கற வீடியோவையே லூப் பண்ணிக்கிட்டு இரு”

“பண்ணிட்டேன்”

“குட் மித்ரா.. அப்படியே இவன் மயங்கிக் கிடக்குறத ஒரு போட்டோ எடு” என்று கூறி கையை தரையில் கிடக்கும் உதயை நோக்கி நீட்டினான். “ம்ம். எடுத்தாச்சு.” என்றது மித்ரா.

“சரி விக்கி.. வா. இவன தூக்கிட்டுப் போய் வேற எதாச்சும் ஒரு ரூம்ல போடணும். அந்த லேசர் துப்பாக்கியையும் எடுத்துக்க. தேவைப்படும்”

இருவரும் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியேறினர்.

__________

கன்ட்ரோல் ரூமில் இருந்த ரவியும் சிபியும் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் நின்றனர். அவர்கள் முன்னிருந்த எல்லாத் திரையிலும் மயங்கிக் கிடக்கும் உதயின் நிழற்படம் பளிச்சிட்டது.

“அவங்க சாதரணமான ஆட்கள் இல்லை. உடனே மனோவுக்கு எச்சரிக்கை அனுப்பு. கன்ட்ரோல் எல்லாத்தையும் சரிபண்ணி அவங்க எங்கன்னு கண்டுபிடி” என்றான் ரவி.

சிபி கான்ஃபரன்ஸ் ரூமின் ஒளிப்பெருக்கிகளை ஆன் செய்து, “மனோ! உடனடியா ரிப்ளை பண்ணு. அவசரம்.” என்றான். உடன் காமிரா திரைகள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பின. காமிராவின் முன் விக்கியும் விஜயும் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர்.

விக்கி காமிராவை நோக்கி, “மனோ இப்ப பேசும் நிலைல இல்லை. உங்களுக்கு என்ன வேணும்?” என்றான். அவன் பின்னால் மனோ பிணமாகக் கிடந்தான்.



[†]என்க்ரிப்ஷன் என்பது நம்முடைய டிஜிட்டல் தகவல் பரிமாற்றங்களை மற்றவர் ஒற்றறிய முடியாதபடிக்கு சங்கேத முறையில் மாற்றி அனுப்புவது ஆகும். இதில் தகவலை அனுப்புபவர் அதை ஒரு சங்கேத வரிசைப்படி மாற்றுவார். அந்த சங்கேத வரிசை encryption key எனப்படும். பெறுபவரிடம் அந்த சங்கேத வரிசையில் இருந்து தகவலைப் பெறும் decryption key இருக்கும். இவற்றை இடைமறிக்கும் நபர்களுக்கு அது அர்த்தமற்ற வரிசையாகத்தான் தெரியும். உண்மையான தகவல் தெரியாது. இதன் மூலம் முன்றாம் நபர் தகவலை ஒற்று அறிவதோ, தகவலை மாற்றுவதோ தடுக்கப்படுகிறது.

 



-- Edited by ArvinMackenzie on Sunday 2nd of June 2013 11:06:39 PM

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

good

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...heros action started...very interesting to read...good work arvind(மதுரைக்காரங்க பாசமானவங்க மட்டும் இல்ல மூளைக்காரங்கன்னு நிறுபிச்சிட்டிங்க) ...encryption key...I think this was shown in film ROOJA...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

கதை நகர்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
டான் ப்ரௌன் கதைகளை நான் படித்ததில்லை
என் கல்லூரித் தோழன் படிப்பான்
அவனிடம் கேட்டுத்தான் எனக்கு டாவின்சி கோடும்
ஏஞ்சல்ஸ் அன்டு டிமென்ஸ் படம் பார்க்கும் ஆர்வமூட்டியது
அவன் இறுதியாக எனக்கு லோஸ்ட் சிம்பல் கதை சொன்னான் முழுவதுமாக அல்ல
ஆனால் அவன் கதை சொன்னான்
அந்த விதத்தில் நீர் கதை எழுதியது போல் உணர்கிறேன்
அருமை

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ரொம்ப அழகாக கதை நகர்கிறது.... சுஜாதாவோட அறிவியல் கற்பனை கதைகள் படிச்சுருக்கிங்களா?... இல்லைனா, படிச்சு பாருங்க தம்பி.... எல்லோராலையும் அறிவியல் நுணுக்கன்களோட எழுதிட முடியாது, அந்த வகையில் நீங்க சாதிச்சுட்டிங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@msvijay
சுஜாதாவைப் படிக்காமலா அண்ணா? இந்தக் கதையின் வில்லன்களுக்கே சுஜாதாவின் நாவலில் இருந்து தான் பெயர் சூட்டியுள்ளேன்.. ரவி, மனோ, சிபி எல்லாம் "என் இனிய இயந்திரா"வின் கதாபத்திரங்கள்.

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மன்னிக்கவும் நண்பர்களே.. இடையில் வேறு சில பணிகளும் பிரயாணங்களும் குறுக்கிட்டதால் பதிவில் பெரிய இடைவெளி வந்துவிட்டது. விரைவில் அடுத்த பகுதியைப் பதிய முயற்சிக்கிறேன்.

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

pls post the story as early as possible

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சீக்கிரம் பதியுங்க நண்பா

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மிகவும் தாமதமாகப் பதிவதற்கு மன்னிக்கவும் நண்பர்களே.. இதோ அடுத்த பதிப்பு...

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

8

            கான்பிரன்ஸ் ரூமில் மனோ பிணமாகக் கிடப்பதைப் பார்த்து சிபியும் ரவியும் மிகவும் குழம்பிப் போயினர்.. நமக்கும் என்ன நடந்தது என்று தெரியாதல்லவா? கொஞ்சம் பின்னோக்கி செல்லலாம்..

மயக்கத்தில் இருந்த உதயை வேறொரு அறையில் வைத்து பூட்டிய பின், இருவரும் நேரே கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றனர். ரகசியமாக அறையின் உள்ளே நுழைந்தவர்கள், மனோ சுதாரிக்கும் முன் அவனை சுட்டு வீழ்த்தினர். அதன்பின் விஜய், தன ஏற்கனவே வைத்திருந்த, உதய் மயக்கத்திலிருக்கும் நிழற்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினான். அதைப் பார்த்தபின்தான் சிபியும் மனோவும் மனோவை அழைத்தனர். சரி.. இப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..

சிபியும் ரவியும் மனோவின் உடலைப் பார்த்திருப்பார்கள் என்று உறுதியானவுடன் விஜய் அந்த அறையின் எல்லா காமிராவையும்,ஒலிவாங்கியையும்(mic) உடைத்தான்.

“என்னடா பண்ணற? இப்ப எதுக்கு அவங்கள உசுப்பேத்தி விடற” என்று கேட்டான் விக்கி. அந்த அறையில் இருந்த பயணிகள் எல்லோரும் குழப்பத்துடன் இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அப்பத்தான் வெளிய வருவாங்க.. நம்மால அவங்க ரெண்டு பேரையும் கன்ட்ரோல் ரூமுக்குள்ள வெச்சு  ஒண்ணா சமாளிக்க முடியாது. கன்ட்ரோல்ஸ்ல எதாச்சும் பண்ணி இந்த விண்வெளி நிலையத்தையே அழிச்சுடுவாங்க. அதான் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க இப்படி பண்ணினேன். இப்ப அவங்களில் ஒருத்தன் மட்டும் இங்க வருவான்” என்றான் விஜய்..

“அப்ப அவன நம்ம சுட்டுட்டு அடுத்தவன கவனிச்சுக்கலாம்னு சொல்றியா?”

“அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இன்னும் 20 நிமிஷத்தில இந்த இடத்த அழிக்க ட்ரோன (drone) அனுப்பிடுவாங்க. 25 ஆவது நிமிசத்தில இந்த இடமே இருக்காது”

“அப்ப ஷட்டில்ல ஏறி தப்பிச்சு போயிடலாம்”

“முடியாது. ஷட்டில கன்ட்ரோல் ரூமில இருந்துதான் எஜெக்ட்(eject) பண்ணனும்.”

“அப்ப என்னதான் பண்ணறது”

“நான் கன்ட்ரோல் ரூமுக்கு போறேன். நீ இவங்க எல்லோரையும் ஷட்டிலுக்கு கூட்டிட்டு போ”

“சரி”

“போகும்போது இந்த டோர் பேனல உடைச்சுடு. வீடியோவைப் பாத்துட்டு அவன் நேரா இங்கதான் வருவான். டோரை உள்ளிருந்து திறக்க முடியாது. உள்ளேயே மாட்டிக்குவான். இந்தா இத வெச்சிக்க. இது ஷட்டில திறந்து உள்ள போக உதவி செய்யும்” என்று சொல்லி மித்ராவைக் கழற்றிக் கொடுத்தான். அது அவன் வாழ்க்கையையே மாற்றப்போகிறது என அப்போது அவனுக்குத் தெரியாது.

“கவனமா இரு டா.. உள்ள ஒருத்தன் இருப்பான்ல. இதையும் கொண்டு போ” என்று மனோவின் துப்பாக்கியை எடுத்தது கொடுத்தான் விக்கி.

“நீயும் பத்திரம் டா” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் விஜய். ஏற்கனவே எல்லா காமிராவையும் செயலிழக்க செய்திருந்தாலும் நேர்வழியாக கன்ட்ரோல் ரூமை நோக்கி சென்றால் எதிரே வருபவனிடம் சிக்க நேரிடும் என எதிர்திசையில் சுற்றிக்கொண்டு சென்றான்.

கன்ட்ரோல் ரூமின் வாசலை அடைந்தான். அந்த அறையில் நுழைய கடவுச்சொல்லை(passsword) பதிவு செய்ய வேண்டும். ஆனால் அங்கு நான்கு விசைப்பலகைகள் இருந்தன. தவறான கடவுச்சொல்லை தந்தாலோ அல்லது தவறான விசைப்பலகையில் விசையை(key) அழுத்தினாலோ தரை திறந்து அடியில் இருக்கும் காப்பறையில் விழ நேரிடும் என அவன் அறிவான். ஏற்கனவே கடவுச்சொல்லையும் சரியான விசைப்பலகை எது என்பதையும் மித்ரா மூலம் கேட்டுத் தெரிந்துவைத்து இருந்தான். அதை உள்ளிட்டு, உள்ளே நுழைந்தான். அங்கு சிபி மிகத் தீவிரமாக காமிராவின் கட்டுப்பாடுகளை திரும்பக்கொண்டுவர கணினியுடன் போராடிக்கொண்டிருந்தான். எனவே விஜய் வந்தததை கவனிக்கவில்லை. விஜய் எளிதாக சிபியை சுட்டு வீழ்த்தினான். எல்லாம் எளிதாக முடிந்தது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தான். ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

கதவை மீண்டும் மூடிவிட்டு சென்று கணினியில் அமர்ந்தவன், காமிராக்களை மீண்டும் இயன்கஸ் செய்தான். பின் ஷட்டிலை எஜெக்ட் செய்யும் வேளைகளில் இறங்கினான். சிறிது நேரம் சென்று, வாசலை நோக்கி யாரோ வருவதை காமிரா திரையில் கவனித்தான். விக்கிதான் தன்னைத் தேடி வந்திருப்பான் என்று நினைத்து திரையை உற்று கவனித்தான். ஆம். விக்கிதான் வந்து நின்றிருந்தான். ஆனால் தனியாக இல்லை.



__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very interesting to read...I think we are nearing the climax...good narration...keep it up

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சிறப்பாக போகுது அர்விந்த்..... தமிழ் சொற்கள் எல்லாம் ரொம்ப அருமை...... ஆங்கில படத்தின் டப்பிங் பார்ப்பது போல இருக்குப்பா..... கதை முடியப்போற மாதிரி தெரியுதே?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மிக அருமை தோழா.........

இப்போதுதான் கதையின் முதல் பகுதியிலிருந்து முழுதும் படித்தேன்,

அதனால் எனக்குப் பிடித்த வரிகளை மேற்கோள் காட்ட இயலவில்லை........

கதை அருமையாக பயணிக்கிறது.

அறிவியல் சொற்களுக்கு ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கொடுத்து விளக்கம் அளித்தமை சிறப்பு.

நிறைய சொற்களை அறிய உதவியாக இருக்கு.

நன்றி........

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

கதை நன்றாகப் போகிறது.

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Super oh Super

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ ArvinMackenzie

Hats off buddy!

ரொம்ப அழகா கதைக்கறீங்க... “ஒன்றுபட்ட தமிழ்தேசம்”-னு முதல் அத்தியாயத்திலேயே உங்க உள்ளக்கிடக்கைய... அநேகமா நம் எல்லோருடைய விருப்பத்தையுமே குறைந்தபட்சம் இந்த கதையின் மூலமா நிறைவேத்தியிருக்கீங்க....

ஆனா... உண்மையிலேயே ஒன்றுபட்ட தமிழ்தேசம் சாத்தியமாகும் பட்சத்தில்... ஏவுதளம் கிளிநொச்சியில அமைய வாய்ப்பில்ல... நெடுந்தீவு தான் அதுக்கு ideal location.. எனிவே.. இப்ப அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை...

அழகான தமிழில்... முக்கியமா.. சொற்பிழைகளே இல்லாம... ஒரு அதி நவீன அறிவியல் கதைய... எல்லாருக்கும் புரியற மாதிரி... சொல்லி ஆச்சர்யப்படுத்தறீங்க... அதில் இழையோடியிருக்கும் subtle gay love.. is just mind blowing...! Reminds me - Yandamuri Veerendranath!

அறிவியல், உளவியல், அமானுஷ்யம்னு ஒரு ஜுகல்பந்தி டைப்ல இருக்கும் இவரோட கதை...!

Seems.. this is not your first attempt..!

Keep rocking dude!! :)

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Arvin Mackenzie

When is the next episode will be release.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

Arvin next eppo????

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Currently I am out of station for some personal works friends.. Sorry for the delay. I will try to post the next part within mid of next week...

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சீக்கிரம் வாங்க அரவிந்த்....

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Mr aravind....

Really i am speechless.... what a narration? character's name (especially mithra)..... very super explanation of advanced technologies and their tamil translations...

U have great potential ... even u know about economy also... brilliant story... have a great future aravind.... go ahead....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@samram
ரொம்ப நன்றி நண்பா..

@msvijay
நன்றி அண்ணா.. உங்கள் கணிப்பு சரிதான்.. அடுத்த இரண்டு பதிப்புகளில் கதை முடிகிறது.

@anbaithedi
உனக்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் மாம்ஸ்.. நான் எத்தன நாளா எழுதிட்டு இருக்கேன்... நீ இப்பதான் படிக்கற.. உன்ன நான் தனிய டீல் பண்ணிக்கறேன்.

@chathero2006
பாராட்டுக்கு நன்றி நண்பரே..

@thiva
மிக்க நன்றி..

@rotheis
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி அண்ணா.. கிளிநொச்சி எல்லோருக்கும் பரிச்சயமான இடமா இருக்கும்கிறதால அதைப் பயன்படுத்தினேன். அந்த இடத்தில், வாசித்தவுடன், நான் ஈழத்தைக் குறிப்பிடுகிறேன்னு தெளிவாத் தெரியனும். அதனாலதான் அப்படி எழுதினேன். மற்றபடி, உண்மையில் அங்கு விண்வெளி நிலையம் அமைக்கும் சாத்தியக்கூறு இல்லைதான்.

Yandamuri Veerendranath!!! என் சிற்றறிவுக்கு எட்டியபடி, திரு. கூகிளிடம் விசாரித்ததில், அவர் தெலுங்கு மொழி நாவலாசிரியர் என்று தெரிந்தது. உங்களுக்குத் தெலுங்கு கூட வாசிக்கத் தெரியுமா? அந்தக் கதைகளை முடிந்தால் எங்களுக்கும் கூறுங்களேன்..

@prabhujp
அடுத்த பகுதி இதோ..

@srinivasan
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பா..

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

9

கான்பிரன்ஸ் அறைக்கு பணயக் கைதிகளைத் தேடிச் சென்ற ரவியைக் கொஞ்சம் தேடிச் செல்வோம்.. மனோ கொல்லப்பட்டதைப் பார்த்து கோவத்துடன் அவர்களைத் தேடிச் சென்றவன் அந்த அறையில் யாருமே இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அறை முழுவதும் சுற்றித் தேடியவன், யாரும் ஒளிந்திருக்கவில்லை என உறுதி செய்துகொண்டு, வெளியேறச் சென்றான். அப்போதுதான் கவனித்தான்.. அந்தத் தானியங்கிக் கதவைத் திறக்கும் விசை (button) சிதைக்கப்பட்டிருந்தது. அவனை உள்ளேயே அடைத்துவைக்க நம் நாயகர்கள் செய்த வேலை என்பதை நாம் அறிவோம்.. அனால், தாளை நீக்கித்தான் கதவைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவர்களுக்குத் தோன்றவில்லை.. தன் லேசர் துப்பாக்கியால் கதவின் தாளைச் சுட, அது தெறித்துத் திறந்தது.

அனைவரும் தப்பித்து எங்கு செல்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். நேரே விண்கலத்தை நோக்கிச் சென்றான்.. கவனமாக, முயலைக் குறிவைக்கும் நரியைப் போல, பதுங்கி மறைந்து சென்றான்..  ஷட்டிலின் வாயிலில், விக்கி நின்றுகொண்டு இருந்தான். ஒவ்வொருவராக ஷட்டிலினுள் செல்ல உதவிக்கொண்டு இருந்தான். இன்னும் நான்கு பேர் தான் ஷட்டிலில் ஏற வேண்டும். அனைவரும் உள்ளே நுழையும் வரை காத்திருந்த ரவி, தனியாக விஜய் வருவதற்காக நின்றிருந்த விக்கியின் பின்புறமாக சென்று, அவன் முதுகில் துப்பாக்கியை அழுத்தி, கைகளை மேலே தூக்கக் கட்டளையிட்டான். பின்பு, நாயகன் முதுகில் வில்லன் துப்பாக்கியை வைத்தவுடன் என்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் நடந்தன. நாயகன் துப்பாக்கியைத் தட்டிவிட்டு வில்லனைத் தாக்குதைத் தவிர. ஷட்டிலின் கதவைப் பூட்டி, பயணிகளை உள்ளே அடைத்தான். விஜய் எங்கு இருப்பான் என்று ரவிக்குத் தெரியும். விக்கி இல்லாமல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விஜயை வெளியே கொண்டுவர முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். விக்கியைக் கூட்டிக்கொண்டு, மன்னிக்கவும், இழுத்துக்கொண்டு, கட்டுப்பாட்டு அறையை நோக்கிச் சென்றான்..

கட்டுப்பாட்டு அறையில் ஷட்டிலை அனுப்பும் வேலைகளில் இருந்த விஜய், காமிராவில் ரவி விக்கியை துப்பாக்கி முனையில் அழைத்து வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தான். முதல் முறையாக அவன் திட்டம் தோல்வி அடைந்தது. விக்கி இப்படி சிக்குவான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், அப்படியே உறைந்து நின்றான்.

கட்டுப்பாட்டு அறையின் வாசலை அடைந்த ரவி, கதவைத் திறப்பதற்கான கடவுச்சொல்லை விசைப்பலகையில் உள்ளிடச் சென்றான். ஆனால், இந்த சந்தர்ப்பத்திற்குத் தான் விக்கி காத்திருந்தான். அருகில் இருந்த மற்றொரு விசைப்பலகையில் அவன் விசையை அழுத்தினான். தவறான விசைகளை அழுத்தினால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமே.. தரை திறந்து, அதன் அடியில் இருந்த காப்பறையில் அவர்கள் இருவரும் விழுந்தனர். மேலே கதவு மீண்டும் மூடிக்கொள்ள, அவர்கள் அந்தப் அறையில் சிறை வைக்கப்பட்டனர்.

கோவத்தின் உச்சத்தில் இருந்த ரவி, விக்கியின் வயிற்றில் ஓங்கி உதைக்க, அவன் வலுவிழந்து தரையில் சரிந்தான். மற்றொரு சமயமாக இருந்தால் இந்நேரம் விக்கியின் உயிர் போயிருக்கும். ஆனால், இப்போது விக்கிதான் ரவியும் துருப்புச்சீட்டு. அவனை வைத்துத்தான் ரவி தப்பிக்க வேண்டும். அந்த அறையிலும் காமிராவும் ஒலிவாங்கியும் இருக்கும் என அவனுக்குத் தெரியும். காமிராவைப் பார்த்து, “ஒழுங்கா கதவைத் திற.. இல்லைனா உன் நண்பன் இங்கயே உயிரை விட்டுடுவான்” என்று கத்தினான். அவன் பின்னால் தரையில் விழுந்து கிடந்த விக்கி, “வேண்டாம் விஜய்.. கதவத் திறக்காத.. எல்லா பயணிகளும் ஷட்டில்ல ஏறிட்டாங்க. நீயும் தப்பிச்சு போய்டு. என்னைப் பத்திக் கவலைப்படாத” என்றான். அவன் வயிற்றில் மீண்டும் ஓர் உதய் விழ, மயக்கமடைந்தான். இதையெல்லாம் காமிராவில் பார்த்த விஜய், ஒரு முடிவுக்கு வந்தான்.

ஷட்டிலைத் தொடர்புகொண்டு, ஷட்டில் ஆப்பரேட்டரிடம்( shuttle operator) அதை இயக்கி தப்பிக்குமாறு  கூறிவிட்டு, ஷட்டிலை எஜெக்ட்(eject) செய்தான். பின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்டு, ஷட்டிலில் பயணிகள் தப்பி வரும் விவரத்தைக் கூறிவிட்டு, திட்டமிட்டபடி, டிரோன்(drone) மூலம் அந்த விண்வெளி நிலையத்தை அழிக்குமாறும் கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வின்கலத்தைத் தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோக்கள் (boarding அண்ட் capturing commandos) வரும்வரை காத்திருக்கக் கூறினர்.

பின்பு, காப்ப்பரையின் ஒலிப்பெருக்கிகளை இயக்கி, “ரவி, அந்த ஷட்டில் தப்பிச்சுப் போயாச்சு. இனிமே நீ ஒன்னும் பண்ண முடியாது. காமன்டோஸ் வந்துட்டு இருக்காங்க. நீ தப்பிக்க வழியே இல்லை” என்றான்.

ரவி இதை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தான். கோவத்தில் விக்கியை சுட்டுக்கொல்ல எத்தனித்தான்.. அப்போதுதான் அவனுக்கு அது நினைவுக்கு வந்தது.. காமிராவை நோக்கி, “இல்லை.. நான் தப்பிக்க முடியும். நான் வந்த ஷட்டில் (சிறையில் இருந்து கைதிகளை தப்புவித்த விண்கலம்) இருக்கு. நான் அதுல தப்பிக்க உதவி பண்ணினா உன் நண்பன் பிழைப்பான். நீ உதவலைனா , நான் எப்படியும் சாக வேண்டியதுதான்.அதனால உன் நண்பனையும் கொன்னுடுவேன்” என்றான்.

விஜய் குழப்பமடைந்தான். ரவியைத் தப்பிக்கச் செய்வது கொஞ்சம் ஆபத்தான காரியம்தான். ஆனால் அவனால் எப்படியும் அந்த விண்கலத்தில் ஏறி தப்பிச் செல்ல முடியாது. தரையிறங்கும் முன்னர் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். எனவே, அந்த ரிஸ்க்கை எடுக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் ரவியின் மனதிலிருந்த திட்டங்களை விஜய் அறிந்திருக்கவில்லை..



__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

post the next part as soon as possible. . .first time reading an science fiction story. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

பாவம் விஜய்... என்ன பண்ண போறானோ அந்த ரவி!... ஏன்தான் இந்த விஜயை இந்த பாடு படுத்துறப்பா?.... ஆர்வம் அதிகமா இருக்கு, அடுத்த பதிவே முடிவுரையா?... எப்படி கதையை முடிக்க போரிங்கன்னும் தெரியல....

இந்த கதையை முடித்த வேகத்தோடு, அடுத்த கதையை தொடங்கிடுங்க... ஒரே ஒரு ஆலோசனை, அடுத்த கதை இந்த கருவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கட்டும்.... உங்கள் பல்நோக்கு திறமை அதன் மூலம் நிறைய வெளிப்படும்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very nice...இருவர்க்கும் என்ன ஆகபோகிறது என்று அறிய ஆவலாக இருக்கு so post as early as posible...கதை முடிய போகிறது என்பது கொஞ்சம் வருத்தம்தான் ...அதனால் விஜய் சொல்வது போல உடனே அடுத்த கதை தொடங்கிடுங்க...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@prabhujp
அடுத்த பதிப்பு இதோ நண்பா..

@msvijay
நன்றி அண்ணா.. உங்கள் ஆலோசனைப்படி அடுத்த கதையை வேறு ஒரு வித்தியாசமான genre-ல் எழுத முயல்கிறேன்...

@samram
ரொம்ப நன்றி நண்பா.. கதை துவங்கியது முதல் ஒவ்வொரு பதிப்புக்கும் தவறாமல் பின்னூட்டம் அளித்து, எனக்கு ஊக்கம் தந்ததற்கு மிகவும் நன்றி.. உங்கள் ஊக்கம்தான் என்போன்றவர்களுக்கு வலிமை அளிக்கிறது...

@tirupurbabu
ரொம்ப நன்றி நண்பரே..

@rotheis
ரொம்ப நன்றி அண்ணா.. நுணுக்கமாக ஆராய்ந்து, பின்னூட்டம் அளிக்கிறீர்கள்.. மிகவும் உதவியாக இருக்கிறது.. தன் கதையை இவ்வளவு நுணுக்கமாய் ஒரு வாசகர் வாசித்து கருத்து சொல்வதைவிட, ஒரு எழுத்தாளனுக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது...



-- Edited by ArvinMackenzie on Tuesday 9th of July 2013 12:45:48 AM

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

 

 

10

மகேந்திரகிரியில் உள்ள தேசிய விண்வெளி பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம், வழக்கத்தை மீறி இன்னும் அதிகப் பரபரப்பாகக் காணப்பட்டது. அனைவரும் எதோ உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்போல உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர். காரணம், “மிதக்கும் சொர்க்கத்தில்” இருந்த பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விண்கலம் ஏறி திரும்ப வருகின்றனர் என்று விஜய் அனுப்பிய செய்தி. எல்லோரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்தாலும், ஒருவர் மட்டும் அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளாமல் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர் தலைமை ஆணையர் அநிருத்தன். எதோ ஓர் முடிவுக்கு வந்தவராக,  தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அருள்மொழியை தன் அறைக்கு வருமாறு தகவல் அனுப்பினார்.

“வணக்கம் சார்..” என்று சொல்லியவாறே உள்ளே நுழைந்தார் அருள்மொழி. அனிருத்தனின் முகவாட்டத்தைக் கவனித்தவர், “என்ன சார், மறுபடியும் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரச்சனையே இன்னும் முடியலை அருள்மொழி.. ஆதாரமில்லாத அந்தத் தகவலை நம்ப  முடியாது. இதுவும் அந்தத் தீவிரவாதிகளோட சதியா இருக்கலாம்”

“நானும் அதை நம்பலை சார்.. தரையிறங்கற விண்கலத்தை மட்டக்களப்பில் உள்ள இராணுவ தளத்தில் இறக்கனும்னு உத்தரவு அனுப்பியாச்சு.. மட்டக்களப்பில் கமாண்டோக்கள் தயாரா இருக்காங்க.. விமானப் படையும் தயாரா இருக்கு.. திட்டமிட்ட பாதையில் இருந்து விண்கலம் மாறி, வேற திசைல போச்சுன்னா, அதைத் தாக்கவும் உத்தரவு கொடுத்திருக்கேன்..”

“நல்லது அருள்மொழி.. பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்காவா பண்ணி இருக்கிங்க.. ஆனா, டிரோன்ஸயும் தயாரா வெச்சிக்கோங்க.. எந்த நேரத்திலும் அதை செலுத்தத் தயார்பண்ணி வையுங்க..”

“சரி சார்”

“தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோ படை என்ன ஆச்சு?”

“10 நிமிடத்துக்கு முன்னாலத்தான் அவங்க விண்கலம் புறப்பட்டு இருக்கு.. இன்னும் 20 நிமிஷத்துல மிதக்கும் சொர்க்கத்த அடைஞ்சுடுவாங்க சார்..”

“நல்லது அருள்மொழி.. கவனமா இருங்க.. முடிஞ்சவரை அந்தத் தீவிரவாதிகளை உயிரோட பிடிக்க முயற்சி பண்ணனும்..”

“சரி சார்”

இவர்கள் இப்படித் திட்டம் போட்டுக்கொண்டு இருக்க, அங்கே ரவியின் திட்டங்களோ கொடூரமானதாக இருந்தது.

கட்டுப்பாட்டு அறையினுள் கையும் காலும் கட்டப்பட்டு தரையில் மயங்கிக் கிடந்தான் விக்கி..

“உன்னால தப்பிக்க முடியாது.. அந்த விண்கலதில் போய் நீ தரையிரங்கறதுக்குள்ள அதை தாக்கி அழிச்சுடுவாங்க.. பேசாம சரணடைஞ்சுடு” என்றான் விஜய்.

“கண்டிப்பா அவங்களால நான் போற விண்கலத்தத் தாக்க முடியாது. ஏன்னா நான் விண்கலத்த என் நாட்டுல தரையிறக்கப் போறேன்.. அதையும் மீறி அவங்க என் நாட்டு வான் எல்லைல நுழைஞ்சு தாக்குனா அதையே காரணமா வெச்சு உங்க நாட்டு மேல பொருளாதாரத் தடை கொண்டு வந்துடுவாங்க.. எப்படி ஆனாலும் எனக்கு சந்தோசம் தான்..” என்றான் ரவி.

ரவி சொல்வதும் ஒருவகையில் உண்மைதான்.. அவன் எதிரி நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் பிறகு எதுவும் செய்ய முடியாது.. விண்கலத்தை அழிப்பதாக இருந்தால் உயர் காற்று மண்டலத்திலேயே (Upper Atmosphere) அழித்தால்தான் உண்டு.. அதற்கு விஜயும் மனதுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான்.

“என்ன? எங்க நாட்டு எல்லைக்குள்ள நுழைஞ்சாதான.. அதுக்குள்ளே தகவல் சொல்லி என்னை போட்டுதள்ளிடலாம்னு யோசிக்கிறியா?” என்றான் ரவி.. விஜய்க்கு இதயமே நின்றுபோனது.. இந்த பாதகன் மனதுள் நினைத்ததை அப்படியே சொல்கிறானே என்று நினைத்துக்கொண்டே, இல்லை என்று தலையை ஆட்டினான்.

“நீ அப்பட்டித்தான் யோசிப்பன்னு எனக்குத் தெரியும்.. அதுக்கும் என்கிட்ட ஒரு ஏற்பாடு இருக்கு. இதோ இவன என்னோட அழைச்சுட்டு போறேன்.. ஷட்டில் கிளம்பத் தேவையான கட்டளைகளை கணினிக்கு கோடு. நான் பத்திரமா போய்ச் சேர்ந்ததும் இவன பத்திரமா திருப்பி அனுப்புறேன்” என்று விக்கியைக் கைகாட்டினான் ரவி.

விஜய்க்கு உலகமே காலடியில் நொறுங்கியதுபோல் இருந்தது. தான் உயிருடன் இருக்கும்போது விக்கியை அவனால் பலிகொடுக்க முடியாது.

“நீ என்ன அரிச்சந்திரனா? நீ கண்டிப்பா அவனத் திருப்பி அனுப்ப மாட்ட. உன்ன நம்ப முடியாது” என்றான் விஜய்.

“என்ன நம்பறதத் தவிர உனக்கு வேற வழி இல்லை”

“வேற வழி இருக்கு. நீ கிளம்பின பிறகு நான் எங்க நாட்டுக்கு தகவல் கொடுத்துடுவேன்னு தான விக்கிய கூட்டிட்டு போறேன்னு சொல்ற.. விக்கி வேண்டாம். நானே உன்கூட வர்றேன்”

“நீ என்கூட வந்துட்டா அப்புறம் ஷட்டில யார் எஜெக்ட் பண்ணுவா?”

“டைம் படி எல்லாம் தான நடக்கிற மாதிரி செட்டப் பண்ணிடுறேன்.. விக்கி இப்படியே இருக்கட்டும். கமாண்டோஸ் வந்து அவன விடுவிச்சுக்குவாங்க. அதுக்குள்ளே நம்ம உன் நாட்டு வான் எல்லைக்குள்ள போய்டலாம்.”

ரவிக்கு விஜய் சொல்வது சரி என்றுதான் பட்டது. விஜயை இங்கு விட்டால் அவன் விக்கி இறந்தாலும் பரவாயில்லை என்று தகவல் சொல்லிவிடுவானோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்வதுதான் சரி என்று நினைத்தான். இருந்தாலும் இதில் ஏதும் சதி இருக்குமோ என சந்தேகப்பட்டான். மயக்கம் தெளிந்தாலும் விக்கியால் இயங்க முடியாதபடிக்கு கட்டப்பட்டிருக்கிறான். எனவே அவன் பிரச்சனை இல்லை.. எதாவது செய்வதானால் விஜய்தான் செய்ய முடியும். எனவே விஜயை அழைத்துசெல்லத் தீர்மானித்தான்.

“சரி.. நீ என்கூட வா.. ஷட்டில் எஜெக்ட் பண்ண வேண்டிய கமாண்ட்ஸ் எல்லாம் கொடு” என்றான் ரவி.

விஜய் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.. விசைப்பலகையில் புயலென இயங்கி விண்கலம் கிளம்பத் தேவையான கட்டளைகளைக் கொடுத்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஷட்டிலில் போய் ஆட்டோமேடிக் எஜெக்சன் மோடை ஆன் பண்ணினாத் தான் நான் இங்க டைமர செட் பண்ண முடியும். நான் போய் அத ஆன் பண்ணிட்டு வரேன். இரு” என்றான் விஜய். ரவியும் ஷட்டிலை இயக்கும் பயிற்சி பெற்றவன்தான் என்பதால் இது உண்மைதான் என அவனுக்குத் தெரியும். எனவே, “வேண்டாம். நானே போய் ஆன் பண்ணிட்டு வரேன். நீ மற்ற வேலைகளை பாரு” என்று சொல்லிவிட்டு ஷட்டிலை நோக்கிச் சென்றான் ரவி.

அவன் கண்களை விட்டு மறந்ததும் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பின்வரும் செய்தியை தட்டச்சு செய்தான்:

தலைமை விண்வெளி பாதுகாப்பு அதிகாரிக்கு,

தீவிரவாதக் கூட்டத்தின் தலைவன் ரவி, விண்வெளி சிறையில் இருந்து தப்பப் பயன்படுத்திய விண்கலத்தில் தப்பி அவன் நாட்டுக்குள் சென்றுவிட திட்டமிட்டுள்ளான்.. அவன் அந்நாட்டு வான் எல்லைக்குள் நுழையும் முன் வின்கலத்தைத் தாக்கி அழிக்கவும்

விஜய்

கடிதத்தை மீண்டும் வாசித்து சரிபார்த்துவிட்டு அனுப்பினான். மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை உறுதி செய்துகொண்டு, அது அனுப்பப்பட்டதற்கான பதிவை அழித்து, அஞ்சல் பெட்டியை மூடினான். பின்பு மயங்கியிருந்த விக்கியின் அருகில் சென்று அமர்ந்து, “இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள எப்படியாவது சொல்லனும்னு இருந்தேன். இப்ப சொல்லிடுறேன்.. விக்கி.. ஐ லவ் யூ டா..” என்று சொல்லி, அவன் நெற்றியில் முத்தமிட்டான்.. பின்பு, தன் கண்களின் ஓரத்தில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஷட்டில் செலுத்தப்பட வேண்டிய வேலைகளை கவனித்தான். எல்லாம் முடியவும், ரவி திரும்ப வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஷட்டிலை நோக்கச் சென்றனர்.

அது ஒரு சிறிய ரக விண்கலம். எனவே அதை இயக்க ஒரே ஒரு ஷட்டில் ஆபரேட்டர் போதுமானது. காக்பிட்டில் (coc#kpit) ஒரே ஒரு இருக்காய்   (தவறாக எழுதியதை திருத்தி இருக்கிறேன்.. மன்னிக்கவும்)இருக்கை மட்டுமே இருக்கும். சிறைக்குக் கைதிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டுசெல்ல வடிவமைக்கப்பட்டது என்பதால், ஷட்டிலில் இருக்கும் கைதிகள் ஆப்பரேட்டரைத் தாக்கி ஷட்டிலைக் கைப்பற்றாமல் இருக்க, இரண்டு பகுதிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியான வெளி வாயில்களுடன் இருக்கும். அதன் பயணிகள் வாயில் வழியாக விஜயை உள்ளே அனுப்பி பூட்டிவிட்டு, முன்பிருந்த ஆபரேட்டருக்கான வாயில் வழியாக ரவி உள்ளே நுழைந்தான். பயணிகள் வாயில், வெளிப்புறத்தில் இருந்தோ, அல்லது ஆபரேட்டர் கட்டளையின் மூலமோ மட்டும்தான் திறக்கும். உள்புறத்தில் இருந்து திறக்க முடியாது. கைதிகளை கொண்டுசெல்வதால் இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் அதில் இருந்தது. எனவே, ரவி தைரியமாக இருந்தான்.

ஷட்டில் எஜெக்ட் செய்யப்படுவதற்கான கவுண்ட்-டவுனை துவக்கினான் ரவி. இன்னும் 5 நிமிடத்தில் புறப்படும் என்று கணினித் திரை காட்டியது. 4 நிமிடம்.... 3 நிமிடம்....2 நிமிடம்....1 நிமிடம்.... என நேரம் ஓடியது.. இன்னும் 40 வினாடிகள் என்று திரையில் ஓடிக்கொண்டிருந்த போது, அதை மிக ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்த ரவி, திரையின் ஓரத்தில், பயணிகள் வாயில் திறப்பதைக் குறிக்கும் குறியீடு ஒளிர்வதை கவனிக்கவில்லை..

பின்புறம், பயணிகள் வாயில் திறப்பதைப் பார்த்த விஜய், மிகவும் குழப்பமடைந்தான். எதோ பிரச்சனையாக இருக்கும் என நினைத்து வெளியே வந்தான். அவன் வெளியேறவும் மீண்டும் அந்தக் கதவு மூடிக்கொண்டது. அடுத்த 10 வினாடிகளில் விண்கலம் எஜெக்ட் ஆனது. அது எப்படி நடந்தது? நமக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று பார்ப்போம்..

விஜயும் ரவியும் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியரவும், மித்ரா விக்கியை மயக்கத்திலிருந்து எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஷட்டிலை திறக்க முன்பு விஜய் மித்ராவை விக்கியிடம் தந்தது நினைவிருக்கலாம். மித்ரா திருடப்பட்டால், அதை அணிபவனை செயலிழக்கச் செய்ய, ஒரு மின்னதிர்ச்சி தரும் அமைப்பு இருந்தது. இப்போது விக்கியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர, அந்த மின்னதிர்ச்சியை சிறிய அளவில் மித்ரா பயன்படுத்தியது. விக்கி பதறி எழுந்தான். மித்ரா நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறியது.

விக்கி கட்டுகளை அவிழ்த்துகொள்ள முன்றான்.. முடியவில்லை.அவன் கட்டுகளை விடுவிப்பதற்குள் ஷட்டில் புறப்பட்டுவிடும் போல இருந்தது.

“ஷட்டில புறப்படாம நிறுத்து மித்ரா” என்றான் விக்கி.

“என்னால முடியல.. என்னால தடுக்க முடியாதபடிக்கு விஜய் அதை லாக் பண்ணியிருக்கான்”

“நான் அந்த ரவிகிட்ட பேசணும்.. அதாச்சும் முடியுமா?”

“இல்லை. அதுவும் முடியாது”

விக்கி யோசித்தான்.. எதுவும் புலப்படவில்லை.. “இப்ப அவன எப்படி வெளிய கொண்டுவர?”

“கதவைத் திறந்துதான்”

“ஜோக் அடிக்க இதுவா நேரம் மித்ரா?” என்று கோபித்தவன், உடனே பிரகாசமானான்.. “கரெக்ட்.. கதவைத் திறக்கனும். மித்ரா, அந்த ஷட்டில் டோர..” என்று விக்கி முடிப்பதற்குள், “திறந்துட்டேன்” என்றது மித்ரா. விஜய் கதவைத் தண்டி வெளியேறியதை காமிராவில் பார்த்ததும் மீண்டும் கதவை மூடியது. இது எதுவும் தெரியாத ரவி, எஜெக்ட் ஆனதும் விண்கலத்தை கிளப்பிக்கொண்டு ‘போய்ச்சேர்ந்தான்’. அவன் நிலை என்ன ஆகி இருக்கும் என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். அதுபோக, பிற்பாடு நம் நாயகர்களால் துவக்கத்தில் அடைத்துவைக்கப்பட்ட உதய், கமாண்டோக்களால் கைதுசெய்யப்பட்டு, சர்வதேசே நீதிமன்றத்தில் ஆஜராகி, அவன் நாட்டு உளவுத்துறைக்கும் இந்த தாக்குதலுக்கும் இருந்த தொடர்பை ஒப்புக்கொள்ள, அந்த நாட்டின் மீது பொருளாதார, தொழில்நுட்ப தடைகள் கொண்டுவரப்பட்டது தனிக்கதை. இப்போது நாம் ஷட்டிலில் இருந்து வெளியே வந்த விஜய் என்ன செய்தான் என்பதைக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்..

விஜய் ஓடிச்சென்று விக்கியின் கட்டுகளை விடுவித்தான். கட்டுகள் விடுபட்டதும் விஜயின் கன்னம் பழுக்க ஓர் அறை விட்டான் விக்கி..

“ஏன்டா இப்படி பண்ணின? எண்ணக் காப்பாத்த முயற்சி பண்ணாத.. தப்பிச்சு போய்டுன்னு சொன்னேன் இல்லை.. அந்த தீவிரவாதி தப்பி அவன் நாட்டுக்கு போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்றான் விக்கி. விஜய் பேசவில்லை. தலைகுனிந்து மௌனமாயிருந்தான். விக்கி அவனை நெருங்கி வந்தான். அவன் தாடையை விரல்களால் உயர்த்தி, அவன் கண்களைப் பார்த்தான்..

“நான் மயங்கியிருந்தப்ப என்கிட்ட எதோ சொன்னியாமே.. மித்ரா சொல்லுச்சு”

“அது வந்து....”

“அத நீ சொல்ல மாட்டியான்னு தான் நான் இத்தன நாளா காத்துட்டு இருக்கேன்.. என் கண்களைப் பார்த்து சொல்லு”

“விக்கி.. ஐ லவ் ....”

அந்த வார்த்தைகளை விஜய் முடிக்கும்வரை விக்கி காத்திருக்கவில்லை.. அதற்குள் அவன் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்..

--முற்றும்--



-- Edited by ArvinMackenzie on Tuesday 9th of July 2013 01:55:04 PM

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

very nice science fiction story... I like it.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Superb buddy... enna paathu appadi oru kelvi kekkaama irunthiruntha... muzhukka vaasichirukkave maatten..

Kaaraname illaama panic aagi irukkennu puriyuthu.. dr nannan maathiri evvalavu azhaga... pazhagu tamizhla kathai solli irukkeenga.. kudos makkale..

Good job buddy.. am dumbfounded...

Namma mitra.. was all the while with vicky right??... why didn't he/she/it alert vicky about ravi's arrival... (haiya... mitravayum.. gender identityla sikka vachu.. namma LGBT kuzhumathula sethaachu ;)... so what... mitra onnum buddhu illaye.. athuvaave.. ethavathu gender queer hotline-kku call panni clarify pannikum... )

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Superb... thakka samayathula mitra kai koduthirukku... aanalum konjam seekirame athu sutharichiruntha vicky paiyanukku adi uthaiyellam kidachirukkathu.. namma cinema police mathiri... climaxkku konjam munna.. "hands up.. you are under arrest" nu solliduchu... hats off mitra...!!

"Antha naattu" mela porulathara, thozilnutpa thadaigal... LOL.... ROFL.. paavamya avinga.... aanalum ivvalavu kindal koodathu....

Mitra freewill-a seyal padratha paatha... enthiran pada climax mathiri aayidumonnu kalavarama irukku... ithu.. kittathatta.. logic errors varum bothu suggestions kodukkara maathiriyaana vishayam thaana...?? Ninaikkave malaippa irukku..

Last... but not the least... vijay vickya onnu serthu vachathukku nanri....!!! ;)

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

ஐயோ.. என் மாமியார் நாகம்மா மேல சத்தியமா அந்த "இருக்காய்" டைபிங் மிஸ்டேக் தாங்க.. நீங்கே வேணும்னா Google Input Tool இல irukai நு டைப் பண்ணி பாருங்க.. அப்படித்தான் வருது.. இதுக்குப் போய் விசாரணைக் கமிஷன் எல்லாம் வைக்குறீங்களே.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

சொல்லப்போனா, விண்கலத்த இயக்கும் ஆபரேடரின் பகுதிய காக்பிட்னு எழுதினதே தப்பு.. அதை பிரிட்ஜ்(bridge) என்றுதான் சொல்லணும்.. சரி வாசகர்களுக்குப் புரியணுமேன்னு இப்படி எழுதி, மாட்டிக்கிட்டேன்.. நாட்டுல நல்லதுக்கே காலம் இல்லை.. சே...



-- Edited by ArvinMackenzie on Tuesday 9th of July 2013 12:14:23 PM

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

கலக்கலான கதை, தெளிவான கதையோட்டம், பிசிறு தட்டாத நடை..... கதை இனிதே சுபமாக முடிந்தது மகிழ்ச்சி.... கதையில் "விஜய், விக்கி" ரெண்டு பேரையும் டம்மியாக்கிய உண்மையான ஹீரோ "மித்ரா" தான் செம்ம.....


///காக்பிட்டில் (****pit) ஒரே ஒரு இருக்காய் ////

இதில் இரட்டை அர்த்தம் இருக்காதுன்னு நம்புறேன்!!!!....

 

இந்த வழக்கை நம் குழுமத்தின் "வெண்ணிற ஆடை மூர்த்தி" ரோத்திஸ் அண்ணாச்சி வசம் ஒப்படைக்கிறேன்.... இந்த தனி நபர் கமிஷன் (கமிஷன் எதுவும் வாங்காமல்) விசாரித்து, அறிக்கையை இன்னும் இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்...



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ msvijay:

ரெண்டு நாள் எதுக்குங்கறேன்... இதோ.. இப்பவே ஃபைசல் பண்ணிட்டா போச்சு...

கள்ளம் கபடமில்லாம... பிஞ்சு மனசோட எழுதற வார்ததைகள்ல வர்ணத்தக் கொட்டி... அவற்றை.. ரெட்டை அர்த்த வார்த்தைகளா/வசனங்களா... வம்பு வளத்த குற்றத்துக்காகவும்...

செவனேன்னு இருக்கற ஒருத்தனுக்கு... "வெண்ணிற ஆடை மூர்த்தி" ன்னு பட்டம் கொடுத்து... இமேஜ்-அ டேமேஜ் பண்ண குற்றத்துக்காகவும்...

மைனர் குஞ்சுக்குக் கொடுத்த அதே தண்டனை வழங்கும்படி.. “பாதிக்கப்பட்ட” உங்க எல்லார் சார்பாகவும் கேட்டுக்கறேங்க சாமீயோவ்வ்வ்வ்... !!!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

////“பாதிக்கப்பட்ட” உங்க எல்லார் சார்பாகவும்/////

உங்களால இங்க அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்காங்களா?....

செல்லாது செல்லாது..... இந்த அரவிந்த் உங்கள "மாமா"ன்னு கூப்பிடுறார்... அப்போ உங்களுக்கும் அந்த பையனுக்கும் ஏதோ சொந்தம் இருக்கு... அதனால, "நாட்டாமை" விஜயகுமார் சொன்னது போல, சொந்தக்காரவுக சொல்ற சாட்சி, ஏத்துக்கப்பட மாட்டாது....

உடனடியா அண்ணாச்சி பற்றிய விசாரணையை மேற்கொள்ள ஒரு நான்கு நபர் கமிஷன் அமைக்கனும்....

அந்த கமிஷனுக்கு தலைமை பொறுப்பை, அன்பு தோழர் "சாம் ராம்" ஏற்பார்.... இதர உறுப்பினர்களையும் அவரே தேர்ந்தெடுப்பார்.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஐயோ.. என் மாமியார் நாகம்மா மேல சத்தியமா அந்த "இருக்காய்" டைபிங் மிஸ்டேக் தாங்க.. நீங்கே வேணும்னா Google Input Tool இல irukai நு டைப் பண்ணி பாருங்க..////

இனி எதுவா இருந்தாலும் விசாரணை கமிஷன்'ல ஆஜராகி பதில் சொல்லுங்க மிஸ்டர்..... இவ்வளவு டெக்னிக்கலா கதை எழுதுறவர், டெக்னிக்கல் எரர் வந்ததா சொல்றதை ஏத்துக்க முடியாது... அனேகமா இந்த வழக்குல நாகம்மாவையும் விசாரிக்க வேண்டி இருக்கும்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

இது என்ன போங்கு ஆட்டமா இருக்கு.. நான் எப்ப எங்கள் அண்ணன் தன்மான சிங்கம் மதிப்புமிகு rotheis அவர்களை "மாமா" என்று கூப்பிட்டேன் என்பதை அண்ணன் விஜய் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

///எங்கள் அண்ணன் தன்மான சிங்கம் மதிப்புமிகு rotheis////

ரோத்திஸ் அவர்களின் மீது இவ்வளவு நெருக்கம் வைத்திருக்கும் உங்கள் வழக்கை அவரிடம் ஒப்படைத்தது தவறு....அண்ணனோ, மாமாவோ இப்போ அது முக்கியமில்லை.... இப்போ நீங்களே உங்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தி விட்டதால், மேற்கொண்டு எவ்வித விசாரணையுமின்றி ரோத்திஸ் அண்ணாச்சி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் கலைக்கப்படுகிறது.....

இந்த விசாரணையையும் சாம்ராம் தலைமையிலான நான்கு நபர் குழு சேர்த்து விசாரிக்கும்.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

என்னய்யா நடக்குது இங்க... ஒட்டுமொத்த கட்சியுமே... அந்த அம்மாவ.. “அம்மா”ன்னு தான் கூப்பிட்றாங்க.. அதுக்காக... அம்புட்டு பேரும்... அந்த அம்மாவுக்கு.. பிள்ளைக... இல்ல.. வளர்ப்புப் பிள்ளைகன்னு சொல்ல முடியுமா?????

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

எப்படியோ.. நேர்மையின் சின்னமாக விளங்கும் மேதகு சாம்ராம் நல்ல தீர்ப்பு வழங்குவார் என நம்புகிறேன்..
(மைண்ட்வாய்ஸ்: சும்மா புகழ்ந்து வெப்போம்.. பின்னால உதவும்)

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

“அம்மா”ன்னு தான் கூப்பிட்றாங்க.. அதுக்காக... அம்புட்டு பேரும்... அந்த அம்மாவுக்கு.. பிள்ளைக... இல்ல.. வளர்ப்புப் பிள்ளைகன்னு சொல்ல முடியுமா?????////

நில அபகரிப்பு, கஞ்சா வழக்கு'னு உள்ள போக ஆசை வந்திடுச்சா அண்ணாச்சி?.... அப்டினா, நீங்க வளர்ப்பு மகன் என்ற தகுதி உங்களுக்கு வந்திடுச்சுன்னு அர்த்தம்....

"அம்மா"னா அது அவங்க,
"அண்ணானா" அது அவரு,
அப்போ "மாமா"ன்னா நீங்களா இனிமே????

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ஐய்யோ... நான் இந்த ஆட்டத்துக்கு வரல சாமிகளா... நீங்களே நல்லதா எதாவது பண்ணுவாங்க...

ஆட்டோ இல்லாத இந்த ஊர்லயும்... எனக்கு ஆட்டோ சத்தம்... ஆட்டோமேட்டிக்கா கேட்க ஆரம்பிச்சிருச்சி...!!

எதுக்கு பெரிய எடத்து வம்பு... !!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமையா முடிச்சுட்டிங்க மாமா.......



__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

நல்ல நேரத்துல... வந்தீங்க... தீரன் சின்னமலை...

எதுக்குங்க... வீண் தகராறு...

எல்லாரும்... வாங்க... கை கோர்த்துட்டு... கை தூக்கி நில்லுங்க... கூட்டணிய அறிவிச்சிரலாம்...

நாற்பதும் நமதே... நாளை நமதே..!! :)

சுபம்!!!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

"கவுன்சிலர்" அண்ணாச்சி இப்டி கலவரமானா எப்புடி?.... நீங்கல்லாம் காலை டிபனுக்கே கஞ்சா கசக்குற ஆளுங்க.... டீ'ல சுகருக்கு பதிலா "பிரவுன் சுகர்" போட்டு குடிக்கிற பிஸ்தா.... கவர்மென்ட் நிலத்துலையே கட்டில் போட்டு, மல்லாக்க படுக்குற வீரர்.... இவ்வளவும் பண்ணிட்டு, இப்டி ஒண்ணுமே தெரியாத ஆள் மாதிரி பம்முற உங்க தன்னடக்கம் பெரிய விஷயம் அண்ணாச்சி.... உங்க பின்னாடி நாலு ஆட்டோல, கரை வேஷ்டி ஆளுங்க வரா மாதிரி தெரியுது பாருங்க.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@msvijay
யாரப்பா அது.. "அம்மா'வ பத்தி அவதூறா பேசுனது.. உங்க மேல "சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்துல மான நஷ்ட வழக்கு போட்டு இருக்கு.. வர்ற வெள்ளி வாய்தா.. ஆஜர் ஆகிடுங்க..
(ஹய்யா.. வழக்கு ஒத்திவெச்ச நீதிபதி மேலே கேஸ் போட்டாச்சு..)

__________________

gay-logo.jpg

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

"அம்மா'வ பத்தி அவதூறா பேசுனது/////

அம்மாவை பத்தியா?... யாருப்பா அது?..... புடிங்க அந்த ஆளை, புடிச்சு கரண்ட் கம்பத்துல கட்டி வையுங்க...
அம்மாவோட தீவிர விசுவாசி, அடிமட்ட தொண்டன், அன்பு ரத்தத்தின் ரத்தம் நான் இருக்குற இடத்துல இப்படி ஒரு நிகழ்வு நடக்க நான் சும்மா இருக்க மாட்டேன்....



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

//அம்மாவோட தீவிர விசுவாசி, அடிமட்ட தொண்டன், அன்பு ரத்தத்தின் ரத்தம்//

ஓ.. அப்ப அந்த வளர்ப்பு மகன் நீங்க தானா விஜய் அண்ணா..



__________________

gay-logo.jpg

 

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard