Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 'தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள் ’


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
'தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள் ’
Permalink   
 


...... ’தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள் ’ .......

பெயர்: கோதையம்மாள்.

வயது:75 க்கும் மேல்.. .
(அவருக்கே சரியாக நினைவில்லை..

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..

பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..
ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும்,இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார். 

எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..
என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..)

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்.. 
ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்.945928_599871623364425_1936402055_n.jpg



__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

என்னை அழவைத்து விட்டீர்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மழை வரும் என்று
மனம் சொல்கிறது

மண் நெகிழ்ந்து
வாசம் மெல்ல எழுந்து
நாசியைத் தீண்டுகிறது

மயில்களின் தோகைவிரிப்பு
கட்டாயம் நிகழும்
எங்கோ காடுகளில்
சரணாலயங்களில்
முருகன் தலங்களில்...

கண்சுருக்கி வானம் பார்த்த
உழவர்கள் வரப்பு தேடி
ஒடுவார்களாய் இருக்கும்...

சிலருக்கு அவசியம்
ஒரு பஜ்ஜியும்
ஒரு தேநீரும்..

கொள்ளிவாய் பிசாசுகளுக்கோ
மழையை ரசிக்க
ஒரு சிகரெட்...

எல்லாம் சரி...
பாண்டிச்சேரியின் வீதிகளில்
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரை வயிற்ருக்க் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
கோலம் போடும்
கோதை கிழவியை
நினைக்கும்போதுதான்....





__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

Romba kashtama iruku..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அவரின் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது...இந்த வயதிலும் உழைத்து சாப்பிடும் அவர் தன்மானம்...கை எடுத்து கும்பிட தோன்றுகிறது....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Manasuku romba kastama irukku. But avanga thannambikaiyum, suyamarithaiyai parkum pothu pramippagavum, romba maraiyathaiyavum, pearumaiyagavum irukku. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

thank u frens


@manikandan

my special thanks to u mams......

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

This post is really touching.....
That's ok machi.... :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard